பல்லவர் கால கட்டிடக்கலையின் முத்திரைப் பாணி கஜபிருஷ்ட கருவறைக் கோவில்கள், அதை document செய்து விளக்கவே சகாதேவர் ரதக்கோவிலின் வெகு அருகே அதே நேர்ஒழுங்கில் இந்த பிரம்மாண்ட யானையை உயிரோட்டத்துடன் வடித்தனர், தொண்டை மண்டல சிவன் கோவில்கள் பலவற்றில் இந்த தூங்கானை மாட விமான அமைப்பைக் காணலாம், தூங்கானை அமைப்பு நீங்கள் எங்கு கண்டாலும் அது பல்லவர் கைங்கர்யம் எனக்கொள்க
தொண்டை மண்டலமான சென்னை அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சில தூங்கானைமாடக் கோவில்கள்
பொழிச்சலூர் அகதீஸ்வரர் கோயில்
மாடம்பாக்கம் சிவன் கோயில்
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில்
திருநின்றவூர் ஹ்ருதயாலீஸ்வரர் கோயில்
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில்
கூவம் திருப்புராந்தக சுவாமி கோயில்
வடபழனி வெங்கீஸ்வரர் கோயில்
பாடி திருவலிதாயநாதர் கோயில்
திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோயில்
போரூர் ராமநாதீஸ்வரர் கோயில்
என சொல்லிக்கொண்டே போகலாம்.
PS: Indo - Sarascenic கட்டிடக்கலையை தோற்றுவித்து வளர்த்த ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுனரான Robert Chrisolm சகாதேவ ரதத்திற்கு செய்த case study plan வரைபடத்தைப் பாருங்கள்,அவர் தமிழர் கட்டிக்கலையை சுமார் ஐந்து வருடங்கள் கள ஆய்வு செய்து முழுக்க உள்வாங்கிய பின்னர் தான் இன்று நாம் வியந்து நோக்கும் ஆங்கிலேய heritage கட்டிடங்களை வடிவமைத்தார்.
அவர் வடிவமைத்த கட்டிங்களில் சில சென்னை செனட் ஹவுஸ்,,சென்னை ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் கட்டிடம்,விக்டோரியா பப்ளிக் ஹால்,பி,ஆர்& சன்ஸ் கட்டிடம்,சென்ட்ரல் ரயில் நிலைய கடிகார கோபுரங்கள், வடோதரா (பரோடா ) லஷ்மி விலாஸ் அரண்மனை,சாயோஜிராவ் பல்கலை கட்டிடங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்,native பாணியைப் பின்பற்றி கோலோச்சிய வித்தகர் இவர்.
#கஜபிருஷ்டவிமானம்,#தூங்கானைமாடம்,#தொண்டைமண்டலம்,#சிவாலயம்,#Robertchrisolm