#திருவெழுகூற்றிருக்கை,#திருமங்கையாழ்வார்,#சார்ங்கபாணிகோவில்,#சித்திரக்கவி
முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த் தட்டுபோல் மேலே செல்வதும் கீழே செல்வதுமாக அமைந்திருக்கும் பாடல்
ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321,
என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது,அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திருவெழுக்கூற்றிருக்கை எனப் பெயர்,
திருஞானசம்பந்தரும் ,அருணகிரியாரும் ,திருமங்கை ஆழ்வாரும் இம்முறையில் இறைவனைப் பாடியிருக்கிறார்கள்.
இதை மீனாட்சி அம்மன் கோவிலில் வடக்கு கோபுரவாசலின் பிரசாத ஸ்டால் அருகே சுவற்றில் சிறுவனாகப் பார்த்தேன், பின்பு நேற்று கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோவிலில் பார்த்தேன், பின்பு சார்ங்கபாணி கோவிலிலும் இதைப் பார்க்கிறேன்,இதை சித்திரக்கவி என்றும் அழைப்பர்,இதை எல்லாம் விளங்கிக் கொள்ள இந்தப் பிறப்பு போதாது.
"அருள்மிகு சாரங்கபாணிசுவாமி திருக்கோயில், கும்பகோணம் திருமங்கையாழ்வார் - திருவெழுகூற்றிருக்கை
ஒரு பேருந்தி இருமலர்த்தவிசில் ஒருமுறை அயனை ஈன்றனை; ஒரு முறை. இருசுடர் மீதினில் இயங்கா மும்மதிள் இலங்கை இருகால்வளைய ஒன்றிய ஈர் எயிற்றுஅழல்வாய் வாளியில் சிலை ஒரு அட்டனை : மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மான்உரி இலங்கு மார்வினில் இருபிறப்பு இருபிறப்பு ஒரு மாணாகி ஒருமுறை ஈரடி, மூவுலகு அளந்தனை; நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால்வாய் மும்மதத்து இருசெவி ஒரு தனிவேழத்து அரந்தையை ஒரு நாள் இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத்தீ நான்மறை ஐவகை வேள்ளி வேள்ளி அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ; ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றிநின்று ஆங்கு இருபிறப்பு அறுப்போர். அறியும் தன்மையை ; முக்கண் நால் தோள் ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை; ஏழுலகு எயிற்றினில் கொண்டனை; கூறிய ஒன்றிய மனத்தால் ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலான அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தன; நெறிமுறை பூால்வகை வருணமும் ஆயின்; மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே ; அறுபதம் முரலும் கூந்தல் கார்ணம் ஏழ்விடை அடங்கச் செற்றன ; அறுவகைச் சமயமும் அறிவுருநிலையின்ை ஐம்பால் நால் நினை ஆசித்து இருத்தினை ; அறம்முதல் மயனம் மூரத்தி மூன்றாய் ஒன்றாய் விரிந்து மதுமலர்ச் சோலை ப்பை வருபுனல் பொன்னி பண்கொடிப் மாமணி திகழ் யலக்கும் செந்நெலொண் கழனித் இந்த சுற்போர் புரிசைக் நிமிர்கொடி விசும்பில் இள றை அவக்கும் செல்வம் மல்குதென் திரு தடந் அந்தணர் மந்திர மொழியுடன் வ்மளியில் அறிதுயில் அமர்ந்த பாம நின்னடியினேனிவன் வருமடரகல மாற்றே வினையே. திருட்கையாழ்வார் திருவடிகளேசாணம்