மதுரையின் மதிச்சியம் என்ற கிராமத்தை சுற்றி அமைந்துள்ள ஷெனாய் நகர் பகுதி முறையாக நகர வடிவமைப்பு செய்யப்பட்ட பகுதி, Town planning in Madras என்ற மின்புத்தகம் படிக்கையில் 1918 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நகர வடிவமைப்பாளர் H.V.Lanchester FRIBA,MTPI அந்த பகுதிக்கு வரைந்த வரைபடத்தைப் பார்த்தேன், இப்புத்தகத்தில் இது போன்ற A1அளவு கொண்ட அபூர்வமான நகர வடிவமைப்பு வரைபடங்கள் சுமார் 22 எண்ணிக்கையில் உள்ளது, கட்டிடக்கலை முதுகலை M.Arch ல் Master of town planning படிக்கும் மாணவர்கள் வரலாற்று ஆர்வலர்கள அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
அன்று அவர் இட்ட layout இன்று 105 ஆண்டுகளில் செயல் வடிவம் பெற்றுவிட்டன ,இன்றைய Google map பாருங்கள்,
cutchery என்பது தாலுக்கா அலுவலகத்தை குறிக்கும்,தமுக்கம் மைதானத்தை TUMKM ground என்று குறித்ததைப் பாருங்கள், அமெரிக்கன் கல்லூரி மதுரையில் 1881 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது , இன்று மதுரை ஷெனாய் நகர் விஐபி வாழும் பகுதியாகும்.
படத்தில் இருப்பவர் காலஞ்சென்ற திரு.J.P. ஷெனாய் என்ற Joseph Patrick Lasrado Shenoy அவர்கள்,இவர் மங்களூரில் பிறந்தவர், கத்தோலிக்க கிருத்துவர், இன்று தமிழ்நாட்டில் நாம் காணும் LIG housing என்ற Low income group என்ற வருவாய் குறைந்த மக்களுக்கான தரமான குடியிருப்புகள், மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளைப் பற்றி தன் ஆட்சிப்பணிக்காலத்தில் அன்றே தீவிரமாக சிந்தித்தவர், திட்டப்பணிகள் மேற்கொண்டவர், 1930 களில் மதுரையின் ஆட்சியராக பணியாற்றினார், அன்றைய மதுரை மற்றும் சென்னை மண்ணின் பூர்வகுடிகளுக்கான நகர அபிவிருத்தி திட்டங்களை தொலைநோக்காக சிந்தித்தவர்,ஆட்சியர்களில் செயல் வீரர், அதுவரை 51.6 சதுர கிமீ பரப்பளவு மட்டுமிருந்த சென்னையை 128.8 சதுர கீமீ பரப்பளவுக்கு விஸ்தரித்து சுமார் 110000 மக்கள் குடியேறவும் புதிதாக 14500 வீடுகள் கட்டவும் காரணமாக இருந்தவர்.
1940 களில் இவர் சென்னையில் ஆட்சியராக பணியாற்றி 1944 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார், இவரின் உதவியாளர் திரு.C.நரசிம்மன் இவரது பணிகளை பின்பற்றி தொடர்ந்தார், இவரது பெயரை முத்தாய்ப்பாக இந்த மதுரை மற்றும் சென்னை புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு சூட்டினார் ,இவர் 1937 ஆம் ஆண்டு "Madura the temple city " என்ற மதுரை மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் பற்றிய புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
இரு மின்புத்தகங்களும் இலவசமாக தரவிறக்க லிங்க் கமெண்ட்ஸில் உள்ளது.
Town planning in madras
Madura the temple city