தி ரீடர்" (The Reader) 2008

"தி ரீடர்" (The Reader) 2008 ஆம் ஆண்டு வெளியானது, இத்திரைப்படத்தை இயக்குனர் ஸ்டீபன் டால்ட்ரி  இயக்கினார். இதில் ஹன்னா ஷிமிட்ஸ் என்ற முக்கிய வேடத்தில் நடிகை கேட் வின்ஸ்லெட் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு, மைய கதாபாத்திரமான ஹன்னாவின் மனசாட்சியற்ற தன்மையையும் ரகசியமான உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியதால் பெரும் பாராட்டைப் பெற்றது.
 மைக்கேல் பெர்க் கதாபாத்திரத்தில் இளம் வயதில் டேவிட் கிராஸ்-ம், முதிய வயதில் ரால்ஃப் ஃபியன்னஸ்-ம் நடித்திருந்தனர். 

படத்தின் ஒளிப்பதிவை கிறிஸ் மெங்கஸ் மற்றும் ரோஜர் டீக்கின்ஸ் இருவரும் மேற்கொண்டனர். இவர்கள், போருக்குப் பிந்தைய ஜெர்மனியின் தனிமையையும், கதை மாந்தர்களின் நெருக்கமான உறவின் உணர்வுகளையும், பின்னர் சிறை வாழ்க்கையின் உணர்வற்ற தன்மையையும் பிரதிபலிக்கும் வகையில், குளிர்ந்த நிறங்களைக் கொண்ட மென்மையான ஒளியைப் பயன்படுத்தியிருந்தனர்.

 டேவிட் ஹேர், த ரீடர். நாவலைத் தழுவி திரைக்கதையை அமைத்தார். இந்தத் திரைக்கதை, யூதப் படுகொலையின் கொடுமைகளுக்கும் ஹன்னாவின் எழுதப் படிக்கத் தெரியாமைக்கும் இடையில் உள்ள தார்மீகத் தொடர்புகளை வலியுறுத்துகிறது. 

இப்படத்துக்கு Nico Muhly இசையமைத்தார்.  இந்த மென்மையான இசை, படத்தின் சோகத்தையும் மைக்கேலின் குற்ற உணர்வையும் பின்னணியில் தாங்கி நின்றது. 

இந்தத் திரைப்படம் ஆஸ்கார் விருதுகள் உட்படப் பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதில் கேட் வின்ஸ்லெட் 'சிறந்த நடிகைக்கான' ஆஸ்கார் மற்றும் பாஃப்டா விருதுகளையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றார்.

உலக சினிமா பார்வையில், ஸ்டீபன் டால்ட்ரியின் இந்தத் திரைப்படம் ஒரு சாதாரண காதல் கதையாக இல்லாமல், ஒரு ஆழமான தார்மீகக் கேள்வியாகப் பரிணமிக்கிறது. 

இது யூதப் படுகொலையின் சுமையையும், அதில் எஞ்சியிருக்கும் குற்ற உணர்வு, பச்சாத்தாபம் மற்றும் மன்னிப்பின் சிக்கலையும் ஆராயும் ஒரு நீதிக்கதையாக மிளிர்கிறது.
ஹன்னா, பாலியல் கவர்ச்சியையும், அதிகாரத்தையும், ஒரு போர்க் குற்றவாளியின் ரகசியத்தையும் ஒருங்கே கொண்டுள்ள ஒரு சிக்கலான கதாபாத்திரம், அதற்கு மிகப் பொருத்தமாக கேட் வின்ஸ்லெட்டை தேர்வு செய்திருந்தனர். 
இந்தத் திரைப்படம், இளம் மாணவன் மைக்கேல் மற்றும் முதிர் கன்னி ஹன்னாவின் உறவை, போருக்குப் பிந்தைய ஜெர்மனியில் உள்ள பழைய மற்றும் புதிய தலைமுறையினரின் மோதல் மற்றும் சமரசத்தின் ஒரு குறியீடாகவே பயன்படுத்துகிறது.
ஹன்னாவின் எழுதப் படிக்கத் தெரியாமை, நாஜிக்களின் தார்மீக விழிப்புணர்வின்மை மற்றும் வரலாற்று உண்மைகளைப் புறக்கணிக்கும் மனப்பான்மைக்கு இப்படைப்பு ஒரு வலிமையான குறியீடாகும்.

 இயக்குநர் டால்ட்ரி, மைக்கேலின் பார்வையில் கதையை நகர்த்தி, ஹன்னா ஒரு குற்றவாளி என்று தெரிந்த பிறகும் பார்வையாளர்களை அவளுடன் உணர்ச்சி ரீதியாகப் பிணைத்து வைக்கிறார், இது பார்வையாளர்களுக்குத் தார்மீக முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. 

சமூகப் பொறுப்பு, சட்டப்பூர்வமான தீர்ப்பு மற்றும் தனிப்பட்ட பச்சாதாபம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள சிக்கலான சமநிலையைத் தேடும் ஒரு சிறந்த உலக சினிமா படைப்பாக இது நிலைபெறுகிறது.

த ரீடர் நாவல் பற்றி:-

'தி ரீடர்'  நாவல், போருக்குப் பிந்தைய ஜெர்மனியின் காலகட்டத்திற்கு,  1960களுக்கு, வாசகர்களைக் கொண்டு செல்கிறது. அங்கே ஒரு இளம் மாணவனுக்கும், வயதில் மூத்த முதிர் கன்னிக்கும் இடையே ஏற்படும் விடலைக் காதலை மையமாகக் கொண்டு கதை விரிகிறது. 

ஜெர்மனியில் "அப்பா, நீங்கள் போரில் என்ன செய்தீர்கள்?" என்று அடுத்த தலைமுறை கேள்விகளை எழுப்பத் தொடங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் கதை விரிகிறது. இந்தக் காலகட்டத்தின் பல்வேறு நினைவுகளும் கண்ணோட்டங்களும் ஒருங்கிணைந்து வரலாறாகக் கொள்ளப்படுகின்றன.

 வரலாறு மற்றும் நினைவுகளை ஒப்பிட்டுப் படிக்கும்போது, ஜெர்மானிய மொழியில் "Vergangenheitsbewältigung (VGB)" என்ற கருத்தாக்கம் எழுந்தது. இதன் பொருள் "கடந்த காலத்தைக் கடந்து வருதல்" என்பதாகும். கதை நாயகன் மைக்கேல் பெர்க், தான் நேசித்த பெண் ஹாலோகாஸ்டின் கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர் என்று அறியும்போது, தன் பிந்தைய-நினைவுகளுடன் போராட நேரிடுகிறது.

நன்னெறி சார்ந்த கேள்விகளை எழுப்பும் நாவலின் ஆசிரியர், மைக்கேலின் பார்வையில் வாசகர்களை நிறுத்தி, வரலாற்றை நினைவு கூர்வதில் நினைவுகளின் தாக்கம் என்ன என்பதை ஆராய்கிறார். 

அத்துடன், அடுத்த தலைமுறைக்குள்ள பொறுப்புகள் என்ன, மேலும் வரலாற்றை எப்படி நினைவில் கொள்வது, எப்படி நினைவுக் குறியீடாக்குவது என்ற அவர்களின் விளக்கம் என்ன என்பது பற்றியும் இந்த படைப்பு சிந்திக்க வைக்கிறது.

இந்த நாவல் ஜெர்மனியில் 500,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. இது பல இலக்கிய விருதுகளையும், சாதகமான விமர்சனங்களையும் பெற்றது. 2004 ஆம் ஆண்டில், ஜெர்மன் வாசகர்கள் மத்தியில் மிகவும் பிடித்த 100 புத்தகங்களில் இது 14வது இடத்தைப் பெற்றது. இது சமகால ஜெர்மானிய நாவல்களில் மிகவும் உயர்ந்த தரவரிசைகளில் ஒன்றாகும். இது "தனிப்பட்ட மற்றும் பொதுவானவற்றுக்கு இடையேயான கலைத்துவ வேறுபாட்டை அபத்தத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது" என்று வாசகர்கள் பாராட்டினார்கள் .
 "ஒருவர் பெரிய கருப்பொருள்கள் பற்றி உண்மையிலேயே எழுத முடிந்தால், அவற்றைத் தவறவிடக் கூடாது" என்று புகழ்ந்தனர். 

1998 ஆம் ஆண்டில், இந்த நாவல் ஹான்ஸ் ஃபல்லாடா பரிசை வென்றது.
2002 ஆம் ஆண்டுக்குள், நாவல் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அமெரிக்காவில்  "கவர்ச்சிகரமான, தத்துவ ரீதியாக நேர்த்தியான, மற்றும் தார்மீக ரீதியாக சிக்கலான" படைப்பு என்று விவரித்தனர். "19 ஆம் நூற்றாண்டின் பிந்தைய-காதல், பிந்தைய-பழங்கதை வடிவங்களை 20 ஆம் நூற்றாண்டின் பயங்கரமான வரலாற்றோடு துணிச்சலாக இணைத்த படைப்பு என புகழ்ந்தனர், இந்த நாவல் அமெரிக்காவில் இரண்டு மில்லியன் பிரதிகள் விற்பனையானது , இதில் பல, 1999 இல் புகழ்பெற்ற ஓப்ரா'ஸ் புக் கிளப்பில் இடம்பெற்ற பிறகு விற்றன, இங்கிலாந்தில் 200,000 பிரதிகள், பிரான்சில் 100,000 பிரதிகள் விற்றன, மேலும் தென்னாப்பிரிக்காவில் 1999 ஆம் ஆண்டின் பூக் பிரைஸ் விருதையும் இப்படைப்பு பெற்றது.

நாவல் அறிமுகம் மற்றும் முக்கியத்துவம்
"தி ரீடர்" (The Reader - ஜெர்மன்: Der Vorleser) என்பது ஜெர்மானிய சட்டப் பேராசிரியர் மற்றும் நீதிபதி பெர்ன்ஹார்ட் ஷிளிங்க் (Bernhard Schlink) எழுதிய ஒரு முக்கியமான நாவலாகும். இது 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 
போருக்குப் பிந்தைய ஜெர்மன் தலைமுறையினர் யூதப் படுகொலைக்கு (ஹோலோகாஸ்ட்) எதிர்வினையாற்றுவதிலும், அதைப் புரிந்துகொள்வதிலும் உள்ள தார்மீகச் சிக்கல்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது.

படத்தின் கதை:-

இந்த படைப்பின் முக்கிய கதாபாத்திரங்களாக மைக்கேல் பெர்க் மற்றும் ஹன்னா ஷிமிட்ஸ் உள்ளனர். மைக்கேல் பெர்க் கதை ஆரம்பிக்கும் போது 15 வயதுச் சிறுவனாகச் சித்தரிக்கப்படுகிறார், 
மேலும் தன் பிற்காலத்தில் சட்ட வரலாற்றில் ஆராய்ச்சியாளராக, விவாகரத்து பெற்றவராக, ஜூலியா என்ற ஒரு மகளுக்குத் தந்தையாகவும் சித்தரிக்கப்படுகிறார். 
அவர் தனது தலைமுறையினரைப் போலவே, நாட்டின் சமீபத்திய வரலாற்றான ஹோலோகாஸ்ட்டை எதிர்கொள்ளப் போராடுகிறார். 

மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ஹன்னா ஷிமிட்ஸ், ஆஷ்விட்ஸில் முன்னாள் காவலராக இருந்தவர். மைக்கேலைச் சந்திக்கும்போது இவருக்கு 36 வயது, இவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் மற்றும் ட்ராம் நடத்துநராகப் பணிபுரிகிறார். இவர்களது உறவில் ஹன்னா ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளார்.

 மைக்கேலின் தந்தை, கான்ட் மற்றும் ஹெகல் தத்துவங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தத்துவப் பேராசிரியர். நாஜி சகாப்தத்தில் ஸ்பினோசாவைப் பற்றி விரிவுரை வழங்கியதற்காக வேலையை இழந்தவர். 

அவர் உணர்ச்சி ரீதியாக இறுக்கமானவர்  தனது குழந்தைகளிடம் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தாதவர். மைக்கேலின் மற்ற உறவுகளில் ஹன்னா உருவாக்கிய சிரமங்களை இது மேலும் அதிகரிக்கிறது.

 மைக்கேல் தனது இளமைக்காலத்தில் தாய் அவரைக் கொஞ்சுவதைப் பற்றி நினைவுகூருகிறார், இது ஹன்னாவுடனான உறவில் மீண்டும் தட்டியெழுப்பப்படுகிறது.
கதை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதில் முதல் பாகம் மேற்கு ஜெர்மன் நகரத்தில் 1958 இல் தொடங்குகிறது. 15 வயதான மைக்கேல் வீடு திரும்பும் வழியில் உடல்நிலை சரியில்லாமல் போகிறார்.

 அப்போது 36 வயதான ட்ராம் நடத்துநர் ஹன்னா ஷிமிட்ஸ் அவரைக் கவனித்து, பாதுகாப்பாக வீட்டிற்கு வழிநடத்தி கொண்டு சேர்க்கிறார். ஸ்கார்லெட் காய்ச்சலால் மூன்று மாதங்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த மைக்கேல், குணமடைந்த பிறகு நன்றி தெரிவிக்க ஹன்னாவைப் பார்க்கச் செல்கிறார். 

அங்கு அவருக்கு ஹன்னா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அவள் உடை அணிவதைப் பார்த்தபின் வெட்கத்தால் தெறித்து ஓடினாலும், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவளைக் காணத் திரும்புகிறார். பாய்லருக்கு குளிர் காய்வதற்கு வாளியைத் தந்து நிலக்கரி எடுக்கச் சொல்கிறாள், பின்னர் நிலக்கரித் தூசியுடன் நகைப்புக்கிடமான குழந்தை போல இருந்த மைக்கேலைக் குளிப்பாட்டி, ஹன்னா அவனை மயக்கி, அவர்களுக்கிடையில் ஒரு தீவிரம் மிக்க முறையற்ற காமத்தை தொடங்குகிறாள். அவர்கள் தொடர்ந்து சந்தித்து, குளியல் தொட்டியில் குளித்து, உடலுறவு கொள்வதற்கு முன், ஹன்னா அடிக்கடி மைக்கேலை உரத்த குரலில் துணை இலக்கிய பாட புதினங்களை வாசிக்கச் சொல்கிறாள். குறிப்பாக, 'தி ஒடிஸி' மற்றும் செக்காவ்வின் 'தி லேடி வித் தி டாக்' போன்ற பாரம்பரிய இலக்கியங்களை வாசிக்க வைத்து கேட்கிறாள். 

உடல் ரீதியான நெருக்கம் இருந்தபோதிலும், உணர்ச்சி ரீதியாக அவர்கள் விலகியே இருக்கிறார்கள்,  ஹன்னா சில சமயங்களில் மைக்கேலை உடல் ரீதியாகவும் வார்த்தைகளாலும் அதிர்வூட்டி துன்புறுத்துகிறார். இந்த உறவு சில மாதங்கள் நீடித்த நிலையில், மைக்கேல் தன் பள்ளி நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடத் தொடங்கியதால் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கம் மெல்ல குறையத் தொடங்கியது. இவனது பிறந்தநாளன்று  குளியல் வாசிப்பு உடலுறவுக்குப் பின், ஹன்னா திடீரென்று எந்தத் தடயமும் இல்லாமல் அவன் வாழ்விலிருந்து மறைந்துவிடுகிறாள். 

தான் செய்த ஏதோவொரு செயலினால்தான் அவள் சென்றாள் என்று மைக்கேல் குற்ற உணர்வு கொள்கிறான், மேலும் ஹன்னாவைப் பற்றிய நினைவினால் அவரது பிற்காலப் பெண் உறவுகள் அனைத்துமே சொல்லி வைத்தார் போல பாதிக்கப்படுகின்றன.

ஆறு ஆண்டுகள் கழிகின்றன, மைக்கேல் இப்போது சட்டப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார். ஒருமுறை, அவர் மாணவர்கள் குழுவுடன் ஒரு போர்க் குற்றவியல் விசாரணையை (war crimes trial) பார்வையிடச் செல்கிறார். அங்கு நடு வயதுள்ள ஆறு பெண்கள், ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் உள்ள ஆஷ்விட்ஸின் துணை முகாமில் (satellite of Auschwitz) எஸ்.எஸ். காவலர்களாகப் (SS guards) பணியாற்றியதற்காக விசாரிக்கப்பட்டனர். 

இந்த ஆறு பெண்கள், தங்களின் பாதுகாப்பில் இருந்த சுமார் 300 யூதப் பெண்களை, முகாமில் இருந்து கொட்டும் பனியில் இறக்கும் வரை நடைபயணம்  செய்யும் போது கோபுரத்தில் விமானம் குண்டு வீசப்பட்ட ஒரு தேவாலயத்தில் பூட்டி வைத்து, தீயில் இறக்க விட்டு வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். 

உயிர் பிழைத்தவர்களில் அப்போது சிறுமியாக இருந்த , மாத்தர் என்ற யூத இளம்பெண்ணால்  எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் இந்தச் சம்பவம் தத்ரூபமாக விவரிக்கப்பட்டிருந்தது, அவர் அதன் பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர், அவரே விசாரணையில் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாகவும் இருக்கிறார். 

இந்த விசாரணையைக் காணும் மைக்கேல், குற்றவாளிகளில் ஒருவராக ஹன்னா ஷிமிட்ஸைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவர் தான் நேசித்த ஒரு குற்றவாளி மீது குற்ற உணர்வும், அதே நேரத்தில், ஹன்னாவுக்கு எதிரான சான்றுகள் இருந்தபோதிலும் மற்ற காவலர்களைக் கண்காணித்த முழுப் பொறுப்பையும் அவள் ஏன் ஏற்கிறாள் என்ற குழப்பமும் கொள்கிறார். 

அவள்தான் தேவாலயத் தீ விபத்து பற்றிய கணக்கை எழுதினாள் என்று அவள் மீது அபாண்டமான குற்றம் சாட்டப்படுகிறது. முதலில் அவள் மறுத்தாலும், அவளுடைய கையெழுத்தின் மாதிரியை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, பீதியடைந்த ஹன்னா, அதைச் சமர்ப்பிக்காமல் இருப்பதற்காக அந்த ஆவணத்தை எழுதியதை ஒப்புக்கொள்கிறாள்.

இந்தத் தருணத்தில், மைக்கேல் ஒரு பேரதிர்ச்சிக்குள்ளாகி, ஹன்னா எந்த விலை கொடுத்தும் வெளிப்படுத்த விரும்பாத ஒரு ரகசியத்தை அவள் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்கிறார், அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது . அவளுடைய பல செயல்பாடுகளுக்கு இதுவே காரணம் என்பதையும் மைக்கேல் அத்தருணத்தில் புரிந்து கொள்கிறார், அவள் சீமென்ஸ் ட்ராம் நிறுவனத்தில் அலுவலகத்தில் அமர்ந்து செய்ய கிடைத்த உயர் பதவியை மறுத்ததற்கும் இதுவே காரணம் என விளங்கிக் கொள்கிறார்; அந்தப் பதவி உயர்வு அவளை மேற்பார்வை செய்யும் பொறுப்பிலிருந்து நிச்சயம் நீக்கி இருக்கும். மேலும், அவளது ரகசியம் ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்ற பயம்தான் அவள் வாழ்நாள் முழுவதும் சுமந்த பயமாக இருந்தது என அறிகிறார்.

 விசாரணையின்போது, ஹன்னா தனது மேற்பார்வையின் கீழ் இருந்த பலவீனமான, நோய்வாய்ப்பட்ட யூதப் பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை விஷவாயு அறைகளுக்கு அனுப்புவதற்கு முன்பு அவளுக்காக உரக்கப் படிக்கச் செய்ததாகத் தெரியவருகிறது. அவள் அவர்களின் கடைசி நாட்களைச் சகிக்கக்கூடியதாக மாற்ற விரும்பினாளா, அல்லது அவர்கள் தனது எழுதப் படிக்கத் தெரியாத ரகசியத்தை வெளிப்படுத்திவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை மரணத்திற்கு அனுப்பினாளா என்பதில் மைக்கேல் மிகவும் குழப்பமடைகிறார். 

இந்த இரகசியத்தை நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவதா வேண்டாமா என்ற தார்மீகச் சிக்கலில் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, மைக்கேல் தன் கல்லூரி பேராசிரியரிடம் ஆலோசனை கேட்கிறார், ஹன்னாவுடன் முதலில் பேசினால்தான் ரகசியத்தை வெளிப்படுத்துவது என்ற நிபந்தனை இருந்தும், மைக்கேல் அவளுடன் தன் மனத்தடையால் பேசவில்லை. இறுதியில், மைக்கேல் அவளது எழுதப் படிக்கத் தெரியாத ரகசியத்தை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்கிறார். 

இதன் விளைவாக, ஹன்னா மற்ற பெண்களுக்கு லேசான தண்டனைகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், அவள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறாள்.

பல ஆண்டுகள் கடந்துவிட்டன, மைக்கேல் விவாகரத்து பெற்றவராக, ஒரு மகளுக்குத் தந்தையாக இருக்கிறார். ஹன்னாவுடனான தனது சிக்கலான உணர்வுகளை எதிர்கொள்ள முயற்சிக்கும் விதமாக, அவர் சிறையில் இருந்த ஹன்னாவுக்குப் புத்தகங்களை மைக்கில் வாசித்து ஒலிப்பதிவு செய்தவர்,1980 ஆம் வருடம் டேப் ரெக்கார்டர் உடன் ஒடிஸி புதினத்தின் ஒலி சித்திர வர்ணனை பதிவு செய்து அனுப்புகிறார், எந்தக் கடிதப் போக்குவரத்தும் இல்லாமல் தொடர்ந்து கேசட்களை கொத்து கொத்தாக  அனுப்புகிறார். இந்த ஒலிப்பதிவுகளைப் பயன்படுத்தி, சிறை நூலகத்திலிருந்து அதே புத்தகங்களைப் பெற்ற ஹன்னா, தானாகவே வாசிக்கவும் பின்னர் எழுதவும் கற்றுக்கொள்ளவும் தொடங்குகிறாள். 

அவள் மைக்கேலுக்கு கடிதங்கள் எழுதினாலும், மைக்கேலால் அவற்றுக்குப் பதில் அளிக்க முடியவில்லை, மனம் ஒத்துழைப்பதில்லை. 
20 ஆண்டுகள் கழித்து, ஹன்னா விடுதலை செய்யப்படவிருந்தபோது, மைக்கேல் தயக்கத்திற்குப் பிறகு அவளுக்குத் தங்குவதற்கும் தையல் கடையில் வேலைக்கும் ஏற்பாடு செய்ய பொறுப்பேற்றவர், சிறையில் அவளைப் பார்க்கச் செல்கிறார். 

ஆனால், 1983 ஆம் ஆண்டு அவள் விடுதலை செய்யப்படவிருந்த அன்று, வெளியுலகத்தை பார்க்க தைரியமின்றி  அவள் தற்கொலை செய்து கொள்கிறாள், மைக்கேல் மனமுடைந்து போகிறார். ஹன்னா இறப்பதற்கு முன், எலி வீசல், பிரிமோ லெவி, ததேயஸ் போரோவ்ஸ்கி போன்ற முக்கிய ஹோலோகாஸ்ட் உயிர் பிழைத்தவர்களின் புத்தகங்களையும், முகாம்களின் வரலாறுகளையும் படித்துக்கொண்டிருந்தாள் என்பதைச் சிறை வார்டனிடமிருந்து மைக்கேல் அறிந்து கொள்கிறார்.

 மைக்கேல் ஒலி நாடாக்கள் மூலம் மட்டுமே அவளுடன் தொடர்பு கொண்டதால், ஹன்னா அடைந்த ஏமாற்றத்தை வார்டன் அதிருப்தியுடன் வெளிப்படுத்துகிறார்.

(திரைப்படத்தில் ஒரு முறை இருவரும்  சிறைச்சாலை உணவு மேஜையில் வைத்து சந்திக்கின்றனர்.)

ஹன்னா மைக்கேலிடம் ஒரு பணியை விட்டுச் சென்றிருக்கிறாள்: அவளுடைய சேமிப்புப் பணம் அனைத்தையும் தேவாலயத் தீ விபத்தில் உயிர் பிழைத்த யூதப் பெண்ணிடம் கொடுக்க வேண்டும் என்பதே அது.

மைக்கேல் அமெரிக்காவிற்குச் சென்று, விசாரணையில் சாட்சியாக இருந்த , மரண அணிவகுப்பைப் பற்றி எழுதிய யூதப் பெண் மாத்தரை சந்திக்கிறார். அவரது கடுமையான உணர்ச்சிக் குழப்பத்தைப் பார்த்த அந்தப் பெண், அவரிடம் ஹன்னாவுடனான அவனது இளமைக்கால உறவைப் பற்றி மனம் திறந்து பேசும்போது, அவள் அதை கவனமாகக் கேட்கிறாள். ஹன்னா தன்னைச் சுற்றியுள்ள மக்கள் மீது ஏற்படுத்திய சொல்லப்படாத சேதம் அந்த அறையில் நிலைத்திருக்கிறது.

மைக்கேல் தனது குறுகிய, உணர்வற்ற திருமணம் மற்றும் மகளுடனான விலகிய உறவைப் பற்றி விவரிக்கிறார். 
மாத்தர் மைக்கேலின் நிலையைப் புரிந்துகொண்டாலும், ஹன்னா கொடுத்த பணத்தை ஏற்க மறுத்து, "அதனை ஹோலோகாஸ்ட் தொடர்பான எதற்காவது பயன்படுத்துவது எனக்கு மன்னிப்பும் விடுதலையையும் வழங்குவது போல இருக்கும், அதை நான் விரும்பவோ, கொடுக்கவோ விரும்பவில்லை" என்று கூறுகிறார். அவரையே பொருத்தமாக இருக்கும் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை அளிக்குமாறு கேட்கிறாள். மைக்கேல் ஹன்னாவின் பெயரில் எழுத்தறிவிக்க போராடும் ஒரு யூத தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்க முடிவு செய்கிறார் மைக்கேல். முகாமில் குழந்தையாக இருந்தபோது அவளிடமிருந்து திருடப்பட்ட ஒரு தேயிலை தகரப்பெட்டி போல இருந்ததால், ஹன்னா தனது பணத்தை வைத்திருந்த பழைய தேயிலை தகரப்பெட்டியை  மாத்தர் எடுத்துக்கொள்கிறாள். 

1993 ஆம் ஆண்டு ஜெர்மனிக்குத் திரும்பிய மைக்கேல், நன்கொடை அளித்ததற்கான நன்றிக் கடிதத்துடன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக  ஹன்னாவின் கல்லறையைப் பார்க்க தன் மகளுடன் செல்கிறார், அவளுக்கு தன் 15 வயது விடலைக் காதல் கதையை விவரிக்கையில் படம் நிறைகிறது.

FOGLYOK ,CAPTIVES, PRISONERS (2019)

FOGLYOK ,CAPTIVES, PRISONERS (2019) உலக சினிமா, கதவு மணி பயங்கரம் - ஹங்கேரியின் அடக்குமுறைக் காலம்

இரண்டாம் உலகப் போரின் நிழல்கள் விலகிய பின்னும், கம்யூனிச ஹங்கேரியில் அமலில் இருந்த ஒரு வினோத அரச அடக்குமுறையான 'Doorbell Dreadding' எனும் சட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படம், சர்வாதிகாரத்தின் விசித்திரமான முகத்தை உலகிற்கு உணர்த்துகிறது.
ஒரு தேசத்தின் ஆட்சியானது, ஒரு சாதாரண வீட்டு அழைப்பு மணியின் ஒலியை ஒரு குடும்பத்திற்கு மரணபயத்தின் ஒலியாக மாற்ற முடியும் என்பதை இப்படம் நிரூபிக்கிறது.

இந்த அடக்குமுறையின் கீழ், அரச துரோகிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீடு சிறப்பு காவலர்களால் குறிவைக்கப்படுகிறது.
 கதவைத் தட்டி, வீட்டிலுள்ளவர்கள் பல நாட்களுக்கு தேதி குறிப்பிடப்படாத உள்சிறைவாசத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதுவே படத்தின் முதல் அதிர்ச்சியாக அமைகிறது.

சங்கிலித்தொடர் சிறை
இப்படத்தின் மையக்கரு, தனிப்பட்டவர்களின் அடக்குமுறையைக் கடந்து, அது ஏற்படுத்தும் சமூகத் தாக்கத்தைப் பேசுகிறது.
 சந்தேகம் கொண்ட வீட்டைத் தேடி வரும் அண்டை வீட்டார், அவர்களைத் தேடி வரும் உறவினர்கள், அன்றாடத் தேவைகளுக்காக வரும் பால் காரர், மளிகைக் கடைக்காரர் என யாராக இருந்தாலும், அவர்கள் அந்த வீட்டு அழைப்பு மணியை அடித்தால், அவர்களுக்கும் விதி அதேதான் – உடனடியாக உள்சிறைவாசம்.

ஏகாதிபத்தியத் தீவிரவாதி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒரு வீட்டில் நடக்கும் ஒரு வார கால உள்சிறை எடுப்பு அடக்குமுறையை, திரையில் பார்ப்பது பார்வையாளருக்கு நேரடி அனுபவமாக மாறும் அளவிற்கு அதன் காட்சியமைப்புகள் தீவிரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

 இது, அரசின் பயங்கரவாதம் ஒரு சமூக அமைப்பின் அன்றாட இயக்கத்தைக் கூட எப்படி முழுமையாக முடக்க முடியும் என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது.
அடக்குமுறையையும் வன்முறையையும் வெளிப்படுத்தும் ஒரு கதைக்களத்தை, வெறும் நேரடியான சோகமாகச் சித்தரிக்காமல், டார்க் ஹியூமர் (Dark Humor) எனும் கருப்பு நகைச்சுவையுடன் கையாண்டிருப்பது இப்படத்தின் தனிச்சிறப்பு.

 ஒடுக்குமுறையின் கோரமான முகம், நகைச்சுவையின் ஊடாகச் சொல்லப்படும்போது அதன் தாக்கம் இன்னும் அழுத்தமாகிறது.
ஒரு காட்சி பார்வையாளர்களைச் சிரிக்க வைத்து முடிவடைய, அடுத்த காட்சியே வன்முறையாகவோ அல்லது ஒரு புதிய ஒடுக்குமுறை வடிவமாகவோ மாறுவது, 1950-களில் கம்யூனிச ஹங்கேரியில் நிலவிய அன்றாட வாழ்வின் எதிர்பாராத அபாயத்தையும், பதற்றத்தையும் மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. 

அன்றாட வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அரச பயங்கரவாதத்தின் இருண்ட விதிகளை இப்படம் கண்முன் நிறுத்துகிறது.
1950-களின் கம்யூனிச ஹங்கேரியின் அரசியல் மற்றும் சமூகச் சூழலைச் சிதைவில்லாமல் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ள இந்தத் திரைப்படம், வெறுமனே ஒரு கதை சொல்லலாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் சமூக ஆவணமாகத் திகழ்கிறது. ஒடுக்குமுறையின் கோர முகத்தைக் காட்சிக்குக் காட்சி டார்க் ஹியூமர் தடவிப் பேசியிருக்கும் இப்படம், சர்வாதிகாரத்தின் கீழ் வாழ நேர்ந்த மக்களின் உணர்வுபூர்வமான நெருக்கடியையும், அவர்களின் உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

படத்தின் கதை:

இது சர்வாதிகாரத்தின் விசித்திரமான அடக்குமுறையைப் பேசும் ஒரு முக்கியமான திரைப்படம்.
1951, புடாபெஸ்ட்: அழைப்பு மணியின் சிறைவாசம்
1951 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி அதிகாலையில், புடாபெஸ்ட்டில் உள்ள ஒரு பழைமையான வாடகை வீட்டிற்கு, பயங்கரமான அரச பாதுகாப்பு ஆணையகத்தின் (Államvédelmi Hatóság - ÁVH) அதிகாரிகள் ஒரு மறைக்கப்பட்ட போபெடா (Pobeda) காரில் வந்து சேருகின்றனர். 

ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்த காஅல் (Gaál) குடும்பத்தின் கதவைத் தட்டுகின்றனர்.
பரம்பரை காரணமாக 'நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல' என்று முத்திரை குத்தப்பட்டு வேலையிழந்திருந்த குடும்பத் தலைவருக்கு இந்த வருகை ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், அதிகாரிகள் அவர்களை வழக்கம்போல் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக, அவர்கள் குடும்பத்துடனே வீட்டில் தங்கி, உள்சிறைவாசம் செய்கிறார்கள்—அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லாமல், அவர்களைச் சிறைபிடிக்கிறார்கள்.

சங்கிலித்தொடர் கைது
இந்த உள்சிறை அடக்குமுறையின் கொடூரமான அம்சம் என்னவென்றால், யார் அந்த வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை அடித்தாலும், அவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், காவலாளி (Concierge), இளைய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஏன் அரசு அதிகாரிகள் கூட – என யார் வந்தாலும், அவர்கள் அனைவரும் படிப்படியாக அந்த நெரிசலான வீட்டிற்குள் அடைக்கப்பட்டு, வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.
அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட நபரான மிச்னாய் (Michnay) என்பவரின் புகைப்படத்தைக் காட்டி விசாரிக்கின்றனர்.

பதற்றமும், சிதைந்துபோகும் மனநிலையும்
இரவும் பகலும் அடைபட்டிருக்கும் இந்தக் கூட்டத்திற்குள், சிறிய குடும்ப ரகசியங்களும், அதிகாரிகள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்ற நிச்சயமற்ற தன்மையும் அதிகரிக்க அதிகரிக்க, மனச் சோர்வு மற்றும் நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. பயம் மேலோங்குகிறது, அடக்கப்பட்ட கோபங்கள் வெளிப்படுகின்றன. அனைவரும் ஒருவரையொருவர் சந்தேகிக்கத் தொடங்குகிறார்கள், சிலர் மற்றவர்களைக் காட்டிக்கொடுக்கவும் (குற்றம் சுமத்தவும்/தீயிட்டுப் பேசவும்) ஆரம்பிக்கின்றனர்.
இப்படம், இந்த அபத்தமான மற்றும் விசித்திரமான சூழலில் சிக்கித் தவிக்கும், உண்மைகளை அறியத் துடிக்கும் இருபதுகளில் இருக்கும் சாரா (Sára) என்ற இளம்பெண்ணின் பார்வையில், அரசு எதேச்சதிகாரத்திற்கு ஆளான சுமார் பதினைந்துக்கும் மேற்பட்டோரின் நாடகீயமான ஐந்து நாள் கதையைச் சொல்கிறது. இந்தத் தீவிரமான அழுத்தத்தைக் குறைக்க, ஆங்காங்கே நகைச்சுவையும் (Humor) பயன்படுத்தப்பட்டுள்ளது.

 'கதவு மணி பயங்கரம்' (Doorbell Terror) என்ற கருப்பொருள், அதிகாரத்தின் அத்துமீறல் மற்றும் தனிமனித அச்சத்தின் குறியீடாகப் பல்வேறு வடிவங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஃபிரான்ஸ் காஃப்கா  எழுதிய
'தி ட்ரையல்' 
அதிகார அமைப்பின் குழப்பமான அடக்குமுறையைப் பேசும் இப்புதினத்தில், கதாநாயகன் ஜோசப் கே. எந்தக் காரணமும் இன்றி கைது செய்யப்படுகிறார். 

இங்கு கதவு மணியின் ஒலிக்குப் பதிலாக, கதவைத் தட்டும் எதிர்பாராத ஒலி அல்லது அனுமதியின்றி அறையில் நுழையும் அதிகாரிகள் மூலம் பயங்கரம் சித்தரிக்கப்படுகிறது. 

சட்டம் அல்லது அதிகாரம் எந்த நியாயமுமின்றி ஒரு தனிப்பட்டவரின் தனிமையை மீற முடியும் என்ற ஆழமான அச்சத்தை ஏற்படுத்துகிறது.
 ஹங்கேரியின் உள்சிறை அடக்குமுறையைப் போலவே, இங்கு பயங்கரம் நியாயமற்ற அமைப்பால் உருவாக்கப்படுகிறது.
கதாபாத்திரங்களுக்கு, சாதாரணமான அந்த ஒலி, வரவிருக்கும் துயரத்தை உறுதிப்படுத்தும் அபாயகரமான சமிக்ஞையாக மாறி, உளவியல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 
இந்தச் சித்தரிப்புகள், அரசின் ஒடுக்குமுறை இல்லாத போதும், ஒரு ஒலி சாதாரண சூழலை அபாயகரமானதாக மாற்றும் உளவியல் கூறுகளைக் காட்டுகின்றன.

 அரச அடக்குமுறையின் உளவியல் தாக்கத்தைப் பற்றிப் பேசும் இத்தகைய முக்கியமான உலக சினிமா படைப்புகளை சினிமா ஆர்வலர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் காணவேண்டும்.

#சென்னை_திரைப்பட_விழா

"One-Way to Moscow" (2020)

"One-Way to Moscow" (2020) திரைப்படத்தின் இயக்குனர் மைக்கா லெவின்ஸ்கி (Micha Lewinsky) ,  அவரே திரைக்கதையையும் எழுதியுள்ளார், இதில் சுவிட்சர்லாந்தின் தீவிரமான அரசியல் வரலாற்றை நகைச்சுவை மற்றும் காதல் கலந்த ஒரு கதையாக மாற்றியுள்ளார். 

படத்தின் ஒளிப்பதிவு பிர்சின் டொக்ரோல் (Birgit Guðjónsdóttir) , இவர் 1980-களின் இறுதிக் காலச் சூழலையும் நாடக அரங்கின் உள் சூழ்நிலையையும் திறம்படக் காட்சிப்படுத்தியுள்ளார்.

 நடிகர்கள், ஃபிலிப் க்ராபர் (Philippe Graber) கதாநாயகன் விக்டர் ஷூலராகப் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார், அதே சமயம் புரட்சிகரமான ஒடில் லெஹ்மான் கதாபாத்திரத்தில் நடித்த மிரியம் ஸ்டெய்ன் (Miriam Stein) தனது சிறப்பான நடிப்புக்காகச் சுவிஸ் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

 இசையமைப்பாளர் ப்ளாரிம் லத்தேபி (Florian L. P. B. Lathwesen) அமைத்த இசை, பனிப்போர் காலத்து ஐரோப்பியப் பின்னணியை ஒத்திருந்தது. இந்தப் படம் விமர்சகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சிறந்த திரைப்படம் உட்பட மேலும் சில விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அங்கீகாரத்தைப் பெற்றது.

படத்தின் கதை:-

சுவிட்சர்லாந்தில் 1980-களின் கடைசியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் காலத்தில், சுவிஸ் அரசாங்கமே தனக்குச் சொந்தமான சுமார் ஒன்பது இலட்சம் குடிமக்களை — குறிப்பாக இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள், கம்யூனிச ஆதரவாளர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை — யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் கண்காணித்து, அவர்கள் பேசுவது, பழகுவது, செய்வது என எல்லாவற்றையும் கோப்புகளாகச் சேகரித்து வைத்திருந்தது. இதை மக்கள் கண்டுபிடித்தபோது நாட்டில் பெரிய அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது.
படத்தின் கதாநாயகன் விக்டர் ஷூலர் என்பவன். அவன் ஒரு காவல் துறையில் வேலை செய்யும் இளைஞன். மிகவும் ஒழுங்காக, நேர்மையாக, ஆனால் உலக ஞானம் அதிகம் தெரியாத வெள்ளந்தி இளைஞன். 

அவனது வேலை, இந்தக் கண்காணிப்பு ஆவணங்களை எல்லாம் அடுக்கி வைக்கும் காப்பகத்தில் தான். அவனுடைய உயர் அதிகாரிகள், சூரிச் ஷௌஸ்பீல்ஹவுஸ் என்று சொல்லப்படும் ஒரு பெரிய நாடகக் கொட்டகையில் இருக்கும் கலைஞர்கள் ஏதோ நாட்டுக்கு எதிராகச் சதி செய்வதாகச் சந்தேகப்படுகிறார்கள். ஏனெனில், அந்தக் கலைஞர்கள் ரஷ்யா பக்கம் பேசுவதாகவும், புரட்சிகரமான கருத்துக்களைப் பரப்புவதாகவும் நினைக்கிறார்கள்.

விக்டரைப் பிடித்து, "நீ உடனே ஒரு நடிகன் போல வேடமிட்டு, இந்தக் கலைக் குழுவில் சேர்ந்து, அவர்கள் என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று உளவு பார்த்து, தினமும் எங்களுக்கு ரகசியமாகச் செய்தி கொண்டு வர வேண்டும்" என்று கட்டளையிடுகிறார்கள். 

வேறு வழியில்லாமல் விக்டர், தன்னுடைய காவல் துறை வேலையை மறைத்துவிட்டு, நாடகக் குழுவில் ஒரு சாதாரண நடிகனாகச் சேர்கிறான். அங்கு போன பிறகுதான் அவனுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று புரிய ஆரம்பிக்கிறது.

இதுவரை ஆவணக் கோப்புகளையும், அரசாங்கக் கட்டளைகளையும் மட்டுமே பார்த்த விக்டருக்கு, இந்தக் கலைஞர்களின் சுதந்திரமான, கலகலப்பான, கட்டுப்பாடில்லாத வாழ்க்கை முறை மிகவும் புதுமையாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது.

 அவன் ரகசியமாகத் தன் டைரியில் எல்லாவற்றையும் எழுதி, அதிகாரிகளுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறான். அதே சமயம், அந்தக் குழுவில் இருக்கும் ஒடில் லெஹ்மான் என்ற புரட்சிப் பெண் மீது விக்டருக்கு உண்மையான காதல் வந்துவிடுகிறது. ஒடில் மிகவும் தைரியமானவள், வெளிப்படையாகக் கம்யூனிசக் கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறவள்.

 இவளைத்தான் உளவு பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விக்டர் இருக்கிறான்.
அவளைக் காதலிப்பதா, அவளை உளவு பார்ப்பதா என்ற மனப் போராட்டத்தில் விக்டர் தடுமாறுகிறான். 

தான் செய்யும் இந்த இரட்டை வேடம் சரியா, அரசாங்கம் இவ்வளவு மக்களை உளவு பார்ப்பது நியாயமா என்று பல கேள்விகள் அவன் மனதுக்குள் எழுகின்றன. ஒரு கட்டத்தில், இந்தக் கலைக் குழு ரஷ்யாவுக்கே பயணம் போகத் திட்டமிடுகிறது.

 இதனால் விக்டரின் நிலைமை இன்னும் சிக்கலாகிறது. கடைசியில், விக்டர் அந்தக் காதலுக்காகவும், அந்தக் கலைஞர்களின் சுதந்திரத்திற்காகவும், தான் செய்த தவறான வேலையை விட்டு விலகி, உண்மையைச் சொல்லத் துணிகிறான்.

 இந்தத் திரைப்படம், ஒருவன் தன் உண்மையான மனசாட்சிக்கும், அரசு கொடுத்த உளவுப் பணிக்கும் இடையில் சிக்கி, இறுதியில் காதலுக்காகவும் மனித சுதந்திரத்திற்காகவும் எப்படி மாறுபடுகிறான் என்பதை நகைச்சுவையாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் சொல்கிறது.

கதாநாயகன் விக்டர் ஷூலர், தனது அரசாங்கப் பணியையும், அதற்குரிய விசுவாசத்தையும் துறந்து, தன் காதலுக்கும் தனிப்பட்ட மனசாட்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் முடிவை எடுக்கிறான். 

சூரிச் ஷௌஸ்பீல்ஹவுஸ் நாடகக் குழு ரஷ்யாவிற்குச் சுற்றுப்பயணம் செல்லத் தயாராகும் நிலையில், விக்டர் உளவாளியாகச் செயல்படுவதை முற்றிலுமாக நிறுத்திக்கொள்கிறான்.

 இருப்பினும், அவன் தான் உளவு பார்த்த உண்மையை நேரடியாகத் தன் காதலியான ஒடில் லெஹ்மானிடமோ அல்லது நாடகக் குழுவிடமோ வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, அவன் தனது உயர் அதிகாரிகளுக்குத் தொடர்ந்து, ஆனால் பொய்யான தகவல்களைக் கொடுத்து, அவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். 

இந்தக் கலைஞர்களின் சுதந்திரமான வாழ்க்கை முறை, புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் ஒடில் மீதான அவனது உண்மையான காதல் ஆகியவை விக்டரை முற்றிலும் மாற்றியமைக்கின்றன. 

இதன் மூலம், அவன் இனிமேலும் அரசாங்கத்தின் கண்காணிப்பு அமைப்பில் ஒரு கருவியாகச் செயல்பட விரும்பவில்லை என்றும், தனிமனித சுதந்திரம் மற்றும் கலை ஆகியவற்றுக்கு ஆதரவாக நிற்பது என்றும் தீர்மானிக்கிறான். 

சட்டப்படி அவனது உளவுப் பணி தோல்வியடைந்தாலும், அது அவனது மனிதநேயம், நேர்மை மற்றும் உணர்வுகளின் வெற்றியாகவே முடிகிறது.

#சென்னை_திரைப்பட_விழா

Tall Tales |Apró mesék | ஹங்கேரி |Attila Szász


சினிமா ஆர்வலர்கள் யாரும் தவற விடக்கூடாத Noir படைப்பு, ஹங்கேரி நாட்டுத் திரைப்படம்,படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பு, இதே போல கதையம்சத்தில் எத்தனையோ திரைப்படங்கள் கண்டிருக்கிறேன், உதாரணமாக  Sleeping with the Enemy , agnisakshi, அவள் வருவாளா? போன்றவை, ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்து war criminals தண்டிக்கப்படும் காலகட்டத்தில் நடக்கும் இக்கதை  தனித்துவமான noir படைப்பாக மிளிர்கிறது,

காதலா காதலா திரைப்படத்தில் கமல்ஹாசன் பத்திரிக்கையில் வெளியான obituary விளம்பரத்தை பார்த்துவிட்டு, இறந்து போனவர்  தன்னிடம் professional portrait வரைய சொல்லி ஆர்டர் தந்ததாக பொய் சொல்வார்,  வரைந்த ஓவியத்தை தந்து காசு வாங்கி பிழைப்பார், அதே போல இரண்டாம் உலகப் போரின் முடிவில் லட்சக்கணக்கான காணாமல் போனோரின் உறவினர்கள் தினசரிகளில் உற்றார்  உறவுகளை காணவில்லை என பெட்டிச் செய்தி விளம்பரம் தந்தனர், அந்த விளம்பரங்களை குறிவைத்து எனக்கு உங்கள் மகனைத் தெரியும், எனக்கு உங்கள் கணவனைத் தெரியும்,எனக்கு உங்கள் சகோதரனைத் தெரியும்,என கிளம்பிச் சென்று அவர்கள் பற்றி இமாலயப் பொய்களைக் கதையாகச் சொல்லி வீட்டாரை நெகிழவைத்து உணவு, உடை ,பணம் என அவர்கள் மகிழ்ந்து தருவதை பெற்று வந்து உய்யும் நாடோடி நாயகன் Balász,

 இவனிடம் எந்த விதமான அடையாள அட்டை,கடவுச் சீட்டும் இல்லை, இவனுக்கு முன்கதை சொல்வதில்லை, அவன் சொல்லும் பொய்கள் மட்டுமே காட்சியாக விரிகின்றன, இப்படி அசகாய சூர பொய்யன், 

Balász ரஷ்யப்படையிடமிருந்து தப்ப வேண்டி ரயிலை இடை நிறுத்தியவன், ஹங்கேரியில் danube நதி ஓடும் அழகிய அடர்ந்த காட்டிற்குள் வருகிறான் ,அங்கு அழகிய முரட்டு துப்பாக்கி வேட்டைக்காரி ஜூடித் மற்றும் அவள் மகன் விர்ஜில் இருவரைப் பார்க்கிறான், ஜூடித் கணவன் ஒரு போர் குற்றவாளி, கொடுங்கோலன் , அவன் போரில் இறந்திருக்ககூடும் என ஜூடித்தும் ஊராரும் நம்புகின்றனர்,

காட்டிற்குள் ஜூடித் , விர்ஜில்  துப்பாக்கிக்கு பலியாகாமல் மயிரிழையில் இரக்கம் சம்பாதித்து, அவர்கள் நன்மதிப்பைப் பெற்றுவிடுகிறான் Balász ,அவள் கணவன் berces உடன் ராணுவத்தில்  பணியாற்றியதாகவும் அவன் அசகாய சூரன் என்றும் வழமையாக கதைக்கிறான்,மகன் விர்ஜில் அவற்றை நம்புகிறான் , கிரகிக்கிறான் ,ஆனால் ஜூடித் அவற்றை நம்புவதுமில்லை, ரசிப்பதுமில்லை .

 இருவாரங்கள் அவர்கள் வீட்டில் சுகமாக தங்குகிறான்,காட்டுக்குள. பெரிய கடா மானை கொம்பு வாத்தியம் ஊதி வரவழைத்து வேட்டையாடி துண்டம் போட்டு சந்தையில் சென்று விற்க உதவுகிறான், 

ஹங்கேரிய அதிகாரிகள் இவன் சொல்லும் பொய்யையும் நம்பி
 இவனுக்கு தற்காலிக அடையாள அட்டை தருகின்றனர் ,

வீட்டில் ஜூடித்திற்கும் இவனுக்கும் மிக அழகாக காதல் அரும்புகிறது,எண்ணும் போதெல்லாம் கணவன் மனைவி போல இருவரும் முயங்குகின்றனர், இவனையே கணவனாக வரிக்கலாம் என எண்ணுகையில் அவ்வூரின் வேட்டைக்காரன்,பெரிய war criminal , ஜூடித்தின் கணவன் berces திரும்ப வந்து விடுகிறான், அதுவும் Balász ஐ தெரியும் என அமோதிக்கிறான், அவன் சொன்ன கதைக்கு கச்சிதமாக continuity சொல்கிறான்,தன் வீட்டாருக்கு உதவிதற்கு ஆரத்தழுவி நன்றி கூறுகிறான்.

ஜூடித்திற்கும் Balászற்கும் அதிர்ச்சியில் மின்சாரக் கம்பியை மிதித்தது போல ஆகிறது, 

இனி என்ன ஆகும், படம் கண்டிப்பாக பாருங்கள்.

திரைக்கதையின்படி, சில காட்சிகள் சோவியத் போர் முனையிலும் (szovjet hadszíntéren), சில காட்சிகள் குண்டு வீசப்பட்ட புடாபெஸ்டிலும் (szétbombázott Budapest), மீதமுள்ளவை ஜெமென்க் (Gemenc) பகுதிக்கு அருகில் உள்ள பாரன்ஃபாக் (Bárányfok) மற்றும் அதன் வெளிப்புறப் பகுதிகளிலும் (külterületein) நடக்கின்றன.

போர்முனைக் காட்சிகள் டாட்ரா மலைத்தொடரில் (Tátrában) படமாக்கப்பட்டன. பாரன்ஃபாக் காட்சிகளோ, மற்ற இடங்களுடன் சேர்த்து, பேட்டி (Páty) கிராமத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் (külterületén) மற்றும் ஃபோட் ஏரிகளிலும் (fóti tavaknál) படமாக்கப்பட்டுள்ளன.

#சென்னை_திரைப்பட_விழா

Footprints on Water 2023

21 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இன்று பார்த்த 
Footprints on Water திரைப்படம் இன்றைய நாளை நிறைவாக்கிய படைப்பு.

இங்கிலாந்தின் பர்மிங்கம் நகருக்குள் விசிட் விசாவில் வந்து இறங்கி சட்ட விரோத வந்தேறிகளாக ஆறு ஆண்டுகளாக ஒளிந்து வாழும் ரகு, அவர் மனைவி சுபா, இவர்கள் மகள் மீராவின் அல்லல் துயர வாழ்க்கையை பேசும் படைப்பு இது , அற்புதமான Gripping த்ரில்லராக இயக்கியுள்ளார் பெண் இயக்குனர் நதாலியா ஷ்யாம், படத்தில் ஆங்கிலம், இந்தி,பீகாரி, மலையாளம்,தமிழ் என வசனங்கள் கலந்து வருகிறது.

தினம் உலக க்ரைம் செய்திகளில் அடிபடும் நகரம் இங்கிலாந்தின் பர்மிங்கம், சட்ட விரோதமான ட்ராவல் ஏஜெண்ட்கள் இந்தியர்களை அதிகம் பேப்பர் யுனிவர்சிட்டி மற்றும் சட்ட விரோத வேலைக்கும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி அனுப்பி வைக்கும் கருப்பு நகரம் .

இங்கே பல ஆயிரம் கனவுகளுடன் விசிட் விசாவில் வரும் இந்தியர்களுக்கு நிகழும் அல்லல் துயரங்களை அத்தனை ரத்தமும் சதையுமாக குறுக்கு வெட்டு தோற்றம் செய்து காட்டிய படைப்பு இது.

ரகுவாக "அதில் ஹுசைன்" மிக அருமையாக இந்த கல்லிவளி ஒளிந்து வாழுகிற  குடிநோயாளி தகப்பன், கடும் முதுகு வலியுடன் துயருரும் loser  கதாபாத்திரத்தில் அப்படி மிளிர்ந்திருக்கிறார், ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் இவரது படங்கள் நம்பிக்கை ஒளியாக அமையும், அப்படி 2023 ஆம் ஆண்டுக்கு இந்த footprints on water திரைப்படம் இருந்தது.

இவரது இரண்டாம் மனைவி சுபாவாக லேகா குமார், முதல் மனைவி இறந்து விட 18 வயதில் பீகாரில் குடியேறிய மலையாளி ஜவுளி வியாபாரியான இவரை பல பல கனவுகளுடன் மணந்தவள், ஆனால் எஞ்சியது அவமானமும் ஏச்சும் பேச்சும் மட்டுமே, இறுதியில் மனம் நொறுங்கிவிட்டவர்,  இவரின் மகளுக்கும் அம்மாவாக இருக்க முடியாமல் ரகுவுக்கும் உண்மையான மனைவியாக இருக்க முடியாமல் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு கணவனையும் மாற்றாந்தாய் மகளையும் ஏமாற்றிக் கொண்டு,பார்க்கிங் லாட் சென்று கிடைக்கும் எந்த வேலையையும் ஏற்றுச் செய்து , பர்மிங்கமின் ஒண்டுக்குடித்தன அறையில் உடன் வசிக்கும் சந்தர்ப்பவாதி மனைவி கதாபாத்திரம், மிகவும் கச்சிதமாக செய்திருக்கிறார், எனக்கு பிடித்த நடிகை இவர்.

ரகுவின் கல்லிவளி வந்தேறி மகள் மீராவாக நிமிஷா சஜயன் ,+2 முடித்தவள், ஆங்கிலப்புலமை மிக்கவள், கவிதைகள் journal எழுதுபவள்,சில வருடம் break year எடுத்து யுனிவர்சிட்டி சேர்ந்து படிக்கலாம் என்று தந்தை மாற்றாந்தாய் சகிதம் வந்தேறியானவள்,இங்கே குஜராத்தி சூப்பர் மார்க்கெட்டில் பேக்கிங் மற்றும் ஹவுஸ்கீபிங் பணி செய்கிறாள். தந்தையின் நொடித்துப்போன கொச்சி ஜவுளிக்கடை வியாபாரத்தால் தந்தைக்கு நேர்ந்த பகாசுரக் கடன்கள் மற்றும் அவப்பெயரைத் துடைக்க உதவ வேண்டி மனதுக்கு பிடிக்காத  அரவிந்த் என்ற பணக்காரனை மணக்க ஒப்புக்கொண்டு தியாகத்தின் எல்லைக்கே போகத் துணிந்தவள், 4 பெட்ரூம் அபார்ட்மென்டில் ஒரு பெட்ரூமில் இவர்கள் மூவர் வசிக்கின்றனர், உடன் வசிக்கும் இலங்கை தமிழர் தம்பதிகளுக்கு நன்றி செய்வதற்கு வேண்டி இக்கட்டான சூழலில் தன் உடலையே விற்கத் தயாராகிறாள் மீரா, அந்த போராட்டத்தின்  பின்னர் காணாமல் போகிறாள்.

தந்தை ரகுவுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை, மகள் காணாமல் போய்விட்டாள் ஆனால் போலீஸில் புகாரளிக்க முடியாது, தான் செய்யும் வேலையோ வந்தேறிகளுக்கு மோசடி பாஸ்போர்ட் தயாரிப்பது, இவர்களது பாஸ்போர்ட் மோசடி ஏஜண்ட் வசம் உண்டு, யாரையும் உதவி கேட்க முடியாத சூழல், மனைவியிடம் கூட ஆறுதல் பெற முடியாத நிர்கதியில் உழல்கிறார் , மகளின் முன்னாள் காதலன் ஆஃப்கானிய வந்தேறியான ரெஹானை (life of pie அன்டோனியோ அகில்) சந்தேகித்து, பின்னர் அவனின் நல்லிதயம் மனித நேயத்தை கண்டுணர்ந்து நெங்குறுகி அவனுடன் மகள் மீராவைத் தேடுகிறார், உடன் நாமும் பதைபதைத்து பர்மிங்கம் நகரம் முழுக்க அலைகிறோம் என்றால் மிகையில்லை.

பர்மிங்கம் நகரில் போதை மருந்துக்கு அழகிய ஆசியப் பெண்களை அடிமையாக்கும் மாஃபியா பிரசித்தி பெற்றது, முதலில் அறையில் பல நாட்கள்  அடைத்து வைத்து போதை ஊசி செலுத்தியபடியே இருப்பர், அதன் பிறகு சோறு தண்ணீர் பிடிக்காது, போதை ஊசி தொடர்ந்து வாங்க வேண்டும் என்றால் விபசாரத்தில் இறங்கியே ஆக வேண்டும்,அப்படியும்  பணம் போதவில்லை என்றால் தங்கள் ஆரோக்கியமான அவயங்களை ஒன்றன் பின் ஒன்றாக அந்த கும்பலிடமே விற்று சொச்ச வாழ்நாளை ஷெட் என்ற ப்ராத்தல் வேர்ஹவுஸில் reverse mortage ஒப்பந்தத்தில் கழிக்க வேண்டும்,வெளியேறவே முடியாது, அரசு களையெடுக்க களையெடுக்க மீண்டும் மீண்டும் இந்த ஷெட் புதிதாக வந்தபடியே  இருக்கின்றன, இந்த கோர வாழ்வியலை  படம் பட்டவர்த்தனமாக பேசுகிறது.

படம் அவசியம் தேடிப் பாருங்கள்

A Piece of Sky | 2022 |Switzerland |

சென்னை 20 ஆம் திரைப்படத்திருவிழாவில் இரண்டாம் நாள் இரண்டாவதாக பார்த்த படம் 
A Piece of Sky | 2022 |Switzerland | Satyam Serene

'A Piece of Sky' (ஜெர்மன் மொழியில் 'Drii Winter') என்பது 2022 ஆம் ஆண்டில் வெளியான ஒரு சுவிஸ்-ஜெர்மன் காதல் நாடகத் திரைப்படம். இந்தப் படைப்பை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் மைக்கேல் கோச் எழுதி இயக்கியுள்ளார்.
இது இவருடைய இரண்டாவது முக்கியத் திரைப்படம், இதற்கு முன்பு இவர் Marija (2016) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 இத்திரைப்படம் முழுவதும் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கியக் கதைக்களம், ஒரு தொலைதூர ஆல்ப்ஸ் கிராமத்தில் நடக்கிறது.

 வெளியூர் ஆளான மார்கோ (சைமன் விஸ்லர்) மற்றும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அன்னா (மிச்செல் பிராண்ட்) ஆகிய இருவரின் சிக்கலான உறவைச் சுற்றியே கதை நகர்கிறது. 

மார்கோ வெளியாள் என்றாலும், அவர் மிகவும் கடினமாக உழைக்கும் திறன் காரணமாக கிராம மக்களால் ஏற்கப்பட்டு, ஒரு நல்ல விவசாயியாகத் தன்னைக் கிராமத்தில் நிலைநிறுத்திக் கொள்கிறார்.

அவர், தனது மகள் ஜூலியாவுடன் தனியாக வாழும் தனித் தாயான அன்னாவைக் காதலித்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். 

ஆனால், இந்தக் காதல் மற்றும் வாழ்க்கை சந்தோஷமாகச் செல்லும் வேளையில், மார்கோவுக்கு மூளைக் கட்டி (Brain Tumour) இருப்பது திடீரெனக் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த நோய், மார்கோவின் நடத்தையிலும் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களின் உறவையும் கிராமத்துடனான பிணைப்பையும் நாடகத் தன்மையுடன் மாற்றிவிடுகிறது. 

இயக்குநர் மைக்கேல் கோச், தனது திரைப்படத்திற்கு உண்மையான தன்மை கொடுப்பதற்காக, தொழில்முறை அல்லாதவர்களையே நடிகர்களாகப் பயன்படுத்தியுள்ளார். 

இதில் கதாநாயகனாக நடித்த சைமன் விஸ்லர் நிஜ வாழ்க்கையில் சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் ஒரு மலை விவசாயி ஆவார். படப்பிடிப்பின் முக்கியப் பகுதிகள் சுவிட்சர்லாந்தில் உள்ள கான்டன் யூரி என்ற இடத்தில் நடந்தது. 

கோவிட்-19 நோய் பரவியதன் தாக்கத்தால் படப்பிடிப்புப் பணிகள் பல முறை தடைபட்டன. இந்தப் படம் சுவிஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் கூட்டுத் தயாரிப்பாகும்.

இந்தத் திரைப்படம் 72வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Berlinale) திரையிடப்பட்டதுடன், அதன் திரைக்கதை மிகவும் சிறப்பாக இருந்ததற்காக நடுவர் குழுவிடம் ஒரு சிறப்பு குறிப்பையும் (Special Mention) பெற்று உலக அளவில் கவனம் ஈர்த்தது.

 விமர்சகர்கள் இந்தப் படைப்பை ஒரு சாதாரண காதல் நாடகம் என்று பார்க்காமல், மனிதனின் பலவீனத்திற்கும், இயற்கையின் மாபெரும் சக்திக்கும் இடையேயான முரண்பாட்டை நுட்பமாகப் பதிவு செய்த ஒரு கலைத்திறன் மிக்க ஆவணப்படம் போலப் பாராட்டினர். 

படத்தின் இயல்பான நடிப்பு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் சொல்லும் பாணி ஆகியவை தனித்துவமாக இருந்தது. பெர்லின் விருது தவிர, இத்திரைப்படம் தெசலோனிகி, சிகாகோ போன்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் விருதுகளை வென்றது. 

மேலும், 2023 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகளுக்காகச் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவில் சுவிட்சர்லாந்தின் அதிகாரப்பூர்வப் போட்டியாளராகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் உலகளாவிய விநியோக உரிமைகளை New Europe Film Sales நிறுவனம் பெற்றுள்ளது.

மைக்கேல் கோச்சின் 'A Piece of Sky' (Drii Winter) திரைப்படம், வெறும் காதல் கதை மட்டுமல்லாமல், மனிதனின் பலவீனம் மற்றும் இயற்கையின் பிரம்மாண்ட சக்தி ஆகியவற்றை ஆராயும் ஒரு உலகத்தரமான படைப்பாகும். 

இதன் ஆழமான கருப்பொருள்கள் மற்றும் அதன் உணர்ச்சிக் கட்டுப்பாட்டு அணுகுமுறை காரணமாக, இந்தப் படைப்பு பல முக்கியமான சினிமா மற்றும் இலக்கியப் படைப்புகளுடன் ஒப்பிடப்படுகிறது. 

சுவிஸ் சினிமாவின் முக்கியமான படைப்பான ஃப்ரெடி எம். மூரரின் 'ஆல்பைன் ஃபயர்' (Alpine Fire - 1985) திரைப்படத்துடன் இது நெருக்கமாக ஒப்பிடப்படுகிறது. 

ஏனெனில் இரண்டு படங்களுமே ஆல்ப்ஸ் கிராமத்தின் கடினமான வாழ்க்கை, தனிமை மற்றும் சமூகத்தின் கண்டிப்பான விதிகள் ஆகியவற்றைப் பேசுகின்றன. 

'Alpine Fire' திரைப்படத்தில் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் கொந்தளிப்பான உளவியல் நாடகம் காட்டப்படும் நிலையில், கோச் தன் படத்தில் மார்கோவின் நோய் காரணமாக கிராமம் அவரை மெதுவாக ஒதுக்கி வைக்கும் சமூக உண்மையை மிகவும் புறநிலையாகப் (Objective View) பதிவு செய்கிறார். 

மேலும், இந்தப் படத்தின் கதை சொல்லும் பாணி, ரஷ்ய இலக்கியத்தின் யதார்த்தவாத எழுத்தாளர்களான லியோ டால்ஸ்டாய் மற்றும் ஆன்டன் செகாவ் ஆகியோரின் பாணியை நினைவூட்டுகிறது. கோச், சுவிஸ் ஆல்ப்ஸ் கிராமத்தின் வாழ்க்கையைப் பதிவு செய்வதன் மூலம், காதல், மரணம் மற்றும் மனித பலவீனம் போன்ற உலகளாவிய மனித உணர்வுகளைப் பேசுகிறார்;

 மார்கோவின் துயரத்தை அமைதியாக ஏற்றுச் செல்லும் அன்னா, ரஷ்ய யதார்த்தவாதப் புதினங்களின் கனமான தொனியைக் கொண்டுவருகிறார். 

அதே சமயம், இத்திரைப்படத்தில் பாலுறவு, காதல் மற்றும் நோய் ஆகிய உணர்ச்சிப் பெருக்குள்ள தருணங்களை இயக்குநர் அமைதியாகவும், வெளிப்படையான உணர்ச்சி நாடகத்தைத் தவிர்த்தும் காட்டுவது, ஆஸ்திரிய இயக்குநரான மைக்கேல் ஹனேக் (Michael Haneke) போன்ற சமகால உலக சினிமா மேதைகளின் உணர்ச்சிக் கட்டுப்பாட்டு அணுகுமுறையுடன் (Austerity) ஒப்பிடப்படுகிறது. 

கோச், இந்தக் கட்டுப்பாட்டின் மூலம் பார்வையாளருக்குச் சிந்திக்க ஒரு இடைவெளியை (Space for Reflection) அளிக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், 'A Piece of Sky' திரைப்படம் அதன் தனித்துவமான பிராந்திய அமைப்பைப் பயன்படுத்தி, உலகளாவிய மனித விதி மற்றும் அன்பின் நீடித்த வலிமை குறித்த ஒரு அழுத்தமான பார்வையை முன்வைக்கும் ஒரு மிகச் சிறந்த கலைப் படைப்பாகும்.

A Perfectly Normal Family |Denmark |2021

இன்று ஐந்தாவதாக பார்த்த டென்மார்க் நாட்டு திரைப்படம் A Perfectly Normal Family, நம் அவ்வை சண்முகியில் பெண்ணாக வேடம் போட்ட தந்தையை பார்த்திருப்போம், இங்கு ஒரு நல்ல குடும்பத்தில் திடீரென குடும்பத் தலைவர் தாமஸ் நான் பெண்ணாக மாறப்போகிறேன், அதற்கு வீட்டார் நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும் என சமாதானம் பேசியவர், பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டு Agnete ஆக மாறியும் விடுகிறார் , 

 சமூகத்தில் மனைவி மற்றும் இரு மகள்களுக்கு அவமானம் பிடுங்கித் தின்கிறது, மனைவி விவாகரத்து கேட்பதால் சுமூகமாக தனி வீடெடுத்து தன் நாய்குட்டியுடன் அங்கு குடியேறுகிறார் குடும்பத்தலைவன், மகள்களில் பருவம் வந்த மூத்த மகள் அப்பாவை புரிந்து கொள்கிறாள், இளைய மகள் சிறுமி, தன் அப்பாவை புரிந்து கொள்வதில்லை, அப்பா பெண்ணாக மாறிய அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை, அப்பாவின் பிறந்த நாளன்று அப்பாவைப் பார்க்க  அவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் இளைய மகள் அப்பாவிற்கு பிறந்தநாள் பரிசாக மாதவிலக்கிற்கு  உபயோகிக்கும் sanitary napkins வாங்கலாமா ? எனக் கேட்கிறாள், பெரிய மகள்  அப்பாவிற்கு மாதவிலக்கு ஏற்படாது, அவர் மார்பகங்களும் , யோனியும் தைத்துள்ளார், மற்றபடி நம் அப்பாவே தான் என்கிறாள்,அப்பாவிற்கு  Manicure செய்வதற்கு beauty parlour ல்  appointment வாங்கி இருவரும் அழைத்துச் செல்கின்றனர்,அங்கு manicure செய்பவர் மகள்கள் இருவரும் அம்மாவைப் போலவே இருக்கின்றனர், என்று பாராட்ட, அவர் புன்முறுவல் செய்கிறார், இளைய மகள் அவரிடம் நீங்கள் என் அம்மா அல்ல அப்பா என்று ஏன் சொல்லவில்லை? என குதர்க்கமாக கேட்க, அது விளக்குவதற்கு மிகவும் complicated ஆனது,அதற்கு புரிதல் வெளி இங்கு குறைவு என்கிறார்.

மனைவி மணமுறிவில் உறுதியாக இருக்கிறாள், எப்படி இறந்தவருக்கு திதி தந்து வழியனுப்புவோமோ அதே போல் ,பெண்ணாக மாறிய கணவனுக்கு பிரியா விடை தருவதற்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ,தன் தந்தையை அங்கே தொகுப்புரையாற்றச் செய்கிறாள் , தந்தையோ பெண்ணாக மாறிய தன் மருமகனை அவள் என அழைக்காமல் அவன் என்றே அழைக்கிறார், மருமகனின் பழைய பெயரையே அழைத்து உரையாற்றுகிறார், பெண்ணாக மாறிய மருமகன் அதை சுட்டிக்காட்டி திருத்தும் இடம் எல்லாம் அருமையாக உள்ளது.

பெண்ணாக மாறிய அப்பாவுடன் மகள்கள் கடற்கரைக்குச் சென்று sunbath எடுக்கையில், அப்பா தான் பெண்ணாக மாறியது நினைவின்றி வெற்று மார்பகங்களுடன் நீரில் இறங்குகையில் இளைய மகள் திகைக்கிறாள்.தந்தையின் புதிய பெயரான Agnete அவரின் பாட்டியின் பெயர் என்று பகிரும் இடம் அருமை, தாமஸ் ஏன் இந்த விதியை மாற்றும் முடிவுக்கு வந்தார் என்பது  சொல்லப்படவில்லை, அவர் தன்னை பெண்ணாக உணரத் தொடங்கியவர் அதற்கு மேலும் தன்னையும் குடும்பத்தாரையும் போலியாக ஏமாற்றவில்லை, அதை திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.

இது போல இத்திரைப்படம் பேசாத பொருளை பேசியிருக்கிறது, வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள்.

PS: பத்து வருடங்களுக்கு முன்னர் துபாயில் என்னுடன் பணியாற்றிய பெண் தன்மை கொண்ட ஃபிலிப்பினோ ஆண் ஊழியர் இரண்டு மாத விடுமுறைக்கு பிலிப்பைன்ஸ் சென்று பணிக்குத் திரும்பியவர் முழுக்க பெண்ணாக மாறியிருந்தார், 

அது சில நாட்களுக்கு மற்ற நாட்டவர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கும் பாகிஸ்தானிகளுக்கும் பெரிய culture shock ஆக இருந்தது, ஆனால் சக Philippines நாட்டவர்கள் அந்த transgender ஐ முன்னர் எப்படி நடத்தினார்களோ அதே போலவே baklâ ஆக மாறிய பிறகும்  எப்போதும் போல மரியாதையாக நடத்தினார்கள், இந்தப் படம் பார்க்கையில் எனக்கு அந்த ஊழியர் நினைவுக்கு வந்தார்.

#சென்னை_திரைப்பட_விழா

புவர் திங்ஸ் 2023 POOR THINGS

"புவர் திங்ஸ்" 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்,  " தி லோப்ஸ்டர் " திரைப்படம் தந்த இயக்குனர் யோர்கோஸ் லாந்திமோஸின் அறிவியல் அவல நகைச்சுவை புனைவுக்கதை இது, உலக சினிமா விமர்சகர்கள் பலரும்  வகையை மீறும் படைப்பு.வரம்பு மீறிய பிரதி, பாலியல் காமெடி, கோதிக் காமெடி, பிளாக் காமெடி மற்றும் அபத்தமான நகைச்சுவை என இப்படைப்பை வரையறுத்துள்ளனர். 

டாக்டர் காட்வின் பேக்ஸ்டர் என்ற மருத்துவ விஞ்ஞானி பெல்லா பேக்ஸ்டர் என்ற  வினோதமான  பெண்ணின் அற்புத உலகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் கதை இது, 
இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு அலாஸ்டெய்ர் கிரே எழுதி வெளியான புவர் திங்ஸ்  நாவலை அடிப்படையாகக் கொண்டது.
புவர் திங்ஸ் என்ற திரைப்படத்தின் தலைப்பை  சோதனைச் சாலை எலிகள் அல்லது விளிம்பு நிலை மனிதர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

1880 களில் விக்டோரிய லண்டன் நகரில், மருத்துவ மாணவர் மேக்ஸ் மெக்கான்டில்ஸ் விசித்திரமான அறுவை சிகிச்சை நிபுணரான காட்வின் பேக்ஸ்டரின் உதவியாளராக சேருவதில் இருந்து இக்கதை துவங்குகிறது.  

மருத்துவ மாணவர் மேக்ஸ்,  பேக்ஸ்டரின் ஆராய்ச்சி கூடத்தில் உருவான மகள் பெல்லாவை, நாள் முழுக்க உடனிருந்து  கூர்ந்து கவனித்து மருத்துவக் குறிப்புகள் எடுத்து ஆவணப்படுத்தும் வேலையில் பணியமர்த்தப்படுகிறார்,
பெல்லாவுக்கு  முப்பது வயது பெண்ணின்  உடலும் , ஒரு வயது குழந்தையின் மனநிலையும் உள்ளது, நாளடைவில் மேக்ஸ் பேராசிரியர் காட்வின்  பேக்ஸ்டரிடம் நல்ல நம்பிக்கை பெறுகிறார், பேக்ஸ்டரின் மகள் விசித்திரப் பெண்ணான பெல்லாவை மேக்ஸ் காதலிக்கிறார். 
பெல்லாவின் உடல் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணின் உடல் என்று மேக்ஸிடம் உண்மையைப் பகிர்கிறார் பேக்ஸ்டர்.

பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணியின் உடல் ஒன்று பேக்ஸ்டருக்கு கிடைக்க.   அந்தப் பெண்ணின் மூளையை அகற்றிவிட்டு அவளது கருவில் இருந்த நிறைமாத சிசுவின் மூளையை எடுத்து அவளின் தலைக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் பேக்ஸ்டர், 

இறந்து போன அந்த தாய்க்கு  ஒரு குழந்தையின் மனதைக் கொடுத்து, அவளுக்கு பெல்லா பாக்ஸ்டர் என்று பெயரிட்டு வளர்க்கிறார்,
தன் மகளாகவே சுவீகரித்துக் கொள்கிறார் பேக்‌ஸ்டர்,

அவளை வெளியுலகம் காண விடுவதில்லை அவர், சிறைப்பறவையாக பூட்டி வைக்கிறார், பெல்லா எத்தனை விலை உயர்ந்த பொருட்களை உடைத்தாலும் பேக்ஸ்டர் கோபம் கொள்வதில்லை, பிணவறை உடற்கூராய்வு மேடையில் பேக்ஸ்டர் பிரேதப் பரிசோதனை செய்கையில் ‌பெல்லாவும் இறந்த உடல்களை கத்தியால் குத்திக் கிழிக்கிறாள்,கண்களை நோண்டி நையப் புடைக்கிறாள், ஆண் சவத்தின் பிறப்புறுப்பை சேதம் செய்கிறாள், குழந்தை எப்படி தத்தித் தத்தி நடக்குமோ அப்படி நடக்கிறாள் பெல்லா, குழந்தை துப்புவது போல, பொது வெளியில் சிறுநீர் கழிப்பது போல அனைத்தும் செய்கிறார் பெல்லா .

காட்வினின் அனுமதியுடன் , பெல்லாவை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேக்ஸ் கேட்கிறார், பெல்லாவும் அதை ஏற்றுக்கொள்கிறாள், 

நாளுக்கு நாள்  பெல்லாவுடைய மூளை , புத்திசாலித்தனம் வேகமாக வளர்கிறது, அவள் மேக்ஸிடம் தன்னை வெளியே அழைத்துப் போகக் கேட்கிறாள், ​​அவள் வெளி உலகத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் தன் உடம்பில் உள்ள காயங்கள் எப்படி உண்டாயின என்றும் அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகிறாள்.  

பெல்லா சுயஇன்பம் , பாலியல் இன்பத்தை விரைந்து கண்டறிகிறாள்,
அதை பொதுவெளியிலேயே பழகுகிறாள்,லஜ்ஜையின்றி உணவு மேஜையில் அதை பகிர்ந்து அனைவரையும் அருவருத்து நெளியச் செய்கிறாள் . 

மேக்ஸுக்கும் பெல்லாவுக்கும் திருமண ஒப்பந்தம் தயாரிக்க 
வேண்டி டங்கன் வெடர்பர்ன் என்ற வழக்கறிஞரை பணியமர்த்துகிறார் பேக்ஸ்டர்.
அவனோ  ஒரு மோசமான வழக்கறிஞர், பெல்லாவை நிரந்தரமாக திருமண பந்தம் என்ற கூண்டில் அடைக்க  பேக்ஸ்டர் முயலுகிறார் என பெல்லாவை அவன் வலிய சந்தித்து மூளைச்சலவை செய்கிறான், பெல்லா அவனுடன் ஊரை விட்டு ஓடுகிறாள்.  

இப்போது ஆராய்ச்சிக் கூடத்தில் பெல்லாவை விட மெதுவாக முதிர்ச்சியடையும் ஒரு இளம் பெண்ணான ஃபெலிசிட்டி என்ற பெண்ணுடன் பேக்ஸ்டர் ஒரு புதிய பரிசோதனையைத் துவங்குகிறார், 

பெல்லா போல செல்லம் தராமல் இவளை அடித்தும் வளர்க்கிறார் பேக்ஸ்டர், இவளின் மருத்துவக் குறிப்புகளையும் மேக்ஸ் கவனித்துக் கொள்கிறான்.

வீட்டை விட்டு வெளியேறிய பெல்லாவும் டங்கனும் போர்சுகல்  லிஸ்பனிற்கு ஒரு பெரிய சொகுசு கப்பலில் பயணத்தைத் தொடங்குகிறார்கள், 
கப்பலில்  இவர்கள் அடிக்கடி விதவிதமாக உடலுறவு கொள்கின்றனர். பெல்லா சொகுசுக் கப்பலில் சுகித்திருக்கும் நேரம் போக தனது மனதை தத்துவ விசாரணைக்கும் செலவிடுகிறாள்,
தத்துவம் பேசும் இரண்டு  பயணிகளுடன் பெல்லா நட்பு கொள்கிறாள்,அதில் ஒருத்தி வெள்ளையின கிழவி சக்கர நாற்காலியில் வலம் வருபவள், ஒருவன் அழகிய கருப்பின இளைஞன்,பெல்லா மனம் ஏழைகளுக்கு கனியும் வண்ணம் பல ஆத்ம விசாரணை புத்தகங்களாக தந்து படிக்க வைத்து இவர்கள் பண்படுத்துகின்றனர், இது அவளை சுரண்டிப் பிழைக்கும் வழக்கறிஞன் டங்கனுக்கு அறவே பிடிப்பதில்லை, தத்துவ புத்தகங்களை பிடுங்கி கடலில் எறிகிறான், அந்த கிழவியை சக்கர நாற்காலியுடன் கடலில் தள்ளவும் விழைகிறான் டங்கன்.  

டங்கன் பெல்லாவின் மன  வளர்ச்சியைத் தடுக்க முயற்சிக்கிறான்.  பெல்லா மிகுந்த கோபமடைந்து குடிப்பழக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாள்,  மனம் போன போக்கில் கேஸினோவில் சூதாட்டத்திலும் ஈடுபடுகிறாள். 

எகிப்தில் அலெக்ஸாண்ட்ரியா நகரில் கடற்கரையில் சொகுசுக் கப்பல்  நங்கூரமிட்டு நிற்கையில் , பெல்லா தன் வசிப்பிடத்தின் பால்கனி வழியே கீழே பார்க்க பசித்த மானிடத்தை காண்கிறாள், எங்கும் பட்டினிச் சாவுகள், மக்கள் அடக்கம் கூட செய்ய வழியின்றி விரக்தியில் தலை கவிழ்ந்து உழல்வதைப் பார்க்கிறாள்,  ஏழைகளின் துன்பங்களைக் கண்டு மிகவும் கலங்குகிறாள் பெல்லா.  

அவர்களுக்கு மனதார உதவ விரும்பியவள் மிச்சம் மீதி எதுவுமின்றி , டங்கன் காசினோவில் சூதாடி குவித்த பணம் அடங்கிய பெரிய பெட்டியை கொண்டு போய், சொகுசுக் கப்பலின்  நேர்மையற்ற துணை கேப்டன்கள் இருவரிடம் கொண்டு தருகிறாள், இதை அப்படியே அந்த ஏழைகளுக்கு வழங்கிவிடுங்கள் எனப் பணித்து ஆசுவாசம் கொள்கிறாள்.  
அவர்கள் அதைத் தருவதாக பொய்யாக வாக்குறுதி அளிக்கின்றனர்,ஆனால் கபளீகரம் செய்கின்றனர்.  

கையிருப்பு முழுதும் தீர்ந்து போனதால் மீதமுள்ள நெடும் கடற்பயணத்தை தொடர முடியாமல், பெல்லாவும் டங்கனும் ஃப்ரான்ஸ் நாட்டின் மார்சேயில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டவர்கள், பாரிஸுக்குள் பல இடர்பாடுகளுக்குப் பின் செல்கிறார்கள்.  

தங்கும் செலவுக்குப் பணம் , குளிரில் தாக்குப் பிடிக்க தங்குமிடம் தேடிய பெல்லா ஒரு விபச்சார விடுதியில் விலைமங்கையாக வேலை செய்யத் துவங்குகிறாள்.

தன் வாடிக்கையாளரை தானே தேர்வு செய்து சுகிக்கிறாள் பெல்லா, அந்த பணத்தில் டங்கனுக்கு உணவும் வாங்கித் தருகிறாள் பெல்லா,  இதனால் கடும் கோபமடைந்த டங்கன் அருவருப்பால் உடைந்தும் போகிறான், 

பெல்லா கோபம் கொண்டு தன்னை திட்டி அடிக்கும் டங்கனை  பாரீஸில் அந்த நொடியில் வைத்து கைவிடுகிறாள், 

தன் தந்தை பேக்ஸ்டர்,இவள் வீட்டை விட்டு வெளியேறுகையில் கத்தை கத்தையாக பவுண்டுகளை சுருட்டி பெல்லாவின் கவுனில் ஒரு ரகசிய அறையில் வைத்து தைத்திருக்க, அந்த கத்தைப் பணத்தை துளி கூட  மிச்சமின்றி டங்கனிடம் தந்து வழியனுப்புகிறாள் பெல்லா.

பாரீஸின் விபச்சார விடுதியில்,பெல்லா தேர்ந்த விலைமங்கையாகிறாள், விபசாரத் தலைவி  மேடம் ஸ்வினியின் வழிகாட்டுதலின் கீழ் டோய்னெட் என்ற விலைமங்கையுடன் இணைந்து தொழிலை தேர்ந்து நடத்தத் துவங்குகிறாள்,

அவளை ஓரினச் சேர்க்கை இணையாகவே வரித்து வாழ்கிறாள், கருப்பின பெண்ணான டோய்னெட் பெல்லாவிற்கு சோஸியலிஸ சித்தாந்தத்தை அறிமுகப்படுத்துகிறாள்.

இப்போது லண்டனில் தீவிர நோய்வாய்ப்பட்டிருக்கிறார் பேக்ஸ்டர், பெல்லாவை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து தன்னிடம் கொண்டு வரும்படி  மேக்ஸிடம் வேண்டிக் கேட்கிறார். 

டங்கனை முதலில் தேடிக் கண்டுபிடித்த  மேக்ஸ் பெல்லாவையும் விபசார விடுதியில் சென்று கண்டுபிடித்து விடுகிறார். 
மீண்டும் லண்டனிற்கு பெல்லாவை அழைத்து வந்து ,  பேக்ஸ்டருடன் சமரசம் செய்து சேர்த்து வைக்கிறார், 

மேக்ஸ் பெல்லாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மீண்டும் கேட்கிறார், பேக்ஸ்டர் மரணத் தருவாயில் இருந்தாலும் கூட இந்த திருமணத்தை நடத்தித் தருவதற்கு சர்ச்சிற்கு நேரில் வருகிறார். 

அங்கே குயுக்தி மிகுந்த டங்கன் ஆக்ரோஷமாக வருகிறான், உடன் ராணுவ  ஜெனரல் ஆல்ஃபி பிளெஸ்சிங்டன் என்பவனையும் அழைத்து வருகிறான், இவர்களால் இம்முறையும் திருமணம் நின்று போகிறது. 

ஆல்ஃபி பிளெஸ்சிங்டன், பெல்லாவை தன் மனைவி விக்டோரியா என்கிறான்,  அவளை தன்னுடன் வருமாறு அழைக்கிறான், விக்டோரியா   காணாமல் போவதற்கு முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாகவும், அவர் அவளை மீட்டுப் போய் இல்லற வாழ்வை தொடர இங்கு வந்ததாகவும்  மிரட்டல் தொனியில் அழைக்கிறான், 

தன்னுடன் பெல்லாவை அனுப்பாவிட்டால் நடப்பது வேறு என துப்பாக்கியால் அனைவரையும் குறி வைக்கிறான்.பெல்லா தனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றி அறிய வேண்டி மணக்க இருந்த மேக்ஸை இரண்டாம் முறையாக  இங்கே கைவிடுகிறாள்,

அரண்மனை போன்ற பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட  வீட்டிற்குச் செல்கிறாள், அங்கே ஆல்ஃபியின் இல்லற வன்முறை மற்றும் கொடூரமான மன இயல்பைக் கண்டறிகிறாள் பெல்லா,

ஆல்ஃபி குழந்தை பெற்று வளர்ப்பது சுமை என்று கருதியவன், கருவுற்றிருந்த விக்டோரியாவின் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை செய்து அகற்ற விழைகையில் விக்டோரியா அவனிடமிருந்து தப்பிக்கவே  பாலத்தில் இருந்து நீரில் குதித்ததாக அறிகிறாள் பெல்லா.

ஆல்ஃபி , தப்பிக்க முயலும் பெல்லாவை  அரண்மனையில் கடும் காவலில் அடைத்து வைக்கிறான்.  
மிகுந்த காம வேட்கை மிகுந்தவள் விக்டோரியா என்கிறான், அவளது கன்னிச்சவ்வை  FGM - Female genital mutilation வகை அறுவை சிகிச்சை செய்து அகற்றி, அவளை கருவுறச் செய்யத் திட்டமிட்டிருப்பதை உளவறிகிறாள் பெல்லா, 

 அவளுக்கு மார்டினி ஜின் மதுவில் க்ளோரோஃபார்ம் கலந்து தருகிறான் ஆல்ஃபி, குடிக்காவிட்டால் தலை சிதறிவிடும் என துப்பாக்கியால் மிரட்டுகிறான்,  பெல்லா நொடிப்பொழுதில் கணவனது முகத்தில் அந்த மார்ட்டினி ஜின் திரவத்தை வீசுகிறாள், ஆல்ஃபி பதட்டத்தில் செய்வதறியாது  காலில் தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறான்.  

பெல்லா தன் தந்தை பேக்ஸ்டரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அங்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகிவிடுகிறாள், கொடுங்கோலக் கணவன் ஆல்ஃபியின் கபாலத்தை திறந்து , கணவன் மேக்ஸின் உதவியுடன் செம்மறி ஆட்டின் மூளையை வைத்து அறுவை சிகிச்சை செய்து வெற்றியும் பெறுகிறாள் பெல்லா. 

தன்னைப்போன்ற ஆராய்ச்சி எலியான ஃபெலிசிட்டியை கூண்டிலிருந்து விடுதலை செய்கிறாள் பெல்லா.
காட்வின் பேக்ஸ்டர் மரணப்படுக்கையில்  தன் பக்கத்தில் பெல்லா மற்றும் மேக்ஸ் கணவன் மனைவியாக அமர்ந்திருக்க அமைதியாக மரணிக்கிறார்,

பெல்லா, மேக்ஸ் மற்றும் பாரீஸின் சோஸியலிச சார்புடைய விலைமங்கை டோய்னெட் ஆகியோர் காட்வின் வீட்டில் ஒரு புதிய விதமான வாழ்க்கையை வாழத் துவங்குகின்றனர், பெல்லாவின் முன்னாள் கணவன் ஆல்ஃபி அங்கே தோட்டத்தில் இலை தழையைத் தின்று கொண்டு மேஏஏஏ என்று ஆடு போல கனைப்பதுடன் படம் நிறைகிறது.

இப்படம் அனைவருக்குமானதல்ல,
கட்டற்ற பாலியல் சித்தரிப்புகள், வசை மொழிகள் உள்ள படைப்பு இது,  அவல நகைச்சுவை, திருகல் நகைச்சுவை விரும்பிகள் அவசியம் பாருங்கள், முக்கியமாக இயக்குனர் யோர்கோஸ் லாந்திமோஸின் ரசிகர்கள் அவசியம் இப்படைப்பை பாருங்கள், ஃபேவரிட் திரைப்படம் போலவே பல நுட்பமான சித்தரிப்புகள் உள்ள படம், ஃபேவரிட் திரைப்படம் போலவே இப்படத்தின் ஒளிப்பதிவிலும் fish eye லென்ஸ் கேமரா கொண்டு பல காட்சிகளை சுவாரஸ்யமாக படமாக்கியுள்ளார், ஒளிப்பதிவு  ராப்பி ரயான்.

பெல்லா பாக்ஸ்டராக எம்மா ஸ்டோன், டங்கன் வெடர்பர்னாக மார்க் ருஃபாலோ,டாக்டர் காட்வின் பேக்ஸ்டராக வில்லெம் டாஃபோ,மேக்ஸ் மெக்கான்டில்ஸாக ரமி யூசப்,
 ஆல்ஃபி பிளெஸ்ஸிங்டனாக கிறிஸ்டோபர் அபோட் என அற்புதமான நடிகர்களைக் கொண்ட படைப்பு புவர் திங்ஸ்.

2024 ஆம் ஆண்டின் முன்னணி கதாபாத்திரத்திற்கான சிறந்த நடிகைக்கான அகாடமி விருதை
நடிகை எம்மா ஸ்டோன் வென்றார்.

2024 ஆம் ஆண்டின் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான அகாடமி விருதை 
மார்க் கூலியர், ஜோஷ் வெஸ்டன், நதியா ஸ்டேசி வென்றனர்.

2024 ஆம் ஆண்டின் சிறந்த தயாரிப்பு மற்றும் வடிவமைப்பிற்கான அகாடமி விருதை 
Zsuzsa Mihalek, ஷோனா ஹீத், ஜேம்ஸ் ப்ரைஸ் வென்றனர்.

2023 ஆம் ஆண்டின் கோல்டன் லயன் விருதை 
இயக்குனர் யோர்கோஸ் லாந்திமோஸ் வென்றார்

2024 ஆம் ஆண்டின் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான அகாடமி விருதை
ஹோலி வாடிங்டன் வென்றார்.

Lolita (1962 film) லோலிட்டா


Lolita (1962 film)
விளாடிமிர் நபோகோவ் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய "லொலிடா" (1962) திரைப்படம், காலத்தை வென்று நிற்கும் ஒரு மகத்தான படைப்பு . இது  சர்ச்சைக்குரிய காதல் கதையாக மட்டும் இல்லாமல், மனித மனதின் இருண்ட ஆழங்களையும், ஒழுக்கச் சிதைவுகளையும், பார்ப்பவர்களின் உளவியலோடு விளையாடிச் சித்தரித்த ஒரு நுட்பமான கலைப்படைப்பாகத் திகழ்கிறது.

பேராசிரியர் ஹம்பர்ட், க்வில்டியைச் சுட்டுக் கொல்லும் காட்சியுடன் திரைப்படத்தைத் தொடங்கும் உத்தி, வியக்கத்தக்கது. இந்தக் கதை சொல்லும் பாணியானது, பார்ப்பவர்களை 'ஏன் இந்தக் கொலை?' என்ற கேள்வியுடன், ஒரு துப்பறியும் மனநிலையுடன் கதைக்குள் இழுத்துச் செல்கிறது.

 ஆரம்பத்திலேயே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, திரைப்படம் முழுவதும் அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குநர்.

குப்ரிக் இந்தப் படைப்பை இயக்கிய விதம், தணிக்கைக் குழுவின் கெடுபிடிகள் இருந்த போதும், முறையற்ற காதல் என்ற மையக்கருத்தை வெளிப்படையான காட்சிகள் இல்லாமல், வெறும் சைகைகள், வசனங்கள், குறியீடுகள் மற்றும் காட்சிகளின் மூலமாக மட்டுமே அந்தக் கூடாகாமத்தை  உணர்த்தியது, அவரது உன்னதமான சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.

படத்தின் தொடக்கக் காட்சியில், டொலோரஸின் பாதங்களுக்கு அரைக்கிழவரான ஹம்பர்ட் நகப்பூச்சு போடும் காட்சி, எந்த வசனமும் இல்லாமலேயே, இந்தப் படைப்பு ஒரு சிக்கலான, முறையற்ற உறவைப் பேசுகிறது என்பதைப் பார்வையாளனுக்குப் புரிய வைத்துவிடுகிறது.

 ஹம்பர்ட்டின் உள்ளுக்குள் இருக்கும் எண்ணங்களை, பின்னணிக் குரல் மூலம் திரையில் ஒலிபரப்பி, அவரது சிதைந்த மனதின் வலிகளையும், குழப்பங்களையும் பார்ப்பவர்கள் அறியச் செய்கிறது ஒரு உன்னதமான உத்தி.

ஜேம்ஸ் மேசன் (ஹம்பர்ட்) தனது நடிப்பால் பேராசிரியரின் ஊசலாடும் மனதைச் சரியாகப் பிரதிபலித்தார். அவர் ஒருபுறம் நல்லவர் போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் ஒருவித வெறித்தனத்துடன் போராடும் மனிதராக, நம் அனுதாபத்தையும் அதே சமயம் வெறுப்பையும் ஒருசேரத் தூண்டினார். 

சூ லியான் (லோலிதா), அப்பாவிச் சிறுமிக்கும், துடுக்கான இளம் பெண்ணின் கவர்ச்சிக்கும் இடையில் மாறி மாறி வரும் நடிப்பால், ஹம்பர்ட்டின் குழப்பத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தார். 

பீட்டர் செல்லர்ஸ் (க்வில்டி), பல மாறுவேடங்களில் வந்து ஹம்பர்ட்டை மனரீதியாகத் துன்புறுத்தும் ஒரு வினோதமான கதாபாத்திரமாக நடித்து, பார்வையாளனுக்கு ஒருவிதமான மன இறுக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்தப் படம் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு, கதையின் மையமான 'மனதின் இருள்' மற்றும் அன்றைய சமூகத்தின் ஒழுக்கச் சிதைவை மேலும் ஆழப்படுத்தியது. 

படத்தில் வரும் தங்கும் விடுதி அறைகள் மற்றும் அமெரிக்கப் புறநகர்ப் பகுதிகள் அனைத்தும் ஒரு சலிப்பு மற்றும் வெறுமையின் உணர்வைக் கொடுத்தன. 
 ஹம்பர்ட் மற்றும் லோலிடாவின் நெருக்கமான முகத்தோற்றக் காட்சிகள், அவர்களின் மன அழுத்தத்தையும், உணர்வுகளின் சிக்கலையும் நமக்குப் புரிய வைத்தன.

நெல்சன் ரிடில் அமைத்த இசை, கதைக்கு ஒரு சோகமான நகைச்சுவையையும், அதே சமயம் மனதைக் குடையும் உளவியல் பதற்றத்தையும் வழங்கியது. 

பேராசிரியர் ஹம்பர்ட்டின் கதையைச் சொல்லி, குப்ரிக், பார்ப்பவர்கள் அவரவர் மனசாட்சி மற்றும் தார்மீக எல்லைகளைப் பற்றி யோசிக்க வைக்கிறார். க்வில்ட்டியின் மரணத்தில் தொடங்கி, ஹம்பர்ட்டின் தோல்வியில் முடிவடையும் இந்தத் திரைப்படம், வெறும் பாலியல் இச்சை பற்றியது அல்ல; அது ஆசையின் சிறை, இழப்பின் வலி, மற்றும் பாவத்தின் சுமை ஆகியவற்றை கருப்பு வெள்ளையில் செதுக்கிய ஒரு கவிதைச் சிற்பம்! 

குப்ரிக் ஒருபோதும் காலாவதியாகாத மனித உணர்வுகளின் சிக்கல்களை நிதானத்துடனும், கூர்மையுடனும் அணுகியதே, இந்தப் படைப்பு இன்றும் புதிதாகத் தெரிவதற்குக் காரணமாகும்.

படத்தின் கதை:-

ரஷ்ய எழுத்தாளர் விளாடிமிர் நபோகோவ் ஆங்கிலத்தில் எழுதிய இந்த நாவலின் கதை, ஹம்பர்ட் ஹம்பர்ட் என்ற ஒரு கல்லூரிப் பேராசிரியரின் ஆழமான மனப் புதிரைச் சொல்கிறது. 

ஹம்பர்ட், 1910ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர். அவரது இளமைக் காலத்தின் மிக முக்கியமான நிகழ்வு, பிரெஞ்சு ரிவியரா கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தபோது, அன்னபெல் லீ என்ற தனது பன்னிரண்டு வயதுச் சிறு தோழியுடன் கொண்ட ஆத்மார்த்தமான காதல் தான்.

 அந்தக் காதல், பூ மலர்வதற்கு முன்பே, துரதிர்ஷ்டவசமாக அன்னபெல் 'டைஃபஸ்' என்ற நோயால் திடீரென்று மறைந்ததால், முழுமை அடையாமலேயே முறிந்து போனது. 

இந்தக் கடுமையான இழப்பு ஹம்பர்ட்டின் மனதின் அடித்தளத்தையே மாற்றிவிட்டது. அதன் விளைவாக, ஒன்பது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட, அழகும் கவர்ச்சியும் நிறைந்த சிறுமிகள் மீது அவருக்குத் தாங்க முடியாத ஒருவித ஈர்ப்பு உண்டானது. 

இந்தச் சிறுமிகளை அவர் நிம்பெட் என்ற தனித்துவமான பெயரால் அழைத்தார்.
கல்வி மற்றும் கல்லூரிக் காலத்தை முடித்த பிறகு, ஹம்பர்ட் பிரெஞ்சு இலக்கியத்தைக் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

 வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், மனச்சோர்வு மற்றும் சிக்கல்களால் சில காலம் மனநல மருத்துவமனைகளின் நிழலிலும் அவர் இருக்க நேரிட்டது.

 வாலேரியா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்ட போதும், அவள் வேறு ஒரு ஆடவர் மீது நாட்டம் கொண்டு விலகிச் சென்றதால், அந்தக் குடும்ப வாழ்க்கை கசப்பான முடிவைச் சந்தித்தது. 

இந்தத் தோல்விகளுக்குப் பிறகு, இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன்பு, ஹம்பர்ட் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.

1947ஆம் ஆண்டு, தனது எழுத்துப்பணிகளை அமைதியாகத் தொடர எண்ணி, ராம்ஸ்டேல் என்ற ஒரு சிறிய நகரத்திற்குச் வந்தார். அங்கு அவர் தங்க நினைத்த வீடு எதிர்பாராத விதமாகக் தீ விபத்தில் எரிந்ததால், புதிய வாடகை இடத்தை நாடினார்.

 அப்போதுதான், சார்லட் ஹேஸ் என்ற  ஒரு விதவைப் பெண்ணின் வீட்டைப்  பார்க்கிறார். அவள் தனது வீட்டில் ஒரு பகுதியை உள்வாடகைக்கு எடுத்துத் தங்குமாறு அன்புடன் கேட்கிறாள். முதலில் தயக்கம் காட்டிய ஹம்பர்ட், சார்லட் தன்னுடைய தோட்டத்திற்கு அவரை அழைத்துச் சென்றபோது அங்கிருந்த காட்சியைக் கண்டு ஸ்தம்பித்துப் போனார். அங்கு, பன்னிரண்டு வயதுச் சிறுமியான அவளது மகள் டொலோரஸ் ஹேஸ், சூரிய ஒளியில் இதமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.

 ஹம்பர்ட் அவளைப் பார்த்த கணமே, தனது இளமைக் காதலியான அன்னபெல் லீயின் சாயலைக் கண்டது போல் உணர்ந்தார். இவள்தான் தான் தேடிய நிம்பெட் என்று அவர் உள்ளுக்குள் மகிழவே, உடனே அந்த வீட்டிலேயே தங்க முடிவு செய்கிறார். 

அவளை அவர் மனதிற்குள் லோலிட்டா என்று கொஞ்சலாக அழைத்தார்.
அந்த வீட்டில் வசித்துக் கொண்டிருந்த ஹம்பர்ட், தனது ஆசைகளை வெளியே காட்டாமல், லோலிட்டாவுடன் சிறிய சிறிய ஸ்பரிசங்கள் மற்றும் பார்வைகளால் மட்டுமே தனது ஏக்கத்தைத் தணித்துக் கொண்டார்.

 லோலிட்டாவை தாய் சார்லட் ஹேஸ் கோடைக்கால முகாமிற்குச் வலுக்கட்டாயமாக அனுப்பிய நேரத்தில், சார்லட் ஹேஸ், ஹம்பர்ட்டுக்கு ஒரு காதலுடன் கூடிய எச்சரிக்கை கடிதம் ஒன்றைக் கொடுக்கிறாள்.

 அதில், தன்னைக் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உறுதியாகக் கேட்கிறாள். லோலிட்டாவின் வளர்ப்புத் தந்தையாக மாறும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது என்று நினைத்து மனதுக்குள் பூரித்த ஹம்பர்ட், சார்லட்டைத் திருமணம் செய்து கொள்கிறார்.

 திருமணத்திற்குப் பிறகு, ஒருநாள் இரவு ஹம்பர்ட் சார்லட் மற்றும் லோலிட்டா இருவருக்கும் தூக்க மருந்தைக் கலந்து கொடுத்துவிட்டு, லோலிட்டாவுடன் தனது ஆசையை நிறைவேற்றத் திட்டமிடுகிறார். ஆனால், லோலிட்டா கோடைகால முகாமில் இருந்த சமயத்தில், சார்லட், ஹம்பர்ட் லோலிட்டாவை ஆசைப்பட்டதும், தன்னைக் குறித்து வெறுப்புடன் எழுதிய ரகசிய நாட்குறிப்புகளைப் படித்து விடுகிறாள். 

இந்த உண்மையை அறிந்த சார்லட், லோலிட்டாவை அழைத்துக்கொண்டு ஓடிப் போகவும், தனது தோழிகளுக்கு இந்தக் கொடுமைகளை வெளிப்படுத்தவும் முடிவெடுத்தாள். அந்தக் கடிதங்களை அனுப்ப வெளியே புறப்பட்டபோது, எதிர்பாராத விதமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஒருவனால் மோதப்பட்டு சார்லட் பரிதாபமாக உயிரிழக்கிளாள்.

 ஹம்பர்ட் உடனடியாக அந்தக் கடிதங்கள் அனைத்தையும் கைப்பற்றி அழித்து விடுகிறார்.
சார்லட்டின் மரணத்திற்குப் பிறகு, கோடைகால முகாமில் இருந்த லோலிட்டாவை அழைத்து வந்த ஹம்பர்ட், அவளது அம்மா கடுமையான நோயால் மருத்துவமனையில் இருக்கிறார் என்று பொய் சொல்லித் தன்னுடன் அழைத்து வருகிறார். 

பின்னர், இருவரும் ஒரு பயணவழி விடுதிக்குச் செல்கின்றனர். அங்கு ஹம்பர்ட் சத்து மாத்திரை என்று சொல்லி லோலிட்டாவுக்குத் தூக்க மருந்து கொடுக்கிறார். 

இரவு அறைக்குத் திரும்பிய போது, லோலிட்டா முழுமையாகத் தூங்கவில்லை என்று அறிந்ததும், அவளைத் தொட அஞ்சி, கற்பனையுடனே அந்த இரவைக் கழித்தார். அடுத்த நாள் காலையில், லோலிட்டா கோடைகால முகாமில் தனக்கு ஒரு பெரிய வயது ஆணுடன் ஏற்பட்ட மோசமான உடல் உறவைப் பற்றி ஹம்பர்ட்டிடம் சொல்கிறாள். அது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறுகிறாள். அதன் பிறகு, லோலிட்டாவே ஹம்பர்ட்டை வசியப்படுத்துகிறாள , இருவரும் உடல் உறவு கொள்கின்றனர். பயணவழி விடுதியில் இருந்து வெளியேறியதும், ஹம்பர்ட் லோலிட்டாவிடம் தாய் சார்லட் உண்மையிலேயே இறந்துவிட்டாள் என்ற கசப்பான உண்மையைச் சொல்கிறார். 

அதன் பிறகு, அவளை ஆறுதல்படுத்த இருவரும் அமெரிக்கா முழுவதும் காரில் ஒரு நீளமான பயணத்தைத் தொடங்கினர். இரவும் பகலும் கார் ஓட்டி, பல சிறிய தங்கும் விடுதிகள் மற்றும் வாடகை வீடுகளில் தங்கி இன்பம் துய்க்கின்றனர். 

லோலிட்டா தாயை இழந்த துயரில் இரவுகளில் வருந்தி அழுதாலும், ஹம்பர்ட் அவளைப் பரிசுகள், பணம் கொடுத்துச் சமாதானப்படுத்தித் தன் கட்டுப்பாட்டில் வைத்து உறவு கொண்டார்.

இறுதியாக, பியர்ட்ஸ்லி என்ற ஒரு சிறு ஊரில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறுகின்றனர் , லோலிட்டாவை அங்குள்ள பள்ளியில் சேர்க்கிறார். ஹம்பர்ட் தன்னை அவளது தந்தையாகவே ஊரில் எல்லோரிடமும் காட்டிக் கொண்டார். லோலிட்டாவின் தோழிகள், கொண்டாட்டங்கள் என எங்கும் செல்லவிடாமல் அனைத்தையும் ஹம்பர்ட் கடுமையாகக் கட்டுப்படுத்தினார். 

ஒருநாள் பள்ளி நாடகத்தில் லோலிட்டாவை நடிக்க அனுமதித்தபோது, நாடகத்துக்கு முந்தைய நாள், லோலிட்டா ஹம்பர்ட்டுடன் சண்டை போட்டு, அவர் தான் தன் அம்மாவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அவளைக் தேடிக் கண்டுபிடித்த ஹம்பர்ட், மீண்டும் சாலைப் பயணம் செய்ய விரும்பிய லோலிட்டாவின் விருப்பத்தை ஏற்றுக் கொள்கிறார்,படிப்பு தடைபடுகிறது. ஆனால், இந்தப் பயணத்தின் போது யாரோ தொடர்ந்து தங்களைப் பின்தொடர்வது போல் ஹம்பர்ட்டுக்கு சந்தேகம் எழுந்தது. கலரடோ மலைப்பகுதியில், லோலிட்டா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவள்,உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு ஒருநாள் இரவு, தன்னை லோலிட்டாவின் மாமா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு மர்மமான மனிதன், அவளை மருத்துவமனையிலிருந்து சாமர்த்தியமாகக் கடத்திச் சென்றுவிடுகிறான்.

அதன் பிறகு, சுமார் இரண்டு ஆண்டுகள், ஹம்பர்ட் ரிட்டா என்ற மது அருந்தும் இளம் பெண்ணுடன் சிறிது காலம் வாழ்ந்து வருகிறார். அப்போது, எதிர்பாராத விதமாக லோலிட்டாவிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில், அவள் ரிச்சர்ட் என்ற ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்குப் பண உதவி செய்ய வேண்டும் என்றும் 
கேட்டிருக்கிறாள். 

அதிர்ச்சியும் துயரமும் அடைந்த ஹம்பர்ட், ஒரு கைத்துப்பாக்கியுடன் அவளது வீட்டைத் தேடிச் சென்றார். அங்கு லோலிட்டா, தன்னை மருத்துவமனையில் இருந்து கடத்திப் போனது, பிரபல நாடக ஆசிரியர் க்ளேர் க்வில்டி என்பவர்  என்றும், அவர் தன்னைக் காதலிப்பது போல் நடித்து, அவர் இயக்கிய சுயாதீன ஆபாசத் திரைப்படங்களில் நடிக்க வற்புறுத்தியதாகவும்,இவள் நடிக்க மறுத்ததால் தன்னைத் துரத்திவிட்டதாகவும் உண்மைகளைச் சொன்னாள். லோலிட்டாவின் துயர நிலையை உணர்ந்த ஹம்பர்ட், இப்போதுதான் அவளை உண்மையாக, தூய்மையாக நேசித்ததை உணர்ந்தார்,தழுதழுக்கிறார். தன்னுடன் வருமாறு ஹம்பர்ட் கெஞ்சிக் கேட்க அவள் மறுத்துவிடுகிறாள். 

ஹம்பர்ட், லோலிட்டாவிற்கு,அவள் தாயின் வீட்டை விற்று ஈட்டிய, அவளுக்கு விபத்து இழப்பீடாக கிடைத்த 13000$  பணத்தை முழுவதுமாக கொடுத்துவிடுகிறார், அங்கிருந்து க்வில்டியின் வீட்டிற்குச் செல்கிறார். க்வில்டி அங்கே குடித்து வெறித்த நிலையில் இருக்கிறான். ஹம்பர்ட் அவனுடன் சண்டையிட்டு, துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஹம்பர்ட், சிறையில் தனது இறுதிக் கருத்துக்களை ஒரு நாட்குறிப்பில் எழுதுகிறார். தான் லோலிட்டாவை ஆழமாக நேசித்ததாகவும், தனது கதை அவள் இறந்த பிறகுதான் உலகிற்கு வெளிவர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடுகிறார். 

சிறையில் இருந்த ஹம்பர்ட், இறுதியில் இதய நோயால் இறந்துபோகிறார். அதன் பிறகு, லோலிட்டாவும் 1952ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, சில காலத்திலேயே இறந்துவிட்டதாக தெரிய வருகையில் படம் நிறைகிறது. 

ஸ்டான்லி குப்ரிக்கின் "லோலிடா" (1962) திரைப்படம், விளாடிமிர் நபோகோவின் புதினத்தை எடுத்தாளும் போது, வெறுமனே ஒரு சர்ச்சைக்குரிய கதையைச் சொல்லாமல், மனித மனதின் இருண்ட ஆழங்களை ஊடுருவிப் பார்த்த ஒரு தலைசிறந்த படைப்பு. க்வில்ட்டியைக் கொன்ற காட்சியுடன் கதையைத் தொடங்கும் குப்ரிக்கின் பின்னோக்கிச் செல்லும் உத்தி, பார்ப்பவர்களைக் கேள்வி கேட்டு, நாடகத் தன்மையை ஆரம்பத்திலேயே ஏற்றிவிடுகிறது. அன்றைய கடுமையான தணிக்கை விதிகளை மீறாமல், பாலியல் உணர்வுகளை வெளிப்படையான காட்சிப்படுத்தலுக்குப் பதிலாக, சைகைகள், குறியீடுகள் மற்றும் நடிகர்களின் நுணுக்கமான முகபாவனைகள் மூலமாக உணர்த்தியதில்தான் குப்ரிக்கின் இயக்கம் தனித்து நிற்கிறது. நகப்பூச்சுக் காட்சி போன்ற ஆரம்பக் குறியீடுகள், இச்சையுடன் கூடிய உறவின் சிக்கலை உடனடியாகப் பார்ப்பவர் மனதில் பதிய வைக்கின்றன. ஜேம்ஸ் மேசன் ஹம்பர்ட்டின் இரட்டை மனநிலையையும், பீட்டர் செல்லர்ஸ் க்வில்ட்டியின் வினோதமான உளவியல் தொந்தரவையும் நடிப்பில் வெளிப்படுத்திய விதம், இந்தப் படைப்பு ஒரு சினிமா பாடநூலாகப் பார்க்கப்படக் காரணம். மேலும், கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டதன் மூலம், கதையின் மையக்கருவான 'மனதின் இருள்' மற்றும் அன்றைய சமூகத்தின் ஒழுக்கச் சிதைவு ஆகியவற்றை குப்ரிக் மேலும் ஆழப்படுத்தினார். சுருங்கச் சொன்னால், இந்தத் திரைப்படம் ஆசையின் சிறை, இழப்பின் வலி, மற்றும் பாவத்தின் சுமை ஆகியவற்றை கருப்பு வெள்ளையில் செதுக்கிய ஒரு கவிதைச் சிற்பம் என்பதால், சினிமா ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத ஒரு படைப்பாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (205) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) இசைஞானி (44) கலை (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) ஓவியம் (21) மனையடி சாஸ்திரம் (21) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) இலக்கியம் (14) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)