நண்பர்களே இன்று யூ ட்யூபில் நான் பார்த்த சில குறும்படங்களில் இந்த நியூசிலாந்து நாட்டு குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது.அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
கருப்பு மிளகு தங்கத்திற்கு ஈடான மதிப்பை கொண்டிருந்தது என்றால் நம்ப முடிகிறதா?மசாலாக்கள் மீதான ஐந்து ஷில்லிங் விலை ஏற்றத்தால் நம் நாட்டை ப்ரிட்டிஷார் ஆக்கிரமித்தனர் என்றால் நம்ப முடிகிறதா?
என்னாலும் நம்ப முடியவில்லை தான்.
ஆனால் சீமா ( நந்திதா தாஸ்) என்னும் இந்திய பெண் தன் நியூசிலாந்து காதலன் முதுகில் இந்திய மசாலாக்களால் கோலம் போட்டு இந்த நெடுங்கதையை விளக்கும்போது நம்ப முடிகிறது.
இது மசாலாக்களை பற்றிய மசாலா சேர்க்காத அசல் கலைப் படம்.
நண்பர்களே எனக்கு தெரிந்து குறும்படங்கள் நமக்கு நல்ல படிப்பினைகளையும்,அருமையான ரசனையையும்,பொன்னான நேர சேமிப்பையும் அளிக்கிறது.ஆகவே குறும்படங்களை ஆதரியுங்கள்
--------------------------------------------------------------------------------
In the diffused light of an overcast afternoon, an Indian woman traces the spice routes of antiquity on her New Zealand lovers back.
Cast: Nandita Das, William Wallace
Director: Virginia Pitts
Screenplay: Shuchi Kothari.
Category: Film & Animation
==================================================
-----------------------------------------------------------------------------------------------