தில்லி சாந்தினி சௌக்கில் இருக்கும் ஆசாத் சோடா ஃபேக்டரியை கலிங்கம் போலவும் அங்கே சாகேத்ராமை நாம் பேரரசர் அசோகரைப் போல உருவகப் படுத்திக் கொள்ளலாம் ,
அகிம்சை என்றால் என்ன? என்று பல உயிர்பலி கொண்ட பின் உயிருக்குயிரான நண்பன் அம்ஜத்தின் கடைசி பயணத்திற்குப் பின் அங்கே தான் கண்டறிகிறார்,
அங்கே தான் சாகேத்ராமிற்கு காலம் கடந்த ஞானோதயம் பிறக்கிறது, அதன் பின்னர் அவர் குற்ற உணர்வால் தன் 89 வயது வரை இயல்பு நிலைக்கே திரும்புவதில்லை, மைதிலியுடன் மீண்டும் திரும்ப வந்து வாழ்ந்தாலும்,அப்யங்கருக்கு செய்து தந்த சத்தியத்தினாலோ என்னவோ? இவர்களுக்கு ஒரே மகன் தான் , அவரிடமும் இவர் தந்தைப் பாசம் காட்டி வளர்த்ததில்லை, பேரனுக்கு மட்டும் சில அனுபவ கதைகளைச் சொல்லியிருக்கிறார்.
ஆசாத் சோடா ஃபேக்டரி, ஆசாத் என்பது சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும், பஷ்தூன் வம்சாவளியினரை பத்தான் என்பர், அம்ஜத்தின் தந்தை கராச்சி தேசிய காங்கிரஸில் உறுப்பினர்,அவர் முன்பு சென்னையில் ரத்ன கம்பளம் வியாபாரம் செய்தவர், சுதந்திரப் போராட்ட வீரர்,
காந்தியவாதியும் கூட, தொழிலதிபர், காஸ்ம்பாலிட்டன் க்ளப் உறுப்பினர், தேசப் பிரிவினையில் நடந்த கலவரத்தில் அவரை இந்து மதவெறி கும்பல் கொன்று விடுகிறது,
இவர்கள் குடும்பம் ஒருங்கிணைந்த சுதந்திர இந்தியா வேண்டிய குடும்பம், அதன் காரணமாக தம் வீடு , நிலம், வியாபாரம் அனைத்தையும் துறந்து எல்லைக்கோட்டிற்கு எதிர்புறம் பயணித்து தில்லி வந்தவர்கள், தில்லியில் பிரிவினையின் போது ஒரு முஸ்லீம் குடும்பம் தன் சோடா ஃபேக்டரியை விற்று விட்டு பாகிஸ்தான் விரைய, இவர்கள் அதை விலைக்கு வாங்கி தொடர்ந்து நடத்துகின்றனர்,
காந்தி சொன்ன அகிம்சை வழி நின்று வாழ்பவர் அம்ஜத் அலிகான்.
அம்ஜத்தின் மனைவி நஃபீஸா பேகம் தமிழ் பேசத் தெரிந்த உருது முஸ்லிம், ஆற்காடு நவாப்பின் அரசாங்கத்தில் ஆம்பூரில் வழி வழியாக வாழ்ந்த குடும்பம், தொப்புள் கொடி உறவான தம் கராச்சி வாழ் பஷ்தூன் வம்சாவளியான அம்ஜத்திற்கு நஃபீஸாவை திருமணம் செய்து தந்துள்ளனர் அவர் பெற்றோர்,
தில்லியில் கடந்த ஒரு வருடமாக வெடிக்கும் இந்து முஸ்லிம் கலவரங்கள் இவர்களை கலங்கடித்திருக்கிறது, அதன் காரணமாகத் தான் ஆசாத் சோடா ஃபேக்டரியை ஒரு maze போன்ற அமைப்பில் மறு வடிவமைத்துள்ளனர்,
பிரதான கதவை யாரும் தட்டினால் திறப்பதில்லை,ரகசிய சமிஜ்ஞை செய்தால் தான் வேறு கதவு வழியே உள்ளே செல்ல முடியும், உள்ளே வெளியாள் ஒருவர் வந்தால் அவர் திரும்ப வெளியே போக குழம்பும்படியான அமைப்பு கொண்டது,
அதற்கு பாதுகாப்பாக அம்ஜத்தின் மாமனார், மற்றும் மைத்துனர்,சோடா ஃபேக்டரி ஊழியர்கள்,அவர்கள் குடும்பப் பெண்கள், தற்காப்புக்கு சில துப்பாக்கிகளுடன் இங்கேயே உடன் வசிக்கின்றனர்,மாலை 6-00 மணிக்கு வெளியே ஊரடங்கு உத்தரவு தொடங்க, சாகேத்ராமையும் , கோவர்த்தனையும் உள்ளே அழைத்துப் போய் அடைக்கலம் தருகிறார் அம்ஜத்.
மாமனாருக்கும் மைத்துனருக்கும் அம்ஜத்தின் அகிம்சாவாதத்தின் மீது எரிச்சல் நிரம்ப உண்டு, அஹிம்சை காரணமாகத் தான் கராச்சியில் தன் சம்பந்தியை இழந்திருக்கிறார் மாமாஜான்,
சாகேத்ராம் தன் பர்ஸ் சோடா crate ல் விழுந்து விட்டது என்று பொய் சொல்ல, மைத்துனனோ அம்ஜத்தை முன்கோபத்திலும் உரிமையிலும் அடிக்கவும் செய்வார், சாகேத்ராம் சோடா crate ற்குள் ஒளித்து வைத்த துப்பாக்கி மாமாஜானிடம் தான் கிடைத்து, அதை தன் குர்தா சட்டை பையில் வைத்துள்ளார் அவர், உன் நண்பனின் பர்ஸ் எப்படி துப்பாக்கியாக மாறியுள்ளது பார்? என குதர்க்கமாக பேசி கொதிக்கிறார் மாமாஜான்.
ஒரு வருடமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தற்காலிக அமைதி திரும்பியுள்ளது, காந்தியின் உண்ணாவிரதத்திற்கும் அமைதி திரும்பியதற்கு முக்கிய பங்கு உண்டு,
இந்நிலையில் தான் தன் கொலை ஆயுதத்தைத் தேடி சாகேத்ராம் உள்ளே pimp கோவர்த்தனுடன் வந்தவர் , அங்கே துப்பாக்கி திரும்ப வாங்க நடந்த கைகலப்பில் அம்ஜத்தின் மாமாஜானைக் (மாமனார்) கொன்று விடுகிறார்,உடன் இருந்த உறவுக்காரப் பெரியவரும் பலியாகிறார்.
அவரின் மகன் , அம்ஜத்தின் மைத்துனர் சாரி கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுடப்படுகிறார், அவர் உயிர் பிரிந்த அதே தருணம் அவருக்கு மகன் பிறக்கிறான், துப்பாக்கிகள் வெடித்து முழங்கி பல உயிர்பலிகளை வாங்கிய பின் தான் ஓய்கிறது,
கடைசியில் போலீசார் காப்பாற்ற வருகின்றனர், போலீசார் குற்றுயிரான அம்ஜத்தை ஸ்ட்ரெட்சரில் கொண்டு போகின்றனர், இவரின் ராக்கி கட்டும் தங்கை நஃபீசாவின் அப்பா, தம்பி, கணவன் சாக காரணமாகிறார் சாகேத், இவர் உயிரை ஆசாத் சோடா ஃபேக்டரிக்குள் மூன்று முறை காக்கிறார் அம்ஜத்,
ஆனால் அம்ஜத் உயிரை மற்ற ஆண்கள் உயிரை சாரி கும்பலின் துப்பாக்கி சூட்டிலிருந்து எத்தனைப் போராடியும் சாகேத் ராமால் காப்பாற்றவே முடிவதில்லை, அம்ஜத்தை சாரி கும்பலின் சம்மட்டிக்கு பலி கொடுத்து விட்டார், கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லி சமாதானம் பேச வெளியே வந்த அம்ஜத்தை தொடையில் சாரி கும்பலில் ஒருவன் சுட்டு விட அதீத ரத்தவெள்ளப் போக்கில் சரிகிறார் அம்ஜத்,
மருத்துவமனையில் pimp கோவர்த்தன் பைரவ் என்பவனால் தான் இந்த துப்பாக்கிச் சூடு முதலில் தொடங்கியது நிறைய உயிர்களை பலி வாங்கியது என போலீசாரிடம் வாக்குமூலம் தந்து விட்டு சாகிறான்,
அதை உறுதிப் படுத்த அம்ஜத்திடம் மரண வாக்குமூலம் பெற வந்த போலீஸ் அதிகாரியிடம் அம்ஜத் , நான் அந்த பைரவ்வை பார்த்ததேயில்லை,அந்த மிருகத்தை இதற்குப் முன் பார்த்ததேயில்லை, என் உயிரை, என் வீட்டுப் பெண்கள் உயிரை மானத்தைக் காத்தவன் என் ராம் என்று சாகேத்ராம் கையைப் பற்றிய நிலையில் உணர்ச்சிவசப்பட்டு சொல்லி மூர்ச்சையாகிறார்,
உடன் நஃபீசாவும் அவர் மாமியார் ஹஜ்ராவும் இரு மகள்களும் உள்ளனர், அவர்கள் திருப்திக்கு வேண்டி அம்ஜத்திற்கு cpr முதலுதவி செய்வார் மற்றொரு டாக்டர்,அதைப் பார்க்கும் அத்தனை விழிகளிலும் நீர் திரண்டிருக்கும், அம்ஜத்தின் அந்த மினுங்கும் கண்கள் வழியே உயிர் விடை பெற்றிருக்கும் ,
சாகேத்ராமை டாக்டர் நெருங்கி, அம்ஜத்தின் மனைவி, அம்மாவை, குழந்தைகளை வெளியே கூட்டிப் போகப் பணிப்பார், இதே அறையில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர், இவர்கள் கத்தி கூப்பாடு போட்டால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து , புரிந்து கொள்ளுங்கள் ராம் என்பார்,
இவர் நெக்குருகியவர் ஆனால் டாக்டர்கள் எதோ செய்கின்றனரே ? என சுட்டிக்காட்டி கேட்க ,அது ஒரு முயற்சி தான்,ஆனால் பயனில்லை என்பார், சாகேத்ராம் அமைதியாக நால்வரையும் வெளியே அழைத்துப் போவார், இப்போது மிகப்பெரிய பாரத்தை அவர் தோள்களில் ஏற்றிவிட்டு விடைபெற்றிருப்பார் அம்ஜத்,
#ஹேராம், #கமல்ஹாசன், #சாகேத்ராம்,#அம்ஜத்,#ஆசாத்,#சோடா_ஃபேக்டரி