அருமை நண்பர்களே!!!
பேப்பர் கப் என ஒன்று சர்வ சாதாரணமாக தேநீர் விடுதிகளிலும்,பழரச நிலையங்களிலும்,நம் இல்ல விழாக்களிலும்,ரயில்களிலும், அலுவலகங்களிலும் புழங்குகிறது, நம் அனுதின வாழ்வில் அதற்கு ஈடான மாற்றே இல்லை எனவும் ஆகிவிட்டது, இப்போது ஒரு படி மேலே போய் பேப்பர் இலைகளும் புழங்க ஆரம்பித்து விட்டன, நல்ல பேப்பர் கப்புகளுடன் ஈசி மனி செய்ய வேண்டி சில கயவர்களால் மட்டமான தரம் கொண்ட சீன தயாரிப்பு பேப்பர் கப்புகளும் தாராளமாய் கிடைக்கின்றன, விலை குறைவு என கருதி அதையே பெரும்பாலான வியாபாரிகள் வாங்கி உபயோகிப்பர் என்பது விதி.
சுகாதாரம் பேணுவதற்கு நாம் விரும்பி கேட்டு உபயோகிக்கும் பேப்பர் கப்பில் ஈரம் உரியாமல் இருப்பதற்காக கப்பின் உள்ளேயும் வெளியேயும் மெழுகு[Cetyl palmitate] கோட்டிங் தடவப்படுவதை காணலாம்,அதனால் நம் உடம்புக்கு தீங்கு நிச்சயம் ஏற்படும் என்பது கண்கூடு.இனி அலுவலகங்களில் தேநீர் குடிப்போர் தங்களுக்கென ஒரு பீங்கான் கோப்பையை வைத்துக்கொள்ளுவது நல்லது, வெளியிடங்களில் பேப்பர் கப்பை தவிர்ப்பதும் நிச்சயம் பலனளிக்கும்.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாமே!!!,கீழே உள்ள இது உங்கள் இடம் கட்டுரையை படியுங்கள்.இதை வெளியிட்ட அன்பருக்கு மிக்க நன்றி!!! நான் இன்றே என் பீங்கான் கோப்பையை வாங்கப்போகிறேன்.இந்த சுட்டியில் பேப்பர் கப் செய்யும் முறை விளக்கப்பட்டுள்ளது.
பேப்பர் கப் ஒழிக!
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
— எச்.விஜயகுமார்,சென்னை.