நண்பர்களே!!!ஆப்பிள் ஐபேட் 3Gஐ முதலில் அமீரகத்தின் கடைகளில் பார்த்தபோது,என்னடா இது? பெரிய சைஸ் ஐபோன் போலவே இருக்கு?!!!,இதை எப்படி சுலபமாக தூக்கிக்கொண்டு போவது?,லேப்டாப்புக்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?!!!,எல்லாம் ஒன்று தான், எதற்கு இதைபோய் இவ்வளவு விலைகொடுத்து வாங்குகிறார்கள்?!!! என வியந்தேன்,
என் பக்கத்து சீட் ஆர்கிடெக்ட் நண்பர் தன் ஐபோனில் அடிக்கடி ஒற்றை விரலில் கோலம் போட்டு கருப்பு வெள்ளை சார்கோல் ஓவியங்கள் வரைவார், அவ்வளவு அழகான ஓவியங்கள், மிகச்சுலபமாக வரைவார், மிகத்துல்லியமான டெக்ஷர்களுடன் கூடிய பலன்கள் கிடைக்கும்.அதை ப்ரிண்டும் எடுப்பார்,ஸ்க்ரீன் சேவரும் போட்டுக்கொள்வார். பார்க்க பென் அண்ட் இங்க் ரெண்டரிங் போலவும் இருக்கும். அவ்வளவு சிறிய சிங்கிள் டச் கொண்ட ஐபோனிலேயே ஒருவர் வீடுகட்டி விளையாடினால்?!!!
அதைவிட 8மடங்கு பெரிய A4 சைஸ் கொண்ட,மல்டி டச் கொண்ட ஐபேடில்?!!! சொல்லவே வேண்டாம், இயற்கையான ஓவியத்திறமை கலைரசனை, நிறைய கற்பனைவளம், வண்ணத்தெரிவுத்திறன் மட்டும் உங்களுக்கு இருந்தால் இதுவே உங்கள் களம், பத்து விரல்கள் கொண்டு வண்ணங்களை தொட்டு, ச்சும்மா அதிரவைக்கலாம். பாருங்கள் ஒரு கேன்வாஸில், குழைக்கப்பட்ட வண்ணங்கள் கொண்டு செய்யும் வேலையை,!!!அதே ஓவியர் இதில் சரளமாக செய்வதை.பழகிவிட்டால் சொன்ன சொல் கேட்கும் இதை கேன்வாஸை மாட்டுவது போலவே மாட்டிக்கொள்கின்றனர்.
இங்கே கீழே கொடுக்கப்பட்ட ஓவியங்களே அதற்கு சாட்சி!!!, இப்போது ஒன்று புரிகிறது எப்படி மலிவான வின்டோஸ் வகை கோலோச்சும் சந்தையில் மாக் தாக்குபிடிக்கிறது என்று?!!!.இந்த ஐபேடில் ப்ரஷஸ்2.1 என்னும் மென்பொருளை நிறுவிவிட்டால் மாயாஜாலம் செய்யலாமாம்,ஐபேடை கொண்டே நியூயார்க்கர் பத்திரிக்கைக்கு முன் அட்டையும் வடிமமைத்துள்ளனர்.
இங்கே கீழே கொடுக்கப்பட்ட ஓவியங்களே அதற்கு சாட்சி!!!, இப்போது ஒன்று புரிகிறது எப்படி மலிவான வின்டோஸ் வகை கோலோச்சும் சந்தையில் மாக் தாக்குபிடிக்கிறது என்று?!!!.இந்த ஐபேடில் ப்ரஷஸ்2.1 என்னும் மென்பொருளை நிறுவிவிட்டால் மாயாஜாலம் செய்யலாமாம்,ஐபேடை கொண்டே நியூயார்க்கர் பத்திரிக்கைக்கு முன் அட்டையும் வடிமமைத்துள்ளனர்.
எப்போதுமே விண்டோஸ் என்பது மெயின்ஸ்ட்ரீம் சினிமா போலவும்[பெரும்பானோர் தேர்வு], மாசிண்டோஷ் என்பது பேரலல் சினிமா போலவும் [கலை ரசிகர்களின் தேர்வு] இருந்து வந்திருக்கிறது, நிறைய படைப்பாளி நண்பர்கள் மாசிண்டோஷ் என்னும் மாக் பிஸியில் தான் படைப்பு வேலைகளை செய்கின்றனர். நம் அமீரக பதிவர் கோபிநாத்தும் மாக் பிஸி உபயோகிக்கும் படைப்பாளியே , அவர் வடிவமைப்பது வங்கிகளுக்கான க்ரெடிட்கார்டு டிசைன்கள்,போட்டோஷாப்பில் செய்யமுடியாத பல வித வித்தைகளை இதில் சுலபமாக செய்யமுடிவதும் ஒரு காரணம்,உங்களுக்கு தெரிந்த ப்ரொஃபெஷனல் போட்டோகிராபர்களை கேட்டுபாருங்கள், கதைகதையாக சொல்லுவார்கள். பழகிவிட்டால் மாக் ஒரு குழந்தை விளையாட்டு.இதில் திரையில் காணும் நிறமும் ப்ரிண்ட் எடுக்கும் போது வரும் நிறமும் ஒன்றாய் இருக்கும்.இதில் கதை கவிதை,கட்டுரை,பதிவுகள் எழுதலாம், படங்கள் பார்க்கலாம்,இசைகேட்கலாம்,கார் ஓட்டுகையில் வழிகாட்டி மேப் பார்க்கலாம்,இதில் ஓவியங்கள் தவிர ப்ரெசெண்டேஷன்கள், ப்ராஜக்ட் சார்டுகள்,தயாரிக்க முடியும்.
=========0000==========
இது ப்ரூக்ளின் ஓவியர் டேவிட் ஜோன் கசன்னின் டெமோ காணொளி:-
=========0000==========
இது ப்ரூக்ளின் ஓவியர் டேவிட் ஜோன் கசன்னின் டெமோ காணொளி:-
=========0000==========
எனக்கும் இந்த உலகின் ஐபேட் ஓவியர்களின் படைப்பை பார்த்தவுடன் விரைவில் ஒரு ஐபேட் வாங்க ஆசைவந்துவிட்டது. இதில் ஆயில் பெயிண்ட்டிங். வாட்டர்கலர், எல்லாவிதமான டெக்ஷர் பெயிண்டிங், என எளிதாய் வரையமுடியும், இதிலேயே நாமிருக்கும் துறைக்கு ப்ரெசெண்டேஷனும் செய்யமுடிகிறது ஓவியர்கள், டிஜிட்டல் பேனர் துறையினர்.விளம்பர வடிவமைப்பாளர்கள், ப்ராடக்ட் டிசைனர்கள். கட்டிடக்கலை வல்லுனர்கள், நகைவடிவமைப்பாளர்கள் , ஆடை வடிவமைப்பாளர்கள், ஸ்டோரிபோர்டு வரைவாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், என அனைவரிடமும் இருக்கவேண்டிய ஒரு வஸ்து,
தயவுசெய்து இதையும் சாதாரண நோட்புக், நெட்புக்கையும் ஒப்பிடாதீர்கள், இதில் உள்ள துல்லியமும், நகாசுவேலையும் அதில் அவ்வளவு எளிதில் கிடைக்காது.இதைப்பற்றி மேலும் படிக்க ஆப்பிள் தளத்தின் சுட்டி. தல ஹாலிவுட் பாலா இதைப்பற்றி ஒரு ஆய்வு செய்து தொழில்நுட்ப பதிவு ஒன்று எழுதினால் கோடிபுண்ணியம் உண்டாகும்.இது சத்தியமாக ஆப்பிள் ஐபேட் விளம்பரமல்ல!!!இங்கே கொடுத்துள்ள ஓவியங்களின் புகழும் பெருமையும் வரைந்த ஓவியர்களையே சேரும்.
=========0000==========தயவுசெய்து இதையும் சாதாரண நோட்புக், நெட்புக்கையும் ஒப்பிடாதீர்கள், இதில் உள்ள துல்லியமும், நகாசுவேலையும் அதில் அவ்வளவு எளிதில் கிடைக்காது.இதைப்பற்றி மேலும் படிக்க ஆப்பிள் தளத்தின் சுட்டி. தல ஹாலிவுட் பாலா இதைப்பற்றி ஒரு ஆய்வு செய்து தொழில்நுட்ப பதிவு ஒன்று எழுதினால் கோடிபுண்ணியம் உண்டாகும்.இது சத்தியமாக ஆப்பிள் ஐபேட் விளம்பரமல்ல!!!இங்கே கொடுத்துள்ள ஓவியங்களின் புகழும் பெருமையும் வரைந்த ஓவியர்களையே சேரும்.