2002 ஆம் ஆண்டு காஸ்பர் நோ இயக்கத்தில் வெளியாகி மிகவும் சர்ச்சைக்குள்ளான ஃப்ரெஞ்சு மொழி கிரைம் ட்ராமா த்ரில்லர் வகைப் படம். பாரீஸ் நகரத்தின் கொடூரமான ஒரு ராத்திரியில் துவங்கும் படம் அப்படியே படிப்படியாக ரிவர்ஸ் க்ரோனாலாஜிக்கல் ஆர்டரில் பின்னோக்கி நகர்கிறது.
ரொமான்ஸுக்கும் ஒயினுக்கும் பெயர் போன பாரீஸ் நகரில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என நம்மை கேள்வி கேட்க வைக்கிறது. படம் பார்க்கும் பார்வையாளருக்கு, காமிராவை தோளில் வைத்து லைவ் டெலிகாஸ்ட் போல் சுற்றி சுற்றி எடுக்கப்பட்ட காட்சிகளும், யாரோ செவிட்டில் அறைந்தால் கொய்ங்க் என்னும் சத்தம் வருமே அது போல ஒரு 28 ஹெர்ட்ஸ் டெசிபலில் எழும்பும் தொந்தரவு செய்யும் இசையும் . நம்மை அந்த சூழ்நிலையிலே நிப்பாட்டி வேடிக்கை பார்க்க வைக்கிறது.(வேண்டுமென்றே பார்வையாளரை குழப்பவும் எரிச்சலடையச்செய்யவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாம்) இதனால் இசையமைப்பாளர் தாமஸ் பங்கால்டர் யார் யாரிடம் எத்தனை வசவு வாங்கினாரோ?
கொலை அல்லது விபத்தை வேடிக்கைப்பார்க்கும் அனைவருக்கும் ஒரு அனுதாபமான முகபாவத்துடன் கூடிய கேள்வியிருக்கும்.சம்பவம் எப்படி நடந்திருக்கும்? என்று .அந்த ஒரு திரியை இவ்வளவு அழகாய் நான் க்ரோனாலாஜிக்கல் மற்றும் நான் லீனியர் தனமாய் எடுக்கப்பட்ட இப்படத்தில் திணித்து முயன்று பார்த்திருக்கிறார் இயக்குனர் காஸ்பர் நோ. இவரே இயக்கம்,எடிட்டிங்,ஒளிப்பதிவாம்.
ரிசல்ட்:- படம் ஓவர்டோஸ் வன்முறை.ஓவர்டோஸ் காமம்,ஓவர்டோஸ் காதல்.என எல்லாமே ஓவர்டோஸ் தான்.படம் கேன்ஸ் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டபோது அமர்ந்திருந்த 2000 பார்வையாளர்களில் 200க்கும் மேற்பட்டோர் முதல் முப்பது நிமிடங்களில் சே என்று எரிச்சலுடன் எழுந்து போனார்களாம்.
படத்தின் க்ரோனோலாஜிக்கல் மற்றும் லீனியரான கதை வடிவம்:-
---------------------------------
டைம் ருய்ன்ஸ் எவ்ரித்திங்:- இது தான் படத்தின் டாக் லைன். இப்படித்தான் படம் ஆரம்பிக்கிறது (சாரி முடிகிறது) பீத்தோவனின் 7ஆம் சிம்பொனி பிரம்மாண்டமாய் பிண்ணனியில் ஒலிக்கிறது.
முன்னாள் காதலன் பியர்ரி-யிடமிருந்து பிரிந்த பேரழகி அலெக்ஸ் (மோனிக்கா பெலுச்சி) இரவு நடக்கப்போவதறியாமல் பூங்காவில் படுத்துக் கொண்டே ”An Experiment with Time” என்னும் புத்தகம் படிக்கிறாள்.அன்று காலை முதலே காதலனுடன் நடந்த அழகான கூடலை மனதினுள் எண்ணி மகிழ்கிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக தான் கருத்தரித்திருப்போமோ? என்னும் குறுகுறுப்பு தோன்றி அதை புதிய காதலன் மார்க்கஸுக்கும் பகிர, அவனும் அதை கொண்டாட ,இவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகிறது.
இதைக் கொண்டாடி குடிக்கத் தான் வீட்டில் ஒயின் இல்லை,எனவே மார்க்கஸ் ஒயின் வாங்க கிளம்பிப்போக, இவள் கருத்தரிப்பு சோதனை கிட்டை உபயோகித்து கருத்தரித்தது உண்மை என உறுதிப்படுத்திக்கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறாள்.படுக்கைக்கு மேலே இருக்கும் போஸ்டரில் 2001 : ய ஸ்பேஸ் ஒடிஸி என்னும் கூப்ரிக்கின் பட போஸ்டர் இருக்க அதில் ”த அல்டிமேட் ட்ரிப்” என இருக்கிறது.அன்று காலை கூடலின் போது அவள் காதலன் உன்னை குதப்புணர்ச்சி செய்ய வேண்டும் என சொன்னது வேறு இவளுக்கு சிரிப்பை வரவழைக்கிறது. (காலையில் நடந்த அந்த 10 நிமிடத்துக்கும் மேலாய் வரும் ரம்மியமான காதல் காட்சியை கண்டிப்பாக காணத்தவறாதீர்கள் நண்பர்களே.)அன்று அதிகாலையில் இவள் ஒரு சுரங்கப்பாதையில் நடந்து வருவதாயும் அது இடிந்து போவது போலும் கனவு கண்டு வேறு திடுக்குற்றிருந்தாள்.
மாலையில் இந்நாள் காதலன் மார்கஸுடன் டிஸ்கோ பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு, மார்கஸின் குடி, ஹெராயின் போதை உட்கொள்ளல், மற்றும் பிற பெண்களிடம் கடலை போடுதல் போன்றவற்றால் எரிச்சலுற்றவள், கோபமாய் முன்னரே வீட்டுக்கு கிளம்புகிறாள், அலெக்ஸ் மெட்ரோ ரயில் பிடிக்க சாலையை கடக்க முயன்று தோற்று,ஒரு விலை மாதுவிடம் வழி விசாரிக்க அவள்,நடை பாதையை காட்டுகிறாள். இவள் ஆள் அரவமற்ற சுரங்க நடை பாதையில் இறங்கி நடக்கிறாள்.
அங்கே ஒரு திருநங்கையை ஒரு கொடிய காமுகன் பலாத்காரம் செய்ய எத்தனைப்பதை கண்டு இவள் பயந்து கத்திவிட்டு விலக ,அவன் அவளை விட்டு விட்டு இவளை கத்திமுனையில் சிறைபிடித்து தரையில் கிடத்தி குதப்புணர்ச்சி செய்துவிட்டு,உன் கணவன் உன்னை இங்கே திணித்து புணர்ந்துள்ளானா?இது என்ன ரத்தமா?என கேட்டவன்,களைப்பில் கண்ணயற்,இவள் மெல்ல நகர்கிறாள். விழித்தவன் உன்னை நான் இன்னும் முடிக்கவில்லை,என்று இவளின் அழகிய முகம் பார்த்து வெறி கிளம்ப பூட்ஸ் காலால் மிதித்தும் முகத்தை தரையில் மோதி சிதைத்து விட்டும் அகல்கிறான்.
அழகிய அலெக்ஸ் இப்போது கோமா நிலையில் போலீசாரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறாள். (இந்த 9 நிமிடம் வரும் கற்பழிப்பு காட்சி எடுக்க 2 நாள் பிடித்ததாம்,முடிவில் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, ஒரே காட்சியில் எடுக்கப்பட்டது போல பஃப் செய்யப்பட்டதாம்.அலெக்ஸின் முகத்தில் வழியும் குருதிக்கோடுகள் , அந்த சைக்கோவின் பிறப்புறுப்பு கூட கிராபிக்ஸாம், அந்த சுரங்க நடைபாதை தரை முழுக்க வலிக்காமல் நடிக்க ஏதுவாய் ஃபோம் ரப்பர் ப்ளாக்ஸ் கொண்டு அமைத்தனாராம்)
இப்போது பார்ட்டி முடிந்து வெளியேறிய அலெக்ஸின் முன்நாள் காதலன் பியர்ரியும், இந்நாள் காதலன் மார்க்கஸும் போலீசாரின் வாகனத்தையும் ஒரு பெண் மருத்துவ உதவிக்கு கொண்டு செல்லப்படுவதையும் பார்த்து நெருங்கி வர,அது இவர்களின் காதலி அலெக்ஸ் என அறிகின்றனர்.வாய்விட்டு அலறுகின்றன்ர்.
இந்த இருவர்,கொதிக்க,இவர்களை வேடிக்கை பார்க்கும் ஒரு ஆள் இவர்களிடம் நெருங்கி அவனை பழி வாங்க வேண்டுமா? ஒரு பர்ஸை காட்டி இது உள்ளே சுரங்க நடை பாதையில் கிடந்தது என்கிறான்.அதில் அடையாள அட்டையில் இருப்பவன் படத்தில் லா டெனியா என்றும் பணத்துக்காக தானும் இவர்களுடன் இணைகிறேன் என்கிறான். இப்போது மூவரும் இணைந்து அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை போலிஸாருக்கு தெரியாமல் பழிவாங்க புறப்படுகின்றனர். துணைக்கு வழியில் ஒரு பெண் தரகனையும் அழைத்துக்கொண்டு அந்த நாதாரியை தேடி செல்கின்றனர்,
அதில் (முன்னாள் காதலன்) பியர்ரி, மார்க்கஸை விட நிதானமாயும் அமைதியாகவும் இருக்கிறான்.அவன் மார்க்கஸை விடவும் 2 வயது பெரியவன். இவனால் அலெக்ஸை திருப்தி படுத்தமுடியவில்லை என்ற ஒரே காரணத்தினாலே அலெக்ஸ் மார்கஸை புதிய காதலனாய் வரித்துக்கொள்ள ,பியர் எந்த கோபமும் கொள்ளவில்லை, மாறாக அவள் மேல் அதிக மையலுறுகிறான். ஆரம்பத்திலிருந்தே மார்க்கஸை ஒருத்திக்கு ஒழுக்கமாய் உண்மையாயிரு என அறிவுறை சொன்னவன். இப்போது மார்க்கஸுக்காக விருப்பமே இல்லாவிட்டாலும் இந்த பழிவாங்கும் படலத்தில் ஒட்டிக்கொண்டுள்ளான்.
காட்சி மாறி:-
(இவர்கள் மூவர் தோன்றும் மிக நீண்ட மெட்ரோ ரயில் காட்சி நான் லீனியராக படத்தின் ஊடே 20 நிமிடங்கள் வருகிறது)
மெட்ரோ ரயிலில் வீட்டுக்குச் செல்ல ஏறும் அலெக்ஸ்,அவளின் இந்நாள் காதலன் மார்க்கஸ்,முந்நாள் காதலன் பியர்ரி பேசிக்கொள்ளும் பாலியல் சார்பு வசங்கள் அனைத்துமே கவிதை என்பேன்.ஒவ்வொரு வசனமும் நிறுத்தி நிதானமாக பார்க்க வேண்டிய ஒன்று.அதில் பியர்ரி லேசான இதய நோயால் பாதிக்கப்பட்டதால் அவனால் அலெக்ஸுக்கு முழுமையான் சுகத்தையும் நீண்ட நேர புணர்ச்சியையும் தர இயலவில்லை, அவன் இதுகுறித்த குற்ற உணர்வினால் அலெக்ஸிடம் உனக்கு இன்று திருப்தியாயிருந்ததா? உனக்கு உச்சநிலை அடைந்துவிட்டாயா? என தியோரிட்டிகலாய் கேட்டு நச்சரித்து முக்கியமான பிராக்டிகலில் கோட்டை விடுகிறான்.
அலெக்ஸ் அழகிய இளம் பெண், நிறைய கனவுகளுடன் இருப்பவள், கலவியில் வெவேறு கோணங்களை விரும்புபவள். தன் கருவையும் சுமக்க ஆவலுடன் இருக்கிறாள்.ஆனால் பியர்ரியின் தொண தொண பேச்சினாலும் அவனின் செக்ஸில் ஈடுபாடட்ட தன்மையினாலும் ,அவனை பிரிகிறாள்,அவனை விட 2 வயது இளைய, மார்க்கஸை தேர்ந்தெடுக்கிறாள், இவன் மூலம் தன் காம இச்சைகளை பூர்த்தி செய்து கொள்கிறாள். சற்றே அயற்சியைத் தரக்கூடிய நெடிய நீண்ட காட்சியென்றாலும் பேசும் வசனங்களை உற்று நோக்க வேண்டுகிறேன்.அந்தரங்கம் புனிதமானது என்னும் கூற்றை மீறி நாம் கேட்கும் வசனங்கள் நம்க்கு மிகவும் விசித்திரமாயும் புதிராயும் உள்ளது.மேலே சொன்ன விஷயங்களையும் மூவரின் குணாதிசயத்தையும் இயக்குனர் இந்த 20 நிமிட காட்சியிலேயே சொல்லிவிடுகிறார்.
காட்சி மாறி:-
இப்போது டாக்ஸியில் பயணிக்கும் மூவரும் அந்த லா டெனியா என்பவனுக்கும் அதேபோல குத வன்புணர்ச்சி செய்து முகத்தை சிதைக்க திட்டமிடுகின்றனர்.வழியில் ஒரு திரு நங்கை பாலியல் தொழிலாளியை பிடித்து அடித்து மிரட்டி விசாரிக்கையில் அவன் பெயர் லா டெனியா என்கிற டேப் வார்ம் அவன் ஒரு ஹோமோ என்றும் எப்போதும் ”ரெக்டம்” என்னும் ஒரு ஒரின சேர்க்கையாளர் (gay club) கிளப்பில் தான் இருப்பான் என சொல்கிறாள்(ன்).

இவர்கள் ”ரெக்டம்” சென்று விசாரிக்க,அங்கே கிளப் உறுப்பினர்களால் நிராகரிக்கப்படுகின்றனர்.அவர்களில் ஒருவன் எனக்கு கை வேலை பார் உனக்கு நான் டேப்வார்மை காட்டுகிறேன் என்கிறான். அவனை மார்க்கஸ் அடிக்க, அவன் பயந்து அலறி டேப்வார்ம் பயங்கரமானவன் என்று கூறி அங்கே அருகே நின்ற இருவரின் மேல் போய் விழ, இவன் ஒரு முரட்டு ஆளை டேப்வார்ம் என நினைத்து சண்டை வளர்க்கப் போக ,முரட்டு ஆள் வெறியுடன் இவர்களை நெருங்கி மார்க்கஸை தரையில் கிடத்தி கையை முறித்து ஒடிக்கிறான்.
மார்க்கஸை வன்புணர்ச்சி செய்யவும் எத்தனிக்கிறான்,மார்க்கஸ் அவனை தடுக்க முயன்று தோற்க, பியர் அந்த முரட்டு ஆளை இரும்பு தீயணைப்பான் சிலிண்டர் கொண்டு அடித்து நசுக்கி முகத்தை சிதைக்கிறான்.முக எலும்பு தேங்காய் ஓடு போல சில்லு சில்லாகிறது,மூளை கண்,மூக்கு என அனைத்தும் கூழாகிறது, அந்த முரட்டு ஆள் சம்பவ இடத்திலெயே கடைசியாக முகத்தில் தாடை மட்டும் எஞ்சி இருக்க அதை மட்டும் அசைத்து இறந்தும் விடுகிறான்.
இந்த களேபரத்தில் அங்கே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உண்மையான லா டெனியா தப்பி மறைகிறான்.(படம் ஆரம்பித்து 23 நிமிடங்களில் இந்த காட்சி வருகிறது, அதுவரை காமிரா ட்ரைபாடில் அமரவேயில்லை,ஒரே சுற்றல் தான். அந்த சப்தமும் அடங்கவில்லை,இது வரை வந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் பெரியஆள் தான்.உலக சினிமா பார்க்க ஏற்றவர்தான்.இந்த முகம் சிதைக்கும் காட்சி கூட கிராபிக்ஸ் தானாம்.சாப்பாடு இறங்காது (ஆமாம் சொன்னால் மட்டும் பார்க்காமல் விடவா போறீங்க?)
நடந்த சம்பவத்தில் மார்க்கஸ் ஸ்ட்ரெட்சரில் வைத்து மருத்துவ உதவிக்கும்,பியர் கைவிலங்கிட்டும் ”ரெக்டம்” கிளப்புக்கு வெளியே கொண்டு வரப்பட அங்கே குழுமி இருந்த ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு காரி துப்பப்படுகின்றனர்.போலிஸார் பியர் ஒரு தத்துவ ஆசிரியர் என தெரிந்து கொண்டு , இந்த தத்துவம் பேசும் ஆட்களே ஓரினச்சேர்க்கையாளர்கள் தான். சிறையில் உனக்கு ஆப்பு அடிப்பார்கள். உனக்கு ஆணுறை கிடைக்காது.நேராக எய்ட்ஸ் தான் என்று காறி உமிழ்ந்து, போலீஸ் வண்டியில் ஏற்றி அழைத்துப்போக. மார்க்கஸ் ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்படுகிறான்.
அப்படியே காட்சி மாறி காமிரா சுழன்று ”ரெக்டம் ”ஓரினச்செர்க்கையாளர் கிளப்பின் மொட்டை மாடிக்கு போக. ஒரு கால் காசு பெறாத கிழவர் குடி போதையில் நிர்வானமாக படுக்கையில் அமர்ந்து.யோசிக்கிறார்.பக்கத்தில் இருக்கும் ஒரு ஆளிடம் “டைம் ருய்ன்ஸ் எவ்ரிதிங்” என்கிறார். மேலும் தான் தன் மகளுடன் வன்புணர்ச்சி செய்ததற்காக சிறையில் சில காலம் இருந்ததாக சொல்ல,அருகே இருந்தவர் ஓ வெஸ்டன் சிண்ட்ரோமா?என்கிறார்.அப்போது ஆம்புலன்ஸு சைரன் சத்தம் கேட்க,இவர் நிதானமாக கீழே இருக்கும் பாடாவதிகள் அடிக்கும் கொட்டம் தான் அது.எல்லாம் மாயை என ஏனோ அவர்களுக்கு புரியவில்லை என சாதாரணமாய் சொல்கிறார்.
சிறு A4 பேப்பரில் எழுத முடிகிற இவ்வளவு எளிய கதை . சொன்னவிதம் தான் பயங்கரம். அழகிய அலெக்ஸ் ஏன் அந்த சுரங்க நடைபாதையை சாலையைக் கடக்க தேர்ந்தெடுக்கவேண்டும்.வம்பை விலைக்கு வாங்கவேண்டும்? அழகிய அலெக்ஸ் கோமாவிலிருந்து உயிர்பிழைத்தாளா?எதற்கும் விடையில்லை ஓரினச்சேர்க்கையாளர் கிளப் எப்படி இருக்கும்? பார்க்கையிலேயெ முகம் சுளிக்க வைக்கிறது(இயக்குனரை jஜெர்மனியின் ஓரினச்சேர்க்கையாளர் கும்பல் ஒன்று அவர் ஒரு ஹோமோபோபியா ஆகவே தான் இவ்வளவு கீழ்த்தரமாக ஹோமோக்களை சித்தரித்து காட்சிகளை எடுத்துள்ளார் என குற்றம் சாட்ட,இயக்குனர் மறுத்து ஒரு டம்மி படத்தை அதே ”ரெக்டம்” கிளப்பில் போய் எடுத்தாராம். கஷ்டகாலம். ஒரு படத்தில் பார்வையாளரை இதைவிட கிறங்கடிக்கவும் முடியாது எரிச்சல் பட வைக்கவும் முடியாது.
இந்த சுட்டியில் படத்தை தரவிறக்கிப்பார்த்து விடுங்கள்.(மனைவியோடு பார்க்க முன்பாகம் ஏற்றதல்ல,குடும்பத்தாரோடு பார்க்க மொத்த படமும் ஏற்றதல்ல) இந்த படத்தின் ஆங்கில சப் டைட்டிலுக்கான சுட்டி.

=========================
படத்தின் முன்னோட்ட காணொளி:-