Metoo# குமுறல்களைப் புரிந்து கொள்ள பெண்ணாய் இருக்க வேண்டியதில்லை நல்ல ஆணாக , நல்ல மனிதனாக இருந்தாலே போதும்.அவர்களை கிண்டல் செய்யவோ விமர்சனம் செய்யவோ தோன்றாது.
எரிமலை குமுறுவது போல பல வருடங்களுக்குப் பின் இந்த inferior society ல் குமுறும் பெண்களை ஆதரிக்கவில்லை என்றாலும் கிண்டல் செய்யாதிருப்போம், இந்த ஜோதி அணையாமல் பாரத்துக் கொள்வோம்.
நம் இந்திய சினிமாவில் இருந்து இரண்டு metoo# உதாரணங்கள் சொல்கிறேன், அவை குடும்பத்துக்குள்ளாகவே நடந்தவை.
முதல் incest சம்பவம் மீரா நாயர் இயக்கிய monsoon wedding மான்சூன் வெட்டிங் படத்தில் முக்கிய திருப்பமாக வரும், வசுந்தரா தாஸின் திருமணத்திற்கு வரும், 40வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாத ரியா ( shefali shah ), அங்கே லண்டனில் இருந்து வரும் முக்கிய விருந்தாளியான அவளின் மாமாவான தேஜை , ஒரு கட்டத்துக்கு மேல் பார்க்க பிடிக்காது தாங்க முடியாமல் வெடித்து எல்லோர் முன்பும் காட்டிக் கொடுத்து,
அந்த பீடோஃபைல் திருமண நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாவிட்டால் நான் வெளியேறுவேன் ,என வெடிப்பார், அவருக்கே வெற்றி கிடைக்கும். படம் அவசியம் பாருங்கள், இது போன்ற ஒரு அசுத்தமான இன்செஸ்டிவ் பீடோஃபலுக்கு எப்படி பாடம் புகட்டலாம் என ஐடியா கிடைக்கும்.
இரண்டாவது சம்பவம் ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்தில் வரும், லட்சுமி தன் மாமாவான ஒய்.ஜி .பார்த்தசாரதியின் இன்செஸ்டிவ் குறும்புகளை ஒருகட்டத்துக்கு மேல் தாங்க முடியாதவர் , அவரை முழுதாய் நம்பும் அத்தையிடமும் வீட்டாரிடமும் சொல்ல வேண்டி வரும் என பாலீஷாக சொல்வார்,அதன் பின் அந்த காமாந்தக அசடு சொச்ச காலம் வாலைச் சுருட்டி சற்று அடங்கியிருக்கும்.
நான் இக்கால பெண்களுக்கு மீராநாயரையே பரிந்துரைப்பேன்.