அருமை நண்பர்களே!!!
விழித்திருக்கும் போதே கண்ணில் மண்ணை தூவிவிட்டு அலேக்காக அபேஸ் செய்து விட்டு பறக்கும் பகல் கொள்ளையர்களைப் பற்றியும் அவர்கள் திருடிய விதத்தையும் தினத்தந்தி போன்ற நாளிதழ்களில் விறுவிறுப்பான நடையில் படித்திருப்போம். ஆனால் அவர்களை நேரில் பார்த்திருப்போமா? !!! அதற்கு அவசியமேயில்லை , பாலிவுட்டின் முண்ணணி நடிகர்கள் , இந்திய ஐகான் அமிதாப் பச்சனையும் சேர்த்து அநேகம் பேர் பகல் கொள்ளையர்கள் தான்,
சரி, ஏன்? அடுத்தவர் படைப்பை திருடி அதிலிருந்து மறுபடைப்பை உருவாக்கக்கூடாது?!!!
1.ஆக்கம் மற்றும் அறிவுத்திருட்டு பெருகினால் படைப்பாளிகளுக்கு கற்பனை வறட்சி உருவாகும்,மக்கள் சலிப்படைவர். பல நல்ல படைப்புகள் தோற்றுபோகும், அசலான கற்பனை வளம் கொண்ட படைப்பாளிகள் கூட , சற்றும் யோசிக்காமல் படைப்பு திருடர்களாவர்.
2.போலியையே உண்மை என்று நினைக்கும் மாயையை மக்களிடம் அது தோற்றுவிக்கும், உண்மையான படைப்பாளிக்கு செல்லவேண்டிய நியாயமான கூலி[ராயல்டி],கௌரவம், சென்று சேராது, நிறைய படைப்பாளிகள் மனமுடைந்து தற்கொலையும் செய்துகொள்வர்.
3.உலக அரங்கில் சீனர்கள் என்றாலே இண்டஸ்ட்ரியல் டிசைன் & டெக்னாலஜி காபி கேட்ஸ். [தொழிற்நுட்பம் மற்றும் அறிவு சார்பு திருடர்கள்]. இந்தியர்கள் என்றாலே ப்ளேகாரிஸ்ட்ஸ் [ஆக்கம் மற்றும் அறிவு சார்பு திருடர்கள்] என்று பெயர் வாங்கியிருக்கிறோம். அந்த அவப்பெயர் நிரந்தரமாகிவிடும்.
4,எத்தனையோ நல்ல இயக்குனர், நடிகர்களின் பேரலல் சினிமா, ஆல்டர்நேட் சினிமாக்கள் என்று அழைக்கப்படும் மாற்று சினிமாக்கள் இந்த நீங்காத அவப்பெயரினால் வெளியே தெரியாமலோ , யாரும் பாராமலோ போக நேரிடும். மொத்தத்தில் புதுமை செத்துவிடும்.
5.தவிர படைப்பாளிகளுக்கு நிரந்தரமாக 9-00 டு 6 -00 பார்க்கும் வேலை இருப்பது இல்லை, இவ்வாறு ஒருவனின் படைப்பை அவனுக்கு தெரியாமல் மறுஆக்கம் செய்வதால். அவனது தொடர் வருமானம் நின்று போகிறது, மூன்றாவது திருடனும் உருவாவான்,எப்படி? இதோ இப்படித்தான்:-
டீரெய்ல்ட் என்று ஒரு ஹாலிவுட் படம், அதை இம்ரான் ஹஸ்மி என்னும் பலே திருடன் , திருடி த ட்ரெய்ன் என்னும் பெயரில் நடிப்பதை கேள்விப்பட்ட கௌதம் வாசுதேவ மேனன், விட்டேனா பார்?!!! என்று பச்சைகிளி முத்துச்சரம் படத்தை போட்டிபோட்டுக்கொண்டு மூன்றே மாதத்தில் திருடி எடுத்து அவர்களுக்கு மூன்று மாதம் முன்பே ரிலீஸ் செய்தார். இப்படித்தான் நமக்கு அவப்பெயர் உருவாகும்.
ஒரு அந்நிய படைப்பிற்கான கூலியை கொடுத்து உரிமை வாங்கி இந்திய மொழியில் எடுத்தாலும் மூலத்தின் படைப்பாளியின் பெயரை போடவேண்டியது அவசியமாகிறது. இல்லை என்றால், அதை மொழிபெயர்த்து, மறுஆக்கம் செய்தவரே அந்த படைப்பை உருவாக்கியதாக பிம்பம் உருவாகிவிடும். அதுவும் ஒருவகையில் திருட்டுதான்!!!.
தவிர அகில உலக அரங்கில் ஹிந்திப்படங்கள் தான் இந்திய சினிமாக்கள் என நம்ப வைக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த பொருட்செலவிலும் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் ஹிந்தி அலுவல் மொழியாக உள்ள 11 மாநில மக்களாலும், இந்தியாவில் ஹிந்தி மொழி தெரியாத மாநில மக்களாலும் , அகில உலக அளவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபால், ஃபிஜி போன்ற நாட்டு மக்களாலும் பிரதானமாக விரும்பி பார்க்கப்படுகின்றன.
தவிர அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்தியகிழக்கு, ஆஃப்ரிக்கா, கிழக்கு, தெற்கு ஆசியாவில் குடியேறிய மக்களாலும் ஆரவார வரவேற்புடன் விரும்பி பார்க்கப்படுவதால், ஹிந்தி சினிமாவில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை, ஆகவே பாலிவுட்டில் படமெடுப்பது என்பது கொலைக்குத்து குடும்ப வியாபாரம்.
இருந்தும் இந்த பாலிவுட் பகல் கொள்ளையர்கள், காப்பிரைட் வாங்கியோ படைப்பாளிக்கு க்ரெடிட் கொடுத்தோ படம் எடுப்பதேயில்லை. உண்மையான படைப்பாளிக்கு மனச்சிதைவு, தாழ்வு மனப்பான்மை, சுயபச்சாதாபம் தருவதில் பாலிவுட்டை,நம் கோலிவுட் தோற்கடிக்க, ஏன் கிட்டத்தில் கூட நெருங்கவே முடியாது. அங்கு எடுக்கப்படும் அநேகம் படத்தின் கதை, இசை, பாடல் வரிகள், நாவல்கள், கேமரா கோணங்கள், எடிட்டிங்குகள். உடை, செட்கள் அப்படியே அகில உலக சினிமாக்களில் இருந்து திருடி மறுஆக்கம் செய்தவையே.
====0000====


நாக் அவுட் படத்தின் முன்னோட்ட காணொளி.
====0000====
====0000====
படைப்பு கொள்ளையர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
irected by | Mani Shankar |
---|---|
Produced by | Sohail Maklai |
Written by | Mani Shankar |
Starring | Sanjay Dutt Irfan Khan Kangana Ranaut Gulshan Grover Sushant Singh |
Music by | Gourov Dasgupta Vishal Dadlani (lyrics) Panchhi Jalonvi (lyrics) Shellee (lyrics) |
Cinematography | N Natarajan Subramaniam |
Distributed by | Sohail Maklai Entertainment Pvt Ltd Aap Entertainment Limited |
Release date(s) | 15 October 2010 |
Country | India |
Language | Hindi |
Budget | 30 crore (approx) |




அதில் என்ன ஒரு கொடுமை என்றால்?!!! இவர்கள் மீது அறிவுத் திருட்டு வழக்கு போட்டு, உலக அரங்கில் பாலிவுட்டினரை தலைகுனிய வைத்த Show East என்னும் கொரியப்பட கம்பெனி இதுபோல அறிவுத்திருடர்களின் சிபாரிசினாலும் எதிர்ப்புகளாலும் இழுத்தே மூடப்பட்டுவிட்டது!!!, ஆகவே அந்த ஆக்கம் மற்றும் அறிவுத்திருட்டு வழக்கிலிருந்து, ஸிந்தா கும்பல் வெண்ணையில் கத்தி வழுக்கிச் செல்வதைப்போல தப்பி விட்டனர்.
இதுவரையில் பாலிவுட் குற்றவாளிகள், எந்தவிதமான சட்டரீதியான நடவடிக்கைகளையும் சந்திக்கவேயில்லையே !!!! என்பது தான் என் ஆதங்கமாக இருக்கிறது, இப்போது தான் ஒன்று புரிகிறது இசைப்புயல் ஏன் தன்னுடைய ஒவ்வொரு படைப்புக்கான உரிமையையும் பேடண்ட் செய்கிறார்?!!!.காப்பிரைட் வாங்குகிறார் என்று.?!!! அவர் மட்டும் அப்படி செய்யா விட்டால் கூச்சமே இல்லாமல் இசைப்புயலின் பல இசைக்கோர்வைகளை இவர்கள் சூறையாடியிருப்பார்கள் என்பது திண்ணம்!!!.

.jpg)
====0000====


====0000====


====0000====
முடியாது-தொடரும்