உறவாடும் நெஞ்சம் | இசைஞானி | 1976
உறவாடும் நெஞ்சம் படத்தின் பாடல்கள்
நெனச்சதெல்லாம்
https://youtu.be/KLM5XthTkQQ
டியர் அங்கிள்
https://youtu.be/SolE9XuBPhE
ஒருநாள் உன்னோடு ஒருநாள்
https://youtu.be/Q8cJ8lBZvBY
உறவாடும் நெஞ்சம் (1976) படத்திற்கு இசைஞானி இரண்டு ஆண்டாள் பாசுரங்கள் இசையமைத்துள்ளார், அதை எங்கு தேடியும் கேட்க முடியவில்லை.யூட்யூபில் அவை இல்லை,படமும் இல்லை.யாராவது LP வைத்திருந்தால் அந்த மார்கழித் திங்கள் மற்றும் தூமணி மாடத்து பாடல்களை யூட்யூபில் தரவேற்றி விடுங்கள்.மார்கழி திங்கள் பாடலை சுந்தரேச தேசிகர் பாடியுள்ளார், தூமணி மாடத்து பாடலை லால்குடி ஸ்வாமிநாதன் பாடியுள்ளார்.
#இசைஞானி,#உறவாடும்_நெஞ்சம்,#தேவராஜ்_மோகன்,#ஜானகியம்மா,#எஸ்பிபி,#மலேசியா_வாசுதேவன், #கவிஞர்_கண்ணதாசன்,#பஞ்சு_அருணாசலம்,#சிவகுமார்
PS:
இந்த தளத்தில் அந்தப் பாடல் பற்றிய குறிப்பு இருக்கிறது என்று சுட்டிகள் வழங்கிய நண்பர் முத்தையா ரத்னசபாபதி அவர்களுக்கு நன்றி
http://nothingbutillaiyaraaja.blogspot.com/2002/06/uravaadum-nenjam.html?m=1
இந்த தளத்தில் பாடல் இருக்கிறது http://www.mp3hubonline.com/m3dty102/131009.mp3
புத்தரின் இறப்பு புடைப்பு சிற்பம் | Death of Bhudha Mural
Death of Buddha mural, புத்தரின் இறப்பு புடைப்பு சிற்பம் இது, புத்தர் தன் சீடர்களுடன் சாரநாத்தில் இருந்து குஷிநகர் செல்கையில் பாவா என்ற ஊரில் ஒரு மாந்தோப்பில் வந்து தங்குகிறார்(483 BC),அங்கு குந்தா கம்மாரபுட்டா என்னும் ஒரு ஏழை கருமார் அவருக்கு காளான் உணவு தருகிறார்,
ஏற்கனவே உடல் நலிந்திருந்த எண்பது வயது புத்தர் அந்த ஏழை அன்பினால் தந்த எளிய உணவை உட்கொண்டு விட அது அவருக்கு ஒத்துக் கொள்ளாமல் மரணப்படுக்கையில் கிடத்துகிறது,
அப்போது சீடர்களிடம் புத்தர் எனக்கு உணவு தந்த ஏழையை நீங்கள் குற்றம் சொல்லாதீர்கள், என் கடைசி உணவை தந்ததற்கு அவருக்கு நன்றி தான் சொல்ல வேண்டும் என சொல்லி மரணிக்கிறார்.
#புத்தர்,#குஷிநகர்,#pava,#kundha_kammarapatta
நிழல் நிஜமாகிறது | ஆடவல்லு மீகு ஜோஹர்லு | கே.பாலசந்தர் | B.S.லோகநாத்்
நிழல் நிஜமாகிறது (1978) படத்தில் பணிப்பெண் ஷோபா தன்னை மகாராணியாக நினைத்துக் கொண்டு நகர்வலம் வரும் காட்சிகள் வரும் , ஆடவல்லு மீக்கு ஜோஹர்லு (1981) தெலுங்குப் படத்தில் ஏழைப்பெண் சரிதாவும் தன்னை மகாராணியாக நினைத்துக் கொண்டு நகர்வலம் வரும் காட்சிகள் வருகிறது,இதில் நாயகன் பானுசந்தர் ஓட்டி வரும் ஜாவா மோட்டார் சைக்கிள் நம்பர் ப்ளேட்டை குதிரைக்கு கட்டி விட்டிருப்பார், அருமையான காட்சி அது.
முன்னது கருப்பு வெள்ளை, திருவிடந்தை கிராமம் , பின்னது வண்ணம் , விசாகப்பட்டினத்தில் ஒரு கிராமம், இரண்டின் ஒளிப்பதிவும் B.S.லோகநாத் அவர்கள் தான்.இரண்டும் வெவ்வேறான கதைகள்.
#கே_பாலசந்தர்,#நிழல்_நிஜமாகிறது,#ஆடவல்லு_மீக்கு_ஜோஹார்லு
சென்னை மெட்ரோ ரயில் பாதை மீது Reflector கூரை ஏன்?
இரவில் சாலையில் செல்கையில் நம் வண்டியின் விளக்கு வெளிச்சம் பட்டு,அபாய எச்சரிக்கை பலகைகள் , வழிகாட்டிப் பலகைகள் ஒளிர்வதைப் பார்த்திருப்போம்,
அதே நோக்கில் நம் கத்திபாரா தொடங்கி பழவந்தாங்கல் சாலை மெட்ரோ வரையிலான விமான ஓடுபாதையை ஒட்டி அமைந்துள்ள மெட்ரோ பாலத்தின் கூரையை முழுக்க வெள்ளை ,சிவப்பு அபாய எச்சரிக்கை ரிஃப்ளக்டர்களால் உருவாக்கியுள்ளனர்,
இது இரவில் விமானியின் கவனத்தை ஈர்த்து இந்த வழித்தடத்துக்குள் விமானம் வராதவாறு உறுதி செய்யும், உலகிலேயே இது போல ரிஃப்ளக்டர் கூரை அமைக்கப்பட்ட முதல் மெட்ரோ வழித்தடம் இது தான்.
இங்கே பறக்கும் விமானத்தின் சக்கரத்துக்குக் கீழே அந்த சிகப்பு வெள்ளை கூரை தெரிவதைப் பாருங்கள், இக்கூரை இல்லாவிட்டால், விமானி இரவில் மெட்ரோ ரயில் மீதோ அதன் உயர் அழுத்தக் கம்பிகள் மீதோ வழி தவறி விபத்து ஏற்படுத்த வழிவகுக்கும்.
நம்ஊரில் கட்டுமானத் தரம் முன்னே பின்னே இருந்தாலும் , மக்கள் பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டிருக்கின்றனர் என நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.
ரிம் ஜிம் கிரே ஸாவன்| மன்ஸில்| 1979 | கே.கே.மகாஜன் | பாசு சேட்டர்ஜி |
லதா மங்கேஷ்கர் பாடிய இந்த ரிம்ஜிம் கிரே ஸாவன் வடிவம் எனக்கு மிகவும் பிடிக்கும், காரணம் இதன் அபாரமான அழகியல் கொண்ட விஸுவல்கள், இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் கே.கே. மகாஜன் அவர்களின் ஒளிப்பதிவு,
ஸாவன் அல்லது ஷ்ராவன் மாதம் என்பது ஜூலை ஆகஸ்டைக் குறிக்கும், அந்த 31 நாட்கள் தென்மேற்குப் பருவமழை மாதம், பம்பாயின் மழைச் சாலைகளை, ஆளுயர அலை எழும்பும் ப்ரோமோனேடை, க்வின் நெக்லேஸ் என்ற பேக்பே ரெக்ளமேஷன் பகுதிகளை மிக அழகாக கவர்ந்து வந்திருப்பார் கே.கே. மகாஜன் அவர்கள்,
இவர் மிருனாள் சென் , மணி கௌல் போன்ற இயக்குனர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர், இதே படத்தில் கிஷோர் தா பாடும் ரிம் ஜிம் கிரே சாவன் இன்டோரில் வரும் அபாரமான பாடல், ஆர்.டி. பர்மன் அவர்களின் மனம் மயக்கும் இசை. ஒன் அண்ட் ஒன்லி கிஷோர் தா, இப்படத்தின் நாயகி மௌசமி சேட்டர்ஜி, இயக்குனர் பாசு சேட்டர்ஜி , லதாஜி என பெரிய வங்காளப் பட்டாளத்தின் படைப்பு மன்ஸில் 1979 திரைப்படம்.
இந்தி சினிமாவின் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு அழகான மான்டேஜ் பாடல், எத்தனை உயரமான அமிதாப், குளிரில் அவரை அழுந்தப் பற்றிக் கொண்டு மழையில் நனையும் பெரிய வீட்டுப் பெண்ணாக மௌசமி சேட்டர்ஜி கலக்கியிருப்பார்.
pushpa i hate tears | அமர் ப்ரேம் | 1972 | ராஜேஷ் கண்ணா | R.D. பர்மன்
"Pushpa i hate tears"
காகா ராஜேஷ்கண்ணா அமர் ப்ரேம் (1972) படத்தில் பேசும் வரிகள் இவை,ஐம்பது வருடங்களை நெருங்கினாலும் இன்னும் fresh.
அமர்ப்ரேம் படத்தில் இசையமைப்பாளர் R.D.பர்மன் அளித்த பாடல்கள் எல்லாமே அமரத்துவம் பெற்றவை,அதிலும் "இந்த சிங்காரி கோயி படுகே" அற்புதமானது, இது படத்தில் தாயை இழந்த புஷ்பாவை கல்கத்தா ஹூக்ளி ஆற்றில் படகு சவாரிக்கு அழைத்துப்போய் ஆனந்த்பாபு புஷ்பாவைத் தேற்றும் தருணத்தில் வரும்.
இந்தப் பாடலை கிஷோர் தா எத்தனை அருமையாக பாடியுள்ளார் பாருங்கள், இத்தனை உயரிய சங்கீதத்துக்கு அவருக்கு தேசிய விருது கூட தரவில்லை.
இதில் ஷர்மிளாஙதாகூருக்கு அப்போது தான் மகன் சயீஃப் அலிகான் பிறந்த சமயம்,இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில் தான் நடந்தது, இந்த ஹூக்ளி ஆறு மற்றும் ஹவுரா பாலம் செட்டை மும்பையின் நட்ராஜ் ஸ்டுடியோவில் தத்ரூபமாக அமைத்திருந்தார் இயக்குனர் ஷக்தி சமந்தா,
இந்தப் பாடலை ஹவுரா பாலத்தில் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது,நட்ராஜ் ஸ்டுடியோவில் நீர்தொட்டி அமைக்கப்பட்டு முட்டி அளவு நீரில் படகுகள் விட்டு படமாக்கப்பட்ட பாடல் இது.
அப்போது சூப்பர்ஸ்டார் ராஜேஷ்கண்ணா எங்கே போனாலும் கட்டுக்கடங்காத கூட்டம், இளம் பெண்கள் கூட்டம் திரண்டு விடும், போலீசாரால் சமாளிப்பது கடினம் ,இந்தப் பாடலை எத்தனை அழகாக இரவு ஒளியமைப்பு செய்து ஒளிப்பதிவு செய்துள்ளார் Aloke Dasgupta.இவர் இயக்குனர் ஷக்தி சமந்தாவின் மூன்றாவது கண்ணாக செயல்பட்ட ஒளிப்பதிவாளர்.
பாலிவுட்டில் வந்த அசல் பிரம்மாண்டமான நளினமான தரமான திரைப்படங்களின் ட்ரெண்ட் செட்டர், படத்தில் எந்த Frame ம் வீணாக்க மாட்டார்,பார்த்துப் பார்த்து ரசித்து இழைப்பார், வண்ணப்படங்களின் மேதை என்றும் இவரை சொல்வார்கள்,
புது தொழில்நுட்பத்தை ஹாலிவுட்டிற்கு இணையாக பாலிவுட்டில் பயன்படுத்தி வெற்றி கண்டவர், international lobby skills ,cross cultural references கொண்டு படமெடுக்கும் திறன், க்ளாஸிக்கை படமாக்கும் முழுத் திறன் கொண்ட இயக்குனர் ஷக்தி சமந்தா, இவர் படங்களை இன்று பாரத்தாலும் fresh ஆக தோன்றும்,படத்தில் எல்லா துறைகளும் உச்சம் தொட்டிருக்கும்.
இந்தப் படத்தின் மூலக்கதை வங்க எழுத்தாளர் பிபூதிபூஷன் பண்டோபாத்யாய் எழுதிய Hinger Kochuri என்ற சிறுகதையைத் தழுவி Aravinda Mukherjee திரைக்கதை எழுதி இயக்கிய நிஷிபத்மா என்ற வங்காள மொழிப் படத்தை தழுவியது,
இந்திய சினிமாவில் எளிமையின் அழகியல் ( elegance in minimalism) ஒருவர் படிக்கவேண்டும் என்றால் இந்தப் பாடலில் இருந்து துவங்க வேண்டும்
சில நாடுகளில் பாடல் ஒலி வராது அவர்கள் யூட்யூப் லிங்கில் பாருங்கள்.
https://youtu.be/kpM0jPd6-7w
#அமர்ப்ரேம்,#ராஜேஷ்கண்ணா,#ஷர்மிளா_தாகூர்,#அலோக்_தாஸ்_குப்தw
ஆடவல்லு மீகு ஜோஹார்லு | 1985 | கே.பாலசந்தர்| கடலோர கவிதைகள் | ஆராதனா
இயக்குனர் கே.பாலசந்தரின் "ஆடவல்லு மீகு ஜோஹார்லு "(பெண்களே உங்களுக்கு வந்தனம்) தெலுங்கு திரைப்படம் 1981 ஆம் ஆண்டு வெளியானது.
அந்த ஊரின் முரட்டு படகோட்டி கிருஷ்ணம் ராஜு,தன் படகில் ஒற்றைக்கு பயணித்த டீச்சர் ஜெயசுதா பாடிய தத்துவப் பாடலில் மனம் கனிகிறான், காசுக்காக எதுவும் செய்யலாம் என்ற அளவுக்கு மனம் கல்லானவன் அவன்,
இவனது பால்யத்தில் கூத்துக்காரியான தாய் ஜெயமாலினி மனம் தடுமாறி ஜமீன்தார் சிரஞ்சீவியுடன் ஓரிரவு கழித்துவிட்டு தங்க மோதிரம் சன்மானம் பெற்று வந்தவள் தனக்கு இனிப்பூட்டுகிறாள் , அதை தின்னும் போதே கத்தியால் குத்தி கொலை செய்தவன், கொலைப்பழியை இவனது கூத்தாடி அப்பா கிருஷ்ண சைதன்யா ஏற்று சிறை சென்றுள்ளார்,இவன் பாறையில் முளைத்த மரமாக வளர்ந்திருக்கிறான்.
அப்படிப்பட்டவன் டீச்சர் ஜெயசுதா பாடலில் மனம் கனிந்து அவருக்கு தான் பிடித்த பெரிய மீனை பரிசளிக்கிறான்,
இந்த காட்சி போலவே மிக அழகான காட்சி கடலோரக் கவிதைகள் (1986) படத்தில் வரும், சின்னப்பதாஸ் டீச்சருக்கு குருகாணிக்கையாக ஏதாவது தந்து கொண்டிருப்பவன், அன்று டீச்சரை கடற்கரை மணலில் நிறுத்தி விட்டு திரைகடலில் மூழ்கி பெரிய மீன் ஒன்றை பிடித்தவன் கலங்கி நிற்கும் டீச்சர் பின்னால் வெளிப்பட்டு வந்து முன்னால் எழும்பி அந்த பெரிய மீனைப் பரிசளிப்பான்,
நடிகர் சத்யராஜ் சின்னப்பதாஸாகவே மாறியிருப்பார், அத்தனை உயர ஆகிருதி மணலில் எடுக்கும் விறுவிறு ஓட்டம் , அந்த பெரிய மீனை (அருவருப்பின்றி) பற்றி தூக்கி வரும் கம்பீரம்,அந்த கள்ளமில்லாத சிரிப்பு எல்லாம் அத்தனை அழகாக இருக்கும்,இவருக்கு மார்பில் முடி அதிகம் என்பதால் கை வைத்த பனியன் காஸ்ட்யூம், எனக்கு ஜென்னிஃபர் டீச்சர் என்றால் ரேகா மட்டுமே.
ஆராதனா படத்தில் சிரஞ்சீவி தான் சின்னப்பதாஸ் , அவர் நல்ல நடிகர், ஆனால் சின்னப்பதாஸ் என்றால் சத்யராஜ் தான், சிரஞ்சீவி மணலில் ஓடுகையில் அந்த கம்பீரம், படபடப்பு,வெள்ளந்தி இல்லை,
மீனை ஏந்துவதிலும் தயக்கம்.
பெரிய மீனை கையில் ஏந்துகையில் லாவகமும் இல்லை, ஆராதனா பார்த்தால் இதை ஒருவர் உணரலாம்.
#ஆடவல்லு_மீக்கு_ஜோஹார்லு,#கடலோரக்_கவிதைகள்,#ஆராதனா,#சத்யராஜ்,#ரேகா,#கிருஷ்ணம்_ராஜு,#ஜெயசுதா,#மீன்,#சிரஞ்சீவி,#சுஹாசினி,#பரிசு,#கே_பாலசந்தர்,#பாரதிராஜா,#BS_லோகநாத்,#B_கண்ணன்,#thanksgiving,#gratitude
அஜ்னபி | இந்தி | R.D.பர்மன் | 1974 | ராஜேஷ் கண்ணா
அஜ்னபி 1974 படத்தின் அனைத்துப் பாடல்களுமே அற்புதமானவை, அதில் இந்த ஹம் தோனோ தோ ப்ரேமி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாலிவுட்டின் முதல் சூப்பர்ஸ்டார் காகா என்கிற ராஜேஷ் கண்ணாவின் ஒப்பற்ற ஸ்டைல்,இளம் ஜீனத்தின் துடிப்பான அழகு, பஞ்சம் தாவின் மிக எளிமையான அழகான sustainable train note tune, கிஷோர் தாவின் macho உச்சஸ்தாயி குரல், லதாஜியின் குயிலிசைக் குரல், ஆனந்த் பக்ஷியின் பாடல் வரிகள், என அனைத்தும் அழகாய் பொருந்தி வந்த பாடல்,
இப்படத்தின் இயக்கம் பிதாமகர் ஷக்தி சமந்தா,பாலிவுட்டின் எழிலான ,நளினமான மேக்கிங் ஸ்டைல் கொண்ட படங்களுக்கு வித்திட்ட முன்னோடி இயக்குனர்.படத்தின் ஒளிப்பதிவு அலோக் தாஸ் குப்தா.
படத்தின் இசைப்பதிவின் போது ம்யூஸிக் டெக்னீஷியன் ஸ்ட்ரைக் நடந்ததால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட வேண்டி
படத்தின் இசை சேர்ப்புக்கு பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன் எதுவுமே உபயோகப் படுத்தப்பட்டு இருக்காது ,
ரயிலின் ஹாரன் சப்தம் போன்ற விசிலும் madal என்ற நேபாளத்தின் டோலக் போன்ற தோல் வாத்தியம் மட்டும் உபயோகித்து இத்தனை இனிமையான பாடலை தந்திருந்தார் பஞ்சம் தா என்ற ஆர்டி பர்மன்.
இப்பாடல் அழகியல் அற்புதமாக வந்தது, இதுவே இந்திய சினிமாவில் ஓடும் ரயிலின் மீது எடுக்கப்பட்ட முதல் முழு நீளப் பாடல்.
இதே படத்தில் கிஷோர் தா ,லதாஜி பாடிய பீகி பிகி ராத்துமேன் அற்புதமான மழைப்பாடல், அதிலும் madal என்ற தோல் வாத்தியமும், மழையும் இடியும் தத்ரூபமாக துவக்க, இடையிசையாக சேரக்கப்பட்டிருக்கும்.
மற்ற ஒரு கிஷோர் தாவின் ஸோலோ பாடலான ஏக் அஜ்னபி அஸினா என்ற பாடல் கிஷோர் தாவின் ரேர் ஜெம்.காலத்தால் மறக்கடிக்க முடியாத கலைஞன் கிஷோர் தா.
தப்புத்தாளங்கள் | தப்பிடதாளா |1978 | திரைப்படம் | கே.பாலசந்தர்
http://geethappriyan.blogspot.com/2015/01/1978-1.html?m=1
http://geethappriyan.blogspot.com/2015/01/1978-2.html?m=1
http://geethappriyan.blogspot.com/2015/01/1978-3.html?m=1
#தப்பிட_தாளா,#தப்புத்தாளங்கள்,#கழுகன்,#கே_பாலசந்தர்,#BS_லோகநாத்,#சரிதா,#ரஜினிகாந்த்,#தப்பிடதாளா,#விஜயபாஸ்கர்,#கவிஞர்_கண்ணதாசன்,
#சுந்தர்ராஜ்,#தேவு,#சரசு,#சோமா,#மேரி,#அனந்து,#கமல்ஹாசன்,#ஹுன்சூர்_கிருஷ்ணமூர்த்தி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க
சமூகம்
(379)
தமிழ் சினிமா
(254)
உலக சினிமாபார்வை
(186)
கமல்ஹாசன்
(130)
சென்னை
(82)
கட்டிடக்கலை
(80)
மலையாளம்
(80)
கட்டுமானம்
(73)
ஹேராம்
(54)
கே.பாலசந்தர்
(46)
வாஸ்து
(46)
இசைஞானி
(44)
கலை
(43)
ஆன்மீகம்
(39)
ஃப்ராடு
(33)
உலக சினிமா
(33)
சினிமா
(33)
தமிழ்சினிமா
(25)
விமர்சனம்
(22)
மனையடி சாஸ்திரம்
(21)
ஓவியம்
(20)
உலக சினிமா பார்வை
(17)
சினிமா விமர்சனம்
(15)
இசை
(14)
மோகன்லால்
(14)
இலக்கியம்
(12)
திரைப்படம்
(12)
ரஜினிகாந்த்
(12)
ஒளிப்பதிவு
(11)
அஞ்சலி
(10)
அரசியல்
(10)
பாலிவுட்
(10)
மோசடி
(10)
விருமாண்டி
(10)
கோயன் பிரதர்ஸ்
(9)
சுஜாதா
(9)
இந்தியா
(8)
சத்யஜித் ரே
(8)
சரிதா
(8)
சுகுமாரன்
(8)
பாலு மகேந்திரா
(8)
மகாநதி
(8)
ஸ்ரீவித்யா
(8)
அயல் சினிமா
(7)
எம்ஜியார்
(7)
சிவாஜி கணேசன்
(7)
சீன வாஸ்து
(7)
ஆக்கம்
(6)
உலகசினிமா பார்வை
(6)
நடிப்பு
(6)
நட்பு
(6)
நூல் அறிமுகம்
(6)
மதுரை
(6)
அமீரகம்
(5)
கவிஞர் கண்ணதாசன்
(5)
திலகன்
(5)
தேவர் மகன்
(5)
நகைச்சுவை
(5)
பாரதிராஜா
(5)
மம்மூட்டி
(5)
மோகன் லால்
(5)
மோடி
(5)
இனப்படுகொலை
(4)
இளையராஜா
(4)
ஐவி சஸி
(4)
சுஹாசினி
(4)
ஜெயலலிதா
(4)
டார்க் ஹ்யூமர்
(4)
தமிழ்
(4)
நகர வடிவமைப்பு
(4)
நடிகர் திலகம்
(4)
நடைபயிற்சி
(4)
நவாஸுதீன் சித்திக்கி
(4)
பத்மராஜன்
(4)
பப்பேட்டா
(4)
பம்மல்
(4)
பரதன்
(4)
பரத்கோபி
(4)
பெங்காலி சினிமா
(4)
லாரி பேக்கர்
(4)
விருட்ச சாஸ்திரம்
(4)
ஆரோக்கியம்
(3)
எழுத்தாளர்
(3)
எழுத்தாளர் சுஜாதா
(3)
கவிதாலயா
(3)
சரத்பாபு
(3)
சிபி மலயில்
(3)
சிவகுமார்
(3)
ஜெயராம்
(3)
தாஸேட்டா
(3)
திருநீர்மலை
(3)
திரைவிமர்சனம்
(3)
துபாய்
(3)
தெலுங்கு சினிமா
(3)
நாயகன்
(3)
நெடுமுடிவேணு
(3)
பாரதியார்
(3)
புத்தக விமர்சனம்
(3)
மம்முட்டி
(3)
மரண தண்டனை
(3)
மலேசியா வாசுதேவன்
(3)
மீரா நாயர்
(3)
யேசுதாஸ்
(3)
ராஜேஷ் கண்ணா
(3)
லோஹிததாஸ்
(3)
வாகனம்
(3)
ஷோபா
(3)
ஸ்ரீதர்
(3)
ஸ்ரீதேவி
(3)
ஃப்ரென்சு சினிமா
(2)
அம்மா
(2)
ஆஸ்திரிய சினிமா
(2)
இனவெறி
(2)
இரானிய சினிமா
(2)
உலகம்
(2)
எம் எஸ் வி
(2)
ஏ.பி.நாகராஜன்
(2)
சத்யன் அந்திக்காடு
(2)
சமூக சேவை
(2)
சிந்தனை
(2)
சிறுகதை
(2)
சேரன்
(2)
ஜி.நாகராஜன்
(2)
ஜெயசூர்யா
(2)
ஜெயன்
(2)
டார்க்ஹ்யூமர்
(2)
திரை விமர்சனம்
(2)
தெலுங்கு
(2)
நாகராஜ் மஞ்சுளே
(2)
நிலம்
(2)
பாலகுமாரன்
(2)
பிஜேபி
(2)
பெட்ரோல்
(2)
மகாகவி
(2)
மகேந்திரன்
(2)
மதுவிலக்கு
(2)
ராஜா ரவிவர்மா
(2)
ராஜ்கபூர்
(2)
ரித்விக் கட்டக்
(2)
ருத்ரையா
(2)
ரோமன் பொலன்ஸ்கி
(2)
லதா மங்கேஷ்கர்
(2)
லோஹி
(2)
விஜயகாந்த்
(2)
விஜய்காந்த்
(2)
வித்யாசாகர்
(2)
வைரமுத்து
(2)
ஷோபனா
(2)
ஹிந்தி
(2)
ஹெல்மெட்
(2)
ஹேமமாலினி
(2)
A.K.லோஹிததாஸ்
(1)
ஆஸ்திரேலிய சினிமா
(1)
இன அழிப்பு
(1)
இன்ஸெஸ்ட்
(1)
இயக்குனர் சிகரம்
(1)
இஸரேலிய சினிமா
(1)
இஸ்ரேல்
(1)
எம்.எஸ்.சுப்புலட்சுமி
(1)
எஸ்.எஸ்.வாசன்
(1)
எஸ்.பி.முத்துராமன்
(1)
ஏ.வின்செண்ட்
(1)
கங்கை அமரன்
(1)
கட்டுமானக்கலை
(1)
கட்டுரை
(1)
கதை
(1)
கம்யூனிஸ்ட்
(1)
கலை இயக்கம்
(1)
கே.ஜே.ஜேசுதாஸ்
(1)
கௌரவக் கொலை
(1)
க்வெண்டின்
(1)
சங்கராடி
(1)
சசி கபூர்
(1)
சந்தோஷ் சிவன்
(1)
சரிதா தேவி
(1)
சஷி கபூர்
(1)
சாதிவெறி
(1)
சி.சு.செல்லப்பா
(1)
சிக்கனம்
(1)
சிரிப்பு
(1)
சிறுவர் சினிமா
(1)
சில்க்
(1)
சில்ஹவுட்
(1)
சிவாஜி
(1)
சீமா பிஸ்வாஸ்
(1)
ஜானகி
(1)
ஜிகிலோ
(1)
ஜீனத் அமன்
(1)
ஜூஹிசாவ்லா
(1)
ஜெஃப்ரி ரஷ்
(1)
ஜெயபாரதி
(1)
ஜெயப்ரதா
(1)
ஜேவியர் பர்டம்
(1)
டாக்மி 95
(1)
டார்க் காமெடி
(1)
தஞ்சை பெரிய கோவில்
(1)
தண்டனை
(1)
துருக்கி சினிமா
(1)
தூக்கு தண்டனை
(1)
தெரு நாய்
(1)
நடிகர் நாசர்
(1)
நன்றி
(1)
நவீன இலக்கியம்
(1)
நாஜி
(1)
நார்வே சினிமா
(1)
நியோ நுவார்
(1)
நீதி
(1)
நுவார்
(1)
ப.சிங்காரம்
(1)
பக்தி இலக்கியம்
(1)
பஞ்சு அருணாச்சலம்
(1)
படுகொலை
(1)
பதேர் பாஞ்சாலி
(1)
பரதம்
(1)
பல்லாவரம் சந்தை
(1)
பான் நலின்
(1)
பாஸ்கர குரூப்பு
(1)
பாஸ்போர்ட்
(1)
பிசி ஸ்ரீராம்
(1)
பிஜு மேனன்
(1)
பீடோஃபீல்
(1)
புலமைப்பித்தன்
(1)
பூ அறிவோம்
(1)
பூஜா பட்
(1)
பூர்ணம் விஸ்வநாதன்
(1)
பூலான் தேவி
(1)
பெல்ஜிய சினிமா
(1)
பேசும்படம்
(1)
பேட்டி
(1)
பேரழிவு
(1)
போபால்
(1)
போர்வெல் மரணம்
(1)
போலந்து சினிமா
(1)
போலீஸ்
(1)
மக்கள் உயிர்
(1)
மஞ்சுளா
(1)
மன ஊனம்
(1)
மனமுறிவு
(1)
மரகதமணி
(1)
மராத்திய சினிமா
(1)
மருதகாசி
(1)
மருதம்
(1)
மறுமணம்
(1)
மிருகவதை
(1)
முகநூல்
(1)
மெயின் ஸ்ட்ரீம் சினிமா
(1)
மோனிகா பெலுச்சி
(1)
மௌசமி சேட்டர்ஜி
(1)
யூதர்கள்
(1)
ரகுவரன்
(1)
ரவீந்திரன் மாஷே
(1)
ராகுல்
(1)
ராகுல் போஸ்
(1)
ராஜாரவிவர்மா
(1)
ராஜீவ்
(1)
ராஜ்கிரண்
(1)
ராமச்சந்திர பாபு
(1)
ராவுத்தர்
(1)
ராஹுல் போஸ்
(1)
ரிச்சர்ட் அட்டன்போரோ
(1)
ரிதுபர்ன கோஷ்
(1)
ரிஷிகபூர்
(1)
ருமானியா
(1)
ரோமன் பொலஸ்கி
(1)
ரோமுலஸ் விட்டேகர்
(1)
லஞ்சம்.
(1)
லாக்டவுன்
(1)
லூயி.ஐ.கான்
(1)
லூயிகான்
(1)
லைசென்ஸ்ராஜ்
(1)
வாணிஜெயராம்
(1)
வி.குமார்
(1)
விசாகப்பட்டினம்
(1)
விடுமுறை
(1)
விபத்து
(1)
விமான விபத்து
(1)
விம் வாண்டர்ஸ்
(1)
வீ.ஆர்.கிருஷ்ணயர்
(1)
வூடி ஹாரல்சன்
(1)
வேணு
(1)
வைக்கம் முகமது பஷீர்
(1)
ஷாஜி கருண்
(1)
ஷார்ஜா
(1)
ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
(1)
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
(1)
ஸ்ரீப்ரியா
(1)
ஹிட்லர்
(1)
ஹேமா சவுத்ரி
(1)