அருமை நண்பர்களே ,சான்றோர்களே,
இன்றுடன் 23 நாட்கள் விடுமுறை முடிந்து அரைமனதுடன் அமீரகம் திரும்பியேவிட்டேன்,ஊருக்கு போகும் போது இருந்த வேகமும் ஆர்வமும் திரும்ப வருகையில் சுத்தமாக வடிந்தேதான் போனது, இந்த முறையும் நிறைய நண்பர்களை சந்திக்க முடியவில்லை, எவ்வளவு தான் விடுப்பு எடுத்தாலும் போதவில்லை,என் பழைய அலுவலக நண்பர்கள்,உடன் படித்த நண்பர்கள்,பதிவுலக நண்பர்கள்,உறவினர்கள்,என நான் விஜயம் செய்ததும் அவர்கள் என்னை பார்க்க விஜயம் செய்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.
ஊரில் இறங்கிய மறு நாளே என் சென்னை வருகிறேன் பதிவை பார்த்து டோண்டு ஐயா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார், நான் அவரை தெரியும் என்றும் நேரம் கிடைக்கும் போது படிப்பேன் என்றும் சொன்னேன்.அவர் குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடுமாறு உரிமையுடன் அறிவுரை வழங்கினார்.
இரண்டு பதிவுலக சந்திப்பை கலந்துகொள்ள முடியாமல் இழந்துவிட்டேன், ஒன்று உலக சினிமா திரையீட்டு நிகழ்ச்சி எல்டாம்ஸ் சாலையில் கிழக்கு பதிப்பகத்தில் நடந்தது,மற்றொன்று கே.கே நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழா.ஊருக்கு வந்ததும் முன்னமே சொல்லியிருந்தபடி ஷண்முகப்ப்ரியன் ஐயாவை அவரது இல்லத்தில் சந்தித்தேன்,மிக அருமையான சந்திப்பாக அமைந்தது அது, ஐயா அவர்கள் மிகுந்த பணிச்சுமைக்கு இடையிலும் என்னை சந்தித்தது அவர் மீது மிகுந்த மதிப்பைத் தந்தது. நானும் என் மனைவியும் சென்றிருந்தோம், ஐயாவின் துணைவியார் அவர்கள் எங்களை உபசரித்த விதம் மிக அருமை, நல்ல சுவையான உணவுகளும் அருமையான தேனீரும் தயாரித்து தந்தார்,அன்று சாய்பாபாவின் பிறந்த நாள் என்பது கூடுதல் விஷேஷம்.மீண்டும் அடுத்தவாரத்தில் சந்திப்பதாக முடிவு செய்து பின்னர் இருவருமே பிற வேலைகளில் மூழ்கிவிட்டதால் சந்திக்க முடியவில்லை, பின்னொரு சமயம் அவசியம் சந்தித்து அளவளாவ வேண்டும். நன்றி ஐயா.
அடுத்ததாக ரோமியோபாய் என்னும் ராஜராஜனை என் வீட்டில் அழைத்து சந்தித்தேன்.அருமையான மனிதர்,ஆள் ப்ளாக்கில் உள்ள போட்டோவிற்கும் நேரில் பார்ப்பதற்கும் படு வித்தியாசம், நேரில் செம ஸ்மார்டாக இருந்தார்.என் நண்பரின் சாண்ட்விச் ஷாப்பான புத்தா ஹட்டிற்கு அழைத்துப் போனது தான் தாமதம் இருவரும் நன்கு நண்பர்களாகிவிட்டனர்.பின்னர் என் வீட்டுக்கு அவரை அழைத்து போய் நிறைய பேசினோம். அவர் அதைப்பற்றி இங்கு பதிவாக போட்டிருக்கிறார். தடாலென்று வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் எடுத்து எனக்கு கையொப்பமிட்டு பரிசளித்து வியப்பில் ஆழ்த்திவிட்டார்.அவர் கொட்டும் மழையிலும் எண்ணூரில் இருந்து என்னை பார்க்க வந்துவிட்டு சந்திப்பை முடித்து கிண்டிக்கு அவர் அலுவலகத்திற்கு இரவுப்பணிக்கு சென்றது மறக்க முடியாது,இந்த பதிவுலகம் நட்புக்கு ஒரு பாலம் என்பது இதன் மூலம் விளங்கியிருக்குமே? நன்றி ராஜராஜன்.
அடுத்ததாக ஜாக்கிசேகர் அண்ணனை என் வீட்டில் வைத்து சந்தித்தேன். நிறைய பேசினோம்,ஜாக்கி அண்ணன் ஹைதராபாத் படப்பிடிப்புக்கு போயிருந்தபோது நானும் ஹைதராபாதில் இருந்தேன்,ஆனால் சந்திக்க முடியவில்லை,அவர் வீட்டில் இல்லாததால் நான் அவர் வீட்டுக்கு செல்ல முடியவில்லை, மிகச்சிறந்த பண்பாளர் சொன்னதுமே , நீ அலைய வேண்டாம், வீட்டோட நேரம் செலவிடு, நான் இன்று அந்த பக்கம் தான் வருகிறேன் உன்னை நானே வந்து பார்க்கிறேன் என்று சொல்லி சரியாக என் வீட்டை கண்டுபிடித்து, போன் செய்தார், செம ஆச்சரியம் அது, ஒரு முறை தான் விலாசம் கொடுத்தேன்.அண்ணனுடன் பல விஷயங்கள் பேசினோம், என் மகள் வர்ஷினி நன்றாக பழகிவிட்டாள், ஜாக்கி அண்ணன் பழக மிக இனியவர்,அடுத்த முறை நிச்சயம் உங்கள் வீட்டுக்கு குடும்பத்தோடு வருவோம் அண்ணே.
அடுத்ததாக தண்டோரா அவர்களை எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நல்லதம்பி சாலையில் உள்ள விக்னேஷ் மஹால் திருமண மண்டபம் அருகே வைத்து சந்தித்தேன், அப்போதே நேரம் ஆகிவிட்டமையால் வீட்டுக்கு அவரால் வர முடியவில்லை,தல கேபிள் ஷங்கருக்கு போன் போட்டுத்தர பேசினேன்,மிக அன்போடு பேசினார், நேரில் தான் சந்திக்க முடியவில்லை, அடுத்த முறை கண்டிப்பாக நேரில் வந்து சந்திக்கிறேன் தல, தண்டோரா அவர்கள் எனக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் சூப் வாங்கித்தந்தார். அவர் அலுவலகம் தான் பல சென்னை பதிவர்கள் கூடும் இடம் என அறிந்தேன். அடுத்த முறை அவரின் அலுவலம் போகணும்,அங்கு வைத்து நிறைய பதிவர்களை சந்திக்க முடியும்.
அடுத்ததாக அமீரக பதிவர் கோபிநாத்தை என் வீட்டில் வைத்து சந்தித்தேன்.அவசர பணிகளுக்கிடையிலும் வீட்டுக்கு வந்து சென்றது மனதில் நீங்கா இடம் பிடித்த ஒன்று. அவர் அப்போது சன் டீவியில் வந்த வேட்டைக்காரன் விளம்பரத்தை பார்த்துவிட்டு, தயவுசெய்து எலோரும் இந்த படம் பார்த்தவுடன் மாறனுக்கு ”படம் பாத்தாச்சு” என்று கடிதம் எழுதிப்போடுங்கள்,அப்போது தான் அந்த விளம்பரம் போடுவதை நிறுத்துவார்கள் என்றாரே பார்க்கணும்?

அடுத்ததாக தேவியர் இல்லம்.ஜோதிஜி அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார்.அதுவும் மிகுந்த மகிழ்ச்சியளித்தது.இன்னும் நிறைய பதிவர்களின் தொலைபேசி எண்கள் தெரியாததால் பேச முடியவில்லை.சென்னை பதிவர்கள் ,தமிழக பதிவர்கள் மற்றும் உலக பதிவர்கள் அமீரகம் வரும் போது அவசியம் பின்னூட்டவும்,இங்கு சுமார் 30 பதிவர்கள் இருப்போம்,சந்தித்து விடலாம்.
இந்த முறை சென்னைக்குள் சைதாப்பேட்டை, ஆற்காடு சாலை, தி. நகர் போன்ற ஒரு சில இடங்களில் பைக் ஓட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. என்னமாய் பதட்டம் ஏற்படுகிறது. எல்லோரும் அவசரத்துடன் வண்டி ஓட்டுகின்றனர். புதிதாய் திறந்த எல்லா மேம்பாலங்களிலும் பைக்கை ஓட்டி வலம் வந்தேன், மிக அருமையான அனுபவமாக இருந்தது அது. மேம்பாலத்தில் அதுவும் நம் ஊரில் வண்டி ஓட்டும் மகிழ்ச்சி இருக்கிறதே? உன்னதம்,
நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் தினமும் 40கி,மீ வண்டி ஓட்டியதற்கும் இப்போது உள்ள வாகன நெரிசலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன, சென்னையில் ஒரு சில சாலைகள் நன்கு அகலப்படுத்தப்பட்டும், வாகனங்கள் வழிப்பாதை மாற்றம் செய்யப்பட்டும் உள்ளன. இந்த முறை சென்னையில் சீதோஷ்னமும் இதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊருக்கு கிளம்பும் முதல் நாள் கலைஞர் காப்பீடு திட்டத்திற்கு குடும்பத்துடன் போய் க்ரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டது மறக்க முடியாதது.ஒரே போட்டோ ஐடியாக கொடுபார்களாம்,இ எஸ் ஐ கார்டு போல, என் வீட்டாரின் முழு குடும்ப ஐடெண்டிக்கு மிகவும் முக்கியம் அது, அது என்னவோ கழக தொண்டர்கள் அனைவரிடமும் அப்படி மரியாதையுடன் பேசினார்கள், பெரிய ஷாமியானாவும் ,தண்ணீர் பாட்டில்களும் , 100 பேர் அமர பிளாஸ்டிக் சேர்கள் என ஒரு காலி மனையையே வளைத்திருந்தனர்.
ரேஷன் கார்டு மட்டும் குடுங்க சார், மீதி நாங்க பாத்துக்கறோம் என அவர்களே விண்ணப்பம் பூர்த்தி செய்தார்கள், அழகாக புகைப்படம் எடுத்தார்கள். இதை எல்லோர் வீட்டிலும் வந்து வெத்தல பாக்கு வைக்காத குறையாக அழைத்தது தான் விளங்காத ஒண்ணு, [எங்கள் ஐந்தாம் வார்டில் அனைவரையும் கவர் செய்து விட்டனர் ] இதில் தனியாக ஊழியர்களையும், புகைப்படம் எடுக்க பெரிய வீட்டையும் வாடகைக்கு எடுத்திருந்தனர். எங்க ஏரியா கவுன்சிலர் ஓட்டு கேட்பது போல கூழைகும்பிடு போட்டு ,ரொம்ப நன்றிங்கம்மா , இது முக்கியமான டார்கெட் அம்மா என்றார்,வேலைக்கு சென்று வந்தவர்களுக்காக இரவு 9-00 மணி வரை கழக கண்மணிகள் இயங்கியது இன்னமும் புரியாத ஒன்று. ஒண்ணுமே புரியலை உலகத்தில!!.இதை எடுக்காதவர்கள் உடனே எடுத்து விடுங்கள்.

ரேஷன் கடைக்கு போனால் எலக்ட்ரானிக் ஸ்கேல் இருந்தது.கம்ப்யூட்டர் பில் போடுகின்றனர், இது எல்லாமே புதிதாய் இருந்தது.விலைவாசி மிக மிக உயர்ந்துள்ளது கண்கூடாக காணமுடிகிறது.ஆனாலும் எல்லா இடங்களிலும் வியாபாரம் அமர்க்களமாக நடக்கிறது, மக்கள் எல்லா உணவகங்களிலும்,தள்ளு வண்டி கடைகளிலும்,பிரியாணி கடையிலும் அலை மோதுகின்றனர். எது போட்டாலும் வியாபாரமாகிறது வியப்பைத் தருகிறது, என்ன தான் வாங்கும் திறன் இருந்தாலும் சேமிக்காமல் இப்படி செலவு செய்தால் என்ன ஆவது?இந்த நிலை மட்டுமே என்னை கவலை கொள்ளச் செய்தது.இளநீர் 25 ரூபாய் தந்து குடித்தால் உப்பு கரிக்கிறது,அல்லது 50மில்லி மட்டுமே தண்ணீர் இருக்கிறது,வழுக்கை கூட இல்லை . தண்ணீர் கேன் வியாபாரம் கனஜோராக நடக்கிறது, பெயர் தெரியாத தண்ணீர் கேன்கள் பல்கிப்பெருகிவிட்டன. அரசே அதை முறைப்படுத்தி ரேஷன் கடையில் வழங்கினால் கூட தேவலை. மக்களுக்கு நல்ல பலனிருக்கும்.
கொசுக்கள் முன்பை விட பெரியதாகவும் திடகாத்திரமாகவும் பெருகிவிட்டன. கொசு மருந்தும் தினமும் அடிக்கின்றனர்.ஆனால் அதெற்கெல்லாம் பெப்பே காட்டுகின்றன கொசுக்கள். தண்ணீர் பாலில் போடப்பட்ட தேனீர் சிங்கிள் =6-00 ரூபாயாம்,எல்லோரும் வரிசையில் நின்று ரீசார்ஜ் செய்கிறார்கள், இப்போதைக்கு ஒரு ரீசார்ஜ் கடை போட்டால் செம பிக்கப் ஆகும் போல.

எங்கள் ஏரியா பிரியாணி கடையில் ஒரு கோம்போ ஆஃபரை பார்த்தேன்.1/2 பிளேட் சிக்கன் / மட்டன் பிரியாணி, + 1/4 பிளேட் சிக்கன் 65, + 200 மில்லி கோக் = 99 ரூபாய் என்று, சக்கை போடு போடுகிறது பாஸ். நான் என் நண்பர்களுக்கு கூட்டிப்போய் வாங்கித்தந்தேன்.செம டீல்,செம வியாபாரம். இருப்பவர்கள் செலவு செய்வர் இல்லாதவருக்கு ஒரு ரூபாய் ரேஷன் அரிசி சோறு தான் நிதர்சனமா?
-உள்ளக்குமுறல்கள் தொடரும்-