ஜல்சாகர் [ জলসাঘর ][Jalsaghar AKA The Music Room][1958 ][பெங்காலி]



1958 ஆம் ஆண்டு இயக்குனர் சத்யஜித் ரே  தன் முந்தைய படம் அபராஜிதோவின் வசூல் ரீதியான தோல்விக்கு பிறகு  தன்னை சற்றும் சமாதானம் செய்துகொள்ளாமல் செய்த பரீட்சார்த்தமான முயற்சி தான் ஜல்சாகர் என்னும் நியோ ரியாலிச திரைப்படம்.  [ஆங்கிலத்தில் த ம்யூசிக் ரூம்] இது 1950 ஆம் வருடம் இயற்றப்பட்ட ஜமீந்தாரிகள் ஒழிப்பு சட்டத்தைப் பற்றி   நேர்படப் பேசுகிறது.

ஆடிய ஆட்டமெல்லாம் ஆடி தன் சொகுசு வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருக்கும் வங்காள ஜமீந்தார் சபி பிஸ்வாஸின் கதை இது, தன் தோப்பு துறவறங்கள் எல்லாமே அரசின் புதிய சட்டத்தால் பறிபோய் விட்ட பின்னும், ஆடல் பாடல் கேளிக்கைகளுக்கு பெரும் பொருள் செலவிடுகிறார் ஜமீந்தார், ஏழமை எப்படி இருக்கும்?  என்றே தெரியாமல் தன் முன்னோர்களின் சொத்தை  இழந்த பின்னரும், அவர்கள் ஜமீன்பெருமையை இன்னும் பேசி மனமகிழ்ந்திருக்கும் கடைசி எச்சம் அவர்,

இவரின் பாத்திரத்தை அப்படி தத்ரூபமாக படைத்திருப்பார் ரே, அத்தனை உள்வாங்கி நிஜமான ஜமீனாகவே உருமாறியிருப்பார் Biswambhar Roy, இவரின் மனைவி எத்தனை புத்தி சொல்லியும் இவர் மூளையில் ஏறுவதாக இல்லை, மகனுக்கும் இசை குதிரையேற்றம்,யானையேற்றம் பயிற்றுவிக்கிறார், இவரின் ஜமீனின் எச்சங்களாக வெள்ளை உயர் ஜாதிக் குதிரையும் ,யானையும் உண்டு, அதில் தினசரி இவரும் மகனும் சவாரி செய்வதே முக்கிய பொழுதுபோக்கு,

தன் ஜமீனின் விக்டோரிய அரண்மனை முறையான பராமரிப்பில்லாததால் பாழடைவது தெரிந்தும் அதற்கு பொருள் செலவிடாமல் அரண்மனைக்குள் தான் போற்றி பாதுகாக்கும் ஜல்சாகர் என்னும் இசை அறைக்கே அதிக பொருளும் நேரமும் செலவிடுகிறார், அதிலேயே அதிக சிந்தையாயிருக்கிறார், அங்கே ஒவ்வொரு மாலைப் பொழுதுமே ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் பெரிய விலையுயர்ந்த ஷாண்ட்லியர்களில் பொருத்தி வைத்து ஏற்றப்படுகிறது, எஜமான விசுவாசம் கொண்ட  வேலைக்காரன் மிகுந்த பிரியத்துடன் அதை செய்கிறான், உயர்ந்த வகை மதுவகைகள் முழு பாட்டில்களாக நகரத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அலங்கார கண்ணாடி குடுவைகளில் ஊற்றி வைக்கப்பட்டு, இசைவிருந்தின் போது கோப்பைகளில் பறிமாறப்படுவதை நாம் பார்க்கிறோம்,

ஜமீந்தார் தன் ஓய்வு நேரத்தில் ஓவியரை அழைத்து ,பெரிய தைல வண்ண போர்ட்ரெய்ட்டுகளாக தம்மை வரைய போஸ் தருகிறார்,பின்னாலே மனைவியின் அழுகை அவர் செவிகளை அடைவதில்லை.மகன் அருமையாக சங்கீதம் கற்று ஜதி சொல்கிறான்,அப்பா இசைக்கருவி மீட்ட அவன் வாய்பாட்டில் ஆலாபனை செய்ய,வீடே சங்கீத கோலம் கொண்டிருக்கிறது, ஜமீனின் மனைவி, மகனின் சங்கீத ஞானத்தால் மனமகிழ்ந்தாலும் கணவரின் ஊதாரித்தனத்தால் வருந்துகிறார்.

ஜமீந்தார் எநேரமும் புகைக்கும் வாசனை மலர்கள் மற்றும் புகையிலை அடங்கிய ஷீஷா வேலைக்காரனால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது,  இந்த பாழடைந்து கொண்டிருக்கும் அரண்மனைக்குள் எந்நேரமும் சித்தார் இசை கேட்டுக்கொண்டிருக்கும் படி முழு சம்பளம் தந்து இசைக்கலைஞன் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஜமீந்தாரரின் கணக்குவழக்கை பார்க்கும் பிராமணர், எத்தனையோ முறை எச்சரித்தும் அவர் அதையெல்லாம் கேட்பதாயில்லை, சொகுசு காரை விற்றாயிற்று,உயர்தர தேக்கு மர மேசை நாற்காலிகள்,புத்தக அலமாரிகள் ,உணவு மேசை போன்றவற்றை கூட ஒவ்வொரு மாத சம்பளத்துக்காகவும், மளிகை சாமான்களுக்காகவும் விற்க வேண்டிய அவல நிலை, அரசு பறித்துக்கொண்டது போக முன்னோர் துயில் கொள்ளும் சமாதி நிலம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது, இன்னும் கூட வீட்டார் ஜமீந்தார் உண்பதில் குறை வைக்கவில்லை, உடுத்துவதில் குறை வைக்கவில்லை,

இந்நிலையில் தன் தந்தை உடநலம் குன்றியிருப்பதால் அவரைப் பார்க்க ஜமீந்தாரின் மனைவி புறப்படுகிறார்,ஜமீந்தாரரை அழைக்க அவர் நிலபுலன்களை பார்த்துக்கொள்ள வேண்டியிருப்பதால் வர இயலாது என காமெடி செய்கிறார், பணிவான மனைவியே இதுகேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாள், தன் மகன் பின்னே குதிரையில்   பவனி வர  இவர் முன்னே  பல்லக்கில் படகுத்துறை நோக்கி செல்கிறார், அங்கிருந்து ஆற்றில் பாய்மரம் வாயிலாக தாய்வீடு செல்கிறார், சில வாரங்கள் கழிந்த பின்   அவர் ஜமீந்தாரின் ஊருக்கு திரும்ப வருகையில் பெய்த திடீர் மழையால் , ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் , கடும் சுழலில் படகு சிக்க மனைவியும் மகனும் பலியாகிவிடுகின்றனர்,  ஜமீந்தாருக்கு மனையாள் சோகமும், புத்திர சோகமும் ஒருங்கே வாட்ட, அவர் சுமார் 4 வருட காலமாக தன் மாடி அறையை விட்டு இறங்குவதேயில்லை,பாதி நேரம் மொட்டை மாடியிலேயே கழிக்கிறார்.

இந்நிலையில் அரசின் புதிய சட்டங்களை தமக்கு தோதாக வளைத்து ஊரில் புதிய பணக்காரர்கள் உருவாகியிருக்கின்றனர், அவர்கள் தம் வீடுகளில் டீசல் ஜெனரேட்டர் போடுவதும் ,நிரந்தர மின்சார கனெக்‌ஷன் தருவதும், தம் வீட்டு விஷேஷங்களுக்கு பேண்ட் கோஷ்டி,க்ராமபோன் ஏற்பாடு செய்து அலற விடுவதுமாக இவரின் ஒவ்வொரு விடியலுமே இருக்கிறது, இவரின் வீட்டின் அருகே இருக்கும் ஆற்றுக்கு செல்லும் பாதையில் இவரிடம் அனுமதி பெற்று பெரும்பணம் ஈட்டும் மணல் காண்ட்ராக்டர் கங்கூலியின் லாரிகள் நிமிடத்துக்கு ஒன்றாக பறக்கின்றன, [மணல் சுரண்டலை ரேவின் கேமரா நேர்த்தியாக உள்வாங்கி நமக்கு தருகிறது, தன் படைப்பில் உலகத்தரமான சர்க்காசிசம் பயின்றவர் ரே என புலப்படும்]

அன்று, புதிய பணக்காரன் கங்குலி ஜமீந்தாரை , முறையாகப் பார்த்து தன் வீட்டு கிரகபிரவேசத்துக்கு அழைக்கிறான்,அங்கே இசை அறை உள்ளதா என கேட்கிறார்,ஜமீந்தார்,அவன் இருக்கிறது,அதில் புகழ்பெற்ற நாட்டியக்காரியின் கதக் நடனம் வைத்திருக்கிறேன், வந்து சிறப்பித்து தர வேண்டும் என அழைக்கிறான் கங்கூலி, ஜமீந்தாருக்கு வீம்பும் அகம்பாவமுமாக இருக்கிறது, 4 வருடங்களாக அடங்கி ஒடுங்கி இருந்தவரை ஒரு புதுப்பணக்காரனின் டாம்பீகம் அசைத்து விடுகிறது,

 வலிய மாடியை விட்டு இறங்கியவர் இரும்புப் பெட்டியை திறக்கிறார் மனைவியின் கடைசி நகையை விற்று தன் பாழடைந்த இசை அறையை மீண்டும் திறக்கிறார்,அதை  பொலிவுடன் புதுப்பிக்கிறார், மீண்டும் ஆயிரக்கணக்கில் மெழுகுவர்த்திகள் வாங்கப்பட்டு ஷாண்ட்லியரில் சொருகப்பட்டு குதூகலமான வேலைக்காரனால் அவை ஏற்றப்படுகின்றன, உயர்ந்த வகை மது வகைகள் ,உணவுவகைகள், வாசனா திரவியங்கள்,வாங்கி வரப்படுகின்றன, இதைக் கண்டு உள்ளம் களங்குகிறார் ஜமீனின் நலம் விரும்பும் கணக்காளர், அவரால் ஜமீந்தாரை எதிர்த்தும் பேச முடிவதில்லை,

இந்த விருந்து முடிந்து விட்டதென்றால் ஜமீந்தாரர் சுத்தமாக வழக்கொழிந்து விடுவார்.விசுவாசமான வேலைக்காரர்களுக்கு கடைசி சம்பளம் தரக்கூட காசுகிடையாது, ஆனால் ஜமீந்தார் இரும்புப் பெட்டியில்  வெல்வெட் சுருக்குப்பையில் மீதம் இருக்கும் பொற்காசுகளை அப்படியே எடுத்துக்கொண்டுவிட்டார், தன் பிரதான போட்டியாளனான கங்கூலியுடன் செல்வம் ஈட்டுவதில் போட்டி போடமுடியாத ஜமீந்தார் அவனை கேளிக்கைக்கு செலவிடுவதில் தோற்கடிக்க எண்ணுவதை கணக்காளர் அறிந்திருக்கிறார்,

 அவரால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை,ஆனால் எந்த கவலையுமில்லாத வேலைக்காரன் ஓடியாடி மது பறிமாறுகிறான், கதக் ஆட்டமும், ஹிந்துஸ்தானி கஜல் இசையும் விடிய விடிய நடைபெறுகிறது, ஆட்டக்காரிக்கும்,இசைக்கலைஞருக்கும் சம்பளமாக 200 ரூபாய் பேசப்படுகிறது,அங்கே கதக் ஆடிய ஆட்டக்காரி காரியத்தில் மிகத்தேர்ந்தவளாகையால் ஜமீந்தார் மனதையும் குழுமியுள்ள இதர பணக்காரர்களின் மனதையும் நன்கு அறிந்திருக்கிறாள்,அனைவரும் சொக்க ஆடுகிறாள். ஜமீந்தாரர் கைகளில் மல்லிகை சரம் சுற்றப்பட்டிருக்க, அவர் வசதியாக திண்டுகளில் சரிந்து கொண்டபடி தன் கடைசி ஆட்டத்தை பார்க்கிறார்,ஷீஷா உறிஞ்சுகிறார்.

ஓரக்கண்ணால் கங்கூலியை எகத்தாளமாகப் பார்க்கிறார், வேலைக்காரன் ஜமீந்தாருக்கும் ஏனையோருக்கும் ஓடி ஓடி மது வகைகளை ஊற்றுகிறான், உயர்தர வறுவல் பலகாரங்கள் பறிமாறுகிறான், புகைமயமாகிறது இசை அறை, வேலைக்காரன் ஓரமாக நின்று ஆட்டத்தை ரசிக்கிறான், ஜமீனே நாசமாகப் போனாலும் ஜமீந்தார் ஆட்டம் பாட்டமுமாக சந்தோஷமாக இருக்க வேண்டும், தான் இப்படி இசை ,நடனம் பார்க்க வேண்டும் என ஆசை கொண்டிருக்கிறான், ஆனால் அவன் ஒரு விசுவாசி அதில் சந்தேகமேயில்லை, ஷீஷாவை ஒயிலாக  உறிஞ்சி புகைத்துக் கொண்டே ஆட்டம் பார்க்கிறார் ஜமீந்தார், இப்போது ஆட்டம் பலத்து ஓங்கி முடியவும் அவளின் பாதங்கள் அங்கே ஜதி போடுவதை நிறுத்துகின்றன, அருகே அமர்ந்த கங்கூலி ,வாரே வா,சபாஷ் என தன் கையில் இருக்கும் பொற்காசுகளை விசிற எத்தனிக்கிறான் ,அவனின் கையை தன் ஊன்றுகோலால் பின்னுக்கு இழுக்கிறார் ஜமீந்தார்,

கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் தான் முதல் பரிசு தர வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா?என புதுப்பணக்காரனை அற்ப தோரணையில் ஏளனம் செய்து விட்டு, தன் வெல்வெட் சுருக்குப் பையை அவளை அருகே அழைத்து தருகிறார் ஜமீந்தார், அவள் வணங்கி அதை ஏற்கிறாள், கங்கூலி முகம் கருக்கிறது, ஜமீந்தாருக்கு அற்ப சந்தோஷம், ஆனால் அடுத்த வேளைக்கு உணவில்லை என்பது பற்றி அவருக்கு கவலையில்லை, அவர் கோப்பையை நீட்ட நீட்ட ஊற்றிக்கொண்டே இருக்கிறான் வேலைக்காரன், ஆளரவமற்ற தன் இசை அறையில் அங்குமிங்கும் நடந்து மாட்டப்பட்டிருக்கும் தந்தை,தாத்தா, பாட்டன் முப்பாட்டன் படங்களை  வெற்றிக் களிப்புடன் பார்க்கிறார் ஜமீந்தார், பரம்பரை புகழ் எல்லாம் என் ரத்தத்திலேயே இருக்கிறது, ஜமீன் ரத்தம் என்று முழக்கமிடுகிறார், தன் தந்தையின் ஓவியத்தை உற்று நோக்கியவர்,

அதில் ஒரு பெரிய சிலந்தி ஊர்வதை கண்ணுறுகிறார், அருவருப்படைந்தவர் அதை ஊன்றுகோலால் விரட்டுகிறார்,இப்போது ஷாண்ட்லியரில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள்  கரைந்து முடிவுக்கு வந்தவை சுடர் விட்டு எரிந்து பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக மரணிப்பதை பார்க்கிறார் ஜமீந்தார், அவருக்கு இப்போது ஏதோ உறைப்பது போல இருக்கிறது, பயம் கொண்டு பினாத்துகிறார் ஜமீந்தார், இருள் சூழ மருள்கிறார், வேலைக்காரன் பயம் வேண்டாம் மெழுகுவர்த்தி தானே முடிந்தது, இதோ விடிந்து விட்டதே என திரைச்சீலையை திறக்கிறான், அப்போது நிம்மதியானவர், அவரின் குதிரை பசிக்காக கனைக்க, அது தன்னை சவாரிக்கு அழைப்பதாக எண்ணி விருட்டென போதனியினூடே எழுந்து போய், அதில் எப்படியோ ஏறி விரட்டிப் பயணிக்கிறார்,

குதிரை ஆற்றங்கரையை நோக்கி மரணப்பாய்ச்சல் பாய்கிறது,அங்கே வைத்து ஒரு பள்ளத்தில் தன் முன்னங்கால்களை தூக்க, ஜமீந்தாரர் மிகுந்த போதை கொண்டிருந்தவர் தரையில் குப்பை போல வீசப்படுகிறார், அவரின் ஜமீன் ரத்தம் அங்கே வெளியேறி இளக்காரமாக சிரிப்பதை நாம் பார்க்கிறோம், அங்கே பின்னாலே ஓடி வந்த விசுவாசமான வேலைக்காரனும் , கணக்காளரும் ஜமீனுக்காக அழுவதா?, தம் வாழ்க்கைக்காக அழுவதா? எனத் தெரியாமல் தேம்பி அழுகின்றனர், இது ஒரு ஜமீனின் கதைதான்,இது போல பாரத தேசமெங்கும் ஏழை தொழிலாளிகளை சுரண்டி கொழுத்து திணவெடுத்த ஜமீன்கள் லட்சம் பேர் உண்டு,அவர்கள் வாழ்வும் இப்படித்தான் முடியும் என்பதை இப்படைப்பால் நமக்கு உணர்த்துகிறார் ரே,

படப்பிடிப்புக்காக ரே பயன்படுத்திய பங்களாவும் உண்மையானது, எங்குமே அவர் நாடகத்தனமாக செட் அமைக்கவில்லை, எங்குமே அவர் நாடகத்தனமான வசனங்களை அனுமதிக்கவில்லை, சினிமா காட்சிகளின் மீடியம் என்பதற்கேற்ப செழுமையை, பெருமையை, சிறுமையை, துக்கத்தை ரேவின் கேமரா  தான் பேசுகிறது, ஒரு ஒப்பற்ற பாசாங்கில்லாத உணர்வுரீதியான படைப்பு இது, கருப்பு வெள்ளையில் இப்படி கதா பாத்திரங்களின் உணர்ச்சிகளை ரேவால் மட்டுமே அற்பணிப்புடன் வெளிக் கொணர முடியும் என்னும் படியான படைப்பு, ரே படத்தில் உபயோகித்த இசைக்கலைஞர்கள், இசைத் தொகுப்பு, இசை வாத்தியங்கள், அனைத்துமே நாடகத்தனமில்லாதவை, எல்லாமே ப்ரொஃபெஷனலாக கையாளப்பட்டவை,

அதே 1950களில் சினிமாக்களில் நின்றால், நடந்தால் சிறிதும் உண்மைத்தன்மை இல்லாத பாடல்கள், சத்தம் போட்டு பக்கம் பக்கமாக வசனம் பேசும் படங்கள், அதீத சண்டைக் காட்சிகள்,மாயாஜாலக் காட்சிகள் நிரம்பிய படங்கள் வணிக ரீதியாக பெரும் வசூல் சாதனை செய்ய, அது போன்ற குப்பைக்கோளங்களே மீண்டும் மீண்டும் மறு சுழற்சி செய்யப்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், எக்காலத்துக்கும் பொருந்துகிறபடியான சினிமாவை சிறிதும் சமாதானமில்லாமல் படைத்தவர் சத்யஜித் ரே என்றால் அது சற்றும் மிகை இல்லை

படத்தை க்ரைடீரியான் நிறுவனத்தார் மிகுந்த ஆத்மார்த்தமாக செப்பனிட்டு அருமையான டிவிடிக்களாக வெளியிட்டுள்ளனர்,அது குறித்த விபரங்கள் அடங்கிய சுட்டி

முழுப்படமும் யூட்யூபில் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கின்றது,அதன் சுட்டி

Cast

Biswambhar RoyChhabi Biswas
Mahamaya, his wifePadma Devi
Bireswar, his sonPinaki Sen Gupta
Mahim GanguliGangapada Bose
Taraprasanna, the stewardTulsi Lahiri
Ananta, the servantKali Sarkar
DurgabaiBegum Akhtar
Ujir KhanSalamat Ali Khan
KrishnabaiRoshan Kumari

Credits

DirectorSatyajit Ray
ScreenplaySatyajit Ray
ProducerSatyajit Ray
Based on the short story Jalsaghar byTarasankar Banerjee
CinematographySubrata Mitra
EditingDulal Dutta
Art directorBansi Chandragupta
SoundDurgadas Mitra
Music directorUlstad Vilayat Khan
Music and dance performed onscreen byBegum Akhtar, Roshan Kumari, Waheed Khan, Bismillah Khan and and company
Music performed offscreen byDaksinamohan Thakur, Asish Kumar, Robin Majumdar and Imrat Hussain Khan
Production managerAnil Choudhury
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)