நாம் வாழும் சமுதாயம் தான் எத்தகைய கீழ்தரமான மனிதர்களை கொண்டுள்ளது? என்று தினமும் வியந்தும் அருவருத்தும் கோபப்பட்டும் வந்திருக்கிறேன், மனித மனத்தின் குரூர வெளிப்பாடான பெடோஃபைல்கள் பற்றி முன்பே என் சிலபதிவுகளில் எழுதியுமிருக்கிறேன்,இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது இன்செஸ்டுகள் [incest] பற்றி, அதாவது பெற்ற மகள், மகனையே புணரும் தந்தை, பெற்ற மகள், அல்லது மகனையே புணரும் தாய் இன்செஸ்டுகள் என அழைக்கப்படுவர். இது மனித குலத்தின் மிகமோசமான அருவருக்கத்தக்க செய்கைகளுக்கு மோசமான ஓர் உதாரணமாக காட்டப்படுகிறது,
ஆனாலும் அதீத குடிப்பழக்கம், நாள்பட்ட மனநோய், ஆழ்மன வக்கிரம் இவற்றின் உச்சக்கட்ட வெளிப்பாடாக இந்நோய் சமூகத்தில் அனுதினமும் குரூரமாக வெளிப்படுகிறது.!!! அதெல்லாம் இல்லை, இந்தியாவில் எங்கே இதுபோல் நடக்கிறது?!!! என்று மறுப்பவர்கள் இன்றைய தினத்தந்தி செய்தியை எடுத்து பாருங்கள், அதில் நிச்சயம் பெற்றமகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய குடிகார தந்தை என்னும் வழமையான செய்தி வந்திருக்கும்.
=====0000=====
இந்த டச்சு மொழிப் படம் ஃபெஸ்டென் என்னும் பெயரில்1998ஆம் ஆண்டு டென்மார்கில் வெளியாகி,பின்னர் த செலிப்ரேஷன் என்னும் பெயர் மாற்றத்துடன் உலகெங்கும் வெளியானது, பரீட்சார்த்தமான முயற்சிகளுடன் குறைந்த செலவில் தரமான சினிமா செய்ய விழைவோர் சிலர்,இயக்குனர் லார்ஸ் வோன் ட்ரையர் [Lars von Trier ] தலைமையில் ஒன்றுகூடி ஏற்படுத்திய டாக்மி-95 கோட்பாடுகளை பின்பற்றி எடுக்கப்பட்ட முதல்படம் என்னும் பெருமையையும் இது பெற்றுள்ளது.
படத்தின் சிறப்பம்சங்கள், ட்ரைப்பாடில் கடைசி வரை அமராத டிஜிட்டல் கேமரா, அனாவசியமான ஒளியமைப்பே இல்லாத உள்புற, வெளிப்புற காட்சிகள், காட்சிக்கு காட்சி நடிகர்களின் வசன உச்சரிப்பு முகம் மற்றும் உடற்பாவனைகளுக்கே முக்கியத்துவம் தந்து இயக்கியவிதம், படத்துக்கு சம்பந்தமில்லாமல் பிற படங்களில் நாம் காணக்கூடியது போன்ற பிண்ணனி இசையோ, கொசுவர்த்தி சுற்றும், நினைத்து பார்க்கும் காட்சிகளோ, நினைத்து பார்க்கும் காட்சியில் வரும் குத்து, டூயட்,சோகப் பாடல்களோ, சென்னையில் நடக்கும் படத்துக்கு நியூசிலாந்து சென்று ஆடிவரும் பாடல் காட்சியோ!!!,

சென்னையில் கைது செய்யப்படும் கதாநாயகன் போலீஸ் வண்டியில் இருந்து தப்பி, திடீரென காட்டுக்குள் ஓடி குற்றால அருவியில் இருந்து குதிக்கும் காட்சியோ இல்லாத, டாக்மி-95 கோட்பாடுகளின் படி எடுத்த படம். இது பற்றி மேலும் படிக்க இங்கே செல்லவும், இதை தமிழில் மொழிபெயர்த்து இங்கே எழுதினால் ஜெயமோகன் போன்ற அசிடிட்டி பிடித்த ஆட்கள் விக்கியில் இருந்து உருவி உலகசினிமா எழுதுகிறோம் என்பார்கள். கேட்டால் அங்கதம் என்று மழுப்புவார்கள். தமிழில் எழுதுவதை பெருமையாக கருதி எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பூ எழுத்தாளர்களை பாராட்டாவிட்டாலும் குத்திக்குதறாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது ஜெயமோகன். ஹாலிவுட் பாலாவும் ஏற்கனவே இரண்டு டாக்மி-95 படங்கள் பற்றி எழுதியுள்ளார்,அவரின் இந்த இரண்டு பதிவுகள் உங்களுக்கு உபயோகமாயிருக்கும்.
ஆண்ட்டி க்ரைஸ்ட்
ஆல் அபவ்ட் அன்னா
=====0000=====
படத்தின் கதை:-
பாரம்பரியமாக வீட்டுடன் கூடிய சிறிய நட்சத்திர ஹோட்டல் நடத்திவரும் 60வயது ஹெல்ஜ், ஒரு பசும்தோல் போர்த்திய புலி, இவரின் 60 ஆம் பிறந்த நாள் விழாவை மனைவி எல்ஸ் விமரிசையாக எடுத்து நடத்த திட்டமிடுகிறாள், செல்ல மகள் ஹெலன் தன் கறுப்பிண காதலனுடன் வருகிறாள்.

பிழைப்புக்காக பிரிந்து பாரீஸ் போய் உணவகம் வைத்திருக்கும் மூத்த மகன் க்ரிஸ்டியன், இளைய மகன் மைக்கேல்,மைக்கேலின் மனைவி மக்கள், சுற்றம், உற்றார் உறவினர் எல்லோரும் ஹோட்டலில் குழுமுகின்றனர்,அந்த ஹோட்டலின் எல்லா அறைகளுமே வந்த விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டு நிரம்பி வழிகின்றன.
பிறந்த நாள் விழா அன்று உணவு மேசையில் இவரது மூத்த மகன் க்ரிஸ்டியன் டோஸ்ட் என்னும் உணவு நேர முன்னுரை வழங்க, |Here's to the man who killed my sister... to a murderer.| என தொடங்கி அவன் பேசியது கேட்டு எல்லோரும் திடுக்குறுகின்றனர். அவன் அப்பா மட்டும் அங்கே கூசிக்குறுகிப்போகிறார். அது ஏன்?
ஹெல்ஜுக்கு அழகிய மனைவி எல்ஸ் வாழ்க்கை துணையாக அமைந்தும், அழகிய நான்கு பிள்ளைகள் பிறந்தும், இன்செஸ்ட் என்னும் மிருக குணம் தலைதூக்க, இவர் மூத்த மகனையும், அவனின் இரட்டைபிறவியான தங்கையையும் அவர்களின் சிறு பிராயத்திலிருந்தே தன் காம இச்சை தீர்க்க பயன்படுத்தி வந்திருக்கிறார்.

பிள்ளைகள் முன் நிர்வாணமாக தோன்ற ஆரம்பித்தவர், ஒரு கட்டத்தில் மகள் குளிக்கையில் , உடைமாற்றுகையில் அவளை அடித்து துன்புறுத்தி வன்புணர்ச்சி செய்தும் வந்திருக்கிறார். மூத்த மகனையும் வாய்புணர்ச்சியும், குதப்புணர்ச்சியும் செய்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த கொடிய நரகத்திலிருந்து தப்பிய மூத்த மகன் க்ரிஸ்டியன் வெளியூருக்கு தப்பி ஓடி, அப்பாவின் முகத்திலேயே விழிக்கப்பிடிக்காமல் இருந்தவன், சமீபத்தில் ஹோட்டல் அறையிலேயே தூக்கு மாட்டி இறந்து போன சகோதரி லிண்டாவின் இறுதி ஊர்வலத்துக்கும் வந்திருக்கிறான் .
அப்பாவின் மேல் தீராத வன்மத்துடன் இருக்கிறான். அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவன் சகோதரி லிண்டாவின் அறையை சோதிக்க, அவளின் தற்கொலை குறிப்பு கடிதம் கிடைக்கிறது,அதில் சிறுவயதில் தான் அனுபவித்த அப்பாவின் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் இப்போது தாம் காணும் கனவுகளிலும் தொடர்வதால் தாம் இந்த முடிவுக்கு வந்ததாக சொல்லியிருக்க, இன்னோரு சகோதரி ஹெலனையும் அழைத்து கடிதத்தை காட்டி அப்பாவின் சுயரூபத்தை புரியவைக்கிறான்.
இப்போது உணவு மேசையில் அப்பாவின் மீது குற்றங்களை அடுக்கியவன், செய்த தவறுக்கு உறவினர் நண்பர்கள் முன் மன்னிப்பு கேட்குமாறு சொல்ல,உறவினர்கள் இதை கேட்டு முனுமுனுக்கின்றனர். இதை ஒரு மனம் பிழறியவனின் ஹாஸ்யமோ?!!, இவனுக்கு கலாச்சார சீர்கேடு ஏதும் நிகழ்ந்திருக்குமோ ? என்றும் குழம்புகின்றனர். க்ரிஸ்டியனின் அம்மா எல்ஸ் , அதை வன்மையாக மறுக்கிறாள், கண்டிக்கிறாள். அப்பாவுக்கு சார்பு நிலையாய் இருக்கிறாள், ஆனால் க்ரிஸ்டியன் விடுவதாயில்லை, அம்மாவையும் அப்பாவின் கைப்பாவை என்கிறான். அப்பாவின் தவறுகளை கண்டும் காணாமல் இருந்த ஒரு ஜென்மம் என்று சபையினர் முன் அவளை சாடுகிறான்.
உணவுமேசையில் இதையெல்லாம் கேட்டு கொதித்த மைக்கேல்,அண்ணனை ஹோட்டல் பணியாளர்களுடன் சேர்ந்து குண்டுகட்டாக தூக்கி சென்று,ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருக்கும் தோப்பில்,ஒரு மரத்துடன் கட்டிவைத்து விட்டு வருகிறான்.ஆனால் சிறிது நேரத்தில் க்ரிஸ்டியன் உள்ளே வந்தும் விடுகிறான், மீண்டும் விட்ட இடத்திலிருந்து அப்பாவை நோண்டி நுங்கெடுத்து மன்னிப்பு கேட்டே தீரவேண்டும் என்கிறான்.
ஆனால் அப்பாவோ கல்லுளிமங்கன் கணக்காய் இடித்தபுளி போல அமர்ந்திருக்கிறார், அவருக்கு இன்று நாளே சரியில்லை என புரிகிறது, விருந்தும் டோஸ்ட் இல்லாமலே ஆரம்பிக்க சொல்கிறார். நடப்பவற்றை எல்லாம் ஆரவமாக ஒலிபெருக்கியில் ஹோட்டல் சமையலறை பணியாளர்களும் மேலேயிருந்து கேட்கின்றனர்.
முதலாளியின் சுயரூபம் எல்லோரும் அறிந்தமையால் முதலாளி மன்னிப்பு கேட்கப்போவதை கேட்டுவிட்டு வேலையைப்பார்க்கலாம் என காதை தீட்டுகின்றனர். க்ரிஸ்டியனின் மேல் தீராக்காதல் கொண்ட சமையல் காரப்பெண் பியாவும் அவனுக்கு துணை நிற்கிறாள்.
நடக்கும் சச்சரவால் உறவினர்கள் இரவு உணவு முடிந்து வீடுகளுக்கு திரும்பி விடக்கூடாது, ஹெல்ஜ் மன்னிப்பு கேட்பதை, கூனிக்குறுகுவதை பார்த்துவிட்டே போக வேண்டும் என்று எண்ணிய பணியாளர்கள், எல்லோரின் அறைக்குள்ளும் க்ரிஸ்டியன் தலைமையில் சென்று கார் சாவிகளை கைப்பற்றி அதை குளிர்சாதன பெட்டிக்குள்ளும் ஒளித்தும் வைக்கின்றனர்.
இவ்வளவு நடந்தும் மைக்கேல் மட்டும் அப்பாவின் மீது மிகவும் மரியாதையுடன் இருக்கிறான். அண்ணன் க்ரிஸ்டியனின் பிரச்சனையை திசை திருப்பி நீர்த்துப்போகச்செய்யும் விதமாக சகோதரி ஹெலனின் கறுப்பின காதலன் க்பாடகாயை மைக்கேல் கேலி செய்கிறான், அங்கே குழுமியிருந்த உறவினர்கள் அனைவருடனும் சேர்ந்து i saw a real black sambo என்னும் நிறவெறிப் பாடலை அதீத நிறவெறி தெரிக்க பீங்கான் தட்டுகள்,கண்ணாடி கோப்பைகளில் தாளம் எழுப்பி பாடவும், ஆரம்பிக்கிறான்.சகோதரி ஹெலன் கொதித்து தன் காதலனுடன் வெளியேறுகிறாள்.
இனி என்ன ஆகும்?
1.அப்பா ஹெல்ஜ் சபையினரிடமும் பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்டாரா?
2.மகன் மைக்கேல் அப்பாவை குற்றவாளி என உணரந்தானா?
3,மகன் மைக்கேல் நிறவெறி விட்டானா?சகோதரியின் காதலனிடம் மன்னிப்பு கேட்டானா?
4.க்ரிஸ்டியன் அப்பாவை மன்னித்தானா?காதலி பியாவை கைபிடித்தானா?
போன்றவற்றை பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் டிவிடி வாங்கி பாருங்கள், உலகசினிமா காதலர்கள் வாழ்வில் நிச்சயம் காணவேண்டிய படம். முழுநிர்வாணமான உடலுறவு காட்சிகள், மற்றும் பாலியல் வார்த்தை பிரயோகங்கள் உள்ளதால் நிச்சயம் சிறுவருக்கான படம் அல்ல.படத்தில் குறைகளும் உண்டு இருந்தாலும்,மிகக்குறைந்த செலவில் பரீட்சார்த்தமான முயற்சிக்கு பிள்ளையார் சுழியிட்டிருப்பதால் பெரிதாகத்தோன்றவில்லை.
தாமஸ் விண்டர் பர்கின் இயக்கம் மிகவும் நேர்த்தி, டாக்மி95 கோட்பாடுகள் நம்மை பெரிதும் கவருகின்றன, இது வரை இக்கோட்பாடுகளை பின்பற்றி சுமார் 38 படங்கள் வந்திருக்கின்றனவாம், இயக்குனர் பெயர் படத்தின் துவக்கத்திலோ அல்லது முடிவிலோ போடக்கூடாது என்பது முக்கியவிதியாகும். என்ன? a film by :-போடாமல் தமிழ் படமா? நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்னால்.:))

படத்தின் முன்னோட்ட சலனப்படம் யூட்யூபிலிருந்து:-
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by | Thomas Vinterberg |
---|---|
Produced by | Birgitte Hald Morten Kaufmann |
Written by | Thomas Vinterberg Mogens Rukov |
Starring | Ulrich Thomsen Henning Moritzen Thomas Bo Larsen Paprika Steen Birthe Neumann Trine Dyrholm |
Music by | Lars Bo Jensen |
Editing by | Valdís Óskarsdóttir |
Release date(s) | May 1998 |
Running time | 105 minutes |
Country | Denmark |
=====0000=====