இயக்குனர் பாலசந்தரின் நூல்வேலி[1979] படத்தில், பள்ளி மாணவி சரிதாவுக்கு
நிழல் ஆட்டத்தில்[shadow play] மிகுந்த ஆர்வம் உண்டு,படத்தின் டைட்டில்
ஸ்க்ரோலில் ,அவரது பள்ளி விழாவில் நிழல் ஆட்ட நிகழ்ச்சி செய்வார்.
அங்கே இந்த விதவிதமான மிகுந்த நகைச்சுவையான உருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக
வரும், சரிதாவின் கைகளுக்கு டூப் போட்ட நிழல் வித்தை கலைஞர்களான எம்.கே.ரகு
பெங்களூர்,மற்றும் பர்கோலக்ஸ் ராதாகிருஷ்ணன் மும்பை,இருவருக்கும் க்ரெடிட்
கொடுத்திருப்பார் இயக்குனர் பாலசந்தர்.சுமார் 7 நிமிடங்கள் வரும்
இக்காட்சியை இங்கே பாருங்கள்.
http://www.dailymotion.com/video/xrgtib_noolveli_shortfilms
இதே போன்றே 1977ஆம் ஆண்டு வெளியான அவர்கள் படத்தில் கமல்ஹாசனை ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாக அவரது ஜூனியர் பொம்மையுடன் தோன்ற வைத்திருப்பார்,இருமனம் கொண்ட திருமண வாழ்வில் பாடலில் கமல் ஹாசன் தன் முழு வித்தையையும் ஜூனியர் பொம்மை வழியே இறக்கியிருப்பார்.இதற்கான பயிற்சியாளர் உதவி கிடைக்காததால் பொம்மையையும் புத்தகத்தையும் மட்டும் தருவித்த கமல்ஹாசன் ஒரு மாதம் நீண்ட பயிற்சிக்குப் பின்னர் அதை சாதித்தாராம்.
1972ஆம் ஆண்டில் டெல்லி தூர்தர்ஷனில் Ramdas Padhye என்பவர் பப்பட்டியர் ,வென்ட்ரிலோகிஸ்ட் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்,சில இந்திப்படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்,அதை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு பாலசந்தர் தன் அவர்கள் படத்தில் கமல்ஹாசனை வென்ட்ரிலோகிஸ்டாக தோன்ற வைத்தார்.
http://en.wikipedia.org/wiki/Ventriloquism
http://en.wikipedia.org/wiki/Ramdas_Padhye
நூல்வேலி படத்தில் எம்.எஸ்.வி இசையில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே என்ற கவிஞர் கண்ணதாசனனின் தத்துவப் பாடல் ஒரு மாஸ்டர்பீஸ். அப்பாடலை இங்கே பாருங்கள்,நம்மை நம்பும் ஒருவருக்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்களை சுய விமர்சனம் செய்து கொள்ள வைக்கும் கவிஞரின் பாடல் வரிகள்.
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே
ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)
சோதனைக்களம் அல்லவா?
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)
(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)
உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)
(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
https://www.youtube.com/watch?v=JMTJEFBkRnY
வாணிஜெயராம், எஸ்.பி.பி பாடிய வீணை சிரிப்பு ஆசை அழைப்பு பாடலும் அருமையான ஒரு டூயட் பாடல்.அப்பாடலை இங்கே பாருங்கள்
https://www.youtube.com/watch?v=yPA2hBFLGic

வாணிஜெயராம், எஸ்.பி.பி பாடிய நானா பாடுவது நானா,நானும் இளவயது மானா என்னும் பாடலும் மிக அருமையான ஒரு மாண்டேஜ் பாடல்.
அப்பாடலை இங்கே பாருங்கள்
https://www.youtube.com/watch?v=aszzDKEJ8xw
எஸ்.பி.பி. அவர்கள் பாடிய தேரோட்டம் ஆனந்த செண்பகப் பூவாட்டம் என்ற டூயட் பாடல் ரேர்ஜெம் வகையறா.அதில் எதிரொலி மிக நுட்பமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்,கவிஞரின் காதல் வரிகளை அதில் உற்று கவனியுங்கள்.
https://www.youtube.com/watch?v=fcgA0kn8PNU
இப்படம் குப்பெடு மனசு என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியானது. படத்தின் ஒளிப்பதிவு ரகுநாதரெட்டி.இது வண்ணப் படமும் கூட,இப்படத்தை கலாகேந்திரா பேனரில் தயாரித்திருப்பார் இயக்குனர் பாலசந்தர்.
நூல்வேலி 20 வருடங்கள் தொலைநோக்காக சிந்தித்து வந்த படம். இப்போது
பார்த்தாலும், இதன் வசனங்களும், காட்சியமைப்புகளும் வியக்க
வைக்கும். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் கட்டமைப்பும் ஒரு தேர்ந்த
சிறுகதையைப் படித்தது போல இருக்கும்.அப்பாடலை இங்கே பாருங்கள்
https://www.youtube.com/watch?v=aszzDKEJ8xw
எஸ்.பி.பி. அவர்கள் பாடிய தேரோட்டம் ஆனந்த செண்பகப் பூவாட்டம் என்ற டூயட் பாடல் ரேர்ஜெம் வகையறா.அதில் எதிரொலி மிக நுட்பமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்,கவிஞரின் காதல் வரிகளை அதில் உற்று கவனியுங்கள்.
https://www.youtube.com/watch?v=fcgA0kn8PNU
இப்படம் குப்பெடு மனசு என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியானது. படத்தின் ஒளிப்பதிவு ரகுநாதரெட்டி.இது வண்ணப் படமும் கூட,இப்படத்தை கலாகேந்திரா பேனரில் தயாரித்திருப்பார் இயக்குனர் பாலசந்தர்.
இதில் சுஜாதா எழுத்தாளர்,சினிமா சென்சாரில் தணிக்கை அதிகாரியும் கூட. மிக முக்கியமான கதாபாத்திரம். இவரின் கணவர் சரத்பாபு. ஒரு மகளும் உண்டு.
படத்தினூடே சென்சாரில் நிலவும் எழுதப்படாத விதிமுறைகளை நகைச்சுவையாக ஒரு பிடி பிடித்திருப்பார் இயக்குனர்.இன்று இது போல சென்சார் விதிமுறைகளை விமர்சித்து படம் எடுத்தால் கூட அனுமதிப்பரா?சந்தேகம் தான்.ஆனால் 35 வருடங்களுக்கு முன்பே சாதித்தார் இயக்குனர்.
இவர்கள் புதிதாய் வீடு மாற்றிக் கொண்டு போகுமிடத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் நடிகையின் குறும்புக்கார மகள் சரிதா, அவரின் குறும்பான நகைச்சுவையால் கவரப்பட்ட இத்தம்பதியினர், அவரை தங்கள் வீட்டில் மூத்த மகள் போலவே உரிமை தருகின்றனர்.
இதில் சியாமளா என்னும் சினிமா உலகம் மறந்து போன நடிகையை மீள் அறிமுகம் செய்திருப்பார் இயக்குனர்.நீண்ட நாட்கள் கழித்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததை எண்ணி குதூகலித்தபடியே அதிகாலை சீக்கிரம் விழிக்க அலாரம் வைத்து உறங்கிய அந்த முன்னாள் நடிகை எழுந்திருக்கவே மாட்டார்.
ஆனால் கூடாக்காமம் என்பது நேரம் காலம்,சபை நாகரீகம் எல்லாம் பார்த்து வருவது கிடையாது.அதற்கு ஆண் பெண் என இருவரின் மனத்தடுமாற்றம் காரணமாகி காமம் அரங்கேறினாலும்,சமூகத்தில் பாதிக்கப்படுவது பெண் தான், ஏனென்றால் அவளுக்குத் தானே காலம் காலமாக கற்பு என்ற கண்ணுக்குத் தெரியாத வஸ்துவை உருவகப்படுத்தியிருக்கின்றனர்.
அவளுக்குத் தானே கர்ப்ப பாத்திரம் இருக்கிறது,அதைத் தானே பிணையாக வைத்து சாஸ்திரப் போர்வையில் அரசியல் நடத்துகின்றனர்.அதை மிக அருமையாக இப்படத்தில் விமர்சித்திருப்பார்.இதே போன்றே ஆணின் வக்கிரத்துக்கு பலியாகும் பெண்களின் கதையை தன் மூன்று முடிச்சு,ஒரு வீடு இருவாசல், அவள் ஒரு தொடர்கதை,சிந்து பைரவி[மணிமாலா] உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து விமர்சித்திருந்தார்.
இயக்குனர் பாலசந்தர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு லைம் லைட்டில் இருந்து மறைந்து போன எத்தனையோ நடிகைகளை மீள் அறிமுகம் செய்திருக்கிறார்,இதில் வரும் ஒரு நடிகையும் அப்படி வழக்கொழிந்து போனவர் தான், தன் மகள் சரிதாவின் அரசியல் பிரமுகர் அப்பா இனிஷியல் தெரிந்தும் அதை தன் மகளுக்குப் பயன்படுத்த முடியாத இக்கட்டான கதாபாத்திரம்.கமல்ஹாசன் இப்படத்திலும் நடிகராகவே வருவார்,கௌரவ வேடம். அக்னிசாட்சி,பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் அவர் நடிகராகவே தோன்றியுள்ளார்.
இப்படத்தின் முக்கிய விவாதப் பொருள் கூடாக்காமம்,அல்லது
காமப்பசி.கூடாக்காமம் என்பது நேரம் காலம்,சபை நாகரீகம் எல்லாம் பார்த்து
வருவது கிடையாது.அதற்கு ஆண் பெண் என இருவரின் மனத்தடுமாற்றம் காரணமாகி
அங்கே காமம் அதிரடியாக அரங்கேறினாலும், அதனால் சமூகத்தில் பாதிக்கப்படுவது
பெண் தான், ஏனென்றால் அவளுக்குத் தானே காலம் காலமாக கற்பு என்ற கண்ணுக்குத்
தெரியாத வஸ்துவை உருவகப்படுத்தியிருக்கின்றோம்.
அவளுக்குத் தானே கர்ப்ப பாத்திரம் இருக்கிறது,அதைத் தானே பிணையாக வைத்து சாஸ்திரப் போர்வையில் அரசியல் நடத்துகின்றோம்.அதை மிக அருமையாக இப்படத்தில் விமர்சித்திருப்பார் இயக்குனர்.இதே போன்றே ஆணின் உக்கிரமான காமப்பசிக்கு பலியாகும் பெண்களின் கதையை தன் மூன்று முடிச்சு,ஒரு வீடு இருவாசல், அவள் ஒரு தொடர்கதை,சிந்து பைரவி[மணிமாலா கதாபாத்திரம்] உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து விமர்சித்திருந்தார்.அவரை ஃபெமினிஸ்ட் என்று ஏனையோர் ஒரே சொல்லில் ஒதுக்கினாலும் அவர் பின்வாங்கியதேயில்லை.
நூல்வேலி எழுத்தாளர் ஷெரிஃப்ஃபின் மூலக்கதை,அதை உரிமை வாங்கி திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாலசந்தர்.
இப்படம் பற்றி இன்னும் விரிவாக ஒரு கட்டுரை வரும்