பாம்பே டாக்கி[Bombay Talkie][1970][இந்தியா]

படத்தின் போஸ்டர்-ஜெனிஃபர் கெண்டெல்-சஷி கபூர்  தம்பதிகள்

பாம்பே டாக்கி என்னும் படம் 1970 ஆம் ஆண்டு வெளியானது,இதன் தயாரிப்பாளர்கள் மெர்சன்ட் ஐவரி நிறுவனத்தார். இவர்கள் தேசம், இனம், மொழி, கடந்து நல்ல சினிமா ,ஆவணப்படங்கள்செய்ய விழைபவர்கள், இது ஆங்கிலம் இந்தி பேசும் மல்டிலிங்குய்ஸ்ட் திரைப்படம், இது அமெரிக்க இயக்குனர் ஜேம்ஸ் ஐவரி இயக்கிய படம், இது இந்தி்ய சினிமாவின் பெருமைக்குரிய ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ராவின் வண்ணப்பட ஒளிப்பதிவை கொண்டிருக்கும் படம், 1970 களின்  பாலிவுட் திரைப்படங்கள் கொண்டிருந்த கதை அமைப்பு,க்ளிஷே,பாடல்கள்,ரொமான்ஸ்,க்ளாமர் இத்யாதி மற்றும் ஹாலிவுட் கொண்டிருந்த  உயர்ந்த ,அதி ரசனையான போஷான,லக்சுரியான தொழில்நுட்பங்களும் தன்னுள் ஒருங்கே கொண்டிருக்கும் படம். படத்தின் அற்புதமான இசை சங்கர் ஜெய்கிஷன்.

படத்தின் கதை மிகவும் எளிமையானது, பாலிவுட்டின் உச்ச மசாலா நடிகன் விக்ரம் [சஷிகபூர்], அழகிய மனைவி [அப்ர்ணா சென்] கணவனின் அன்புக்கும், கூடலுக்கு ஏங்குபவர், ஆனால் கணவனோ மாதம் 30 நாட்களுமே மசாலா திரைப்படங்களுக்கு கால்ஷீட் தந்து விட்டு,ஓய்வு ஒழிச்சலே இன்றி நடித்து வருகிறான், இது தவிர அட்வான்ஸ் வாங்கிப் போட்டுவிட்டு, கான்ட்ராக்ட் சைன் செய்து விட்டு, நிறைய கால்ஷீட் குளறுபடிகளும் செய்து வருகிறான், இதனால் விக்ரமின் மனைவியை வீட்டுக்கே வந்து மிரட்டும் ஒரு சினிமா ப்ரொட்யூசர் [உத்பல் தத்]அவளின் அழகில் மயங்கி அவளை அடையத் துடிக்கிறார், அதற்கு திட்டம் தீட்டுகிறார்.

பாலிவுட் சினிமாவைப் பற்றி உள்ளது உள்ளபடி ஆராய வரும் இங்கிலாந்து பெண் எழுத்தாளர் லூசியா [ஜெனிஃபர் கெண்டெல்] மீது சஷிகபூருக்கு, கண்டதும் காதல் வருகிறது, லூசியாவுக்கும் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதெல்லாம் மீறி காதல் வருகிறது,நேரம் ,தருணம் கிடைக்கும் போது கூடிக் குலவுகின்றனர் , சக இயக்குனர் ஹரியும் [ஸியா மொஹீதின்] லூசியா மீது ஒருதலைக்காதல் கொள்கிறார், லூசியா அவரிடம் உண்மையான நட்பை மட்டும் பேணினாலும்,ஹரி அதை காதலாக கனிய வைக்க தீவிரமாக முய்ற்சிக்கிறார் , தகுதியில்லாதவரிடம் செலுத்தும் காதல் பற்றி படம் விரிவாக பேசுகிறது, பசித்தவனுக்கு உணவு இல்லை, புசித்து வயிறு நிரம்பியவனுக்கே எல்லாம் கிடைக்கிறது, பல சமயங்களில் உணவும் காதலும் ஒன்று தான் , ஏங்குபவனுக்கு அது கிடைக்காது, இறுதியாக இவர்களின் விபரீத  உறவுகள் என்னவாகிறது? என்பதை படம் மிக அழகாக விளக்குகிறது.அப்போதைய பாலிவுட் சினிமாக்கள்  கொண்டிருந்த ஒட்டுமொத்த க்ளிஷேக்களின் ஆவண ஆக்கம் தான் இப்படத்தின் கதை.

படத்தில் வரும் டைப் ரைட்டர் மேலே கவர்ச்சிக் கன்னி ஹெலன் மற்றும் குழுவினர் ஆடும் பாடலுக்காக கலை இயக்குனர் பெரிய டைப் ரைட்டரையே செட்டாக போட்டிருந்தார். அப்பாடலை இங்கே பார்க்கலாம்.



 காலம் சென்ற ஜெனிஃபர் கெண்டெல்-இவர் சஷிகபூரின் மனைவியுமாவார். அவரைவிட 6வயது மூத்தவர்], இதே போலவே சத்யஜித் ரேவின் மனைவி பிஜோயா தாஸும் ரேவை விட 3 வயது மூத்தவரே, இதன் மூலம் சான்றோர்கள் வயதைப் பார்ப்பதில்லை, உண்மையான காதலை,அறிவை, புத்திசாலித்தனத்தைத் தான் மனைவியாக அமையப்போகும் பெண்ணிடம் எதிபார்க்கின்றனர் என்பது விளங்குகிறது

இதன் பெயர் போடும் காட்சியைப் பாருங்கள் மும்பையின் நிஜமான நகர்ப்புறங்களை சிறிதும் பாசாங்கே இன்றி படம் பிடித்து,அதனுள்ளே நிழல் போன்ற சினிமா படத்தின் ஆயில் பெயிண்ட் கட்டவுட்டுகளை தொழிலாளர்கள் நகரில் நிறுவுவதற்கு சுமந்து செல்வதை அப்படியே படமாக்கியுள்ளார் , இந்த தீம் சத்யஜித் ரேவின் அன்க்ரெடிட் கம்போசிஷன் ஆக்கமாகும்,இதை டார்ஜிலிங் லிமிட்டட் என்னும் படத்திலும் உபயோகித்திருப்பார்கள், அவசியம் இந்த டைட்டில் ஸ்க்ரோலை பாருங்கள். பழைய படங்களில் எத்தனையோ புதுமைகள் புகுத்தப்பட்டு அவை குடத்தினுள் வைக்கப்பட்ட விளக்கு போல இருக்கின்றன, அவற்றை ஒரு சினிமா ஆர்வலர்  தேடிப் படித்து வியந்து அதை அழகாக ட்ரியூட் செய்ய வேண்டும், அதை விடுத்து மலினமாக அதை காப்பி அடிக்கக் கூடாது,
பாம்பே டாக்கி படத்தில் சத்யஜித் ரேவின் டைட்டில் தீம் கம்போசிஷன்.  ஓவியங்கள் திலக்.



திரைப்பட மாணவர்கள் ,ஒரு ஸடைலிஷான மேக்கிங்கிற்காக பார்க்க வேண்டிய முக்கியமான படம் இது, 2013ஆம் ஆண்டு இதே பெயரில் ஒரு எஸ் மட்டும் சேர்த்து பாம்பே டாக்கீஸ் என்று நான்கு இந்திய உச்ச இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய கலைப்படமும் வெளியானது. நல்ல முயற்சி தான் என்றாலும், அது 1970ஆம் ஆண்டு வெளியான பாம்பே டாக்கி என்னும் படத்தை மறக்கடிக்கும் படி, கூகுளில் தேடினால் 2013 ஆம் ஆண்டு வெளியான படத்தைப் பற்றி தான் செய்திகளை அதிகம் தருகிறது. இதனால் தான் க்ளாசிக்குகளின் பெயர்களை புதிய படங்களில் பயன்படுத்தக் கூடாது என்று நான் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)