All Eyes off me | 18+ | 2021 | இஸ்ரேல்


மூன்று வேறுபட்ட, ஆனால்  தொடர்புடைய கதாபாத்திரங்களின் கதையை மூன்று  அத்தியாயங்களாக பின்னப்பட்ட படைப்பு இது, கண்டிப்பாக வயது வந்தோர் மற்றும் மனமுதிர்ச்சி கொண்டோருக்கான திரைப்படம் இது.

ஒரு மாலை  தடதடக்கும் மங்கலான வெளிச்சத்தில் நிகழும் டிஸ்கோ விருந்தில் படம் துவங்குகிறது  , 
தலைமுடியை பாய்கட் செய்திருக்கும் உயரமான டேனி தான்   கர்ப்பமாக இருப்பதால் இன்று குடிக்க மாட்டேன் என சக தோழிகளிடம் பகிர்கிறாள். எனவே தோழிகள் அவளை கவனமாக இருக்க சொல்கின்றனர், அவள் அந்த தனிக்கவனத்தை விரும்பவில்லை,இதை இரு தினங்களில் அபார்ஷன் செய்துவிடுவேன் என இயல்பாகச் சொல்ல சக தோழிகள் அது சரி மற்றும் எளிதும் கூட என ஆமோதிக்கிறார்கள், பயப்பட வேண்டாம்,மூன்றே மாத்திரையில் முடிந்து விடும் என தன் அபார்ஷன் அனுபவத்தை துவக்கம் முதல் முடிவு வரை  விவரிக்கிறாள் அந்த தோழி,அந்த  நீண்ட உரையாடல் இப்போது டேனிக்கு மிகுந்த கலக்கம் கொள்ள வைக்கிறது.

தன் கர்ப்பத்துக்கு காரணமான மேக்ஸிடம் அபார்ஷனுக்கு முன் இந்த விஷயத்தைக் கூற அவனை டிஸ்கோ அறை முழுக்கத் தேடுகிறாள், 
மேக்ஸ் இதற்குள் புதிய இளம் காதலி அவிஷாக் உடன் புதிய  உறவைத் துவங்கியுள்ளான், மேக்ஸை சுமூகமாக அவன் கத்தரித்துவிட்டதை அறிகிறோம், டேனி மேக்ஸிடம் ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளாதவள் கழிவறையில் கோகெய்ன் குழுவாக நுகர்ந்த பின் தாழே அமர்ந்து கதறுகிறாள்.

மேக்ஸின்  புதிய காதலி அவிஷாக் பேரழகி, காதலன் மேக்ஸிடம் தன்  மஸோகிஸ்டிக் பாலியல் அபிலாஷைகளை  நிறைவேற்றிக்கொள்ள  முயற்சிக்கிறாள், ஆனால் மேக்‌ஸோ அழகிய அவிஷாக்கை அழகு தேவதையாக கருதுகிறான்,மேக்ஸ் தன்னை இருபால் ஈர்ப்பாளன் என்று அவிஷாக்கிடம் பகிர்கிறான், தான் விடுமுறையின் போது பிலிப்பைன்ஸ் செல்கையில் அங்கே ஒரு டிஸ்கோ விருந்தில் சந்தித்த பக்லாவை (மூன்றாம் பாலினத்தவர்) கடற்கரையில் அடுக்கப்பட்டிருந்த உயரமாக மடக்கு நாற்காலிகளின் மீது கிடத்தி புணர்ந்ததை பகிர்கிறான் , அவளுடைய ஆண் உறுப்பை அவள் இவனுக்கு காட்டுவதை தவிர்த்ததையும் சொல்கிறான்.

அவிஷாக் தன்னை கழுத்தை நெரித்தும் முகத்தில் அறைந்தும் குத்தியும் தாக்கி கலவி கொள்ள கேட்கிறாள் அவிஷாக்.
ஆனால் கலவியின் போது அவிஷாக்கை  மிருதுவாகவே கையாள்கிறான் மேக்ஸ்.
அதனால் இவர்களின் இந்த பரிசோதனை இரவு அவிஷாக் மனதில் நினைத்தது போல் நடக்கவில்லை,
இதனால் மேக்ஸிற்கு இன்னொரு நல்வாய்ப்பைத் தருகிறாள் அவிஷாக் , அதற்கு தன் மொபைல் காலண்டரில் schedule செய்தும் கொள்கிறாள் அவிஷாக்.

அவிஷாக் பெற்றோரைப் பிரிந்தவள், அவள் வசதியான ஒரு தனி ஸ்டுடியோவில்  வசிக்கிறாள்,  தன் செலவுகளுக்காக அவள் சுற்றத்தாரின் posh வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை கவனித்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.

மீண்டும் இரண்டாம் முறையாக மேக்ஸிற்கு வாய்ப்பு தந்த இரவு வந்து விடுகிறது, அன்று மேக்ஸ் , அவிஷாக்கின் வீட்டின் கீழே நுழைவுக்கதவில் சங்கேத எண்களை அழுத்த, கதவு திறக்கவில்லை, இவன் சங்கேத எண்களை மறந்து விட்டிருக்கிறான், அவள் இவன் அழைப்பை எடுக்கவில்லை, அவனுக்கு அவசரம் தாங்கவில்லை , ஒரு காளையின் வேகத்தில் அந்த வாயிற்கதவை பலமுறை வேகமாக மோதித் திறந்தும் விடுகிறான் மேக்ஸ்.மேலேயிருந்து அவிஷாக் சத்தம் கேட்டு வந்தவள் மேக்ஸை கதவின் electronic lock device ஐ சேதப்படுத்தியதற்கு நொந்து கொள்கிறாள், இருவரும் சமாதானமாக கோகெய்ன் நுகர்ந்த பின்னர் தங்கள் BDSM ஒப்பந்தப்படி கலவி கொள்கின்றனர், அப்போது அவிஷாக்கின் உதட்டில் முஷ்டியால் குத்தி உதட்டை கிழித்து விடுகிறான் மேக்ஸ், அவிஷாக் சற்று நேரம் மூர்ச்சையாகிவிடுகிறாள், விடியலில் மிகவும் வருந்துகிறான் மேக்ஸ், அவிஷாக் அதன் பின்னர் மேக்ஸின் அழைப்புகளை சுத்தமாக ஏற்காமல் தவிர்ப்பதைப் பார்க்கிறோம். 

அவிஷாக் ஐம்பதுகளில் இருக்கும் ட்ரரின் வீட்டில் உள்ள கருப்பு நாய் ப்ளாங்காவையும் கவனித்துக் கொள்கிறாள், அவர் அவிஷாக்கிற்கு எப்போது நாயை பார்த்துக் கொண்டாலும் நல்ல பணம் தருபவர், அவர் அம்மாவுக்கு கால் பாதத்தின் எலும்பு கூடுதலாக வளர்ந்து நடப்பதற்கு சிரமம் தருவதால், அந்த கூடுதல் எலும்பை அறுவை சிகிச்சை செய்து நீக்க இவர் அம்மாவுடன் சென்று தங்க வேண்டியிருப்பதால் தன் நாயை பார்த்துக் கொள்ள அவிஷாக்கை அழைக்கிறார்.

அவிஷாக் ட்ரர் வீட்டை தன் வீடாகவே கருதுகிறாள், அவரின் பெரிய சமையலறையில் அலமாரியில் அடுக்கப்பட்ட ஒயின் குப்பியில் ஒன்றை உரிமையுடன் எடுத்தவள் கார்க் திருகி திறந்து அன்று இரவு முழுக்க பருகிவிட்டு,குளிருக்கு நாயை கட்டிக் கொண்டு,குளிருக்கு ட்ரரின் படுக்கை அறையில்  தூங்கிவிடுகிறாள்.

அவர் ஏன் தனது படுக்கையறையில் இறந்த நாயின் ஓவியத்தை வைத்திருக்கிறார் , அவர் ஏன் தனிமையில் வசிக்கிறார்? என அவிஷாக் ஆச்சர்யப்படுகிறாள், தன்னை நெடுநாளாக ஈர்த்த  ட்ரரை மேலும்  புரிந்து கொள்ள ஆசைப்படுகிறாள் அவிஷாக்.

காலை காபி தயாரித்துத் தந்த ட்ரரிடம் அவரை தனக்கு மிகவும் பிடிக்கும் எனச் சொல்லி, உதட்டில் முத்தமிட்டு தானே நெருங்குகிறாள், ஆனால் ட்ரர் ஆரவாரமின்றி அழகாக எதையும்  நேசிக்கிற வியக்தி, இந்த அழகிய இளம்பெண்ணை காய்ந்த மாடு கம்பங்கொள்ளையில் பாய்வதைப் போல அடைய விரும்புவதில்லை,

தன்னை ஏன் அவளுக்குப் பிடிக்கும் என கேள்விகள் கேட்கிறார்.தன் பிரம்மச்சர்யத்தை போற்றிக் காப்பது போல நடந்து கொள்கிறார்.

1946 ஆம் ஆண்டில், காந்திஜி தனது 19 வயது மருமகள் மனுவை தனது பாலியல் ஆசை மற்றும் பிரம்மச்சரியத்தை சோதிப்பதற்காக தனது படுக்கையில் தூங்க வைத்து பரீட்சார்த்தங்கள் செய்திருக்கிறார், பின்னர், காந்திஜி தனது மருமகனின் மனைவி அபாவையும் இந்த சோதனைகளில் பரீட்சார்த்தம் செய்திருக்கிறார், அது இங்கு நமக்கு உடன் நினைவுக்கு வருகிறது.

அவிஷாக் அவரின் வழுக்கை மண்டை பிடிக்கும் என்கிறாள் . அவரின் பெரிய தொந்தி பிடிக்கும் என்கிறாள் .அன்று முதல் முறை பார்க்கையில் அவர் அணிந்திருத்த சட்டையை நினைவு கூறுகிறாள், அவரின் கம்பங்கூடுகள் வியர்வையில் நனைந்திருந்தது தன்னை கிறங்கடித்தது என்கிறாள், இவரின் அரிசிப்பற்கள், கூர்நாசி, அவரின் கேஷுவலான அரைகால்சராய் அனைத்தும் பிடிக்கும் என்கிறாள்.

அவர் ஏன் இத்தனை பெரிய சமையலறை இருந்தும் அங்கு சமைப்பதில்லை என்கிறாள், அவர் தனக்கு சமைக்கத் தெரியாது என்கிறார், அவர் ராபியின் தலைமையில் இயங்கும் உறைவிடப் பள்ளியில் கடும் ஒழுங்கில் வளர்ந்தவர் அதனால் தன் இளமைப் பருவத்தை விரும்பாததைப் பகிர்கிறார், தன் படுக்கை அறையில் உள்ள இறந்த நாயின் ஓவியம் சமகாலத்தில் புகழ்பெற்ற ஓவிய நண்பர் பரிசளித்தது என்கிறார், அவள் அதற்கென இறந்த நாயின். சவ ஓவியத்தை போய் படுக்கை அறையில் மாட்டுவார்களா என்கிறாள், அவரும் அதை இருக்கக் கூடாது தான் என ஆமோதிக்கிறார்.

 சோஃபா இடுக்கில் தரையில் மேல் சட்டை இன்றி படுத்துக் கொள்கிறார், காந்தி போல அருகில் இளம் பெண் படுத்திருந்தாலும் மனதை சமநிலைப்படுத்தி அவளை தொடாமல் இருக்கிறார், அவிஷாக் பிரவாகமாக இவரிடம் பேசினால் கூட மூன்று நிமிடத்திற்கு பேச வேண்டாம் என அறிவுறுத்தி டைமர் வைத்தவர் அப்படியே அவிஷாக் அருகே படுத்து விட்டத்தை ஆதூரமாக தன் கண்ணாடி வழியே  பார்த்தபடி அவளுக்குள் ஊடுருவுவதுடன் படம் நிறைகிறது.

அவிஷாக்  திரை நன்கு உடைந்தும் நன்கு வேலை செய்யும் தன் ஐபோனில் தன் கிழிந்த உதட்டை செல்ஃபி எடுத்து ரசிக்கும் காட்சி அழகான ஒன்று.

 "இது நெருக்கத்தைப்  பற்றிய திரைப்படம்" என இயக்குனர் பென் அரோயா விளக்குகிறார்.  
“நெருக்கம் என்பது மக்கள் நிர்வாணமாக இருப்பது, உடலுறவு கொள்வது அல்லது அவர்களின் இருண்ட ரகசியங்களை வெளிப்படுத்துவது அல்ல என உறுதியாக காட்சிகளால் நிறுவுகிறார் இயக்குனர் பென் அரோயா. 

இந்தப் படம்  குடும்பத்துடன் பார்க்க ஏற்றதல்ல.
#உலகசினிமா,#இஸ்ரேல்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)