அருமை நண்பர்களே!!!
நலம் தானே?!!! 2013 ஆம் வருடத்தின் கடைசி தினத்தில் இருக்கிறோம், இன்னும் சில மணி நேரங்களில் 2014 ஆம் வருடம் பிறக்க இருக்கிறது, இத்தருணத்தில் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.புத்தாண்டு எல்லா செல்வங்களையும் அள்ளித் தரட்டும்,லோகம் ஷேமம் அடையட்டும்.தரித்திரம் இன்றோடு ஒழியட்டும் என்று இறைவனை வேண்டி புத்தாண்டை துவக்குவோம்.
====000====
முன்பு
நான் KM playerல் தான் படங்களை கணிணியில் பார்த்துக்கொண்டிருந்தேன், அதன்
தற்போதைய எடிஷன் சீரழிந்து விட்டது, ஓயாமல் விளம்பரங்கள்,தேவையில்லாத
ஸ்கின்கள் என பாதியிடத்தை அடைத்துக்கொண்டது,பழைய வெர்ஷனுக்கு
திரும்பினாலும் ,அதில் நிறைய BUGS கொடுத்து அதை உபயோகிக்க விடாமல்
செய்தனர்,VLC மீடியா ப்ளேயர் உபயோகித்தால் அதில் toggle keys உபயோகித்து
படத்தை முன்னேயோ பின்னேயோ தள்ள முடிவதில்லை,மவுஸைக் கொண்டு ஸ்க்ரோல் அப்
டவுன் செய்தால் வால்யூம் கூட்டவோ குறைக்கவோ முடியவில்லை,வேறு என்ன ப்ளேயர்?
இதை சரி கட்டும் எனப் பார்த்ததில் இதே போன்ற சிறப்பம்சத்தை கொண்ட GOM
ப்ளேயர் இருந்தது,ஆனால் அதில் சப்டைட்டில்கள் தோன்றுகையில் அப்படியே
நின்றுவிடும்,அதனால் அடுத்து வரும் சப்டைட்டில்கள் ஒன்றுடன் ஒன்று ஓவர்
லாப் ஆகி பெரிய தொல்லையைத் தரும்.
இப்போது மிக அருமையாக அதே கே எம் ப்ளேயரின் சிறப்பம்சங்களைக் கொண்ட BS player ஐ உபயோகிக்கிறேன்,மிக அருமையாக இருக்கிறது,இதில் ஒரு சாதகமாக,படம் துவக்கிய உடனே இது அதற்கான சப்டைட்டிலை தானே தேடி,ரிசல்டுகளை காட்டி,மிகவும் பொருந்தி வருவதை நம்மிடம் காட்டி ,அதை செக் செய்ய சொல்கிறது,நாம் செக் செய்த உடனே அது தானே அதை நீநேம் செய்து,படத்தை சப் டைட்டிலுடன் ப்ளே செய்கிறது,மிகவும் ஒர்த்தான இலவச ப்ளேயர்,படத்தை ஃபுல் ஸ்ட்ரெட்ச் செய்யலாம்,ஸ்பேஸ் பார் தட்டி பாஸ் / ப்ளே செய்யலாம்,

மவுசை ஸ்க்ரால் செய்து வால்யூம்
கூட்டலாம்/குறைக்கலாம்,மவுஸ் ஸ்க்ராலை உபயோகித்து படத்தின் அளவை கூட்டலாம்
குறைக்கலாம், டாகிள் கீ உபயோகித்து படத்தை ரிவைண்ட் ஃபார்வர்ட்
செய்யலாம்,சப் டைட்டிலை படத்தின் மீது போடாமல்,அது படத்தின் கீழே உள்ள
பேக்ரவுண்டில் தான் தெரிய வைக்கிறது, உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத
ப்ளேயர் இது. இதை எப்போதுமே ஃபைல் ஹிப்போ .காமில் சென்றே
தரவிறக்கவும்,ஒன்ஷாட் டவுன் லோடுக்காக இந்த தளம்.
http://www.filehippo.com/download_bsplayer/
http://www.filehippo.com/download_bsplayer/