https://youtu.be/l4AE-oNbG54
ஆலோலம் , பீலிக்காவடி சேலில் நீலமாமல மேலே ஆலோலம்!!! என்ற தாஸேட்டா பாடலை கேட்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது, காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இந்த டைட்டில் பாடல் ஆலோலம் மலையாளத் திரைப்படத்தில் வருகிறது, இது 1980 ஆம் ஆண்டு வெளியானது, இசைஞானிக்குள் இருந்த பரீட்சார்த்த வேட்கை தீயாக வெளிப்பட்ட பாடல் இது,
இந்த நாலரை நிமிட பாடலில் இடையே ஜெயதேவர் இயற்றிய கீத கோவிந்தத்தில் நாராயணனைப் பாடும் அஷ்டபதியில் இருந்து இரண்டு துதிகள் கவனமாக தேர்ந்தெடுத்து கவளம் ஸ்ரீகுமாரால் பாடப் பட்டன,
உடன் ஒலிக்கும் உடுக்கைச் சத்தம் நம்மை இறைவன் சந்நிதியின் முன்பாக மானசீகமாக நிறுத்தும் தன்மை கொண்டது.
இப்பாடலின் சிச்சுவேஷன் அலாதியானது, நீண்ட காலம் பிள்ளையில்லா தம்பதிகளான பரத்கோபியும், கே.ஆர்.விஜயாவும் மகன் பிறந்த சந்தோஷத்தில் நாராயணன் சந்நதியில் நேர்த்திக் கடன் செலுத்துகையில் வரும் பாடல், இப்படத்தின் ஒளிப்பதிவு ராமச்சந்திர பாபு.இயக்கம் மோகன்.
முதல் பல்லவியில் வரும் அஷ்டபதியில் இருந்து அவர் சேர்த்த
சகிஹே கேஷி
சரணத்தில் அஷ்டபதியில் வரும்
ப்ரியே சாரு ஷீலே
என்ற அடிகளைக் கேளுங்கள் , வேறு மொழி, வேறு கலாச்சாரம், இசைஞானிக்கு எத்தனை வேட்கை? எத்தனை ஆர்வம் ? அது இத்தனை இனிமையான பாடலாக ஒரு வெகுஜன சினிமாவில் உருமாறியுள்ளதைப் பாருங்கள்.
கீத கோவிந்தம் பாடலை படிக்க இங்கே
https://gitagovinda.wordpress.com/2012/11/22/ashtapadi19/