மனித நேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட மகத்தான ஹாலிவுட் நடிகர் மார்ட்டின் ஷீனின் முக்கியமான பேட்டி


மனித நேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட மகத்தான கலைஞன் மார்ட்டின் ஷீனின் [Martin Sheen] முக்கியமான பேட்டி இது,

போபால் ப்ரேயர் ஃபார் ரெயின் திரைப்படத்தில் அமெரிக்கரான இவர் ஏற்று நடித்த வாரன் ஆண்டர்சன் கதாபாத்திரம் நடந்த உண்மையை மிகுந்த நம்பத்தன்மையுடன் பேசியது.

படத்தின் திரைக்கதையை ஊன்றிப் படித்த இவர், இயக்குனர் ரவிகுமார்  வாரன் ஆண்டர்சன் கதாபாத்திரத்தை குற்றவாளியாக சித்தரிக்காததை ஏற்கவில்லை  ,

வாரன் ஆண்டர்சன்னை குற்றவாளியாக சித்தரிக்க வைத்து நடந்த பேரிடருக்கு முழுப்பொருப்பாளியாக ஆக்கி திரைக்கதையை மாற்றி எழுதிய பின்னர் அப்பாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்திருந்தார்,

ஒருவர் போபால் ப்ரேயர் ஃபார் ரெயின் படம் பார்க்கையில் அதை முழுதாய் உணரலாம்.இது போல சுயநலமற்ற  காருண்யம் மிக்க சில கலைஞர்களால் தான் வரலாற்றுப் படைப்புகளில் உண்மை வாழ்கிறது.

BBC Storyville India's Daughter















https://www.youtube.com/watch?v=1Tfaurfg7EQ
இந்த India's Daughter பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பானது நல்லதற்குத் தான்,இதன் மூலம் அந்த கொடிய வன்புணர்வு குற்றவாளிகளுக்கு இனியும் தாமதிக்காமல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் நல்லதே!!!

இவர்களுக்கு பரிந்து வாதாடிய வழக்கறிஞருக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும்.அவர் மீடியாவில் நல்ல பெண்ணுக்கு நடுராத்திரியில் என்ன வேலை? என்று பெண்கள் பற்றி இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

எனக்கு மரண தண்டனையில் முழுஒப்புதல் இல்லை,ஆயினும் இது போன்ற கொடிய மிருகங்களுக்கு மரண தண்டனைய விட அதிகமான தண்டனை ஒன்றில்லை என்பதால் அதையே கேட்கிறேன்.ஒவ்வொரு பெண் குழந்தையை பெற்றவனின் கவலையும் அதுவாகத்தான் இருக்கும்.

ஏழே நாளில் எழும்பும் வீடு…கரன்டே இல்லாமல் கலக்கும் ஏ.சி.. ! முக்கியமான அவள் விகடன் கட்டுரை

அட… சரியான டுபாக்கூர் மேட்டர் போல’ என்றுதான் உடனடியாக நம் வாயிலிருந்து வார்த்தைகள் வந்துவிழும். ஆனால், புதுச்சேரி-தமிழக எல்லையில் அமைந்துள்ள ‘ஆரோவில்’ சர்வதேச நகரத்துக்குச் சென் றால்… உங்களின் கண் முன்பாகவே அந்த வீடுகள் விரிந்து உண்மையை உணர்த்தும். அங்கே உள்ள ‘பசுமை இல்லங்கள்’ (க்ரீன் பில்டிங்) எல்லாம் ஏழு, எட்டு நாட்களில் கட்டபட்டவைதான். ‘சென்டர் ஃபார் சயின் டிஃபிக் ரிசர்ச்’ என்ற தொண்டு நிறுவனம்தான் இந்த தொழில்நுட்பத்தை இங்கு பிரபலப்படுத்தி வருகிறது.
”இது ஒன்றும் மாய மந்திரம் அல்ல. ‘ஃபெரோசிமென்ட்’ (Ferrocement) என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தைதான் இதில் பயன்படுத்துகிறோம். ‘ஃபெரோஸ்’ (Ferrous) என்ற வார்த்தைக்கு இரும்பு சார்ந்த பொருள் என்று அர்த்தம். செங்கல் இல்லாமல்… இரும்பு, சிமென்ட் மற்றும் மணலைக் கொண்டு மட்டுமே கட்டப்படுவதால் அதற்கு ‘ஃபெரோசிமென்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நன்றாக கட்டட வேலை தெரிந்த ஒரு கொத்தனார், ஒரே நாளில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளமுடியும்” என்கிறார் கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளாக இந்தத் தொழில் நுட்பத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்து வரும் தொழில்நுட்ப பயிற்றுநர் ராஜாராமன்.
தொடர்ந்தவர், ”சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, அங்கிருந்த பெரிய, பெரிய கட்டடங்கள்கூட சரிந்து விழுந்துவிட்டன. ஆனால், ஒரே ஒரு கட்டடம் மட்டும் அசையாமல் நின்றது. அது… ஆரோவில்லில் பயிற்சி பெற்ற ஒருவரால் ‘ஃபெரோசிமென்ட்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கட்டடம். அதைப் பார்த்து ஆச்சர்யத்தால் அதிசயத்து நின்றவர்கள், தற்போது குஜராத்தில் இந்த வகைக் கட்டடங்களை அதிகமாக உருவாக்க ஆரம்பித்துவிட்டனர்” என்று பெருமையுடன் கூறிய ராஜாராமன், அடுத்து சொன்ன விஷயம் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!
”ஒரு இடத்தில் நீங்கள் நிறைய செலவு செய்து வீடு கட்டுகிறீர்கள். ஆனால், அந்த இடம் உங்களுக்கு ஏற்றதாக இல்லை. ‘இனி என்ன செய்ய முடியும்?’ என்று சகித்துக் கொண்டு வாழ்வீர்கள். ஆனால், ஃபெரோசிமென்டில் இப்பிரச்னை கிடையாது. காரணம்… வீட்டை அப்படியே பிரித்து, வேறு இடத்தில் கட்டிக் கொள்ள முடியும்! நம்பித்தான் ஆகவேண்டும்! இந்த வகை வீடுகளில் பத்து அடிக்கு ஒன்று என்று, குறைந்தது ஐந்தடி ஆழத்தில் வைக்கப்படும் பில்லர்களை வீட்டை பிரிக்கும்போது வேறு இடத்துக்கு கழற்றிக்கொண்டு சென்றுவிடலாம். கூடவே, சுவர்கள், கூரை போன்றவை அச்சு போன்ற அமைப்பின் மீது வைத்து வடிவமைக்கப் படுகிறது. கதவு, ஜன்னல் என்று எதற்கும் மரங்களை பயன்படுத்தாமல் ஃபெரோசிமென்ட்டை வைத்தே வேலையை முடிப்பதால் இதை ‘க்ரீன் பில்டிங்’ என்கிறோம்” என்றவர்,
”ஆக… இரும்புக் கம்பி, இரும்பு வலை, சிமென்ட், மணலை எல்லாம் தயார் செய்யும் அதே நிமிடமே, புதுமனை புகுவிழா அழைப்பிதழையும் சொந்த, பந்தங்களுக்கு கொடுத்துவிடலாம். அடுத்த ஒரு வாரத்தில் அழகான வீடு எழுந்து நிற்கும். சாதாரண முறையில் கட்டடம் கட்டுவதை காட்டிலும் இந்த முறையில் கட்டினால் 30% செலவு குறையும்! இப்படி இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம்கூட, இன்றைக் கும் நன்றாக உள்ளது. ஆகவே பூமி உள்ள காலம் வரை இந்தக் கட்டடமும் இருக்கும்” என்று உத்தரவாதம் தந்தார் ராஜாராமன்.
அடுத்த ஆச்சரியம், சென்னைப்பட்டின வீடு!
சென்னை, பம்மலில் இருக்கிறது ‘ஹோம் எக்ஸ்னோரோ’ அமைப்பின் தலைவர் இந்திரகுமாரின் வீடு! வீட்டின் ஸ்பெஷல்… இயற்கை ஏ.சி.!
”1983-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள அறிவியல் மையத்தில் ஏ.சி. இல்லாத கட்டடம் கட்டத் திட்டமிட்டார்கள். இங்கிலாந்து நாட்டு கட்டடக் கலை வல்லுநர்கள் வந்து அதைக் கட்டி முடித்தார்கள். திறப்பு விழா அன்று ‘இவ்வளவு அருமையான தொழில்நுட்பத்தை எங்கு கற்றுக் கொண்டீர்கள்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்க, ‘உங்கள் ஊரில் உள்ள கோயில் கோபுரங்களையும், அரண்மனை டூம்களையும் பார்த்துதான்!’ என்றார்களாம் அந்த வல்லுநர்கள்! நம் தொழில்நுட்பத்தை, நமக்கே திருப்பிக் கொடுத்த அவர்களுக்கு, அன்றைய தேதியில் வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா… 27 லட்ச ரூபாய்!
இதைச் செய்தித்தாள் வழியாக அறிந்துகொண்ட நான், ‘நாம் வீடு கட்டும்போது இயற்கை ஏ.சி. அமைப்பு வைத்துதான் கட்ட வேண்டும்’ என்று முடிவு செய்து அது தொடர்பான விவரங்களைத் திரட்டினேன். எங்கள் வீடு 800 சதுர அடியில் அமைந்துள்ளது. இது, விமானம் நிலையத்தின் அருகிலுள்ள பகுதி என்பதால், ஒரு மாடிக்கு மேல் கட்ட அனுமதியில்லை. ஆகவே, ஒரு மாடி கட்டி அதன் மீது இந்த இயற்கை ஏ.சி-யை அமைத்துள்ளேன்.
அதென்ன இயற்கை ஏசி? பெரிதாக ஒன்றும் இல்லை. நம் கிராமங்களில் கூரை வீடு கட்டுவதைப் போல மொட்டை மாடியில் கான்கிரீட் மூலம் ஒரு அமைப்பை உரு வாக்குவதுதான். இந்த கான்கிரீட் கூரையானது… நீளம், அகலம், உயரம் அனைத்தும் நான்கு அடி கொண் டது. அதன் அடிப் பாகத்தில் அரை அடி இடைவெளி விட்டு கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக காற்று உள்ளே சென்று எளிதாக வெளியே வருவதால், வீட்டில் எப்போதும் குளுமையான சூழல் இருக்கும். இந்தக் கூரையின் மீது கண்ணாடி பதித்துவிட்டால், சூரிய வெளிச்சமும் பகல் முழுவதும் கிடைக்கும். இதைக் கட்டுவதற்கு பதினைந்தாயிரம் ஆயிரம் ரூபாய் செலவானது. ஒரு ஏ.சி. மெஷின் வாங்கும் செலவைவிடக் குறைவுதான். ஆனால், வாழ்நாள் முழுக்க இயற்கையான ஏ.சி. கரன்ட் பில்லை எகிற வைக்காமலே உங்களை குளுகுவென வைத்திருக்கும்!” என்றார் மகிழ்ச்சியுடன்.
கூடவே, இவரது மொட்டை மாடி முழுவதும் கத்திரி, வெண்டை, மிளகாய் என்று காய்கறி செடிகள் தலையசைக்கின்றன. ”இவ்வளவு செடிகளுக்கும் தண்ணீர்?” என்றோம் வியப்புடன்.
” ‘பேசிலஸ்’ எனப்படும் நன்மை செய்யும் ஒரு வகை பாக்டீரியாவை கப்பல், விமானங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகளில், கொட்டிவிடுவார்கள். அவை மனிதக் கழிவுகளைச் சிதைத்துவிடும். இதனால் கழிவறைத் தொட்டிகளில் கழிவு எதுவும் இருக்காது. தண்ணீர் மட்டும்தான், துர்நாற்றம் துளிகூட வீசாது.
இந்த பேசிலஸ் பாக்டீரியாவைத்தான் இப்போது எங்கள் வீட்டுக் கழிவறைகளிலும் பயன்படுத்துகிறேன். ஐந்து பேர் கொண்ட குடும்பம் வசிக்கும் வீட்டில் உள்ள ஒரு செப்டிக்டேங்குக்கு, 50 கிராம் பேசிலஸ் பாக்டீரியா போதும். போட்ட ஒரு வாரத்தில் செப்டிக் டேங்கில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களை, இந்த பேசிலஸ் பாக்டீரியாக்கள் உண்டு விடுவதால், வெறும் தண்ணீர் மட்டும்தான் இருக்கும். அந்தத் தண்ணீரைச் செடி, கொடிகளுக்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் வேலையும் இல்லை. செடி, கொடிகளுக்குத் தண்ணீரும் கிடைக்கிறது!” என்றவர்,
”இந்த பேசிலஸ் பாக்டீரியா ஒன்றும் குதிரைக் கொம்பு அல்ல… குதிரை சாணத்தில் இருந்துதான் பிரித்து எடுக்கப்படுகிறது” என்று சிரிப்போடு சொன்னவர், ”இந்த பாக்டீரியா கிடைக்காதவர்கள், குதிரை சாணத்தையே கூட பயன்படுத்தலாம். ஒரு முறை இந்த பாக்டீரியாவை போட்டாலே போதும். அது பெருகி வளர்ந்து கொண்டே இருக்கும். மொத்தத்தில், இந்த பாக்டீரியாக்கள் சம்பளம் வாங்காத சுத்திகரிப்பு தொழிலாளர்கள்!” என்றார் புன்னகையுடன்.
பளிங்கு நீராக பளிச்சிடும் கழிவுநீர் !“வீட்டில் உள்ள குளியல் அறை, கழிவறை, சமையல் அறை ஆகியவற்றில் இருந்து வெளியே செல்லும் நீரில் ரசாயனங்கள் கலந்து இருக்கும். அவற்றை அப்படியே செடி, கொடிகளுக்குப் பாய்ச்சினால்… அவை பாதிப்படையும். அதேசமயம், இந்த நீரை எளிய முறையில் சுத்திகரித்துவிட முடியும். அதைப் பயன்படுத்தினால் செடி, கொடிகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது” என்று சொன்ன இந்திரகுமார் அதைப் பற்றியும் விளக்கினார்.”நீளம், அகலம், ஆழம் அனைத்தும் மூன்று அடி அளவுள்ள ஒரு சிமென்ட் தொட்டியின் வழியாக கழிவுநீர் செல்வது போல் அமைக்க வேண்டும். தொட்டியின் அடிபாகத்தில் தண்ணீர் வெளியேற துளை இருக்க வேண்டும். தொட்டியில் நீரை விடுவதற்கு முன்பு, மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றை பாதி அளவுக்கு நிரப்பி, அதில் கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நடவு செய்யவும். ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும். கல்வாழை செடிகள் சுத்திகரிக்கப்பட்ட நீர் தொட்டியின் கீழ்ப் பகுதிக்குச் செல்ல உதவும். தொட்டியில் நீரை விட்ட ஒரு மணி நேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வரத் தொடங்கும். இப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரில் செடி, கொடிகள் ஜோராக வளரும்!”
-பொன்.செந்தில்குமார், படங்கள் கே.கார்த்திகேயன்
நன்றி: அவள் விகடன்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)