எழுத்தாளர் ஜெயமோகன் நேற்று காலஞ்சென்ற மலையாள எழுத்தாளர் மற்றும் இயக்குனர் பத்மராஜன் என்கிற பாப்பேட்டா பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார்.
அவரின் Ardent Fan ஒருவர் அவருடன் நளினமான ஆங்கிலத்தில் மானசீகமாக உரையாடி, ஒரு Tribute செய்திருந்தார்,அந்த வீடியோவின் லிங்கை பகிர்ந்தவர் பாப்பேட்டனுக்கு இப்பேற்பட்ட நளினமான ஆங்கில Tribute ஐ புரிந்து கொண்டிருக்கக்கூட முடியாது,திகைத்திருப்பார், என ஏளன தொனியில் எழுதியிருந்தார் ,
அந்த மடமையான கட்டுரையின் சாரத்தை மலையாள சினிமா பற்றிய கலாரசனையுள்ள யாராலுமே ஏற்றுக் கொள்ள முடியாது, இவரிடம் பாப்பேட்டா சந்திக்கையில் வட்டார மலையாளத்தில் பேசினாராம், அதனால் அவரை இவர் நன்கறிவாராம்,
பாபேட்டாவின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நன்கு படித்தவர்கள், படத்தில் நல்ல English பேசுபவர்கள், Manglish பேசுபவர்கள் அல்ல எனபதை அவர் உணர்ந்திருந்தாலே இப்படி எழுதியிருக்க மாட்டார்,
அவரின் Family Drama வான திங்காழ்சே நல்ல திவசம் படத்தில் வரும் வீட்டோட வேலைக்காரி கதாபாத்திரம் கூட ஆங்கிலம் பேசும்,
அவளை எள்ளி நகையாடி நாங்கள் இருவர் (காதலர்கள் )பேசுவது உனக்கு புரிகிறதா?
என தரவாட்டு வீட்டுக்கு வந்த மும்பை பேத்தி திமிருடன் ஏய் அம்மணி Could you follow us? What did were talking !!! என வினவ ,
yes i could என பட்டென உரைத்து நகர்வார் அந்த ப்ரீ டிகிரி படிக்கும் வேலைக்காரப் பெண் அம்மணி,
பாப்பேட்டாவின் தூவானத்தும்பிகள் படத்தின் நாயகனான ஜெயக்ருஷ்ணன் பாப்பேட்டாவே தான், தன்னை ஒரு இலக்கியவாதி பிரதி எடுத்தால் தான் ஜெயக்ருஷ்ணன் போன்ற கதாபாத்திரங்கள் உயிர் பெறும்,
ஜெயக்ருஷ்ணன் இரண்டு முகம் கொண்டவன், கிராமத்தில் அவன் அசல் பட்டிக்காட்டான்,நகரத்தில் அவன் ஒரு மிடுக்கன் , ரசனாகரன்,
சமூகத்தில் பெண் தரகர்,கறி வியாபாரி, பார் டெண்டர்,முதல் பெரும் தொழிலதிபர் வரை மனதார சிலாகிக்கப்படுபவன், அவர்களுடன் அவரகட்கேற்ப உரையாடும் கலை கைவரப்பட்டவன்,எங்கே தேவையோ அங்கே நல்ல ஆங்கிலம் பேசுபவன்,
அப்படியே அவரின் நமக்குப் பாக்கான் முந்திரித்தோப்புகள் சோலமனை எடுத்துக் கொண்டாலும் ஆச்சர்யங்கள் கிட்டும், படித்த பட்டதாரி, paulo Coelho உள்ளிட்ட மேலை இலக்கியங்கள் படிப்பவன், ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவன்,பைபிளில் தனக்குப் பிடித்தமான மன்னர் சோலமன் அத்தியாயங்களை அனாயசமாக ஆங்கில அர்த்தம் புரிந்து அசைபோடுபவன், நாயகியும் அவனும் அந்த வாக்கிய அத்தியாய எண்களைக் கொண்டே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்வார்கள்
சோலமன் தன் மைசூர் திராட்சைப் பண்ணையில் ட்ராக்டர் ஒடிப்பான், அம்மாவைக் காண திடீரென கிளம்பி வருகையில் பழுது பார்க்க வேண்டியிருக்கும் டாங்கர் லாரியையும் லாவகமாய் ஒடித்து வரும் சூரன்
அப்படியான வெளிப்பூச்சில்லாத மாந்தர்களின் படைப்புகள் ஏராளம் தந்தவரை எதற்காக மட்டம் தட்டுவது போல ஒரு கட்டுரையை ஜெயமோகன் எழுதினார் எனப் புரியவில்லை,
ஜெயமோகனுக்குள் இருக்கும் குமாஸ்தா ஆங்கிலம் பேசும் தாழ்வு மனப்பான்மை தான் அவருக்கு பாப்பேட்டா மீதான இந்த மதிப்பீட்டைத் தந்ததா என ஒரு சம்ஷயமுண்டு
பாப்பேட்டாவின் படைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இங்கே அவருக்கு மேற்கோள் காட்டினால் விடிந்துவிடும்
அவரின் கட்டுரை இங்கே
http://www.jeyamohan.in/84345
//ஒரு நண்பர் அனுப்பிய சுட்டி இது. பத்மராஜனுடன் ஓர் அந்தரங்கமான உரையாடல் என இந்த சிறியபடத்தைச் சொல்லலாம்.
நான் கவனித்த சில விஷயங்கள். ஒன்று, இந்தப்பையனுக்கு எந்தவகையிலும் மலையாளத்தன்மை இல்லை. அவன்பேசுவதே கேரளத்துக்கு அப்பால் எங்கோ இருந்துகொண்டு எனத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பத்மராஜனிடம் பேசுவதை நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது. அவரை எனக்குத்தெரியும்- ஒரு முறை சந்தித்திருக்கிறேன். லோஹியுடன். இந்த ஆங்கிலப்பேச்சைக்கேட்டால் திகைத்திருப்பார்
பத்மராஜன் முழுக்கமுழுக்க கேரளத்தின் வட்டாரப் பண்பாட்டுக்குள் இருந்தவர். ஒற்றப்பாலத்தைச் சுற்றியிருக்கும் வள்ளுவநாடு அவரது களம். அவரது கதாபாத்திரங்கள் அறிவுஜீவிகள் அல்ல. அவர்கள் பேசுவதும் இயல்பான உணர்ச்சிவெளிப்பாடுதானே ஒழிய கருத்துக்கள் அல்ல. அவ்வகையில் செவ்வியல்தன்மை மேலோங்கிய எம்.டி.வாசுதேவன்நாயரின் உலகுக்கு வலுவான மாற்றாக எழுந்தவை பத்மராஜனின் படங்கள்.
ஒற்றப்பாலத்தின் கதைசொல்லியாகவே இலக்கியத்திற்குள் வந்தார். நட்சத்திரங்களேகாவல், ரதிநிர்வேதம், கள்ளன்பவித்ரன், இதா இவிடவரே ஆகியவை அவரது புனைவுலகின் நுணுக்கமான அழகுடன் இன்றும் உள்ளன. நடையையும் கதாபாத்திர உருவாக்கத்தையும் வைத்து அவரை வன்முறை கலந்த கேரள ஜானகிராமன் என்று சொல்லலாம்.
அவர் திரைக்கதை எழுதிய ஆரம்பகாலப் படங்கள் அந்த மண்ணின் காமத்தையும் வன்முறையையும் நேரடியாகச் சித்தரிப்பவை. உதாரணம், இதா இவிட வரே, சத்ரத்தில் ஒரு ராத்ரி, வாடகைக்கு ஒரு ஹ்ருதயம், ரதிநிர்வேதம், தகரா, கரும்பின் பூவினக்கரே. வன்முறையையும் காமத்தையும் நம்பகமாக கலையழகுடன் சொன்னவர் என்பதே பத்மராஜனின் அடையாளமாக இருந்தது. பரதன் – பத்மராஜன் கூட்டு மலையாளத்தில் திரைக்காலகட்டம் ஒன்றைத் தொடங்கிவைத்தது.
பின்னர் அவரே இயக்கிய பெருவழியம்பலம், கள்ளன் பவித்ரன், ஒரிடத்தொரு பயில்வான் முதலிய படங்கள் கூட அந்த மண்ணின் கதைகள்தான். மிகமிக வட்டாரத்தன்மைகொண்டவை. அங்கு மட்டுமே உருவாகும் கதைமாந்தர்கள் அவர்கள் என்று நமக்குத்தோன்றும். பிற்காலத்தில் காமத்தின் உள்ளறைகளுக்குள் சென்று நோக்கும் சில படங்களை எடுத்தார். தூவானத்தும்பிகள், தேசாடனக்கிளி கரையாறில்ல, நமுக்குபார்க்கான் முந்திரித்தோப்புகள். அவற்றிலும் கதைமாந்தரின் ஊர் வள்ளுவநாடுதான்.
நிலமே அற்றவன் போலத்தெரியும் இந்தப்பையனைக் கவர்ந்தது எது? அந்த நிலத்தில் வேரூன்றி எழுந்த புனைவுலகின் மலர்ந்த மலர்களை மட்டுமே இவன் பார்க்கிறான். கலை அப்படியும் சென்றடையக்கூடும் போலும்//
பாப்பேட்டாவின் Ardent Fan ன் Tribute இங்கே
https://www.youtube.com/watch?v=Kl96WTpNoh4