சென்னை போல வெப்ப மண்டல பெருநகரங்களில் வீடு அல்லது அலுவலகம் கடைகள் என எதுவும் வாங்குபவர்கள், lease வாடகை என எடுப்பவர்கள்,கண்டிப்பாக உங்கள் கட்டிடம் கொண்டுள்ள Thermal insulation properties , U value பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும், அதைப் பற்றி இங்கே தனிகட்டுரையில் படிக்கலாம்.
நேற்று எழும்பூர் மான்டியத் சாலையில் இந்த Sindur Eternity என்ற office & Residential tower பார்த்தேன், எத்தனையோ முறை தொலைவில் இருந்து பார்த்தும் இக்கட்டிடம் பற்றி எழுத முடியவில்லை.
சென்னை போன்ற வெப்ப மண்டல பெருநகரங்களுக்கு கண்டிப்பாக Double skin Façade , Rain screen Cladding façade ,இது போன்ற camouflage facade மிகவும் அவசியமாகும், காரணம் இது தரும் புற ஊதாகதிர் வடிகட்டும் நன்மைகள் அளவிடமுடியாதவை, சென்னை நிலப்பரப்பில் அமையும் கட்டிடங்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் கொடூர வெயில் பாதிப்பு இராது,ஆனால் தெற்கிலும் மேற்கிலும் அத்தனை கூர்மையான புற ஊதா கதிர்களால் கட்டிடம் பாதிப்படையும் என்பது கண்கூடு,
1960 ஆம் ஆண்டு வரையிலும் கட்டப்பட்ட கட்டிடங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த நுட்பமான வடிவமைப்பை காணலாம், அதில் அறைகள் 11, 12 ,14 அடி உயரம் இருந்தன, அறைக்குள் புழுக்கம் கூரையில் சென்று குழுமும், அதை வெளியேற்ற clearstory ஜன்னல்களை கூரை மட்டத்தில் அமைத்திருப்பர், கூடவே அறையின் தாய் சுவர்களை கவனித்தீர்கள் என்றால் இன்று போல வெறும் 9 அங்குல சுவராக இருக்காது, 1'1.5" , 1'6" ,1'10.5" ,2'3" என்ற தடிமன்களில் இருப்பதைப் பார்க்கலாம், அதாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைந்த தாய் சுவர்களை 1'1.5" , 1'6" என்ற தடிமனிலும் தெற்கிலும் மேற்கிலும் அமைந்த சுவர்களை 1'10.5" ,2'3" என்ற தடிமனிலும் எழுப்பி இருப்பர், அதனால் கடும் கோடையிலும் அறைக்குள் அத்தனை குளிர்ச்சியாக உணர முடிந்தது, இன்று சுவரில் தடிமன் கூட்டி thermal insulation properties கொண்டு வருதல் நடக்காது, காரணம் இடப்பற்றாக்குறை, எனவே double skin façade தேர்வு செய்யவும்.
இந்த இடரை களைவதற்கு எந்த ஒரு கட்டிடமும் கட்டப்படுவதற்கு முன் topography study, climate study செய்யப்படவேண்டும், அதற்கு ஏற்ப கட்டிடத்திற்கு massing study செய்யப்பட்டு புறத்தோற்றம் அமைய வேண்டும், குறிப்பாக ஒரு கட்டிடத்தின் புறத்தோற்றத்திற்கு செலவு செய்கையில் அது அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும், அர்த்தமின்றி பணத்தை அதற்கு வாரி இறைக்க கூடாது, over do செய்து பூசி மொழுகக்கூடாது, ஒரு கோடு கூட கூடுதலாக இருக்கக் கூடாது, எந்த ஒரு கோட்டுற்கும் வடிவமைப்பாளர் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த கட்டிடத்தின் façade ஐ camouflage façade என்று வகைப்படுகின்றனர், கட்டிட சுவர்கள் முழுக்க முடிந்த பின்னர் powder coated steel கொண்டு
horizontal & vertical stanchion கொண்டு skeleton நிறுவப்பட்டு , அதில் இந்த powder coated இறகுகள் பொருத்தப்பட்டுள்ளன, இவை புற ஊதாகதிர்களை வடிகட்டி இதன் அடுத்து உள்ளே அமைந்திருக்கும் சுவர் மற்றும் ஜன்னல் கதவு , பால்கனி இவற்றின் உள்ளே அனுப்பும், அதே போல வாகன மாசு இந்த layer ல் வடிகட்டப்படும், நாராசமான வாகன இரைச்சல் ஒலி மட்டுப்படுத்தப்படும், அதிக சூடு அறைகளுக்குள் இறங்காவிட்டால் அது மிகையான குளிர்சாதன வசதியை கோராது,எனவே மின்சார கட்டணம் சிக்கனம் செய்ய முடியும், கண் கூசும் அளவு அறைக்குள் வெளிச்சம் வராது, எனவே திரைச்சீலைகள் தேவையில்லை ,பெருமழைநாளில் கட்டிட சுவர்கள் மீதாக மழைச்சாரல் அடிப்பதும் தடுக்கப்படுகிறது,
அறைக்குள் இருந்து பார்த்தால் பெருநகர வாகன நகர்வை, வேகமான வாழ்வின் காட்சியை நீர்க்கச் செய்து அடுக்கவாசிகளுக்கு அனுப்பும்,வெளி உலகிற்கு அடுக்கக வீட்டிற்குள் நடப்பவை தெரியாது, அத்தனை முழு privacy ஐ தரும், இது போன்ற எண்ணிலடங்கா பயன்களை இந்த camouflage façades கட்டிடங்களுக்கு தருகின்றன, எனவே சென்னையில் நீங்கள் வீடு வாங்க வாடகைக்கு போக நினைக்கையில் vertical fins, sun breaker , camouflage skin façades தெற்கில் மேற்கில் இருப்பது போல ஆய்ந்து குடியேறவும்.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design | 9940255873