இயக்குனர் கே.பாலசந்தரின் பட்டினப்பிரவேசம் திரைப்படம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்தது,அண்ணன் தம்பிகள் கிராமத்திலிருந்து பிழைப்பிற்காக பட்டினம் வந்து கஷ்டப்படும் படங்களுக்கு இதுவே ட்ரெண்ட் செட்டர் படமாகவும் அமைந்தது.
இது முழுக்க ஸ்டூடியோவுக்கு வெளியே படமாக்கப்பட்டது,ஆனால் அதே 1977 ஆம் வருடம் வெளியான 16 வயதினிலே படம் தான்,முழுக்க ஸ்டூடியொவுக்கு வெளியே படமாக்கப்பட்ட படம் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளது. ஏனெனில் இதை சினிமா விமர்சகர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதனால் தான்.
படத்தில் வரும் கிராமப்புரக் காட்சிகளுக்கு தர்மபுரிக்கு அருகே உள்ள கரிமங்களம் என்னும் ஊரில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் , படத்தின் நகரசூழல் காட்சிகளுக்கு முழுக்க முழுக்க சென்னை நந்தனம்[11 மாடி விருந்தினர் மாளிகை],அண்ணாசாலை,மண்ணடி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது,
இது முழுக்க ஸ்டூடியோவுக்கு வெளியே படமாக்கப்பட்டது,ஆனால் அதே 1977 ஆம் வருடம் வெளியான 16 வயதினிலே படம் தான்,முழுக்க ஸ்டூடியொவுக்கு வெளியே படமாக்கப்பட்ட படம் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளது. ஏனெனில் இதை சினிமா விமர்சகர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதனால் தான்.
படத்தில் வரும் கிராமப்புரக் காட்சிகளுக்கு தர்மபுரிக்கு அருகே உள்ள கரிமங்களம் என்னும் ஊரில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் , படத்தின் நகரசூழல் காட்சிகளுக்கு முழுக்க முழுக்க சென்னை நந்தனம்[11 மாடி விருந்தினர் மாளிகை],அண்ணாசாலை,மண்ணடி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது,
புற நகர் காட்சிகள் அப்போது வளராத பழவந்தாங்கல்[நங்கநல்லூர்] பல்லாவரம் பகுதிகளில் படமாக்கப்பட்டது, இது தமிழின் முதல் ஆர்வோ ஃபிலிமை பயன்படுத்தி எடுத்த வண்ணப்படம்,இதன் ஒளிப்பதிவு பி.எஸ்.லோகநாத் அவர்கள்,உதவி ரகுநாதரெட்டி அவர்கள். இதில் உதவி இயக்குனர்களாக அமீர்ஜானும், கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்புவும் பணியாற்றியிருப்பர்,
இதன் கதை வசனம் விசு அவர்கள்.எனவே இதில் உதவி கதை வசனம் : அனந்து என்ற பெயர் டைட்டில் ஸ்க்ரோலில் இல்லை. அன்றைய 70களின் காலக்கண்ணாடி இப்படம்,ஆனால் இப்படத்தை சினிமா விமர்சகர்கள் இயக்குனர் பாலசந்தரின் படைப்புகளை விமர்சிக்கையில் கருத்தில் கொள்ளாமல் போனது வியப்பூட்டுகிறது.
இதன் கதை வசனம் விசு அவர்கள்.எனவே இதில் உதவி கதை வசனம் : அனந்து என்ற பெயர் டைட்டில் ஸ்க்ரோலில் இல்லை. அன்றைய 70களின் காலக்கண்ணாடி இப்படம்,ஆனால் இப்படத்தை சினிமா விமர்சகர்கள் இயக்குனர் பாலசந்தரின் படைப்புகளை விமர்சிக்கையில் கருத்தில் கொள்ளாமல் போனது வியப்பூட்டுகிறது.
தெற்கே ஒரு குக்கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபெயரும் குடும்பம் அநேகமாக வந்து சேர்வது புறநகர் பகுதிகளுக்குத்தான். அதை மிக அழகாக நம்பகத்தன்மையுடன் சித்தரித்திருப்பார் இயக்குனர். பார்வையாளர்களுக்கு இன்று பார்க்கையில் பல நோஸ்டால்ஜிக்கள் கிளம்புவது தவிர்க்கமுடியாதது.
இதில் மூத்த அண்ணனாக டெல்லிகணேஷ்[அறிமுகம்],அடுத்த அண்ணன் ஜெய்கணேஷ், அடுத்தவர் சிவச்சந்திரன். அடுத்தவர் காத்தாடி ராமமூர்த்தி, அதற்கடுத்த தங்கை ஜெயஸ்ரீ[அறிமுகம்],அம்மா மீரா[அறிமுகம்] இவர்கள் கரிமங்களம் கிராமத்திலிருந்து சொத்துக்களை விற்றுவிட்டு ,தங்களின் படித்த தம்பியான சிவச்சந்திரனின் மீது வைத்த நம்பிக்கையில் நகரத்துக்கு குடிபெயர்கிறார்கள் , அவர்கள் படும் அல்லல் துயரங்கள் நகைச்சுவையாகவும் ,சிந்திக்கத்தூண்டும் வண்ணமும், உண்மைத்தன்மையுடன் சொல்லப்பட்டிருக்கும்.
குறிப்பாக டெல்லிகணேஷின் கம்பீரமான குரலும் உடல்மொழியும், முகபாவங்களும் பாலசந்தரை கவர்ந்ததால் இதில் நிரூபனமான நடிகர்களான ஜெய்கணேஷ், காத்தாடி ராமமூர்த்திக்கு அவரை மூத்த அண்ணனாக தோன்ற வைத்து வெற்றி கண்டார். அதில் டெல்லி கணேஷ் அவரின் நம்பிக்கையை காப்பாற்றினார், இயக்குனர் பாலசந்தரின் முத்தான அறிமுகமாக மாறினார். பின்நாட்களில் பாலசந்தரின் பல அருமையான தந்தை கதாபாத்திரங்களுக்கு அவர் உயிர் கொடுத்தார்.
இதில் சில்வர் பெயிண்ட் அடிக்கப்பட்ட EMU தாம்பரம் -பீச் எலக்ட்ரிக் ட்ரெயின்கள் ஒரு கதாபாத்திரமாகவே வரும்.அதன் சப்தம் படத்தில் மிகச் சுவையாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.தமிழில் இந்த அளவுக்கு நகரிய சூழல் இயல்பாக உண்மைத்தன்மையுடன் சொன்ன படம் எனக்குத் தெரிந்து வேறில்லை.
இக்குடும்பம் வளரும் புறநகரான பழவந்தாங்கல் ரயிலடி அருகே குடியேறி ,அங்கே வீட்டுடன் சேர்ந்த மளிகைக் கடை துவங்கும் காட்சிகள் மிக நன்றாக இருக்கும்.அங்கே வியாபாரம் சுத்தமாக இல்லாததால் தம்பி ஜெய்கணேஷ் மண்ணடியில் கடை போடுகிறேன் என்று அங்கே சென்று 2500 ரூபாய் பகடிக்காசு தந்து ஏமாறும் காட்சிகள் எல்லாம் மிகுந்த தீஸீஸ் செய்து எடுக்கப்பட்டிருக்கும்.
இவருக்கு கடையை கைமாற்றி விடுவதாகச் சொன்ன தரகன் பணத்தை வாங்கிக்கொண்டு கம்பி நீட்ட,மறு நாள் இவர் கடை திறக்கலாம் என கந்தன் மளிகைக் கடை என்னும் பெயரெல்லாம் மனதுக்குள் வைத்துப்பார்த்தவர் ஆசையாகப் போவார்,அதை அங்கே கார்பரேஷன் காரர்கள் இடித்துக்கொண்டிருப்பார்கள்.
இதே போன்ற ஏமாற்றுதலை சமீபத்தில் ராஜ்குமார் நடித்த சிட்டிலைட்ஸ் இந்திப் படத்தில் மும்பையில் வைத்து கிராமவாசியான அவரை ஒரு தரகன் 10000 வாங்கிக்கொண்டு ஏமாற்றுவதைப் பார்த்தேன்.காலங்கள் எத்தனை மாறினாலும் ஏமாற்றுத் தரகர்களுக்கும் பஞ்சமில்லை,ஏமாறுபவர்களுக்கும் பஞ்சமில்லை என்று தோன்றியது.சிட்டிலைட்ஸ் படம் பற்றி படிக்க http://geethappriyan.blogspot.ae/2014/08/citylights-2014.html
சென்னை தேனாம்பேட்டையில் எல்.ஆர்.ஸ்வாமி பில்டிங் மிகப் பிரபலம்,அன்றைய வானொலியில் அதை நிறைய விளம்பரம் செய்வர்,அங்கே அவர்களின் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் கிராமவாசியான டெல்லி கணேஷ் சென்று இவர்களின் குடும்பம் தங்க விசாலமான ஒரு வீடு கேட்பார்.
அங்கே பணிபுரியும் ஸ்வர்ணா [அறிமுகம்] சென்னை நகருக்குள் 30 ரூபாய் வாடகையில் ஒரு திண்ணை கூட கிடைக்காது என்று தங்கள் வீட்டின் அருகே உள்ள ரயிலடிக்கு சமீபமாக உள்ள போர்ஷனை காட்டி வாடகைக்கு கொண்டு வந்து விடுவார்,தம்பிகளில் படித்த நாகரீகமான சிவச்சந்திரனை விரும்புவார்.[சிவச்சந்திரன் மூன்று முடிச்சு படத்தில் அறிமுகம்]இதில் ஒரு ஃபவுண்ட்ரியில் வேலைக்குச் சேர்வார்,அதன் முதலாளியாக கே.நட்ராஜ் தோன்றியிருப்பார்.
நான்கு அண்ணன்களின் தங்கையாக ஜெயஸ்ரீ அறிமுகம்,அதில் மிகவும் கள்ளம் கபடமற்ற கிராமத்துப் பெண்,பட்டினம் வந்து வேலைக்குப் போகும் ஆசை வர,அண்ணன்களின் கண்டிப்புக்கு பயந்து விடாப்பிடியாகச் சாதித்து வேலைக்குச் செல்வார்,
பல்லாவரத்தில் டிடிகே பார்மா,ஆர்,கே.கார்மெண்ட்ஸ், பாண்ட்ஸ் ,இங்லிஷ் எலக்ட்ரிக் கம்பெனி போன்ற நிறுவனங்கள் அப்போது 70களில் வேலைக்கு ஆட்களை குறிப்பாக அதிகம் படிக்காத பெண்களை பணியில் அமர்த்தினர்,
அது போல ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் இவர் தையல் வேலைக்குச் சேர்ந்து மாதம் 140 ரூபாய் பணம் சம்பாதிக்கத் துவங்கியதும் ,ஊரில் தனக்கு மணம் பேசி பரிசமிட்ட அய்த்தானை துச்சமாக எண்ணி தூக்கி எறிவார்,இதில் நடிகர் சரத் பாபு [அறிமுகம்] அந்நிறுவனத்தின் மேனேஜர்,ஏழைப்பெண்ணான இவருக்கு பரிசுகள் வாங்கித்தந்து படுக்கையில் அனுபவித்து ஏமாற்றும் வில்லன் கதாபாத்திரம்.
இப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் தீவிர மதுவிலக்கு அமலில் இருந்திருக்கிறது,கட்டிடம் கட்டுகையில் மஸ்டர் ரோலில் 25 பேரை ஈடுபடுத்தி 50 பேர் வேலை செய்ததாக கணக்கு காட்டப்பட்டு போலி கைரேகைகள் பதிக்கப்பட்டு நிறைய ஊழல் நடந்துள்ளது,வேலை தேடிப்போய் எதுவும் கிடைக்காமல் டெல்லிகணேஷ் இப்படி ரேகை வைத்து பணம் சம்பாதிப்பார், பாலசந்தரின் மன்மதலீலை படத்தை தொடர்ந்து இப்படத்திலும் மனைவி கையாலாகாத டிபி நோயாளி கணவனால் வேலி தாண்டும் காட்சி வருகிறது, சாருவின் சொல்லில் சொன்னால் ஜெய்கணேஷ் தான் தமிழ் சினிமாவின் முதல் ஜிகிலோ, சமீபத்தில் ஹிந்தியில் BA PASS என்னும் படம் இப்படி ஜிகிலோவின் வாழ்வை இயல்பாகப் பேசும்.அப்படம் பற்றி படிக்க http://geethappriyan.blogspot.ae/2013/11/ba-pass-201318.html
அப்போது டாக்ஸி ஃபேர் மினிமம் 1.60ஆக இருந்துள்ளது,பாண்ட்ஸ் 400கிராம் பவுடர் டப்பாவின் விலை 10 ரூபாய் இருந்துள்ளது.அப்போது எலக்ட்ரிக் ரயிலில் யாரேனும் அடிபட்டால் ரயிலில் பயணிகளுக்கு அலுவலகம் செல்ல 2 மணிநேரம் வரை தாமதமாகியுள்ளதும் அறிந்தேன்.சென்னை அரசு மருத்துவமனையில்
உயிரற்ற சடலத்தை ஏற்றிச்செல்ல குதிரை வண்டி கிடைப்பது குதிரைக்கொம்பாம்,டாக்ஸியில் ஏற்றினால் கைகால் மடிக்க வேண்டியிருக்கும் என்னும் மனக்குறையினால் குதிரை வண்டிக்கு மவுசாம்.இவையெல்லாம் எலக்ட்ரிக் ரயிலில் அடிபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சிவச்சந்திரனைப் பார்க்க வரும் அண்ணன்கள் அறிய வரும் தகவல்கள்.
படத்தில் நடிகர் லூஸ் மோகன் கோவில் வாசலில் ப்ரொஃபெஷனல் பிச்சைக்காரராக ஒரு காட்சியில் வருகிறார்.பாய்ஸ் படத்தின் செந்தில் கதாபாத்திரத்துக்கெல்லாம் முன்னோடி இக்கதாபாத்திரம்,படத்தில் இவர் பெயர் மோகன் என்றே வருகிறது,இவரது தந்தை நடிகர் லூஸ் ஆறுமுகத்தின் நினைவாக இவர் பெயரின் முன்னாலும் லூஸ் என்னும் அடைமொழியை சேர்த்துக்கொண்டாராம்.
படத்தின் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்,இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள்.இப்படத்தின் வான்நிலா நிலா அல்ல பாடல்37 வருடங்களாகியும் இன்னும் புதுமை குறையாத பாடலாக மிளிர்கிறது.
படத்தின் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்,இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் வி அவர்கள்.இப்படத்தின் வான்நிலா நிலா அல்ல பாடல்37 வருடங்களாகியும் இன்னும் புதுமை குறையாத பாடலாக மிளிர்கிறது.
படத்தில் சிவச்சந்திரனின் காதலி ஸ்வர்ணா வயலின் நன்றாக வாசிப்பவர்,அதை ரசிக்கும் சிவச்சந்திரன்,அருகே ஓயாமல் பெருஞ்சத்தத்துடன் ஓடும் எலக்ட்ரிக் ட்ரெய்ன்,எனவே இவர்கள் தனிமையில் சென்று வாசிக்க ,அப்பாடல் உருவாகும்[அப்பாடலை விஜிபி கோல்டன் பீச்சில் படமாக்கியிருப்பர்] ,எஸ்.பி.பி அவர்களுக்கு எம் எஸ் வி அவர்கள் தந்த காலத்தால் அழியாத வரம் அப்பாடல்,
இப்பாடல் வானொலியில் எத்தனை முறை ஒலிபரப்பப்பட்டது என்ற கணக்கேதும் இருந்தால் , கின்னஸுக்கு கூட அனுப்பியிருக்கலாம். சிவச்சந்திரனுக்கு ஒரு ராசி அவர் நடித்த திரைப்படங்களில் அவருக்கு மிக அருமையான ரேர்ஜெம் பாடல்களாக அமைந்துவிடும்,அப்படி ஆடிவெள்ளி தேடிஉன்னை நானடைந்த நேரம்[மூன்று முடிச்சு],உறவுகள் தொடர்கதை [அவள் அப்படித்தான்] ,என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்[ரோசாப்பூ ரவிக்கைக்காரி] ,மனதில் என்ன நினைவுகளோ[பூந்தளிர்], என சொல்லிக்கொண்டே போகலாம்.வான்நிலா பாடலை இங்கே கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=M5rjiJuMKh8
வான்நிலா பாடலுக்கு படத்தில் பெண் பாடும் பேத்தோஸ் வடிவமும் உண்டு அதை எல்.ஆர்.ஈஸ்வரியும்,அவர் சகோதரி எல்.ஆர்.அஞ்சலியும் பாடியிருப்பார்கள்.
இதில் இன்னொரு ரேர்ஜெம்மான தர்மத்தின் கண்ணைக்கட்டி என்னும் எம் எஸ் வி பாடும் பாடலும் உண்டு அதை இங்கே கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=KHtqJNmbVQg
பட்டினப்பிரவேசம் திரைப்படம் இங்கே பார்க்கக் கிடைக்கிறது
https://www.youtube.com/watch?v=skVSwdi4uIc