த அபு ட்ரிலஜி-1 பதேர் பாஞ்சாலி[இந்தியா]1955

லக சினிமாவுக்கு இந்தியாவின்  பங்களிப்பு என்ன? என்ற கேள்விக்கு உடனே  எல்லோரின் நினைவுக்கும் வருவது:- அபு ட்ரிலஜி, அபுவின் முதல் பாகம் - பதேர் பாஞ்சாலி , பதேர் என்றால் சாலை | பாஞ்சாலி என்றால் வங்காள மொழியில் நாட்டுப்புறப்பாட்டு. [சாலையில் கேட்கும் பாட்டு]

ப்படி திடீரென? சத்யஜித் ரே  ஃப்லிம் மேக்கரானார்? அதுவும் எப்படி கிடைத்தது இந்த உலகப்புகழ்?, உலகின் எல்லா தலைசிறந்த சினிமா இயக்குனரும்,கலை விற்ப்பன்னரும் இவர் படைப்புகளை தேடிப்பார்த்து வியந்து, இதன் சாயலில்லாமல் எங்களால் இனி படம் செய்யமுடியாது என சொன்ன புகழ், பிறந்த பயனை அவர் அன்றே , ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டார்!!!.என்றால் மிகையல்ல.

ந்தியராகிய நமக்கு தான், ஃபாரினர் ஒரு பண்டம் உசத்தின்னு சொல்லிவிட்டால், உடனே அது உசத்தின்னு சொல்லி நாமும் கோஷம் போடுவோமில்லையா!!  எனவே நானும், சின்ன வயதில் எத்தனையோ முறை  ஞாயிறு மதியம் தேசிய ஒளிபரப்பில் போட்ட , ஆர்ட் ஃப்லிம் என சகலரும் ஒதுக்கிய இந்த படத்தை தரவிறக்கி மிகவும்  பொறுமையுடன் பார்க்க ஆரம்பித்தேன். பதேர் பாஞ்சாலி முடிந்த பின்னர் அபரஜிதோ ,அது முடித்து அபுர் சன்சார் என இந்த படங்களை ஒரு பிரமிப்புடனான உந்துதலுடன் பார்க்க ஆரம்பித்தேன், ஆம்!!! சோறு தண்ணியே இல்லாமல்.
ருப்பு வெள்ளை+35 எம் எம், இதை பார்க்க  சிறிது பழக்கம் இருந்தால் போதும், வைட் ஸ்க்ரீன் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு 35 எம் எம் பிடிக்குமா? !!! இதை நிவர்த்தி செய்ய மீடியா ப்ளேயரில் வைட்ஸ்க்ரீன் ஸ்ட்ரெட்ச் செய்தேன் , அட ரம்மியம், என்ன சொல்லுவது? கலக்கல்.

ப்போது வெறும் 1.5 லட்சம் ரூபாயில் இப்படி ஓர் படைப்பா? இந்த ட்ரைலாஜிக்காக சத்யஜித் ரே அவர்கள் செலவிட்டது 1950-59 வரை ஒன்பது வருடங்கள்,வேறெந்த படங்களைப்பற்றியும் சிந்திக்காமல்  காலம் சென்ற ஓர் கல்கத்தா வாழ்ந்த ஏழை எழுத்தாளர் பிபூதிபூஷன் பண்டோபத்யாய் அவர்கள் எழுதிய பதேர் பாஞ்சாலி என்னும் சுயசரிதம் கலந்த புதினத்தை செதுக்கி படமாக்குவதிலேயே கழித்தார். இந்த படத்துக்கென அவர் ஒழுங்கான திரைக்கதை வடிவத்தை அமைத்துக்கொண்டதில்லையாம்,
வர் மனதில் தோன்றும் அந்த புதினத்தின் பாகங்களையும், அந்த புதினத்தின் பாகங்களுக்கு இவர் ஸ்டோரி போர்டு சித்திரம் போல வரைந்து வைத்ததையும் கொண்டே படப்பிடிப்பை நடத்தியுள்ளார், தொடர்ந்து படமெடுக்க முடியாத பண நெருக்கடியும் இவரை வாட்ட.கொஞ்சம் கொஞ்சமாக பணம் கிடைக்கும் பொழுதெல்லாம் எடுத்தார். ஐந்து வருடத்தில் முதல் படம் ஒரு வழியாக முடிந்தது.

வனிக்க வேண்டிய விடயம் ஒன்று . இவர் படத்தில் நடித்த அத்தனை பேரும் அமெச்சூர் நடிகர்களே. இவர் பதேர்பாஞ்சாலியில் உபயோகித்த உத்திகள் இன்றளவில் புகழ்பெற்ற இயக்குனர்களால் கையாளப்பட்டு வருகின்றன. அதில் பணிசெய்த கேமராமேன்  உட்பட  அனைவரும் புதுமுகங்களே! [ ஒரு சோற்றுப்பதமாக சிறுமி துர்கா பெரிய பானையிலிருந்து பூனைக்குட்டிகளை வெளியே தூக்குவாள்,அதில் பானையின் வாய் வழியே துர்காவின் முகத்தை பார்க்கலாம்,இதை தான் பின்னர் உலக சினிமா இயக்குனர்கள் இன்று வரை பின்பற்றி வார்ட்ரோபினுள் கேமிரா வைத்து அது வழியே நடிகரை பார்ப்பதுபோல் காட்சி வைக்கின்றனர்]


ந்த படம் மட்டுமல்ல!!! சத்யஜித்ரேயின் மொத்த படைப்புகளையும் மெர்ச்சண்ட் ஐவரி ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் நிறுவனத்தார். தேடித்தேடி ஆவண காப்பு செய்துவருகின்றனராம். அவருக்கு கிடைக்காத பெருமையே இல்லை எனலாம், இவர் வாங்காத விருது! என இருந்தால் இனி அறிமுகம் செய்தால் தான் உண்டு போலும் , நாம் ஒதுக்கி தள்ளிய இந்த படைப்பு நியூயார்க்கில்   8 மாதம் ஓடியுள்ளது. ஏன்? இப்படி ஒரு வெற்றி?, உலக சினிமாவில் ஆமை வேகம் தான் உசத்தியா?  ரே,  அப்படி என்ன அவர் சாதித்தார்?

ன்கு பாருங்கள் மக்களே!!! இந்த மனிதர் சினிமா எடுக்கவில்லை,ஒரு சாமானியனின் வாழ்க்கையை  எதோ நாம் பக்கத்து வீட்டில் குடியிருந்தபடி சிரிப்புடனும், ஆசையுடனும், கோபத்துடனும் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டார். படத்தில் யாரும் நடிப்பை தர தரவென பொழியவில்லை, பிழிய வில்லை, ரே அவர்களை நோக்கி இதுவாயிரு!!! என சொன்னபடி  அவர்கள் அதுவாய் மாறியுள்ளனர். இப்படித்தான்  சாத்தியமாயிற்று இந்த வெற்றி!!! ரேயை பற்றி படிக்க இணையத்தில் மிக அதிகம் உண்டு, எழுதி மாளாது, பின் வரும் பதிவில் மீதம் எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன்.

50களில் மேடை நாடகத்தனமான அரங்கங்களமைத்து, இசையும் பாடல்களும் படத்தில் திணிக்கப்பட்டு, நடிகர்கள் வானத்தையும், சுவற்றையும் பார்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசும் பராசக்தி போன்ற படங்கள் அதிகம் எடுக்கப்பட்ட காலத்தில் மேற்கே இப்படி ஒரு ரியாலிச முயற்சி,ரேவுக்கு தான் என்ன ஒரு துணிச்சல்?

படத்தின் கதை:-

1920 களின் வங்காளத்தின் குக்கிராமம், அவ்வூரில் இரண்டே பிரிவினர், 1.ஏழை , 2.பணக்காரர், மூன்று தலைமுறையாக முன்னோர் வாழ்ந்த ஓட்டு வீடு பாழடைந்திருக்க, அதை சரிசெய்யக் காசில்லாமல், எந்த வேலைக்கு போனாலும் தன் சம்பளத்தை கொடு, என கேட்க திராணியில்லாத ஏழை பிராமணன் - ஹரிஹரன். [கனு பேனர்ஜி], பூஜாரியாகவும் , பிராமணார்த்தம் சாப்பிட்டும், ஓய்வு நேரத்தில் வங்காள கவிதைகள்,கதைகள் புணைந்தும் கூட  துக்கானி லேது!!! அதிர்ஷ்டகட்டை.

வரின் மிகப்பொறுப்பான, கீழ்படிதலுள்ள அழகிய மனைவி சர்ப்பஜெயா [கருணா பேனர்ஜி] அப்படி ஒரு பதிவிரதை, கர்ப்பிணி வேறு, இவர்களின் அழகிய பெண்குழந்தை துர்கா [உமா தாஸ்குப்தா] பெற்றொருக்கு பயந்தவள், இருந்தும் சிறு வயதினுக்கே உரிய மிகுந்த சேட்டைகளுண்டு,

சுட்டிப்பெண் துர்காவுக்கு கொள்ளை பிரியம் யார் தெரியுமா? இவளின் விதவை அத்தைப்பாட்டி-இந்திர் [சுனிபலா தேவி ] தன் கூன்போட்ட முதுகோடே தன் வேலைகளை தானே செய்துகொள்ளும் ஒரு 80 வயது ஜென்மம். பாட்டி தனியே தன் எதிர் குடிசையில் சமைத்து சாப்பிட்டும் வருகிறாள். ஆசையாய் ஒரு மாங்கன்றையும் ஊன்றி வளர்க்கிறாள். எந்நேரமும் துர்கா வளர்ப்பு நாயோடும் பூனைக்குட்டிகளோடும் விளையாடுகிறாள்.

துர்கா,பாட்டியின் மூத்த மருமகள், ஹரிஹரணிடமிருந்து ஏமாற்றி பிடுங்கிய தோப்பில் இருந்து அவ்வப்போது கொய்யாக்களும், மாம்பழங்களும் எடுத்து வந்து உணவுக்கு கஷ்டப்படும் பாட்டிக்கு தருகிறாள், இருவரும் அப்படி ஓர் அன்பினை பொழிகின்றனர். இருட்டிய பின்னர் , எண்ணெய் விளக்கின் ஒளியில் பல் போன பாட்டி சொல்லும் பேய்க்கதைகள் துர்காவுக்கு உயிர். [ஒரு காட்சியில் கதை சொல்லும் பாட்டியின் நிழலை ரே அருமையாய் கையகப்படுத்தியிருப்பார்] பாட்டி மாங்கன்றும் துர்காவுடன் சேர்ந்து வளர, அதற்கு தான் தாகத்துக்கு நீர் அருந்தியது போக  செடிக்கும் வார்க்கிறாள்.


னோ ? துர்காவின் அம்மா சர்ப்பஜெயா பாட்டியை ஏற்றுக் கொள்ளவே யில்லை, கூடுதல் சுமையென்றோ? பாட்டி அவ்வப்போது சர்ப்ப ஜெயாவின் சமையலறை சென்று மிளகாயும், தளிகை சாமான்களும் எடுத்து செல்வதாலோ? இருக்கும்!!!! இருக்கும். ஒரு நாள் கோபமிகுதியால் சர்ப்பஜெயா பாட்டியை ஏச, ரோஷம் கொண்ட பாட்டி தன் பழைய நைந்த பாயுடனும்,நெளிந்த சொம்போடும் வெளியேறி தெருவில் போய் வசிக்கிறாள்.

அபு[எ]அபராஜிதன் ஜனனம்:-
ப்போது சர்ப்ப ஜெயாவுக்கு பிரசவ வலி கண்டு அழகிய  ஆண்குழந்தையும் பிறக்கிறது, துர்கா எங்கிருந்தோ பாட்டியயும் அழைத்து வருகிறாள். ஹரிஹரனுக்கு மூன்று மாதமாக சம்பளபாக்கி 24 ரூபாய் வரவில்லை, நிலசுவாந்தாரரிடம் தன் சம்பளபாக்கியை கேட்கவும் திராணி இல்லை, சர்ப்பஜெயா உறவினரிடம் 5ரூபாய் கடன் வாங்கி செலவுகளை சமாளிக்கிறாள். பாட்டி தன் நைந்த கயிறுகளை சேர்த்து அழகாய் தொட்டில் செய்து பேரனை கிடத்தி,ராசகுமாரனாக பாவித்து அழகிய தெம்மாங்கு பாடல்களை பாடுகிறாள்.

ர்ப்பஜெயாவும் ஹரிஹரணும்  வரப்போகும் அபுவின் பிறந்தநாளை எப்படியாவது சிறப்பாய் கொண்டாட முயற்சிக்கின்றனர். இதற்கிடையே ஹரிஹரனுக்கு வேறொரு நிலசுவாந்தாரரிடம் பூஜாரி வேலை கிடைக்கிறது. செலவுகளை இழுத்துபிடித்து சமாளிக்கின்றனர், ஹரிஹரணுக்கு புகையிலை போட்டு ஹுக்கா இழுக்கும் பழக்கமுள்ளது, அவர் ஹுக்கா பிடித்துக்கொண்டே இரவில் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் கவிதைகள்,கதைகள் வடித்தாலும் , படிக்கத்தான் ஆளில்லை!!!மனைவி இவர் திருமணத்துக்கு முன்பிருந்த பனாரஸிலேயே போய் ஈமைச்சடங்கு புரோகிதம் செய்யலாமே என அறிவுறுத்த, அவர் முன்னோரின் வீடு இதை புறக்கணிக்கக்கூடாது,பணம் சேரும்,அப்போது சீரமைப்போம் என்கிறார்.


அபு வளர்தல்:-

ப்போது துர்கா பதின்ம வயதில்அடியெடுக்க,இவளின் அப்பா அம்மாவுக்கு வீட்டை பழுதுபார்க்க வேண்டிய செலவு இருப்பதால்,இவளின் திருமணத்தை பற்றி அவ்வளவாய் யோசிக்கவில்லை, அபுவுக்கு மூன்று வயது,பெண்கள் படித்து என்ன ஆகப்போகிறதென்று யோசித்தோ?பெண்கல்வி அங்கே புழக்கத்தில் இல்லாததாலோ அபு மட்டும் சில பர்லாங் தூரம் கடந்துபோய்,

ரு மளிகைகடையுடன் பிராமணர் நடத்தும் தரைப்பள்ளிக்கூடத்தில் படிக்கிறான், அங்கே படிப்பை விட பிராமண உபாத்தியாயர் செய்யும் கொணஷ்டையிலேயே இவன் கவனம் போகிறது, அவர் சதா இலக்கியத்தையும் , நாடகத்தையும் பற்றியுமே பேசுகிறார். இடையில் வியாபாரமும், உப்பில் சொருகப்பட்ட குச்சி கொண்டு பிள்ளகளுக்கு அடியும் பலே,பலே!!! [வேடிக்கையாக ஒருவர் தலைக்கு எண்ணெயை ஓஸி வாங்கி தேய்த்துக்கொண்டும் செல்கிறார்]

புவும் துர்காவும் தாயும் பிள்ளையும்  போல அப்படி ஒரு அன்பு, அபுவுக்கு  குளிப்பாட்டுதல், சோறூட்டுதல், தலைவாருதல், உடையணிவித்தல் என தாயாய் எல்லா பணிவிடையையும் செய்கிறாள் துர்கா, இருந்தும் அவளின் பொம்மை பெட்டியை மட்டும் அவன் தொட்டால் தீர்ந்தான், அடிதான். அதில் அவளுக்கு பிடித்தமான, சோவிகள், பாசிமணிகள், சிப்பிகள், புளியங்கொட்டை என எழைகளின் விளையாட்டு சாமான்கள் இருக்கின்றன.

துர்காவின் சக வயது தோழியுடன் அடிக்கடி விளையாடப் போகிறாள், அவளுக்கு திருமணம் நிச்சயமானது கேட்டு, இவளுக்கும் அந்த  திருமண  ஆசைகள் எழுகின்றன, ஆனால் வீட்டின் ஏழ்மையை உணர்ந்தவள், தனக்கு ஒருபோதும் திருமணம் ஆகாது!!! என உறுதியாய் நம்புகிறாள்.

அத்தைப்பாட்டியின் சாவு:-

ப்போது குளிர்காலமாதலால் இந்திர் பாட்டிக்கு இரவில் மிகவும் குளிர , பழைய நைந்த கோணிப்பையை வட்டமாய் ஓட்டை போட்டு அதில் தலையை நுழைத்துக்கொண்டு சாலவையாக அணிந்து குளிரிலிருந்து தப்புகிறாள். ஹரிஹரன் சம்பளம் வந்ததும் சாலவை வாங்கித்தருவதாய் சொன்னதை நம்பியவள்,ஒருகட்டத்தில் தாளாமல் மூத்த மருமகன் அளித்த பழைய போர்வை ஒன்றை போற்றிக்கொள்ள, சர்ப்பஜெயாவுக்கு வந்த கோபத்தில், போர்வை மட்டுமா அவர்களிடம் கேட்பது? அவர்களிடமே சாப்பாடும், இருப்பிடமும் கேட்டுக்கொள், என விரட்டிவிடுகிறாள்.

ங்கே சென்ற பாட்டிக்கோ ஏமாற்றமே மிச்சம், இங்கேயே மீண்டும் வந்த பாட்டியை சர்ப்பஜெயா மதிக்காமல் போக ரோஷம் கொண்ட பாட்டி கடைசியாய் தண்ணீர் வாங்கி குடிக்கிறாள். பின் வெளியேறியவள் ஒத்தையடிப்பாதையிலேயே அனாதைப்பிணமாய் செத்தும் போகிறாள்.

கரும்புத்தோட்டமும் ரயில் காணுதலும்:-

துர்காவின் பெட்டியிலிருந்து நெற்றிச்சுட்டியை அப்பு எடுத்து அணிந்துகொள்ள, கோபம் கொண்ட துர்கா, அவனை சீண்டி அடிக்கிறாள், அம்மா சர்ப்பஜெயா கன்றுக்குட்டி கட்டவிழ்த்து ஓடிவிட்டது என அதை தேடச் சொல்ல, துர்காவும், அப்புவும் தொலைதூரம் கன்றுக்குட்டியை தேடிப்போகின்றனர்.வழியில் கரும்பு ஒடித்து தின்கின்றனர். மின்சாரம் கொண்டு செல்லும் ட்ரான்ஸ்ஃபார்மர்கள் தென்பட, அதில் வரும் வினோதமான ஒலியை கேட்கின்றனர்.

தூரத்தில் இப்போது கூஎன சத்தம் கேட்க இவர்கள் என்னவென அங்கே இருப்பு பாதை நோக்கி செல்லும் முன்னரே ரயில் புகையை கக்கி கடந்து சென்றுவிடுகிறது. இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் வழியில் கன்றுக்குட்டியை அழைத்துக்கொண்டு, அனாதைப் பிணமான அத்தைப்பாட்டியையும் பார்த்து அழுதபடி , எழுப்ப முயன்று தோற்கின்றனர். இவர்கள் நினைவு தெரிந்து பார்த்த முதல் சாவு, நெஞ்சில் தீராத வடுவாய் பதிகிறது.இப்போது பாட்டியின் மாங்கன்றுக்கு அப்புவின் வயதும், உயரமும் இருக்கும்,ஆனால் நீர் விடத்தான் ஆளில்லை.

மிட்டாய் காரர் பின் செல்லல்:- 
மாதங்கள் உருண்டோட  , இவர்களின் பாழும் வீட்டிற்கும் எப்போதும் வரும் ஒரு மிட்டாய் வியாபாரி, ஒரு மூங்கில் கம்பில் இருபுறமும் பானைகளை கயிற்றில் கட்டிக்கொண்டு, அதில் பால் கோவா, பால் பேடா, ரசகுல்லா, குலோப்ஜாமுன்,என எச்சில் ஊறவைக்கும் பண்டங்களை சத்தம் போட்டு விற்க, துர்கா எப்போதும் அப்பாவிடம் காசு வாங்க தம்பியையே உபயோகிப்பாள், அவன் மிகுந்த செல்லமாதலால் எப்படியும் காசு பெயர்ந்துவிடும், இப்போது அம்மாவின் கண்டிப்பால் அப்பா பணம் தரத் தயங்க, இருவரும் மிட்டாய்க்காரரின் பின்னே போகின்றனர்,செல்ல நாயும் செல்கிறது.

ங்கே அவர் இவர்களின் உறவினர் வீட்டுக்கு செல்ல, அங்கே அவர்கள் தின்பண்டம் நிறைய வாங்கியும் ஒருதலைபட்சமாக இக்குழந்தைகளுக்கு தரக்கூடாது என கட்டளை இடுகின்றனர். அங்கே இவளின் உறவினர் பெண் ஒரு அழகிய பாசிமாலையை கோர்க்கிறாள், அதை பார்த்த துர்கா, அதை பற்றி விசாரிக்கிறாள். அம்மாவின் கண்டிப்பிருந்தும் இவளுக்கு ஒரு பால் பேடாவை யாரும் பார்க்காவண்ணம் இவளின் தோழி பின்னால் வந்து ஊட்டிச்செல்கிறாள் [குழந்தைகள்,குழந்தைகள் தான்,மிக அருமையான காட்சியது!]

பாசிமாலை திருட்டு:-
ப்போது சர்ப்பஜெயாவின் மூத்த ஓரகத்தி, இவள் குடிசைக்குள் தடாலென புகுந்து துர்காவின் விளையாட்டு சாமான்கள்  அடங்கிய பெட்டியை அற்பத்தனமாய் வெளியே எடுத்துவந்து சோதிக்கிறாள், அதைக் கொட்டி தேட, இவள் தேடி வந்தது தென்படவில்லை, அவமானத்திலும் கோபத்திலும் தவித்தவள், எங்கே துர்கா? அவள் என் மகளின் பாசிமாலையை திருடிவிட்டாள், அவள் தான் அதை அதை கடைசியாய் விசாரித்தாள், என்கிறாள்.

ந்நேரம் பார்த்து துர்கா திருட்டு கொய்யாக்களுடன் வீட்டுக்கு வர,அதை பறித்து கீழேபோட்ட உறவினர் பெண், அவளை அடிக்கப்பாய,சர்ப்பஜெயா தடுத்து, குழந்தையென்றால் பழத்துக்கு அலையும் தான், கொய்யாவில் உன் கொய்யா என பெயரா எழுதியுள்ளது? என வக்காலத்து வாங்க, அந்த பெண்மணி உன் வீட்டில் மொத்தம் இரண்டு திருடிகள், ஒன்று நீ,இன்னொன்று உன் மகள், என தூற்றிவிட்டு,என் பணம் 5 ரூபாயை சீக்கிரம் தரும் வழியைப்பார், என வெளியேறியவள். தெருவில் போவோர் வருவோரிடமும் இவளைப்பற்றி சொல்லி ஏசுகிறாள், சர்ப்பஜெயாவுக்கு வந்தகோபத்தில் துர்காவை அடித்து வெளியேற்றியவள், இருட்டியதும் மனமிறங்கி மகன் அப்புவிடம் சொல்லி திரும்ப வீட்டுக்குள் அழைக்கிறாள்.

ரவு ஹரிஹரன் 3மாத சம்பள பாக்கி 24 ரூபாயுடன் வருகிறார்.இப்போது இருவருக்கும் வீட்டை எப்படியாவது பழுது பார்க்கவேண்டும், இல்லை என்றால் வரும் மழைக்காலத்தை சமாளிப்பது கடினம், என்று சொல்ல, ஹரிஹரன் பக்கத்து நகரத்தில் வேலை தேடிப்போகிறேன் என சொல்கிறார், கண்டிப்பாக வேலை கிடைக்கும், கூலியும் நன்றாயிருக்கும், என ஆறுதல் சொல்கிறார். காலையில் பயணத்துக்கு வேண்டிய சாமான்களை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்.

பயாஸ்கோப்பு காணுதல்:-

இப்போது ஊருக்குள் ஒரு பயாஸ்கோப்பு காட்டுபவர் வந்திருக்க, அவரிடம் பிள்ளைகள் தேனைக்கண்ட ஈயைப்போல மொய்க்கின்றனர்,துர்காவும் தம்பி அபுவிடம் ஊருக்கு செல்லும் அப்பாவிடம் காசு கேட்கச்சொல்ல, அவரும் தருகிறார், தன் பிள்ளைகள், சென்னையையும், டில்லியையும், ஆக்ராவையும்,
ஜெய்பூரையும்   பயாஸ்கோப்பில் பார்த்து மகிழ்வதை  கண்டவர் புதிய ஊருக்கு தன் கட்டுசாதத்துடன் செல்கிறார்.


துர்காவின் தோழி திருமணம்:-

ப்போது ஊரே திரண்டு,யூனிபாரம் போட்டவர்கள் மேளம் தாளம்,ஆல்டோ வகை சாக்ஸபோன் வாசிக்க, கிலோக்கணக்காண கொழுத்த மீன்களை  ஒருவர் பெரிய அரிவாள்மனையில் நறுக்க, காயகறிகள் ஒருவர் நறுக்க, விமரிசையாய் துர்காவின் தோழி திருமணம் நடந்தேறுகிறது, இப்போது துர்காவின் ஆசைகள் பெருக்கெடுக்கிறது, அவளின் திருமணம் போல தன் திருமணம் நடந்தேறுமா? என்னும் எண்ணத்தை துர்கா தன் கண்களாலேயே நயமாய் வெளிப்படுத்துகிறாள். வாரம் ஒன்று உருண்டோட,துர்காவின் தந்தை வேறு நகரத்துக்கு போனவர் அங்கேயும் வேலை சரிவர கிடைக்கவில்லை,என கடிதம் எழுதுகிறார். வீட்டில் வாங்கிப்போட்ட மளிகை சாமான்கள் ரொம்ப நாள் காணாது!!!

சுவை கறந்து தரும் இடைச்சி இவளிடம் பால் வற்றப்போகிறது, பசுவுக்கும் கொஞ்சம் தீனிகாட்டு என்கிறார், துர்கா பூனைக்கு பாலுக்கு பதில் நீர் மட்டும் வைக்கிறாள். இப்போது அழகாக விரதம் மற்றும் பூஜை முறைகளை துர்கா அம்மாவுக்கு பயந்து செய்யத்துவங்குகிறாள். 1 மாதம் உருண்டோட, துர்காவின் தந்தை கடிதத்தில் வேலை கிடைத்துவிட்டது , என்றும் விரைவில் ஊருக்கு வருகிறேன் என்கிறார்.

வீட்டில் இப்போது குந்துமணி அரிசி இல்லை என்பதை சர்ப்பஜெயாவின் ஓரகத்தி கண்டுவிட்டு, இவளை உரிமையுடன் கோபிக்கிறாள்,[ரே நேராக காட்சிக்கு போய்விடுகிறார், நீட்டி முழக்குவதில்லை]  என்னை அந்நியமாய் நினைக்காதே என்றவள், கையில் ரூபாயை திணிக்கிறாள், இவள் அழுதவள் மறுக்கிறாள், அதை கீழே போட்டுவிட்டு அவள் செல்கிறாள்.இப்போது அவள் உதவ வந்தும் ரோஷத்தால் சர்ப்பஜெயா மறுக்கிறாள்.கணவனின் வரவைக்கூறி  இப்போது ஒரு அஞ்சல் அட்டை வர அது இவளுக்கு மிக ஆறுதலாயிருக்கிறது.


பேய்மழைக்காலம்:-

ங்காளம் என்றாலே மழைக்கும் புயலுக்கும் பேர்போனதாயிற்றே!!! பேய்  மழை இங்கே விளாசி எடுக்கிறது, சிறுமி துர்கா மழையில் நனையும் ஆசையில் அபுவையும் அழைத்துக்கொண்டு  பெரிய புளிய மரத்தடிக்கு போகிறாள், அபு அங்கேயே குளிரில் நடுங்கி  நிற்க, இவள் துள்ளி குதித்து ஆசைதீர நனைகிறாள், தன் வயதின் எல்லா ஆசைகளும் பூர்த்தி அடைந்ததாய் உற்சாகம் கொண்டவள், வீடு திரும்ப, 4 நாட்கள் கடும் ஜுரம் வந்து படுத்த படுக்கையாகிறாள்.

வளை சோதித்த மருத்துவர்,ஜன்னி கண்டுள்ளது, இன்னொரு முறை நனையலாகாது என்கிறார். இரவும் பேய்மழை,இவர்கள் வீட்டுக்கோ கதவு சன்னலில்லை, சாக்குப்பைதான். அதுவும் காற்றில் பிய்த்துக்கொள்ள. ஒற்றை எண்ணெய் விளக்கும் அணையப்போக,இவள் சாக்குப்பையை கட்டும்போதே துர்கா எதோ மரண பயத்தில் அழைத்து, குழந்தை போல அம்மாவின் அரவணைப்பை கடைசியாய் வேண்டுபவள் போல அம்மா என அணத்தி கைகளை தூக்குகிறாள், சர்ப்பஜெயா எதோ விபரீதம் என உணர்ந்தவள்,இவளை இறுக்க அணைத்து தேற்றுகிறாள். குழந்தை துர்க்கா அப்படியே உயிரையும் விட்டுவிடுகிறாள். விரைவில் வருவதாய் கடிதம் போட்ட ஹரிஹரன், இவர்களுக்காக பக்கத்து ஊர் சந்தையில் ஆசையாய் பொருட்களும் துணிமணிகளும் வாங்குகையிலேயே  இங்கே துர்காவின் சடங்குகள் முற்றுபெற்றிருக்கிறது.


புத்திர சோகம்:-

சோறு தண்ணீரில்லாமல் அழுது வீங்கிய கண்களுடனும்,கலங்கிய நெஞ்சமுடனும் பிள்ளைக்கு உணவுக்கு கீரை ஆய்ந்து கொண்டிருந்த சர்ப்பஜெயாவுக்கு ஓரகத்தி விட்டிலிருந்து ஒரு சிறுமி காய்கறிகள் கொண்டு வந்து தருகிறாள். மழை செய்த அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமில்லை, இந்த பாழடைந்த வீட்டை இன்னமும் சிதிலமாக்கிவிட்டது.

பின்னாலேயே துர்கா,துர்கா, அபு!!! என அழைத்தபடி ஹரிஹரன் வந்துவிட, இவள் எதுவும் பேசாமல் அவருக்கு வேண்டிய கூஜா, தண்ணீர், மேல் துண்டு, புகையிலை ஹுக்கா எடுத்து  வைக்கிறாள், முகத்தை மூடி முக்காடும் இட்டுள்ளாள். இவரின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவேயில்லை, அவரே தான் வாங்கிவந்த சாமான்களை ஒவ்வொன்றாய் ஆசையுடன் காட்டுகிறார். சப்பாத்திக்குழவியும், மனையும். மகாலட்சுமி படமும் இவளுக்கு. துர்காவுக்கு பனாரஸ் புடவை என ஆசையாய் காட்ட, சர்ப்பஜெயா பொங்கி வீரிட்டு அழுகிறாள்.

ஊரை ,வீட்டை புறக்கணித்தல்:-

ப்போது மிகுந்த மன விரக்தியில் சொந்த ஊரை, முன்னோர் வீட்டை, துறப்பதென்ற முடிவில், ஹரிஹரன் தன் கவிதைகளை, கதைகளை, தூசுதட்டி, தட்டுமுட்டு சாமான்களை, ஏறக்கட்டி எடுத்து வைக்கிறார் .ஊரார் சிலர் ஒன்று கூடி இவர் முன் அமர்ந்து ஊரைவிட்டு போவது நல்லாவா இருக்கு? நாங்கலெல்லாம் இல்லை?மூன்று தலைமுறையாக மனிதர்கள் வாழந்த வீடு, என சொல்ல, இவர் போதும் இந்த வீட்டை புறக்கணிப்பதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை,சதா ஆசைப்பெண் துர்காவின் முகத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் இந்த வீடு.போதும் !!! என்கிறார். எப்போதும் அடுத்தவரின் கையை எதிர்பார்க்கும் வாழ்வு, வாழ்வா? என்கிறார்.

ள்ளே பரணில் எதோ எடுக்க ஏறிய அப்பு, கொட்டாங்குச்சியை எடுக்க அதில் இவனின் உறவுப்பெண்ணின் பாசிமாலை இருக்க, திகைக்கிறான்,உயிரினும் மேலான அக்கா தன்னிடமும் சிலவற்றை மறைத்துள்ளாள். என நினைத்தவன், இறந்தபின்னர்கூட அவளுக்கு அவப்பெயர் வேண்டாம் என நினைத்து ஓட்டை ஜன்னல் வழியே குதித்தவன், அந்த பாசிமணியை தேங்கிய நீரில் எறிகிறான்., இப்போது பரம திருப்தி அபுவின் முகத்தில்.

வலை தோய்ந்த மூன்று முகங்களும் கட்டை மாட்டு வண்டியில் கடையாணி ஓசையுடன்  செல்ல , இதுதான் சாக்கென்று ஒரு நீளமான பாம்பு இவர்கள் வீட்டுக்குள் மெல்ல நுழைவதையும் ரே காட்டத்தவறவில்லை, பண்டிட் ரவிஷங்கரின் சித்தார் ஓசை, எத்தனையோ சங்கதிகளை நமக்கு இப்போது சொல்லுகிறது. உண்மையிலேயே பாவம் துர்கா!!!.
விரைவில் அபரஜிதோவும் அபுசன்சாரும் எழுதப் பார்க்கிறேன்.
==========000===========
சிறு குறிப்பு:-
இந்த படத்தை பற்றி எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தன் தளத்தில்  பதேர் பாஞ்சாலி என்னும் பெயரில் எழுதிய விமர்சனம் இன்று   படித்தேன், மிக அழகான விவரணையும்,சிலாகிப்புகளும்.கண்டிப்பாய் சினிமா காதலர்கள் படிக்க வேண்டிய ஒன்று!!!அவரின் பதிவின் சுட்டி
அவரின் பெயரில்லா பழங்கள் என்னும் கட்டுரையை படிக்க சுட்டி

ஹார்ட் கேண்டி[18+] [அமெரிக்கா][Hard Candy][2005]

பெடோபைல் ஆசாமிகள் ஏன் ஒடுக்கப்பட வேண்டியவர்கள்?பெடோபைல் அசாமிகள் ஏன் சமூகத்தில் மிகவும் அருவருக்கத்தக்கவர்கள்? இதோ விடை


காணொளிக்கு நன்றி:-TED
==========0000==========


லாஸ் ஏஞ்சல்ஸ்  புகழ், 37 வயது, இந்திய ஃபேஷன் டிசைனர் ஆனந்த் ஜான், கற்பழிப்பு வழக்கில், 59 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஃபேஷன் உலகையே தன் பக்கம் திரும்பச் செய்தவன். பெடோபைல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு என்னைக் கைகாட்டு, என உலகப்புகழை இந்தியாவுக்கு பெற்று தந்தவன்.

இவன் மீது, வளரும் மாடல் அழகிகளுக்குப் பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கற்பழித்ததாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் . இவன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007 வரை 14 முதல் 21 வயது வரையிலான இளம் பெண்கள், மாடல் அழகிகளை கற்பழித்ததாகவும், பாலியல் தொந்தரவுகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு,  டி என் ஏ,  வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

தொடர்ச்சியான புகார்களை தொடர்ந்து பயங்கர கெடுபிடிக்கிடையில் அமெரிக்க போலீஸார் ஆனந்த் ஜானைக் கைது செய்தனர். அவன் மீது மைனர் பெண்களை கட்டாயப்படுத்தி கற்பழித்தது உள்ளிட்ட 14 வழக்கு பதிவுசெய்தனர், இந்த வழக்கில் ஜானுக்கு எதிராக 9 பெண்கள் அளித்த வாக்குமூலம் அண்ணாத்தைக்கு  எதிராய் அமைந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி,  ஆனந்த் ஜான்  மேல் முறையீடு&பெயில் அற்ற சிறைக் காவலில் 14 ஆண்டுகளைக் கழிக்க வேண்டும். அதன் பின்னர் 45 ஆண்டு கால ஆயுள் தண்டனையை அவன் தொடர்ச்சியாய் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இவனது 101 வயதில் தான் இவனால் வெளியே வர முடியும்!!! என்னா தீர்ப்பு?!!! அண்ணாத்த இப்போ சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன் போல கம்பிக்குப்பின்னே. யார் கண்டா? கம்பிக்குப்பின்னே இவன் தனது லீலைகளை சுயசரிதையாக எழுதினாலும் ஆச்சர்யமில்லை!.
நம்மூரில் இவனை காப்பாற்றவும் ஒரு கூட்டம் தட்டி தூக்கி பிடித்து கோஷம் போட்டது , ஆனா அவுங்க குரல் அமெரிக்காவுக்கு எட்டலை. நல்ல வேளை!.

வன் போல எத்தனை ஆனந்த் ஜான்கள் நம்மூரில் இருப்பாங்க? என்ன ஒரே வித்தியாசம்? சாமியார் போர்வையில் இருப்பாங்க. இங்கே  மாடல்களுக்கு பதிலாய் சாமியாரிணிகள். 


தினத்தந்தியின் இன்றைய பேப்பரை எடுத்து மேலோட்டமாக பாருங்கள்,அதில் 2 முதல் மூன்று பெடோபைல் ஆசாமிகள் லீலை புரிந்த சம்பவங்களாவது இருக்கும்,மகளை கர்ப்பமாக்கி கொன்ற தகப்பன்!!!,மூன்று வயது குழந்தையை கற்பழித்து கொன்ற தாத்தா!!! என்று. இந்தியாவில் மாஸ் கில்லிங்கே பெரிய குற்றமில்லை,எனும் போது பெடோபைல்-கற்பழிப்பு எல்லாம் துச்சம். 
==========000==========
ஹார்ட் கேண்டி  என்பது பதின்ம வயது பெண்கள் பெடோஃபைல் ஆசாமிகளுக்கு ஆன்லைன் சேட் ரூமில்  வைத்துள்ள கோட் வேர்டாம்!.

ப்படி மேலே சொன்ன ஆனந்த் ஜான் போல் ஒரு ஆசாமியிடம்  மாட்டிய 
14வயது பெண், சமயோஜிதமாய் செயல்பட்டு அந்த பெடோஃபைல் 
குற்றவாளியை தப்ப விடாமல் சுளுக்கெடுப்பது தான் ஹார்ட் கேண்டியின் கதை, இது அநேகம் ஆண்களுக்கு பிடிக்காது,
[எனக்கும் படத்தை பார்ப்பதற்குள்  போதும், போதுமென்றாகிவிட்டது]. இது பெண்கள் முக்கியமாய் டீன் ஏஜ் பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.   இன்றைய நவ நாகரீக உலகில் பலகுடும்பப் பெண்கள் குறுகிய காலத்தில் புகழேணியில் ஏறநினைத்து விபரீதமாய் ஓநாய்கள் விரித்த வலையில் வலியப் போய் விழுகின்றனர். அதுபோல பெண்கள் தம்மை தற்காத்துக் கொள்ள  இப்படம் உதவும்.

படத்தின் கதை:-
14 வயது மாணவி ஹேய்லி[ஜூனோ புகழ்-எல்லன் பேஜ்] 32 வயது ஃபேஷன் போட்டோகிராப்பர்-ஜெஃப்ஃபுடன்[பேட்ரிக் வில்சன்] 2 வாரங்களாய் ஆன்லைனில் மிக ரொமாண்டிக்காக சேட்டிங் செய்கிறாள். இறுதியாய் இருவரும் காபி ஷாப்பில் சந்திக்கின்றனர். அங்கும் வைத்து பல விதமான கடலைகளை ஜெஃப் ,ஹேய்லியிடம் வறுக்கிறான். அவள் 18 வயது முடிக்கும் வரை திருமணத்துக்கு காத்திருப்பேன், என ஆசை வார்த்தை பேசுகிறான். அவள் வயதுக்கு அதிகமான செக்ஸ் பேச்சுகள் பேசி அவளை பிராக்கெட் போடுகிறான். அவளுக்கு அவள் விரும்பிய  பச்சை வண்ண டிஷர்டும் வாங்கி பரிசளிக்கிறான், ஹேய்லி அதை அங்கேயே கழிவறையில் மாற்றிக்கொள்ள அதை கதவோரம் நின்று சைட்டும் அடிக்கிறான்.ஜொள்ளும் வடிக்கிறான்.

ஹேய்லி என்ன டாபிக் எடுத்து பேசினாலும் ,தனக்கும் அது பரிட்சயம் போல பிஸ்து காட்டுகிறான். இறுதியாய் தன் வீட்டுக்கும்  ஒரு நடை அழைக்கிறான், இவள் யோசித்து சரி என சொல்ல, தன் சொகுசு காரில் அவளை கூட்டிப்போய் கடல் போன்ற அபார்ட்மெண்டையும் காண்பிக்கிறான்.

ங்கே இவளுக்கு குடிக்க வோட்கா+ஆரஞ்சு ஜூஸுடன், ஸ்க்ரூ ட்ரைவர் கலந்து தருகின்றான், ஹேய்லியோ நான் முன் பின் அறிமுகமில்லாதவர் தரும் பானங்களை குடிக்க மாட்டேன் என்றவள்,தனக்கு தானே ஸ்க்ரூட்ரைவர் கலக்கிறாள். இருவரும் மது அருந்திக்கொண்டே உரையாட,ஹேய்லி அவனிடம் முன்னாள் காதலி ஜெனில் பற்றி கேட்கிறாள்.

ப்போது ஜெஃப்ஃபுக்கு தலை வலிக்க ஆரம்பிக்க,இவள் அவனை விடாமல் என்னையும் உன் சுவற்றில் உள்ள இளம் மாடல்கள் போல் போட்டொ எடு, என கேட்கிறாள், அவனுக்கு நடனமாடியும், ஒயிலாய் போஸ்கள் கொடுத்தும் காட்டுகிறாள்.ஆனால் கேமராவை கையில் எடுத்த ஜெஃப்ஃபுக்குள் எதோ மிருகம் விழிக்கிறது, ஆனால் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை, வியர்த்தவன் மயங்கி விழுகிறான்.

அசுர வைத்தியம்-1
இப்போது ஜெஃப்,வீல் வைத்த சேரில் உட்கார்ந்த படி கண் விழிக்கிறான். ஹேய்லி அவன் ஒரு பெடோபைல் ,என்றும் ரேபிஸ்ட்,கொலையாளி என்று தனக்கு தெரியும் என்கிறாள், இருவாரமாகவே இவனை போட்டு வாங்கி பொறி வைத்து பிடித்ததாயும் சொல்கிறாள்.இவன் கிளாஸில் மயக்க மருந்து  கலந்ததையும் சொல்ல, இவன் பதறி எழ எத்தனிக்க,இவன் கால்களும் கைகளும் கட்டப்பட்டிருக்கிறது.ஹெய்லி அவன் கண் முன்பே வீட்டை கலைத்து போட்டு ரெய்டு செய்கிறாள், 

வன் மேசையில், வார்ட்ரோபில், பெர்சனல் கம்ப்யூட்டரின் எல்லா ட்ரைவ்களிலும் தேடியும் எங்கும் எந்த போர்னோக்ராபிக் போட்டோ, வீடியோ ஆதாரமும் தென்படவில்லை,ஆச்சரியம் பிடிபடவில்லை, ஒரு  எலிஜிபிள் பேச்சுலரின் கம்ப்யூட்டர் இவ்வளவு சுத்தமா?நோ சான்ஸ்!!!! சம்திங் ராங்!!! என இவள் அவனை உண்மையை ஒத்துக்கொள்ள சொல்கிறாள், ஆனால் ஜெஃப் அவள் மேலேயே பழியை போட்டு ,உனக்கு வளர்ப்பு சரியில்லை, மனநிலை பிசகியிருக்கிறாய் ,அதனால் தான்  இப்படி இருக்கிறாய், உனக்கு நான் வைத்திய செலவை ஏற்றுக்கொண்டு கவுன்சிலிங் செய்கிறேன், உன்னைப்பற்றி நான் யாருக்கும் சொல்லமாட்டேன்,என்னை விட்டுவிடு என்கிறான்.

ஹேய்லிக்கு ஜெஃப்ஃபின் கப்போர்டில் துப்பாக்கியும், முன்னாள் காதலி ஜெனில்லின் போட்டோக்களும், அவர்கள் டேட் செய்த நாளும் கிடைக்கிறது, சற்றும் தளராமல் மேற்கொண்டு தேடியவள், இவனது டீடேபிளின் மீதுள்ள கூழாங்கற்களை கீழே தள்ள, அங்கே ஒரு சேஃப்டி லாக்கரை பார்க்கிறாள், அதை திறக்க இவனிடம் கோட் கேட்க, இவன் ஆத்திரமாகி , தர மறுத்து நீயே முயன்று பார் என்கிறான். அவள் நீண்ட முயற்சிக்கு பின் அவர்கள் முதலில் டேட் செய்து பின் உடல் உறவு கொண்ட  நாளை,எதேச்சயாய் எண்டர் செய்ய லாக்கர் திறக்கிறது. 

தில் டோன்னா மேயர் என்னும் காணாமல் போன பள்ளி மாணவியின் போட்டோ இருக்கிறது, இவள் அதை வைத்து ஜெஃப்ஃபை மிரட்டுகிறாள், இவன் திமிரி அவள் வயிற்றில் உதைத்துவிட்டு சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ஓட, அவள் வலியை உதறி எழுந்தவள் , இவன் தலையில் பாலீத்தின் பையை வைத்து இறுக்க சுற்றுகிறாள், இவனுக்கு மூச்சு திணர வைத்து மீண்டும் மயங்க செய்கிறாள்.
அசுர வைத்தியம்-2
இப்போது ஜெஃப் டைனிங் டேபிளில் படுக்கவைக்கப்பட்டு, கால்களும், கைகளும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் கண்விழிக்கிறான். இவள் ஐஸ்கட்டிகள் கொண்ட பாக்கெட்டை ஜெஃப்ஃபின் ஆண்குறிமீது வைக்க, இவன் அலறுகிறான். இவள் ரொம்ப நேரம் வலிக்காது, கேஸ்ட்ரேஷன் ஆபரேஷன் இப்போ முடிஞ்சிடும், என்ன ?!!!எனக்கு இது முதல் தடவை, எனவே கை நடுக்கம் இருக்கும், இவன் உடம்பை அசைத்தால், ஆண்குறி தவறுதலாக துண்டாகக்கூடும் என எச்சரித்தவள், இவன் பெடோபைல் என்பதையும் டோன்னா மேயரை வன்புணர்ச்சிசெய்து கொன்றதையும் ஒத்துகொள்ளுமாறு சொல்கிறாள், ஜெஃப் மறுக்கிறான், ஹெய்லி அவன் முன்னாள் காதலி ஜெனிலுக்கு ஜெஃப் தன் பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்டது போலவும், தற்கொலை செய்து இறக்கப்போவது போலும் மின் அஞ்சல் டைப் செய்கிறாள், அதை அனுப்பவா?அனுப்பவா? என மிரட்டுகிறாள்,இவன் கெஞ்ச அதை பாதியில் விட்டவள்.

வள் கிளவுஸ் அணிந்துகொண்டு,ஜெஃப்ஃபின்  உள்ளாடையை கழற்றுகிறாள், அறுக்கையில் வலிக்காமலிருக்க மயக்க மருந்து  ஊசியை இவன் தொடையில் போடுகிறாள் .  அவனின் விதைப்பையை கிருமி நாசனி கொண்டு சுத்தம் செய்கிறாள், ரோமத்தை ஷேவிங் ஃபோம் இட்டு குழைத்தவள், பின்னர் ஆபரேஷன் கத்தி கொண்டு ரோமத்தை அருவருப்பே இல்லாமல் சவரம் செய்கிறாள். பின்னர் மீண்டும் கிருமி நாசனி தடவுகிறாள், தன் டாக்டர் அப்பாவின்  சர்ஜரி புத்தகத்தை திறந்து குறிப்பு எடுத்தவள், இவனுக்கும் செயல்முறை விளக்க குறுக்கு வெட்டு தோற்றத்தை காட்ட, அவன் அலற, இவள் அவன் கெஞ்ச கெஞ்ச, கேளாமல், விதை நீக்க ஆபரேஷனை துவங்குகிறாள்.

வன் எவ்வளவு பணம்வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறான்,அவள் செவி சாய்க்காமல் விதைக்கொட்டைகளை கண்ணாடி டம்ளர் நீரில் போடுகிறாள், இவன் அலற,அலற, அதை வெளியே எடுத்து பந்து போல தட்டி தட்டி விளையாடுகிறாள். பின்னர் இவன் கண் முன்னே அதை காட்டியவள், கிட்சன் சின்கை நோக்கி சென்று மாமிச எலும்பு நொறுக்கும் கிரஷரை ஆன் செய்கிறாள்.

விதை கொட்டையை அதில் போட நினைத்தவள், இதை காக்கைக்காவது போட்டால் புண்ணியம் உண்டு என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள். வீட்டின் ஓட்டுக் கூரை மீது  ஏறுகிறாள், இவன் விதைக்கொட்டை போன பயத்தில் அலறுகிறான். மீண்டும் உள்ளே வந்தவள் நான் குளித்துவிட்டு வரேன் ,என ஆபரேஷன் உடையை அவிழ்த்துவிட்டு போகிறாள், ஜெஃப் பகீரத பிரயத்தனப்பட்டு, கை கட்டுகளை அவிழ்த்தவன் , கால் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டு, தன் பறிபோகாத விதைகொட்டையை பார்த்து ஆனந்தக்கூத்தாடுகிறான். 

விதை அதே இடத்தில் சர்வ பத்திரமாயிருக்க,பரீட்சை அட்டைக்கு போடும் தகர கிளிப் ஒன்று வழுவழு விதை பையை இறுக்கிப் பிடித்திருக்கிறது, கொலை வெறியுடன் குளியலறைக்குள் அவளை தாக்க ஓடுகிறான்,அவள் இவனுக்காகவே காத்திருந்தவள். இவனை டேசர் என்னும் ஸ்டன் கன்னால் மின்சாரம் பாய்ச்சி நிலைகுத்தி மயங்க வைக்கிறாள்.அய்யோ வட போச்சே!!!

அசுர வைத்தியம்-3

ப்போது சக்கர நாற்காலியில் நின்ற நிலையில் கண்விழித்த ஜெஃப், வாயில் பிளாஸ்திரியுடன்,  ஒரு நைலான் கயிறில் தன் கழுத்து தூக்கு மாட்டப்பட்டிருப்பதையும், கைகள் பின்புறமாய் கட்டப்பட்டிருப்பதையும் பார்க்கிறான். ஹெய்லி, ஜெஃப்ஃபின் முன்னாள் காதலி ஜெனிலுக்கு மின்னஞ்சல் தட்டிக்கொண்டிக்க, இவனை நோக்கி இரண்டு சாய்ஸ் தருகிறாள்,

1.சேரை உதைத்து அவனே தூக்கு கயிறு இறுக்கி சாவது.
2.இவன் செய்த குற்றங்களை வாக்குமூலமாய் தந்து,சரணடைந்து தண்டனை பெறுவது.

ப்போது வீட்டின் கதவு தட்டப்பட, ஹேய்லி மருண்டு போய் திறக்கிறாள், இவனது அண்டை வீட்டு ஜப்பானிய பெண்,அங்கே நிற்க, அவளிடம் தன்னை ஜெஃப்ஃபின் அக்கா மகள் வார இறுதிக்கு வந்துள்ளேன் என்கிறாள்.ஜெஃப் உள்ளே பெரிதாய் வாந்தியெடுப்பது போல அலறி சத்தம் போட,ஜப்பானிய பெண்ணிடம்  ஜெஃப்ஃபுக்கு, ஃபுட் பாய்சன் என்கிறாள், 

ப்பானிய பெண் தன் மகள்களிடம் ஜெஃப் மிகவும்பிரியமாய்[!] இருப்பான் என்றும், வீட்டில் குக்கீஸ் செய்தேன், என்றும், சொல்கிறாள். அவள் கொண்டு வந்து தந்த இனிப்பை வாங்கிகொண்டவள், வாசக்கதவை மூடப்போக, ஜப்பானியப் பெண் காசு? என கேட்கிறாள், அசடு வழிந்தபடி ஜெஃப்ஃபின் பர்ஸில் இருந்தே பணம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வருவதற்குள், ஜெஃப் தன் கழுத்துக் கயிறை அறுத்துக்கொண்டு சேரிலிருந்து கீழே குதித்து கத்தியை எடுத்துக்கொண்டு தன் பின்னங்கை கட்டையும் விடுவிக்கிறான். கத்தியை எடுத்துகொண்டு இவளுக்கு காத்திருக்கிறான் , இவன் தப்பியதை பார்த்த ஹெய்லி தன்னை தற்காத்துக்கொள்ள  துப்பாக்கியுடன் மொட்டை மாடிக்கு ஓடுகிறாள்.

இப்போது ஆரம்பித்தது பூனை சுண்டெலி ஆட்டம்.
1.இறுதிக்கட்ட போராட்டத்தில் ஜெஃப் கெலித்தானா?தன்னை இவ்வளவு சித்திரவதை செய்த பொடிப்பெண்ணை கொன்றானா?
2.ஹெய்லி உண்மையிலேயே அந்த மரணவாக்குமூலத்தின் மின் அஞ்சலை ஜெனிலுக்கு அனுப்பினாளா?
3.ஹெய்லிக்கு உண்மையிலேயே 14 வயது தானா?
4.ஹெய்லி எதற்காக இந்த பெடோஃபைல்-ஜெஃப்ஃபை  பழிதீர்க்க வந்தாள்?
5.பக்கத்து வீட்டு .ஜப்பானியப்பெண்  ஜெஃப்ஃபுக்கு உதவினாளா?


போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!

படத்தின் சிறப்புகள்:-
படத்தின் பட்ஜெட் ஒன்பதரை லட்சம் டாலர்களாம்,படத்தில் இரண்டே பிரதான பாத்திரங்களே, பதினெட்டரை நாளில் மொத்த காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதாம், படத்தின் செலவை குறைக்க ஒன்பது நிமிட இசை மட்டுமே பயன்படுத்தப்பட்டது, மீதம் எல்லாம்  சாதாரண சப்தங்களே, படம் முழுக்க நீண்ட  க்ளோஸ் அப் ஷாட்டுகள் கொண்டுள்ளது, படத்தின் வசனங்கள் லைவாய் படம் பிடிக்கப்பட்டு, மிக சொற்ப வசனங்களே டப்பிங்கில் சரிசெய்து திருத்தப்பட்டன.படத்திற்காக பிரத்யேக செட் எதுவும் போடவில்லையாம். ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச்செய்யும். வேகம்,வேகம்,வேகம் தான்.ஆக மொத்தத்தில் ஒரு ப்ரில்லியண்டான த்ரில்லர் படம் இது. இயக்குனர் டேவிட் ஸ்லேடுக்கு இது முதல் படமாம்,நம்பவே முடியவில்லை,எல்லென் பேஜின் நடிப்பை நாம் ஜுனோ மூலம் அறிவோம்,பேட்ரிக் வில்சன் கலக்கியிருக்கிறார்.இது போல வேடத்தில் நடிக்க தனித்திறமை வேண்டும்.வெல்டன் டீம்.!!!

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:- 
 ========================




 ========================
கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by David Slade
Produced by Rosanne Korenberg
Written by Brian Nelson
Starring Ellen Page
Patrick Wilson
Odessa Rae
Sandra Oh
Music by Molly Nyman
Harry Escott
Release date(s) 2005 (Canada)
April 14, 2006 (United States)
Language English
Budget $950,000[1]
Gross revenue $7,022,209[2]

 ========================

சென்னை பறக்கும் ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு!

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்.

என்னும் மேல்/கீழ்கண்ட தட்ஸ் தமிழ் செய்தியை படித்த உடன் எனக்கு மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது,பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் உயிரையும் ,உயிரினும் மேலான கற்பையும் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஓய்வு நேரத்தில் கராத்தே,குங்ஃபு போன்ற ஏதேனும் தற்காப்பு கலையை கட்டாயம் கற்றுக்கொள்ளுங்கள்.

ஹார்ட் கேண்டி படம் பார்த்திருக்கிறீர்களா? அப்படி பார்த்திருந்தால் , 32 வயதுள்ள ஒரு பெடோபைல் தன்மையுள்ள கொலைகாரனிடம் மாட்டிக்கொண்ட  14வயதுப்பெண் எல்லன் பேஜ் எப்படி சம்யோஜிதமாய் சமாளித்து அவனை சுளுக்கெடுப்பாள் என புரியும்.

ஹேண்ட் பேக்குக்குள் வைக்கக்கூடிய கைக்கடக்கமான  டேசர்[TASER] என்னும் ஸ்டன் கன் களை உபயோகிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள், இவை எல்லா பெரு நகரங்களில் உள்ள ஹண்டிங் கிட் ஷாப்களில் கிடைக்கக்கூடும்,  ஒரு  ஹை ஃபை மொபைல் போனை 20,000 ரூபாய் தந்து வாங்கினால் அது ஆபத்துக்காலத்தில் திருட்டு தான் போகும்,ஆனால் டேசர் இருந்தால்?, கூகிளில் தேடி பிடித்து வாங்குங்கள், விஷமகுடிகாரக் கபோதிகள் உங்களை நெருங்குகையில் இதைக்கொண்டு ஷாக் கொடுத்தால் அவர்கள் நிலைகுலைந்து விடுவர், அப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பி ஓடிவிடமுடியும்,இதில் உள்ள ஒரு ட்ரா பேக்,என்ன என்றால்? இது ஒரு முறை உபயோகித்த பின்னர்,கார்ட்ரிட்ஜ் மாற்ற வேண்டுமாம்.

ரி,இதுபோல சாதனங்கள் வாங்க வழி இல்லாதவர்களுக்கு!!,இருக்கவே இருக்கிறது பெப்பர் ஸ்ப்ரே, இதை உங்களிடம் வம்பு செய்யும் கயவர்களின் கண்ணில் அடித்தால் நிச்சயம் நிலைகுலைந்து போவர்..சரி இதெல்லாம் எங்கே கிடைக்கும்? தேடுங்கள், கண்டிப்பாக நம் பெருநகரங்களில் 500 ரூபாய்க்குள் கிடைக்கும். மேலும் கயவாளிப்பயல்களின் விதைக் கொட்டையை நோக்கி பலமாய் எத்தவும் பழகிக்கொள்ளுங்கள், சத்தியமாக இது பலனளிக்கும், இன்னும் சேஃப்டி பின்களையும் மிளகாய் தூளையும் நம்பாதீர்கள், இது ஹைடெக் யுகம். இது தமிழக காவல்துறையின் பெப்பர் ஸ்ப்ரேயை பற்றிய டெமோ, 
பெப்பர் ஸ்ப்ரேயை சென்னையில் வசிப்போர்,காவல்துறையிடம் விண்ணப்பம் பூர்த்தி செய்து,ஒப்புதல் வாங்கிய பின்னர் பயன்படுத்தலாம். இதை குழுவாய்  சூழும் விஷமிகளின் கண்ணில் அடித்தவுடனே மூன்று மணிநேரத்திற்கு பயங்கர எரிச்சல் உண்டாகி,அவர்களுக்கு கண்ணே தெரியாதாம்.பார்க்க படம்.

மேலும் உங்கள் குழந்தைகளுக்கு இப்போதிருந்தே தற்காப்புகலையை நன்கு பயிற்று வையுங்கள்.  நம் திருநாட்டின் அவமானமாய் பேருந்துகளிலும், ரயில்களிலும் பெண்கள் ,ஏன் பலசமயம் ஆண்களே ஹோமோக்களாலும், செக்ஸ் வெறியர்கள், பெடோபைல்களாலும் பாதிக்கப்படுகின்றனர், நாம் பழகி வளர்ந்த கலாச்சாரம் காரணமாக உடலால் பட்ட தீங்கை வெளியே சொல்ல பயப்படுகிறோம். அவமானமாய் கருதி விட்டுவிடுகிறோம், சிறு குழந்தைகளுக்கு நன்கு விபரம் தெரியும் வரை பெடோபைல் தன்மையுள்ள ஆசாமிகளிடமிருந்து அவர்களை காப்பது பெற்றோரான உங்கள் கையில் தான் உள்ளது.

எனக்கு இதையும் இங்கே பகிர தோன்றியது , படுக்கை அறையில் தேவையா? கேமரா போன்கள்&கேமராக்கள்:-
க்கால இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்குமே எந்த அறிவுறைகளும் பிடிப்பதில்லை, காதலர்கள், கணவன்,மனைவி இருவருமே , அந்தரங்கத்தில் இருக்கும் போது, கேமராவில் படம், காணொளி எடுப்பதை,அது பெர்சனல் உபயோகத்துக்கு என்றாலும் தவிருங்கள், அது எதோ ஒரு ரூபத்தில் எடுப்பவரின் களவாணித்தனத்தாலோ,கவனக்குறைவாலோ, இணையத்தில் வெளி வந்துவிடும் அபாயம் நிறைய உண்டு, அப்புறம் ஆதம்பாக்கத்தில் படுக்கையறையில் வைத்துக்கொண்ட புனிதமான அந்தரங்கத்தை அமெரிக்காவில் ஒருவர் இணையத்தில் ஆவலாய் பிட்ஸா சாப்பிட்டுக்கொண்டே  பார்க்கும் அவலமும் நேரிடும்.மேலும் நிறைய காதலர்கள் காதலிக்கும் பெண்ணை ருசித்துவிட்டு,இந்த வீடியோவை சோவினிர் போல வைத்துக்கொள்கின்றனர்,எதிர்காலத்தில் அதை வைத்து மிரட்டி உறவை தொடரவோ,அவளின் மணவாழ்க்கைய குலைக்கவோ கூடும்.

மீபத்தில் ஒரு வலைத்தளத்தின் சுட்டி எங்கோ தென்பட,தேடிப்பிடித்து உள்ளே போனால், கல்லூரிப் பெண்களையும், குடும்பத்தலைவிகளையும், அன்னியோன்யமாய்  இருந்த தமபதியரையும்,  பீச்,பார்க்,ஹோட்டல்,நெட் கபே, ஏடிஎம் என லேபிள் வாரியாக பிரித்து வீடியோக்கள் எடுத்து ஆபாச தளத்தில் அடுக்கியிருக்கின்றனர் விஷமிகள்.அதில் ஆன்லைனில் சுமார் 55 பேர். ஃபாலோவர் 200 பேர்.  அதில் குறிப்பிட வேண்டிய விடயம், பெண்ணின் சம்மதத்துடனே எல்லா வீடியோவும் படமாக்கப்பட்டிருக்கிறது, ஒரு பெண்ணும் கேமரா முன்னர் ஆட்சேபனயே தெரிவிக்கவில்லை. ஆகவே மக்களே இனியேனும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்,

ன்னியரோ, கணவரோ, யார் அந்தரங்கத்தை வீடியோ எடுத்தாலும் உடனே மொபைல் போனையோ, கேமராவையோ பிடுங்கி அழியுங்கள்,கணவன், அல்லது காதலன் அதையும் மீறி மிகவும் கெஞ்சினால் செவிட்டில் அறையுங்கள். மெமெரி கார்டு உங்கள் க்ரெடிட் கார்டை விட பத்திரமாய் வைக்க வேண்டிய வஸ்து.

காபாவிகள், தான் எளிதாய் அனுபவித்ததை சைக்கோத்தனமாக , உலகுக்கே பங்கு போடும் செயலாக, கயவர்கள் நிறைய பேர், மாணவர் போலவும், எக்ஸிக்யூட்டிவ் போலவும், அப்பாவி காதலன், கணவன்  தோரணையிலும் உலவுகின்றனர்.

பெற்றோர் கூட பார்க்காத பெண்ணின் பூரணத்தை கண்ட கயவர்களையும் பார்க்க விட வேண்டாம். நான் அந்த தளத்தை புக்மார்க் செய்யவில்லை. [தயவுசெய்து உடனே இதுபோன்ற வீடியோக்களை நெட்டில் தேடி பார்க்க வேண்டாம்] எப்போதாவது அபூர்வமாக சட்டம்  கண்விழித்து பஜாருக்குள் ரெய்டு போய், 40 ரூபாய்க்கு விற்கப்படும் டிவிடிக்களை  கைப்பற்றும்,அப்போது உங்கள் போட்டோக்கள், வீடியோக்கள் பத்திரிக்கையில் வந்து மானம் போவதை விட முன்பே ஜாக்கிரதையாக இருக்கலாம்.அந்தரங்கம் மிக புனிதமானது.
 ==============000=============

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம். [ தட்ஸ் தமிழ் செய்தி:-]

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை பறக்கும் ரயில் நிலையத்தில் தனிமையில் இருந்த காதலர்களைச் சூழ்ந்த ஒரு கும்பல் காதலியை கற்பழிக்க முயற்சித்தது. அந்த முயற்சியில்,காதலர் படுகொலை செய்யப்பட்டார். காதலியிடமிருந்த பொருட்களைப் பறித்துக்கொண்டு அக்கும்பல் தப்பி ஓடி விட்டது.

சென்னை மக்களை அச்சத்தில் உறைய வைக்கும் வகையில் நடந்துள்ள இந்த கொடூரச் சம்பவம் குறித்த விவரம் ..

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு சலூன் கடை வைத்திருந்தார். இவருடைய அத்தை தனலட்சுமி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.

அத்தை வீட்டுக்கு அடிக்கடி வருவார் சரவணன். அப்போது அதேபகுதியில் வசிக்கும் நான்சி என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. நான்சி பி.சி.ஏ முடித்து விட்டு சர்ச் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

காதலியைப் பார்ப்பதற்காக அடிக்கடி சென்னை வருவார் சரவணன். அப்போது அவரும், நான்சியும், ஆளரவமில்லாத கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்திற்குப் போய் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.

அதேபோல நேற்றும் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. காதலர்கள் தனிமையில் இருப்பதைப் பார்த்த அவர்களிடம் நெருங்கி கலாட்டா செய்ய ஆரம்பித்தனர்.
அவர்களை சரவணன் தட்டிக் கேட்டுள்ளார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத அந்த கும்பல், நான்சியை கற்பழிக்க முயன்றனர். இதைத் தடுக்க முயன்றார் சரவணன். இதையடுத்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியது அக்கும்பல். இதில் சரவணன் அங்கேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்து நான்சி கதறினார். அதை கண்டுகொள்ளாத அக்கும்பல் நான்சி அணிந்திருந்த தங்க் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டது.

தகவல் போலீஸாருக்குக்கிடைத்ததும் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷகீல் அகமது உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

கொலையாளிகள் ரவுடிக்கும்பலாக இருக்கக் கூடும். அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார்ச ந்தேகிக்கின்றனர்.

சென்னையில் உள்ள பல்வேறு பறக்கும் ரயில் நிலையங்கள் ஏதோ பாழடைந்த மாளிகை போலத்தான் காணப்படுகிறது. பல ரயில் நிலையங்களில் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு சுத்தமாக இருப்பதில்லை.

அரசு அலுவலகங்கள், புதிய தலைமைச்செயலகம் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் பகுதியான சேப்பாக்கம் ரயில் நிலையத்திலேயே பல நேரங்களில் தனியாக போக முடியாது. அந்த அளவுக்கு ஆளரவமற்று இருக்கும்.

இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள் தனியாகவரும் பெண்கள் மற்றும் காதல் ஜோடிகளிடம் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபடும்நிலை ஏற்படுகிறது.

இதைத் தடுக்க ரயில்கள் வரும், போகும் நேரம் வரையிலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் போதிய அளவில் போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என பொதுமக்கள் கருதுகிறார்கள்.

=============0000=============
சிறு குறிப்பு:- மேற்கண்ட கொலை பாதக செயலை செய்த கொடியவர்கள், ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி பெயிலில்  தான் வெளியே வந்திருக்க வேண்டும், அவர்களுக்கு தான் அந்த தவ்ளத்தனம் இருக்கும். அவர்களை காவலர்கள் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் வழக்கு போட்டு,சொந்த காசில் டீசல் போட்டு, கோர்ட்டுக்கு மாஜிஸ்த்ரேட் முன்னர் கொண்டு போய் நிப்பாட்டுவதை விட, அவர்களின் விதைக்கொட்டையையாவது உங்கள் ஸ்ட்ராங்கான பூட்சுகாலால்  நசுக்கி கூழாக்கி விடுமாறு ,மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,மனித எருமை,சாரி மனித உரிமை பேசுவோருக்கு பயப்பட வேண்டாம்.அவன் அவன் வீட்டுக்கு இது போல நேர்ந்தால் தெரியும் சேதி!
=============0000=============

ஹோலி ஸ்மோக் [1999][ஆஸ்திரேலியா]holy smoke [கண்டிப்பாக 18+]

ஹோலி ஸ்மோக்:- பியானோ என்னும் உன்னத திரைப்படத்தை தந்து ஆஸ்கர் வென்ற, பெண் இயக்குனர் ஜேன் கேம்பியனின் கதை திரைக்கதை, இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியான ட்ராமா வகை திரைப்படம்.


கேட் வின்ஸ்லெட்,மிகவும் அழகும் திறமையும், வாய்ந்த நடிகை,இவரை பிடிக்காது என யாரும் சொல்வாரா?, எல்லாம் அந்த இரண்டு.................!!!!கண்கள் செய்யும் ஜாலம் தான்.  அம்மணி நடித்ததில் ஐரிஸ், க்வில்ஸ், ஹைடியஸ் கிங்கி, டைட்டானிக், ஜூட், ஹெவன்லி கிரியேச்சர்ஸ் , ஆல் தி கிங்ஸ் மென், ரெவல்யூஷனரி ரோட், எனிக்மா, ரீடர் என ஓரளவுக்கு பார்த்திருக்கிறேன், இந்த படத்தை ஐந்து வருடம் முன்னரே புரியாமல் பார்த்து வைத்திருந்தாலும் எப்படியும் மீண்டும் பார்த்துவிட்டு எழுதிவிடவேண்டும் என எண்ணியிருந்தேன்,அப்பா!!! அவ்வளவு அற்புதமான கலைப்படம்.

மேலே நான் சொன்ன படங்களில் எனிக்மா நீங்கலாக அம்மணி சும்மா புகுந்து விளையாடி இருப்பார். இதிலும் தான், எதில்? என்று நான் சொல்லவும் வேண்டுமா? இந்த படம் நடிக்கும் போது அம்மணியின் வயசு வெறும் 24தானுங்கோ!!!.ரீமா சென்னுக்கு முன்னோடியாக முழு நிர்வாணமாய் நடந்துகொண்டே சிறுநீர் கழிக்கும் காட்சியும் அசலாய்டு  உண்டு.

ளர்ந்த உலக நாடுகளில் தான் எதற்கெல்லாம் கவுன்சிலிங் இருக்கிறது? அடேங்கப்பா? ஹெராயின், கோகேய்ன், கஞ்சா, அபின், பிரவ்ன் சுகர்,குடி  போதை பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிங், ஓரின சேர்க்கையாளர் நேரின சேர்க்கையாளராக (gay to straight) கவுன்சிலிங், பலான திருடர்கள் திருந்த கவுன்சிலிங், புருஷன் பொண்டாட்டி விவாகரத்து வாங்காமல் இருக்க கவுன்சிலிங், சைக்கோபாத் ஆட்கள் திருந்த கவுன்சிலிங், இப்போவே கண்ணகட்டுதே.............!!!இந்தப் படத்தில் இந்தியாவிற்கு போன வெளிநாட்டுப் பெண், நித்தி போல  டுபாக்கூர் போலி சாமியாரின் ஹிப்நாடிசத்தில் கட்டுண்டு சாமியாரிணி ஆக, அவரை சாமியாரிணி நிலையிலிருந்து விடுவிக்க ஒரு அமெரிக்க டீ-ப்ரோக்ராமரின் கவுன்சிலிங். அதை சுற்றியே இந்த கதை.

படத்தின் கதை:-
ஸ்திரேலியாவில் வசிக்கும், 20களில் இருக்கும் அழகிய ரூத்  [கேட்வின்ஸ்லெட்] தன் தோழிகளுடன் இந்திய சுற்றுலா செல்ல,டெல்லியில் சாந்தினி சவுக்கில் ஒரு டுபாக்கூர் ஆசிரமத்தையும்,நித்தியாந்தா போல ஒரு டுபாக்கூர் சாமியாரையும் பஜனையில் வைத்து சந்திக்க நேரிடுகிறது,சாமி எல்லோருக்கும் போதை வஸ்து போல எதையோ பிரசாதமாக தர,ஏற்கனவே அங்கே கட்டுண்டு இருந்த சாமியாரிணிகள் அத்தனை பேரும் மகுடிக்கு மயங்கிய பாம்பாய் ஆடுகின்றனர் .

ந்த சாமியார் கண்ணாலேயே இவளை உற்று நோக்கி வசியம் செய்து , இவள் நெற்றிப்பொட்டையும் தொட, இவளுக்கு பேரானந்தம் பிறக்கிறது,  “எல்லாமே என் சாமி தான்”  என சாமியாரின் பதின்ம மனைவிகளில் ஒருத்தியாக தயாராகிறாள், இவளுக்கு அப்ரெண்டிஸ்ஷிப்பும் தரப்படுகிறது, பெயரும் மடத்தாரால் நஸ்னி என மாற்றி வைக்கப்படுகிறது, அழகிய வெள்ளைச் சேலையும், ரவிக்கையும் அணிந்துகொண்டு ஒயிலாய் புகையும் பிடிக்கிறாள்,

வள் தோழி கொண்டு வந்து தந்த  போட்டோவில் ரூத்தை இப்படி சீலை ரவிக்கையுடன் பார்த்த பெற்றவயிறு பற்றி எரியத்தொடங்க, இந்தியாவுக்கு டு அண்ட் ஃப்ரோ டிக்கெட் தனக்கும்,மகள் வருவாள் என அவளுக்கும் சுமார் 10,000 ஆஸ்திரேலிய டாலர் செலவு செய்து ,அங்கே டெல்லி சாந்தினி சவுக் போய் பார்த்தால்!!!!,[இந்த படத்திலும் நம் தேசிய மானங்களை நன்றாகவே வாங்கியுள்ளனர்.] மகள் ரூத் சுத்தமாய் மாறிவிட்டிருக்கிறாள்,[சேலையில் கேட் அவ்வளவு அழகு-வார்த்தையால் வர்ணிப்பது சுத்த வேஸ்ட்,நேரில் பார்த்துக்கொள்ளுங்கள்]அப்பாவுக்கு பக்கவாதம், உடம்பு சீரியஸ் என்று சொல்லியும் ரூத் மனமிறங்கவில்லை, அடுத்த ஜென்மம் என்று இருந்தால் அப்பாவை பார்த்துக்கொள்கிறேன் . என்கிறாள்,

ம்மாவுக்கு தூசி ஆகாமல் ஆஸ்துமா முற்றுகிறது, சாமியார் அலர்ஜியும் இந்தியாவின் முட்டிபோட்டு , போகும் ஒரிஸ்ஸா பேன் கக்கூஸும் குய்யோ முறையோ என கதறி ஓட வைக்கிறது, ஓடும் போது குட்டி பிச்சைக்காரர்கள் தொந்தரவு வேறு, சகதியில் புரண்டவள்,ஆஸ்துமாவுக்கு அடிக்கும் ஃப்ரெஷ்னர் ஸ்ப்ரேயை தேடித்தரும்படி கெஞ்சிவிட்டு, மயங்க,கேட் வேறு வழியில்லாமல் அம்மாவுடன் விமானத்தில் துணைக்கு பயணிக்க வேண்டியிருக்கிறது.

சிட்னியில்,ருத்தின் ஓரினசேர்க்கையாளர் அண்ணனும், அவனின் காதலனும், அவள் அப்பாவின் நண்பரும்,அப்பாவின் இளம் காரியதரிசியும்,இவளை பழைய நிலைக்கு கொண்டு வர எவ்வளவோ முயற்சி எடுத்தும்,இவள் இந்தியா திரும்பிப்போவதிலேயே குறியாய் இருக்கிறாள்,  அப்போது தான் தன் 40களில் இருக்கும் , PJ வாட்டர்ஸ் என்னும் டீப்ரோக்ராமர்  ஒருவரை அமெரிக்காவிலிருந்து  வரவழைக்கின்றனர். பெரும்பணம் ஃபீஸாக பேசப்படுகிறது, ஒரே நிபந்தனை ரூத் சேலையை உருவி எறியனும்.!

ந்தவர் மூன்றே நாள் கவுன்சிலிங் போதும்,என வீறு கொண்டு ரூத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாயிருக்கும் ஒரு செம்மண் பாலைவனத்தின்  தனித்த வீட்டுக்கு கூட்டிப்போய் , பலவாறாய் இவளுக்கு கவுன்சிலிங் செய்கிறார் .முழுதாய் ஒத்துழைப்பேன் என ரூத்திடம் சத்தியம் வாங்கியவர், அவளின்  செருப்புகளையும் வாங்கி வைத்துக்கொள்கிறார்.

ரூத் டீ-ப்ரோக்ராமிங்கை குலைக்க என்ன என்ன செய்ய முடியுமோ?அத்தனையையும் செய்கிறாள், செருப்பை இவர் தராததால் தப்பி ஓட முடியாமல் போக, இவள் வெள்ளை கற்களைக் கொண்டு HELP என பெரிதாய் எழுதி வைக்க, உள்ளே இவர் இவளுக்கு வகுப்பெடுக்க, வெளியே ஒரு போலீஸ் ஹெலிகாப்டர், தாழ பறந்து,பின்னர் இவர்களின் பிரதான வீட்டுக்கு, தொலைபேச, குடும்பத்தார்,அது ஒரு விளையாட்டு,என சொல்லி மழுப்புகின்றனர்.

து போல ரூத்தும் வாட்டர்ஸும் செத்து செத்து விளையாடுகின்றனர். என்ன தான் சேட்டை செய்தாலும்,அழகிய ரூத்தை இவரால் கோபிக்கவே முடியவில்லை, [படத்தில் அருமையான வசனங்களுக்கு பஞ்சமே இல்லை, இருவரின் நடிப்பு தான் படத்தின் பெரும்பான்மை பலம்.எனலாம், ஒரு காட்சியில் உனக்கு என் பெர்சனாலிட்டி பிடித்திருக்கிறதா?அல்லது என் மார்புகள் பிடித்திருக்கிறதா? என ஒரு கூர்மையான வசனமும் உண்டு.]

வாட்டர்ஸ் மூன்று நாளில் மெல்ல அவளின் உறுதியை உடைக்கிறார், அவள் சாமியார் நம்பிக்கையை குலைக்கிறார், அவளின் சேலையையும் தூங்கும் போது மெல்ல உருவுகிறார்,ரூத்தின் அப்பாவுடைய இளம் காரியதர்சிக்கு போன் செய்தவர், ரூத்திற்கு மாற்றுதுணிகள் கொண்டுவர சொல்கிறார், வந்தவள் இவரிடம் அசடு வழிகிறாள்,அவளுக்கு ரூத்தின் அப்பாவுடனும் இன்னொரு சகோதரனிடமும் இருக்கும் உடல் தொடர்பையும் இவரிடம் ஆத்மார்த்தமாய் பகிர்ந்தவள், படுக்கையிலும் விருந்து கொடுத்து விட்டு போகிறாள்.

இவர் ரூத்தின் ஒரே சேலையை வெளியே எட்டாத உயரத்தில் கட்டுகிறார். காலையில் ரூத் சேலையை தேட மிகவும் கடுப்பானவள், இவரை ஏசி,வசைபாடுகிறாள், மளையாள பெண் போல,பிடிவாதமாய் ரவிக்கையும் துண்டுமாய் வலம் வருகிறாள்.

வாட்டர்ஸ் மெதுவாய் தன் பாடத்தை ஆரம்பித்தவர்,இறுதியில் வென்று ரூத்துக்கு ஆஸ்திரேலிய தேசிய உடையான கவுனையும் அணிய வைக்கிறார். கவுனில் ரூத்தை பார்த்த அவர்கள் வீட்டாருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. வாட்டர்ஸ் அவளுக்கு சித்தாந்தத்தால் உந்தப்பட்டவர்கள் செய்த தொடர் கொலையையும், குண்டுவெடிப்புகளையும், அவர்கள் தண்டிக்கப்படும் முன்னர் அவர்கள் தாங்கள் செய்த கொலைபாதகத்துக்கு வருந்தாததையும் , அவள் வீட்டுக்கு  கூட்டிப்பொய் ப்ரொஜெக்டரில் சினிமாவாக  காட்டுகிறார்.

ன்று இரவு  இவர்கள் பண்ணை வீட்டுக்கு திரும்ப , இவர் தூங்குகையில் அவள் தன்  வெளியே காயப்போட்டிருந்த சேலையை கொளுத்திவிட்டு மாயமாயிருக்க, இவர் பதறிப்போய் இருட்டில் தேடுகிறார். பார்த்தால் குளித்துவிட்டு அம்மணி ரூத் , பிறந்தமேனியுடன், என்னை யாரும் விரும்பவில்லை, என் எண்ணங்கள் நம்பிக்கைகள்,சுக்குநூறாகிவிட்டன, நான் உடைந்துவிட்டேன், என்னை தேற்று,ஆறுதல் படுத்து,காதல் செய் என, விரக தாபத்துடன் ஒயிலாக சிறுநீர் கழித்துக்கொண்டே இவரிடம் வருகிறாள் . [  ரீமா, நீயெல்லாம் ஜுஜூபி], வாட்டர்ஸ் தன் வாடிக்கையாளருடன் உடலுறவு கொள்வதில்லை, என்னும் பெரிய கொள்கையையும் கடைசியில் தளர்த்தி விட்டு, தன்னில் பாதி வயதே கொண்ட பெண்ணிடம் உறவும் கொள்கிறார்.

றுநாள் கேட் ஹாலின் கவுச்சில் நிர்வானமாய் தூங்கிக்கொண்டிருக்க, வாட்டர்ஸ் வெளியில் ஷவரில் ஆனந்தமாய் குளித்துக்கொண்டிருக்கிறார், அவரின் காதலி டீப்ரோக்ராமிங்கில் இவருக்கு உதவ தனி விமானம் பிடித்து வந்தவள், ரூத்தின் கோலத்தை பார்த்துவிட்டு, இவருடன் சண்டை போட்டு விட்டு, உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்கிறாயே!!பாவி, என கோபத்தில், வெளியேறியவள், ரூத்தின் வீட்டுக்கு போகிறாள். இப்போது தன் காதலி தன்னை விட்டுப்போனாலும் பரவாயில்லை,ரூத் தான் இனி எல்லாம் !!என்ற நிலைக்கு வாட்டர்ஸ் வந்து விட்டார். இனி என்ன ஆகும்?
===========000===========
1.ரூத் உண்மையிலேயே   சாமியாரிணி நிலையிலிருந்து விடுபட்டாளா?
2.வாட்டர்ஸுக்கு பிடித்த ரூத் மோகம் விட்டதா?காதலியுடன் இணைந்தாரா?
3.ரூத்தின் குடும்பத்தார் என்ன ஆனார்கள்?

போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!

இனி மேல் தான் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் வரப்போவதால் முழுக்கதையையும் சொல்லவில்லை.

டத்தில்-ஏஞ்சலோ படலமெண்டியின் பிண்ணனி இசை அதிகம் குறுக்கிடவே இல்லை, யதார்த்தமான காட்சிகள் என நம்பும் படியான முயற்சி. படத்தின் ஒளிப்பதிவு -டியான் பீபி, முழுக்க மஞ்சள் தீமில் விளையாடி வந்திருக்கிறது கேமரா, இந்திய சுற்றுப்புற காட்சிகள் ரசிக்கும் படி இல்லை,தவத்திரு நாட்டின் மேல் என்ன கோபமோ? மிக அழுக்கான தீமில் ஓல்டு டெல்லியை போய்  காட்டியுள்ளனர், கொல்கத்தாவை விட மோசமாயுள்ளது.  ஆனால் மஞ்சள் பாலைவனமும், இரவின் பிடியில்  கேட் வின்ஸ்லெட்டும் அடடா. வாட்டர்ஸாக வந்த ஹார்வே கெய்ட்டல் ஒரு சாயலின் ஷான் பென்னை நினைவூட்டுகிறார், நடிப்பு அமர்க்களம்,இனி இவரை தேடிப்பிடித்து பார்க்க வேண்டும்.

டத்தின் உள்ள  தீபறக்கும் வசங்களில் சும்மா இரண்டு சாம்பிள்:-
வாட்டர்ஸ்: I don't hate women. I love ladies.
ரூத்: Ha! Ladies! You wouldn't know any. I bet you date little Barbie dolls, don't you? "Oh, you're so brainy, you're so big! Can I suck your dick?" Can I be alone now?
===========
வாட்டர்ஸ்: I was young once, too, and handsome. You'd have been impressed.
ரூத்: I wasn't born!
=========== 
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-


============
கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவில் இருந்து
Directed by Jane Campion
Produced by Jan Chapman
Written by Anna Campion
Jane Campion
Starring Kate Winslet
Harvey Keitel
Music by Angelo Badalamenti
Cinematography Dion Beebe
Editing by Veronika Jenet
Distributed by Miramax Films

Running time 115 minutes
Country Australia
Language English

மயக்கும் மந்திர இசைப்பகிர்வு இரண்டு.

================================

2007 ஆண்டு வெளிவந்த அடோன்மெண்ட் படம்  பார்த்திருக்கிறீர்களா?, ஆம் எனில், அதில் வரும் தீம் ம்யூசிக்கான  "Love Letters"ஐ மறந்திருக்க முடியாது, இத்தாலிய இசையமைப்பாளர் டரியோ மரியனல்லி, டைப் ரைட்டர் பொத்தான்கள் தட்டப்படும் க்லிக்-க்ளாக் ஓசையை  செல்லோ, பியானோ இசையுடன் குழைத்து நம்மை கிறங்கடிக்கும் மந்திர இசையை அமைத்திருப்பார். இவரின் சோலோயிஸ்ட் , ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிஸ், வி ஃபார் வெண்டட்டாவும் இசைக்கோர்வைக்கு பெயர் போனவை.

ரியோ மரியனல்லி  மெய்மறந்து செய்து  ஆஸ்கர் வாங்கிய, அழியாப்புகழ் பெற்ற , அற்புத   இசையை ஒத்த    மெட்டுக்களை  இசைஞானி  1986 ஆம் ஆண்டே  தன் ஹவ் டு நேம் இட்  ஆல்பத்தில்  10 ஆம் தொகுப்பான "Can  do anything" இல் அருமையாய்  வயலின்கள், புல்லாங்குழல், பியானோ, ஷெனாய் கொண்டு இசைப்படையலாக போட்டு விட்டார்.  இதை வீடு, மற்றும்  நாயகன் படத்திலும்  ஆனந்தமான  தருணங்களுக்கு பிண்ணணி இசையாக அமைத்திருப்பார்.  இதை கேட்கும் போதெல்லாம் பரவசம் தொற்றிக்கொள்ளும்,  அட்டோன்மெண்ட் படம் பார்த்த பின் அதே பரவசம் ஏற்பட காரணம் தெரியவில்லை,  மண்டையை பிய்த்துக்கொண்டு, தேடியவன் இதை கடைசியில்  கண்டுகொண்டேன். எதனாலோ 2 தொகுப்புகளையும் என்னால் வேறுபடுத்தியே பார்க்க முடியவில்லை, இதைத் தான் ”இண்டெலெக்சுவல்ஸ் திங்க் அலைக்” என்பார்கள் போலும். நல்லதை ஏற்கனவே அறிந்திருந்தாலும் பகிர்வதில் தவறில்லையே!


சை ரசிகர்கள் அனைவரும் பெருமைகொள்ள வேண்டிய விடயம், என தோன்றியதால் இதை பகிர்ந்து கொண்டேன்,  நான் இசை ரசிகன் தானே ஒழிய விமர்சகன் அல்ல, ஆகவே மாற்று கருத்துக்கள் இருந்தால் வரவேற்கிறேன். மொத்தத்தில் இவை இரண்டுமே அவசியம் பகிரவேண்டிய பொக்கிஷங்களே!

நீதியரசர்களா?நிதியரசர்களா?


மூன்று தீர்ப்புகள்:-
முதல் தீர்ப்பு:-[பாரதம்]

லகின் மிக மோசமான ரசாயன பேரழிவாய் பேசப்படும் போபால் விஷவாயு வழக்கு கால் நூற்றாண்டுகளாக நடந்து ,இறுதிக்கட்டத்தை அடைந்து, உலகே  எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது, இம்முறையும் நீதியரசர்கள், நாங்கள் சிறந்த நிதியரசர்களும் கூட  என்பதை  நிரூபித்து விட்டனர்.
தாமதிக்கப்பட்ட அரசநீதியாக யூனியன் கார்பைட்டின் அப்போதைய சேர்மனான கொலைகாரன் கேஷுப் மகேந்திராவுக்கு 2 வருடம் விஐபி சிறையும், ஐந்து லட்சம் ரூபாய் பிச்சைக்காசு அபராதமும் , பின்னே அன்று மாலையே பெயிலும் வழங்கப்பட்டது, கூடவே கைதான அல்லக்கைகள் ஏழு பேருக்கும் அதே 2 வருடம் விஐபி சிறையும், தலா ஒரு லட்சம் ரூபாய் பிச்சைக்காசு அபராதமும் , பின்னே அன்று மாலையே பெயிலும் வழங்கப்பட்டது, 
னி அநீதி இழைக்கப்பட்ட ஏழை பொது மக்கள்  குற்றம் சாட்டப்பட்ட கயவனை கோர்டு வாசலிலேயே அடித்துக்கொல்லுவது ,அல்லது குழுவாய் தற்கொலை செய்துகொள்வது தான் உத்தமம்,அவர்கள் எக்கேடு கெட்டாலும் அரசியல்வாதிகளுக்கு கவலையில்லை, கவர் கொடுத்து வேறு மாநிலத்திலிருந்து  கூட ஆட்களை அழைத்து வந்து ஓட்டு வாங்கத் தெரியும்
அப்பாவி மக்கள் இப்படி 26 வருடம் நீதியரசர்களுக்காக பொறுத்திருந்தால் குளுகுளுவென கோடை விடுமுறை முடித்து வந்த கையோடு எழுதும் அவர்கள் பேனா இப்படி தான் தீர்ப்பு எழுதும்.
ந்த கொலை பாதகத்தை ஒருவன் இஸ்ரேலில் நிகழ்த்தியிருந்தால் கொலைகாரர்கள் எங்கே போய் பதுங்கினாலும் முனிக் படத்தில் வருவது போல அவனை தேடிப்போய் கருவருத்திருக்கும் அந்த அரசாங்கம்,22000 பேரை கொன்ற கயவன் வாரன் ஆண்டர்சன்னை இன்னும் ஹவாய் தீவில் ஓவ்வெடுக்க விட்டிருக்கிறோம் நாம். இது பாரத தேசமாயிற்றே! ஃப்ரீ கண்ட்ரி ஃபார் ஆல் சார்ட் ஆஃப் க்ரைம். பெஸ்ட் ஆஃப் லக்,கரப்டட் கார்பொரேட்ஸ்.
=========
இதையும் வலியுடன் படித்து விடுங்கள்,என் மனதுக்குள் அசிங்க அசிங்கமாய் திட்டுவதற்கு எந்த கொம்பனும் புடுங்கமுடியாது.

இரண்டாம் தீர்ப்பு:-[அமீரகம்]

போன வருடம்,நவம்பர் மாதம் அமீரகத்தில்,  பாகிஸ்தானை சேர்ந்த 4வயதுசிறுவன் ஒருவன் 30 வயது உள்ளூர்-எமராத்தி ஒருவனால் மசூதியின் கழிவறையிலேயே வன்புணர்ச்சி செய்து சாகடிக்கவும் பட்டான்,அவனுக்கு துபாய் உச்சநீதி மன்றம் நிபந்தனை,மேல்முறையீடு அற்ற மரண தண்டனை விதித்துள்ளது. சீக்கிரமே அவன் சாவதை அச்சிறுவனின் ஆன்மா பார்க்கும், சிறுவனின் பெற்றோருக்கு அடிமனதின் வலியும் குறையும், கொலை, கொலைக்கு தீர்ப்பாகாது! என சொல்லும் மகாத்மாக்கள் பேருந்தில் தன் காலை மிதிக்கும் நபரை திருப்பி மிதிக்காமலாவது இருக்க முடியுமா? என முயன்று பார்க்கவும்.தனக்கு ஏற்பட்டால் இழப்பு,அடுத்தவனுக்கு ஏற்பட்டால் செய்தி.

மூன்றாம் தீர்ப்பு:-[அமீரகம்]

சென்ற வருடம்,தன் 36 வயது தென் ஆப்பிரிக்க காதலியை பேஸ்பால் மட்டையால் அடித்துக்கொன்று,கல்லைக்கட்டி கடலில் எறிந்த இங்கிலாந்தை சேர்ந்த 43 வயது ஜாக்சன் துரைக்கு, துபாய் உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை,மேல்முறையீடு,பெயில் அற்ற 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. அவன் தண்டனையை பூரணமாய் முடித்துவிட்டு போக 58 வயதாகியிருக்கும், அதன் பின் அவன் நாடு கடத்தப்படுவான், அவனுக்கு அதுவரை குடும்பம்,குடி,கூத்தி,கும்மாளம் அறவே கிடையாது, தண்டனைக்கு பின்னான அந்த நடைபிண வாழ்க்கை எவ்வளவு பெரிய தீர்ப்பு,? அமீரக நீதியரசர்களை வணங்குகிறேன்.
=========
இது குறித்து நான் முன்பு எழுதிக்கிழித்தது இங்கே


இன்று நண்பர் கருந்தேள் வேதனையுடன் எழுதிய பதிவு:- 

வேரைத் தேடி வெட்டு, இல்லை குறட்டை விட்டுத் தூங்கு…

 இது நண்பர் சுபதமிழினியன் அவர்களால்  இதே போபால் அவலத்தை பற்றி எழுதப்பட்ட சமூக விழிப்புணர்வு இடுகை.

சென்னை அருகே பெரும் ஆபத்து!

இது திரு.சொக்கன் அவர்களால் கல்பாக்கம் அணுக்கதிர்வீசினைப் பற்றி எழுதப்பட்ட சமூக விழிப்புணர்வு இடுகை.ஆபத்து வெகு தொலைவில் இல்லை என காட்டும்.

கொல்பாக்கம் - கதிர்வீச்சு பயங்கரம்

 இது மரக்காணம் பாலா அவர்களால் உள்ளக்குமுறலுடன் எழுதப்பட்டது, கைகா அணுமின் நிலையத்தில் வெளிச்சத்துக்கு வந்த சீர்கேடுகள், கல்பாக்கத்தில் இன்னும் நடந்து கொண்டிருப்பதை புடம் போட்டு காட்டியிருக்கிறார்.

இது எழுத்தாளர் ஞானியின் கேன்சர் கல்பாக்கம் என்னும் கட்டுரையின் கேள்விகளும் விஞ்ஞானி ஒருவரின் சப்பைக்கட்டு பதில்களும்

 

 இன்னும் வரும்

 

டிஸ்க்ரேஸ் -அவப்பெயர் [2008] [ஆஸ்திரேலியா] [கண்டிப்பாய் 18+]

டிஸ்க்ரேஸ் - இது  முழுக்க தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட, ஆங்கிலம், ஆஃப்ரிக்கானா, சுலு, ஸ்ஹோசா ஆகிய மொழிகளில் வெளியான ஆஸ்திரேலிய  நாட்டு திரைப்படம்,

ஜான் மால்கோவிச் ஒரு தலைசிறந்த அமெரிக்க - நடிகர், இயக்குனர், & தயாரிப்பாளருமாவார். இவரின் டேஞ்சரஸ் லியேசன்ஸ் படம் பார்த்துவிட்டு இவரின் படங்கள் ஒவ்வொன்றாய் தேடிப் பார்த்தேன், தலைவர் கவுரவம், கருமம், கன்னராவி, பாவ புண்ணியம், எதுவும் பாக்காதவர். கலைப்படங்களில் , நகைச்சுவை வேடங்களில், தன்னை டேமேஜ் செய்துகொள்ளும் வேடங்களில் பங்களிப்பு என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல, ஒரு சல்லிப்பயல் வேஷம் கட்டினாலும் சல்லிப்பயலாவே மாறியிருப்பார். இவர் இருமுறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டும்,இன்னும் வாங்கவில்லை. இவரின் பீயிங் ஜான் மால்கோவிச் “பற்றி நண்பர் கருந்தேள் அருமையாய் எழுதியிருப்பார்.

வர் வாழ்ந்து கெட்ட பேராசியராய் நடித்த, அதிகம் பேர் பாராமல் போன டிஸ்க்ரேஸ் (அவப்பெயர்) பற்றி பார்ப்போம், 1999ஆம் ஆண்டு புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் J. M. Coetzee ன் டிஸ்க்ரேஸ் என்னும் புதினம் வெளியாகி, மிகச்சிறந்த புதினத்துக்கான புக்கர் பரிசையும் வென்றது. இது வெளியான 4 ஆண்டுகளில் அவருக்கு நோபல் பரிசும் கிடத்தது ,இது கடைசி கால்-நூற்றாண்டுகளில் வெளியான சிறப்பான புதினம் என்னும் பெயரும் பெற்றுள்ளது, இதை தழுவி அதே பெயரில் அன்னா மரியா மாண்ட்செல்லி திரைக்கதையில் ஸ்டீவ் ஜேக்கப் இயக்கி 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ட்ராமா வகை திரைப்படம் இது. ஒரு கதாநாயகன் எப்போதும் ஜெயிக்க வேண்டும்,அவனுக்கு தாழ்வுகளே வரக்கூடாது என்போருக்கான படம் அல்ல இது .
========== 

படத்தின் கதை:-
ருமுறை விவாகரத்து பெற்ற தென்னாப்பிரிக்க வெள்ளை இன ஆங்கில இலக்கிய பேராசிரியர்-டேவிட் லூரி [ஜான் மால்கோவிச்],கேப் டவுனில் தனிமையில் இருக்கிறார். எப்போதும் வரும் மலேசிய விலைமாதுவும் கூட இவரை கவர்ச்சியின்மையால் ஒதுக்குகிறாள், 52 வயதான இவர், தன் கல்லூரி வகுப்பிலேயே காதல் -இலக்கியம் படிக்கும் கலப்பு-கருப்பிண பெண்ணான மெலனி ஐசக்கை, துரத்தி துரத்தி வலைவீசுகிறார், கவிதையால் அர்சிக்கிறார். இவரின் கட்டாயத்தாலும் , இண்டெர்னல் மதிப்பெண்ணுக்கு  பயந்தும் அப்பெண், இவருக்கு விரும்பாமலே இரையாகிறாள்.
வர் அவளின் உறவை தொடர்ந்து எதிர்பார்க்க, அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொள்ள,அவள் காதலனும் அப்பாவும் குறுக்கிட்டு, பிரச்சனை பெரிதாக, பல்கலைக்கழக நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டு, இவர் கட்டம் கட்டப்படுகிறார், இவர் அவர்கள் தண்டிக்கும் முன்னர், சுதாரித்துக் கொண்டு, என்ன? முடிஞ்சது முடிஞ்சு போச்சு, நான் குற்றம் செய்தேன், ஆனால் வருத்தமெல்லாமில்லை,  ஆனதை பார்த்துக்கொள்! 

ன தன் லெஸ்பியன் மகள் லூசி [ஜெசிக்கா ஹெய்ன்ஸ்] வசிக்கும் கிழக்கு கேப்பிற்கு நீண்டகார் பயணம் செய்து போகிறார். அங்கே மகளின் காதலி பிரிந்து போயிருக்க மகள், குழல் துப்பாக்கியின் துணையுடனும் தேவையில்லாத  தத்துவ குப்பைகொண்ட சித்தாந்தத்துடனும் வாழ்கிறாள். 
[லூஸி ஆள் நல்ல அழகாயிருந்தாலும் லூசி பேசும் பேச்சால் நமக்கு அறையலாம் போலிருக்கிறது, அப்படி ஒரு பாத்திரப்படைப்பு]
லூசி முன்பு வெள்ளையர்  பூர்வகுடி-தென்னாப்பிரிக்கருக்கு செய்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தமாக, தன் நிலத்திலேயே பெட்ரஸ் என்னும் கருப்பினத்தவனை தங்க வைத்திருக்கிறாள், அவனுக்கு தன் நாய் பண்ணையிலும்,  நர்சரிசெடிகள் பண்ணையிலும் வேலை தந்து, அவன் பக்கத்து நிலம் வாங்க வழிவகை செய்கிறாள். பெட்ரஸ் நினைத்த நேரத்தில் வீட்டுக்குள் வந்து நினைத்ததை செய்ய உரிமை தந்திருக்கிறாள். இது டேவிட்டிற்க்கு கடுப்பை கிளப்பினாலும் மகளின் அகம்பாவத்தால் பொறுத்துப்போகிறார். வாராவாரம் நடக்கும் உழவர் சந்தைக்கு இவர், மகள், பெட்ரஸ் போய் பூச்செடிகள்,காய்கற்கள் விற்று வருகின்றனர். இந்நிலையில் பெட்ரஸ் மாயமாகிறான்.

ப்போது டேவிட் , லூஸின் குடும்ப தோழியான விலங்குகள் மருத்துவ  க்ளீனிக் நடத்தும் பெவ் என்னும் பெண்மணியிடம்  குறைந்த கூலிக்கு வேலை பார்க்கிறார்,  ஊரில் பிடித்து வந்த தெருநாய்களை குளிப்பாட்டி, தடுப்பூசி ,தீனி போட்டு, யாரும் வாங்கிச் செல்லாத பட்சத்தில் அவற்றை விஷஊசி போட்டு கொன்று  எரியூட்டுவதே இவரின் பிரதான வேலை. மிகுந்த மனவருத்தத்துடன் அதைசெய்கிறார். [இது தென் ஆப்பிரிக்காவில் நிதர்சனம்,அங்கே தீனியும்,புல்லும்,நீரும்  அதிகம் செலவாகிறது என காட்டு யானைகள் கூட கும்பலாக அரசினால் சுட்டுக் கொல்லபடுகின்றன]

ருநாள் மகளும் இவரும் நடை போய் விட்டு வருகையில் ஆப்பிரிக்க கருப்பின இளைஞர்கள் மூவர், இவர்கள் தோட்டத்துக்குள் வந்து, இவர் வீட்டு கூண்டு நாய்களை சீண்ட,  லூசி என்னவென்று விசாரிக்க, அவர்கள் ஒருவனின் சகோதரிக்கு பிரசவ வேதனை-மிகவும் சிக்கல்,போன் செய்ய வேண்டும் என கெஞ்ச,லூசி ஒருவனை மட்டும் வீட்டுக்குள் கூட்டிப்போகிறாள், டேவிட் சற்றும் எதிர்பாராத வேளையில் மற்ற ஒருவன் டேவிட்டை தள்ளிவிட்டு, வீட்டுக்குள் சென்று உள்ளே சென்ற மற்றொருவனுடன் சேர்ந்து லூஸியை வெறியுடன் புணர்கின்றனர். 
வர் ஒருவன் மீது வளர்ப்பு நாயை ஏவி விடுகிறார்,வீட்டின் கதவை உடைத்து திறந்து உள்ளே போனவரை மண்டையில் கட்டையைக் கொண்டு அடித்து, கழிவறையில் இவரை தள்ளி,வெளியே கதவை தாழிட்டும் விடுகின்றனர், லூஸியை மாறிமாறி வெறியுடன் புணர்ந்த  மூவரும்,பின்னரும் நிறவெறி அடங்காமல் வீட்டில் இருந்த டீவி முதல் கக்கூஸ் ப்ரஷ் வரை எடுத்துக்கொண்டு, டேவிட்டின் கார் டிக்கியில் அடைத்தவர்கள், வெறி அடங்காமல் கூண்டில் குலைத்துக் கொண்டிருந்த வளர்ப்பு நாய்கள் அத்தனையையும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றுவிடுகின்றனர்.
ழிவறையில் மயக்கத்திலிருந்து விழித்த டேவிட் , வெண்டிலேட்டர் வழியே அதைப்பார்த்துவிட்டு கத்துகிறார், கதவை திறந்து உள்ளே வந்த கயவர்கள்  இவர் மீது எத்தில் ஆல்கஹாலை ஊற்றி, கொளுத்தியும் விட்டு, கதவையும் தாழிட்ட பின்னர்  இவரின் காரையும் திருடிக்கொண்டு போகின்றனர். இவர் கொஞ்சமும் தாமதிக்காமல் கழிவறை கோப்பையின் நீரில் தலையை விட்டும், அதிலிருந்து தண்ணீர் எடுத்தும் தீயை அணைக்கிறார். [இந்த ஒரு காட்சி ஒன்றே போதும்-மால்கோவிச்சின் அபார திறமைக்கு]

மிகுந்த வலியிலும் லூஸி குளித்துவிட்டு பாத்ரோபுடன் வந்து கதவை திறக்கிறாள், இருவருக்குமே அவமானத்தால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியவில்லை. அகம்பாவம் பிடித்த லூஸி வலியை வெளியே காட்டிக்கொள்ளவில்லை, போலிசிடமும்  போய் புகார் கொடுக்கவில்லை, இவர் மட்டும் காரும் ஏனைய பொருளும் கொள்ளையடிக்கப்பட்டன என புகார் அளிக்கிறார். இவர் லூசியிடம் ஹெஐவி தாக்குதல், விடி நோய் தொற்று ,கர்ப்பம் நேரக்கூடும், மருத்துவரிடம் போவோம் என்றதற்கும், பிடிவாதமாய் மறுக்கிறாள், அவளுக்கு ஒரே கவலை, தான் பிடிவாதமாய் விலகியிருந்த அப்பா முன்னர் இப்படி அவமானம் நேர்ந்துவிட்டதே என்பது தான். இப்போது காயத்துக்கு சிகிச்சைபெற்று வந்த டேவிட்  பிணமான நாய்களை மண் தோண்டி புதைக்கிறார். ஒரு நாய் மட்டும் அதிர்ஷ்டவசமாக கழுத்தில் கத்தி வெட்டுடன் உயிர்பிழைத்தது தான் ஒரே ஆறுதல்.

லூஸி இவரை ஒரு தொண்டு நிறுவன ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போகிறாள், அங்கு அமர்ந்திருந்த ஊர்ப்பட்ட கூட்டம்,இவரின் எரிந்துபோன,காயம்பட்ட நிலையிலும் இவரை சிகிச்சைக்கு உள்ளே அனுப்ப மறுக்கிறது, இவர் வலியுடன்  நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுகிறார்.

லூஸிக்கு அப்பாவின் மேல் இனம் தெரியாத கோபம் இருக்கிறது, அப்பா ஒரு ஸ்த்ரி லோலன், இவர் மெலனி ஐசக்குக்கு உடலால் செய்த செயலால் தான் வேறுவழியில் தானும் உடலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என ஆழமாய்  நம்புகிறாள், இனி அப்பாவின் எந்தவித அறிவுறையையும் கேட்பதில்லை என பிடிவாதமாய் இருக்கிறாள்.

ப்போது பக்கத்து வீட்டுக்கார ஆளான பெட்ரஸுக்கு நிலம் அரசு மூலம் கிடைத்தும் விடுகிறது, அவனுக்கு இவளின் நீர்தேக்க தொட்டியிலிருந்தே நீரை பாசனத்துக்கு வழங்குகிறாள், அவன் புதிதாய் வீடு கட்டிக்கொள்ள ஆரம்பிக்கிறான்,  ஊரில் இருந்து தன் புதிய  மனைவியையும் கூட்டி வந்தவன், நிலம் கிடைத்ததை கொண்டாட பெரிய விருந்தை கிடா வெட்டி, உறவை கூட்டி கொண்டாடுகிறான்.
ந்த விருந்தில் அப்பாவும் பெண்ணும் கலந்துகொள்ள, அங்கே லூஸியை வன்புணர்ச்சி செய்த நாரப்பயலும் இருக்கிறான், அவன் மனநலம் பிழறியவன், பெட்ரசின் மனைவியின் அக்கா மகன் என்றும் தெரிகிறது,டேவிட் கொதித்து அவனை போலீஸில் பிடித்துக்கொடுப்பேன் என மிரட்டி,போன் செய்யப்போக லூஸி அரைக்கிறுக்கு போல வந்து தடுக்கிறாள்.
பெட்ரஸ் வீட்டில் விருந்து நடக்கிறது, போலீஸ் வந்தால் பெட்ரஸ் மானம் போய்விடும் என பிதற்றுகிறாள். பின் எதற்கும் இவரை மதிக்கவில்லை,பின் வந்த நாட்களில் பெட்ரஸின் விட்டிலேயே அந்த மனநலம் பிழறிய இளைஞன் தங்கிக்கொள்கிறான். இவர்களுக்கு பெட்ரஸின் சுயரூபம்,நிலத்தை அபகரிக்க அவன் ஆட்களை விட்டே அராஜகம் செய்யசொல்லி போட்ட  இரட்டை வேடம் புரிகிறது.

ருநாள் லூஸி உள்ளே குளித்துக்கொண்டிருக்க, வெளியே வெண்டிலேட்டர் வழியாக அந்த மனநிலை பிழறிய இளைஞன் எட்டிப்பார்ப்பதை பார்த்தவர், விரைந்து போய் அவனை கீழே தள்ளி அடிக்கிறார், உதைக்கிறார். சத்தம் கேட்டு பாத்ரோபை சுற்றிக்கொண்டு வந்த லூஸி, டேவிட்டிடமிருந்து அந்த இளைஞனை விடுவிக்கிறாள், அவனை வலிக்கிறதா? என கொஞ்சலாய் கேட்கிறாள், அப்போது லூஸியின் திரண்ட மார்புகளை பார்த்து அழுகையை அடக்கிய இளைஞன், கறுவிக்கொண்டே, வீ வில் கில் யூ என சொல்லிய படி நட்டு வைத்த செடிகளை சிதைத்துவிட்டு ஓடுகிறான்.

ருந்தும் மகளால் எதுவும் செய்யவிடாமல் தடுக்கப்பட்டவர், ஒரு கட்டத்தில் பெட்ரஸிடன் போய் நீ அந்த குற்றவாளியை வீட்டிலேயே தங்க வைத்துள்ளாயே? உனக்கு நன்றியே இல்லையா? எனறு கேட்க, அந்த பன்னாடை, அவன் சிறு குழந்தை, அவனுக்கு ஒன்றும் தெரியாது, லூஸியை நான் திருமணம் செய்துகொள்கிறேன், அவளுக்கு அது தான் பாதுகாப்பு என்கிறார். கொதித்துப்போன இவர் லூஸியிடம் போய் இதை சொல்ல, அவளும் அதை முட்டாள் தனமாக ஏற்றுக்கொள்கிறாள்.
கேனைத்தனமாய் சப்பை நிபந்தனைகள் இடுகிறாள், பெயருக்கு தான் அவனுக்கு நான் மனைவி, கட்டிலில் அல்ல, இந்த நிலம் அவனுக்கு சொந்தம் ஆகட்டும், ஆனால் வீட்டை தரமாட்டேன், என் அனுமதியில்லாமல் என் வீட்டுக்குள்ளே அவன் வரக்கூடாது என்கிறாள், இவருக்கு கண்கள் இருள்கிறது, இதைப் போய் அவனிடம் சொல்ல சொல்கிறாள், இவர் அவனால் உனக்கு பாதுகாப்பு அல்ல, ஆபத்து தான்,உன் அம்மாவுடன் ஹாலந்துக்கு போய்விடு என்கிறார். 
லூசி மறுக்கிறாள், நான் என் கொள்கையில் தோற்றுவிடுவேன், மேலும் நான் கருத்தரித்துள்ளேன், நான் ஒரு பெண், அந்த ஒரு பாவமறியா சிசுவை அழிக்க மாட்டேன் என குப்பை தத்துவம் பேசுகிறாள். இனி இவர்கள் என் மக்கள், இவர்கள் தான் என் உறவுகள் என்கிறாள், இவர் செய்வதறியாமல் கண்ணீருடன் ஊரைவிட்டே வெளியேறுகிறார்.

கேப்டவுனுக்கு இவரால் பாதிக்கப்பட்ட மெலனி ஐசக்கின் வீட்டுக்கு சென்றவர், அவள் அப்பாவிடமும், அவள் அம்மா, இளைய சகோதரியிடமும் மண்டியிட்டு, வணங்கி மன்னிக்க சொல்லி விட்டு, தான் வேலை செய்த பல்கலைக்கழகம் செல்கிறார், அங்கே மெலனி இயல்பு வாழக்கைக்கு திரும்பிவிட்டிருக்கிறாள், மேடை நாடகத்தில் சிரிப்பு வேடமும் பூண்டு நடிக்கிறாள், இவர் ஆனந்தப்படுகிறார். 
1.டேவிட் லூரிச் மெலனியிடமும் மன்னிப்பு கேட்டாரா?
2.கயவன் பெட்ரஸ் தண்டிக்கப்பட்டானா?
3.டேவிட் மீண்டும் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தாரா?
4.மகள் லூஸி என்ன ஆனாள்?

போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
=================
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-
=================
முழுக்கதையும் படிக்க:-
ங்கே இருந்த மெலனியின் காதலன் இவரை அடிக்காத குறையாக சிகரெட்டை மேலே எரிந்து எச்சரித்து அனுப்புகிறான், மிகவும் குற்ற உணர்வும், சுயபச்சாதாபமாய் உணர்ந்தவர், காரில் பயணிக்கையில் சிக்னலில் கிராக்கி பிடிக்கும் ஒரு விலை மாதுவை , தன் காரில் கூட்டிக்கொண்டு போய் வாய்ப்புணர்ச்சி பெறுகிறார்.  தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் இவர் வாழ்ந்த வீடு சென்றவர், வீட்டை  மாணவர்கள் அடித்து நொறுக்கியிருக்க, எஞ்சியிருந்த ஒரு புல்புல் தாராவை மட்டும் தன்னுடன் எடுத்துக்கொண்டு மீண்டும் கிழக்கு கேப்பிற்கே திரும்புகிறார்,

ப்போதும் விலங்குகள் க்ளினிக் நடத்தும் பெவ்விடமே போய் தங்கிக் கொண்டு வேலை செய்கிறார்,மதிக்காத மகளை புரிந்து கொண்டு அன்பு செலுத்த ஆரம்பிக்கிறார்.  இப்போது இவரின் திமிர் சுத்தமாய் வடிந்து விட்ட நிலையிலும் இவருக்கு பெண்ணின் அரவணைப்பும், உடல்சுகமும் தேவைப்பட கவர்ச்சியில்லாத, பருமனான,வயதான பெவ்வை இச்சைக்கு நெருங்குகிறார், முதலில் மறுத்த பெவ், பின்னர் யோசித்த பின்னர் இசைகிறாள், இருவரும் முழு  ஈடுபாட்டுடன், பாதுகாப்புடன், க்ளீனிக் நேரம் முடிந்தவுடன் தரையிலேயே படுக்கை விரித்து புணருகிறார்கள். இப்போது இவருக்கு திமிர் நீங்கி  குற்ற உணர்வு தலை தூக்குகிறது,

ய்வு நேரங்களில் புல் புல் தாராவை வாசிக்கிறார், கர்ப்பிணி மகளை அவளுக்கே தெரியாமல் சந்தை சென்று ஒளிந்திருந்து பார்க்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் பிரிவை தாங்க முடியாதவர்  காரை தொலைவில் நிறுத்திவிட்டு, நிறைமாத கர்ப்பிணியாய் , புதிய பூச்செடிகள் ஊன்றிக்கொண்டிருக்கும்  மகளை எட்ட நின்று பார்க்கிறார்,  இந்த முறை லூஸி என்று குரல் கொடுக்கிறார்,  தொண்டை அடைக்க குரல் எழும்பவில்லை, செல்ல நாய் ஓடிவந்துவிட,  மகள் அயற்சியாய் திரும்பி அப்பாவை பார்த்து புன்னகைக்கிறாள், உள்ளே வருகிறீர்களா? தேநீர் தயாரிக்கிறேன், என்றவளுக்கு ,யோசிக்காமல் சரி என்கிறார்.
=========000=========
படத்தின் ஒளிப்பதிவு அபாரம்-ஸ்டீவ் அர்னால்ட்,பளிங்கு போல்  சுத்தமான தென் ஆப்பிரிக்காவின் அழகை நவீன கேமரா யுத்திகளுடன் அள்ளி வந்துள்ளார். படத்தின் திரைக்கதையை மனைவி எழுத இயக்கத்தை கணவர் செய்திருக்கிறார். அழகான திட்டமிடலுடன் எடுத்த படம். படத்தின் சில விடயங்களில் எனக்கும் ஏனையோருக்கும் ஒவ்வாமை இருந்தாலும் புக்கர் பரிசு பெற்ற புதினத்தை சிதைக்காமல் அப்படியே படமாக்கியிருக்கின்றனர். இசையும் பிரமாதம்-ஆண்டனி பார்டோஸ். படத்தில்  அப்படி ஒன்றும் கலவிக்காட்சிகள் டீட்டெய்ல்டாக இல்லாவிட்டாலும் டிஸ்டர்ப்டு கண்டண்டுக்காக குடும்பத்தோடு பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.புதினம் கிடைத்தால் அவசியம் வாங்கிப்படிக்கவும்.
 கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-

Directed by Steve Jacobs
Produced by Steve Jacobs
Anna Maria Monticelli
Emile Sherman
Written by J. M. Coetzee (novel)
Anna Maria Monticelli (screenplay)
Starring Eriq Ebouaney
Jessica Haines
John Malkovich
Music by Antony Partos
Cinematography Steve Arnold
Editing by Alexandre de Franceschi
Release date(s) 2008
Running time 120 min.
Language English
Xhosa
Afrikaans
Zulu
===============
சிறு குறிப்பு:-
இந்த படத்தை பற்றி எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தன் தளத்தில் கசக்கும் காமம் என்னும் பெயரில் எழுதிய விமர்சனம் இன்று   படித்தேன், சுட்டிக்கு நன்றி செ.சரவணகுமார். இதை மிகவும் அருமை என ஒற்றை சம்பிரதாயமான சொல்லுக்குள்  அடக்க முடியவில்லை, தன்னை டேவிட் லூரியாகவே உணர்ந்திருக்கிறார். பைரனின் கவிதை வரிகளை ,பல இடங்களில் அழகாய் உள்வாங்கி மேற்கோள் காட்டியிருக்கிறார்.அவரின் பதிவின் சுட்டி
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)