திப்பு சுல்தானின் போர்ப்படை தளவாடங்கள் உலகப் புகழ் பெற்றவை, உலகத் தரமான துல்லியத்தையும் கொண்டிருந்தவை,
திப்பு சுல்தான் 'மைசூர் புலி' என்று அழைக்கப்பட்டவர்,வீரம் பொருந்திய விலங்கினமான புலியை தன் அரசவை உள் அலங்காரங்களில் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் பொதித்து வைத்திருந்தார் திப்பு சுல்தான்.
இந்த பீரங்கிகள் ஸ்ரீங்கப்பட்டத்தில் உள்ள அரசவை ஆயுதப்பட்டறையில் தலைமை கருமார் அகமது பாலி செய்தது , வெங்கல மணியைப் போன்ற அருமையான தரத்தில் செய்யப்பட்டது,இதற்கு தங்க முலாம் பூசி கம்பீரமாக பராமரித்தும் வந்திருக்கிறார்கள்.
இந்த பீரங்கியில் குறிப்பிடப்பட்ட தேதி Mawludi ஆண்டு 1219 என்பதாகும், இதற்கீடான கிருஸ்து ஆண்டு 1790/91 எனக் கொள்ள வேண்டும்,
எத்தனை அழகும் தொலைநோக்கும் கொண்டு உணர்ந்து செய்த product design என்று பாருங்கள்.
இதன் சுமை மற்றும் எடை கூட பீரங்கியில் பொறித்து வார்க்கப்பட்டிருப்பது திப்பு சுல்தான் அவர்களின் போர் திட்டமிடலை நமக்கு விவரிக்கிறது,
இதில் உருதுவில் குறித்துள்ள பட்டண் என்பது பட்டணமான ஸ்ரீரங்கப்பட்டணத்தை குறிக்கிறது, உற்பத்தி செய்த இடத்தையும் உரைக்கிறது,
ஹைதர் என்பது திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியை குறிக்கிறது.
பீரங்கியின் Trunnion முனைகள் மற்றும் Gascable பொத்தான் அனைத்தும் சீறும் புலியின் தலைகளாக நேர்த்தியாக வார்க்கப்பட்டுள்ளன, பின்புறம் பீரங்கி குழலை உயர்த்தும் திருகுக்கான மோதிரத்தை பாருங்கள், கடந்த 224 ஆண்டுகளாக எந்த தட்பவெப்பத்தையும் தாங்கி துரு பிடிக்காமல் நிற்கிறது.
மைசூர் சுல்தான் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான், 1753 ஆம் ஆண்டு பிறந்தார், அவர் 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகப் போரில் குதிரைப்படைக்கு தலைமை தாங்கினார்.
டிசம்பர் 1782 ஆம் ஆண்டு அவர் தனது தந்தைக்குப் பிறகு, ஆங்கிலேயர்களை போர்களில் தோற்கடித்தும் வந்தார் (1 வது மைசூர் போர், 1780-84) 1784 ஆம் ஆண்டில் சமாதான உடன்படிக்கை செய்தார். 1790 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அவர் மீது போர் தொடுத்தனர், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தான் போரில் தோல்வியடைந்தார்,
மார்ச் 1799 ஆம் ஆண்டு பிரதேசங்கள் கைமாறின,போருக்கான உடப்படிக்கைக்காக தன் இரு மகன்களை பணயக்கைதிகளாக ஒப்பும் கொடுத்தார், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மீண்டும் போர் துவங்க அவர் அந்த உக்கிரமான போரில் 1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி கொல்லப்பட்டார்.
திப்பு சுல்தானின் ஆயுதங்கள், அவரது அரண்மனை மரச்சாமான்கள் அனைத்திலும் புலி முகம் சின்னமாக இடம் பெற்று இருந்தது, சிறிய துப்பாக்கியில் கூட புலி முகம் இருந்தது, அவரின் கைத்தடியில் கூட புலி உடம்பு இருந்தது, ஆங்கிலேய போர்படைத் தளபதியை மைசூர் புலி ஒன்று தாக்கி கழுத்தை கடித்து கொன்றதை தத்ரூபமாக scale down செய்து சாவி தரும் பொம்மையாக இரண்டை வடிவமைத்து வடித்து அதை ஒலிக்க வைத்து கேட்டும் வந்திருக்கிறார் திப்பு சுல்தான்,இரண்டு பொம்மைகள் இருந்தன , தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.
காணொளி கமெண்டில்.
ஸ்ரீரங்கப்பட்டணம் வீழ்ச்சியின் போது மொத்தம் 927 பீரங்கிகள் கைப்பற்றப்பட்டன. 7 ஆண்டுகள் நடந்த நீண்ட போர், வெற்றியும் தோல்வியும் எதிராளிகள் இருவருக்கும் மாறி மாறி கிடைத்த போர், இந்த 927 பீரங்கிகளில் 400 வெண்கல பீரங்கிகளாகும், மீதமிருந்தவை எஃகு பீரங்கிகளாகும், இந்த பீரங்கிகளில் பாதிக்கும் மேற்பட்டவை திப்புசுல்தானின் சொந்த ஆயுத பட்டறைகளில் உருவானவை என்றால் அவரின் தொழிற்நுட்பம் எத்தனை தொலைநோக்காக இருந்திருக்கும் பாருங்கள்,
பெங்களூரில் இருத்தும் ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்தும் கைப்பற்றப்பட்ட இந்த பீரங்கிகளை பிரிட்டீஷார் ஆண்ட பல நாடுகளில் அமைக்கப்பட அரசு அருங்காட்சியகங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு கண்காட்சிக்கு வைத்தனர்,
உலக அரங்கில் கலைப்பொருள் திருடர்கள் இந்த பீரங்கிகளை கடத்தித் சென்று லண்டன் மற்றும் பாரீஸ் பழம்பொருள் சேகரிப்பாளர்கள் மற்றும் ஆராதகர்களுக்கு ஏல சம்மேளனத்தில் வைத்து இன்றும் கூட ஏலம் விடுகின்றனர், இந்த படத்தில் காணும் பீரங்கி கடைசியாக 6 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பீரங்கியில் ஒரு தனித்துவமான ஹைதர் அணிந்த தாயத்தின் வரிகள் (amulet ) பொறிக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள், இந்த தனித்தன்மை பீரங்கி அரசவை ஆயுதப் பட்டறையில் உருவானதைக் குறிக்கிறது.
எஞ்சிய பீரங்கிகள் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ராயல் ஃபவுண்டரியில், போவிஸ் கோட்டையில் உள்ள கிளைவ் சேகரிப்பு கண்காட்சியகத்தில் , நமது எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படுகிறது. இவை அறுபத்தாறு பவுண்டுகள் மற்றும் இரண்டு grains என மொழிபெயர்க்கப்பட்ட எடையுடன் 2¾-3 பவுண்டர் அளவுகள் உள்ள பீரங்கி குண்டுகளை கோருபவை, இந்த அளவுகளும் கூட துல்லியமாக பீரங்கி மீது பொறிக்கப்பட்டுள்ளது.
1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஓவியர் Robert Kerr Porter வரைந்த The Storming of Srirangapatnam' ஓவியங்களில் இந்த வீரன் திப்புவின் மரணம் எப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது எனப் பாருங்கள், அதில் திப்பு சுல்தானின் மரணம் ஒரு சுத்த வீரனின் மரணமாக சித்தரிக்கப்பட்டதை காணலாம், மிகவும் அரிய உயரிய பண்பு அது,எதிரியையும் உயர்த்தும் பண்பு, கர்ணன் திரைப்படத்தில் தேர் சக்கரத்தில் சாய்ந்து உயிரை விடுவாரே நடிகர் திலகம், அது போல ,தரையில் திட்டில் சாய்ந்து அமர்ந்து, கால்களை நீட்டி, தலையை வானம் பார்க்க உயர்த்தி, நெஞ்சத்தை எத்தனை முடியுமோ அத்தனை நிமிர்த்தி உயிரை விட்டிருப்பதை அந்த ஓவியர் அத்தனை அற்புதமாக வரைந்து ஒரு வீரனுக்கு அஞ்சலி செலுத்தியதைக் காணலாம்.