நார்த் 24 காதம் இன்று தான் பார்க்க முடிந்தது,ஃபஹாத்தின் போர்ட் ஃபோலியோவில் மேலும் ஒரு தரமான படம்,இப்படியே போனால் ஃபஹாதின் படங்களைத் தான் வெரைட்டியானவை , தரமானவை என முத்திரை குத்த வேண்டியிருக்கும், அப்படி நல்ல படங்களாக அமைகிறது, படத்தில் நெடுமுடி வேணு என்னும் மகா நடிகரை வைத்துக் கொண்டே ஃபஹாத் சத்தமில்லாமல் நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார்,
ஹாலிவுட்டின் நடிப்பு ப்ரம்மா ஜாக் நிக்கல்சனின் As Good as It Gets (1997) படத்தின் அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஸார்டர் பேஷண்ட் கதாபாத்திரத்தை நினைவூட்டும் படியான கதாபத்திரம்,ஆனால் தன் பாணியில் நேட்டிவிட்டியுடன் நடித்துப் பின்னிப் பிணைந்திருக்கிறார் ஃபஹாத்,இவர் இந்தப் படத்துக்காக எத்தனை ஹோம் ஒர்க் செய்திருக்க வேண்டும்? என மலைக்க வைக்கிறது,
மனிதர்.படத்தின் கடைசி ரீலில் சுவாதி கேட்கும் எப்போவுமே இப்படித் தானா? சுத்த ராட்சதன் போல? என்னும் கேள்விக்கு மட்டும் தான் முதன் முதலாக படத்தில் சிரிக்கிறார்,[இவர் தன் சிகிச்சைக்காக செய்யும் லாஃபிங் தெரபி கணக்கில் சேராது] இப்படி ஒரு நசை போன்ற கதாபாத்திரத்தை லட்டு போல சாப்பிட்டுவிட்டார்.
இம்மானுயேல் படத்திலும் ஃபஹாத் ஏற்றது ஒரு சிடுமூஞ்சி மேலதிகாரி கதாபாத்திரம் தான்,அதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம் காட்டியுள்ளார் ஃபஹாத்? இவருக்கு இப்படி ரோல்கள் அமைகிறதா?அல்லது இவர் இப்படி அமைத்துக்கொள்கிறாரா?என சந்தேகமாக இருக்கிறது.
ரகுவரன் ஒரு டிவிப் பேட்டியில் கதாநாயகனாக நடித்தால் 4 பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதும்,4 சண்டைக்கு டிஷ்யூம் டிஷ்யூம் செய்வதைத் தவிர வித்தியாசம் எதுவும் காட்ட முடிவதில்லை என்பதால் ஹீரோ வேடம் வேண்டாம் என மறுத்தவர் தானே விரும்பி கதாபாத்திரங்கள் கேட்டு வாங்கி செய்ததாக சொன்னார்.அவருக்கு அமையாத வெரைட்டியான நாயகன் கதாபாத்திரங்கள் ஃப்ஹாத்துக்கு அடுத்தடுத்து அமைவது மிகுந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
சுவாதி ரெட்டிக்கு என்ன ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் நானி கதாபாத்திரம்? ஃப்ஹாத்துக்கு சமமான ஒரு பாத்திரம், பல சமயங்களில் ஃப்ஹாத்தையே தூக்கி சாப்பிடுகிறார் அம்மணி,ஃப்ஹாத்தின் ஹரிக்ரிஷ்ணன் என்னும் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரான குணாதிசயமுள்ள கதாபாத்திரம் இவருக்கு,காம்ரேட் கோபாலனுக்கு ஒரு பேத்தியைப் போல ஒரு நலம்விரும்பிபோல வாஞ்சையுடன் உதவ களமிறங்கும் இடம் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது.கேரளாவில் ஹர்த்தால் என்னும் கடையடைப்பு எத்தனையோ படங்களில் காட்டப்பட்டிருந்தாலும், இந்தப்படம் சாமான்யனின் வாழ்க்கை ஹர்த்தாலினால் இன்னலுறும் கணங்களை பேசியது போல எந்தப் படமும் பேசியதில்லை.
மூத்த நடிகரான நெடுமுடிவேணு காம்ரேட் கோபாலனாக,கலங்கடிகிறார், இளம் நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்,காம்ரேட் சகாவான நெடுமுடிவேணு அன்பேசிவத்தின் கமல்ஹாசன் கதாபாத்திரத்தின் கேரக்டர் ஸ்கெட்சையும், ஃப்ஹாத் ஃபாஸில் மாதவனின் கேரக்டர் ஸ்கெட்சையும் நினைவூட்டினர்,இதுவும் ஒரு ரோட் மூவியே.
நம் தலைவாசல் விஜய் மலையாளத்திலேயே தொடர்ந்து இயங்கி வருவது நமக்கு இழப்பே,அவருக்கு அது நிறைவைத் தருகிறது போலும்,இதில் ஃப்ஹாத்தின் அப்பாவாக வருகிறார்,ஃப்ஹாத்தின் அம்மாவாக கீதா.
படத்தில் ப்ரேம்ஜி அமரன் அவருடைய சரோஜா ஜீப்புடன் லம்பாடி வேடத்தில் தமிழில் பேசி நடித்திருக்கிறார்.தமிழரான இவர் மனைவி கட்ச் வளைகுடாவைச் சேர்ந்தவர்,அவர் கட்ச் மொழி மட்டுமே பேசுவார்,அவரிடம் பல மொழி வித்தகரான காம்ரேட் கட்ச் மொழியில் பேசுவது சின்ன ஆச்சர்யம்,காம்ரேட்டுக்கு 83 வயது நடக்கிறது எனச் சொல்வது தான் நம்ப முடிவதில்லை,ஒரு 10 கொல்லம் குறைத்திருக்கலாம்,
படம் எல்லோரும் அவசியம் பாருங்கள்,ஒரு அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் பேஷண்டை ஒரு ரயில் பயணமும் அதன் போக்கும் எப்படி நோயற்றவனாக மாற்றுகிறது,புதிதாய் எந்த மனிதருடனும் பழக வெறுக்கும் ஒருவனுக்குள் எப்படி காதல் வந்து நுழைகிறது?எப்படி அவன் புதுப் பிறவி எடுக்கிறான் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கின்றனர்,படத்தின் இயக்குனர் அனில்ராதாகிருஷண மேனோனுக்கு இது முதல் படமாம்,மிக அருமையாக களமிறங்கியிருக்கும் அவருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். படத்தின் அருமையான இசை கோவிந்த் மேனோன்,ரெக்ஸ் விஜயன்.படத்தின் அருமையான ஒளிப்பதிவு ஜெயேஷ்நாயர்.

வடக்கு நோக்கி 384 கிமீ [1காதம்=16கிமீ]செல்ல பஸ், ஆட்டோ, கால்நடை, வல்லம், பைக், கப்பல்,ஆட்டோ என பயணிக்கும் அருமையான ரோட் மூவி இது,டோண்ட் மிஸ் இட்
http://subscene.com/subti.../north-24-kaatham/english/838464 சப்டைட்டிலுக்கு
https://torrentz.eu/34977fd5fba70b1c42a66d7c157808318e6aa206
டாரண்டுக்கு