2009ஆம் ஆண்டு கர்க் ஜோன்ஸின் திரைக்கதை இயக்கத்தில்,ஏற்கனவே 1990ஆம் ஆண்டு இத்தாலி மொழியில் வெளியாகி மிகவும் பேசப்பட்ட ”Stanno Tutti Bene” என்னும் படத்தை தழுவி வெளிவந்த ட்ராமடி வகைத்திரைப்படம்.
அமெரிக்காவின் "தவமாய் தவமிருந்து" என்ற சொல் மிகவும் சரியாய் இருக்கும்.இப்படத்தில் ராபர்ட் டிநீரோ முழுப்படத்தையும் தலைமேல் சுமந்திருக்கிறார்.நான் படம் பார்த்தால் அழமாட்டேன் என சொல்பவர்கள் இந்தபடத்தை பார்த்துவிட்டு அழாவிட்டால் சொல்லுங்கள்.எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சையும் கரைக்கும் ராபர்ட்டின் நடிப்பு.இப்படி ஒரு அப்பா இல்லையே? என அப்பா இல்லாதவர்களையும் , இப்படி நம் அப்பாவை தவிக்க விடக்கூடாது என அப்பா உள்ளவர்களையும் உணரவைத்து, தொண்டையை அடைக்க வைக்கும். திரைக்கதைக்கு தான் எப்படி வருகிறது இப்படி ஒரு சக்தி?,இனம் ,மதம்,மொழி கடந்து படம் பார்க்கும் பார்வையாளன் மனதை நகர்த்துகிற வித்தை,மந்திர ஜாலம், இதை என்ன என்று சொல்வது?. ரியாலிட்டி சினிமா விரும்பிகள் தவறவிடக்கூடாத ஒரு படம்.
====================
படத்தின் கதை:-
வாரத்துக்கு 1000 மைல் நீள டெலிபோன் கேபிள் தயாரிக்கும் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்ற ஃபோர்மேன் ஃப்ரான்க் கூட் (ராபர்ட் டிநீரோ), தன் மனைவியை 8 மாதங்களுக்கு முன்னர் தான் இழந்திருக்க, மனைவியின் பிரிவாலும், 8 மாதங்களாக தன் இருமகன்கள்,இருமகள்களை பார்க்காததாலும் ஏங்கிப் போகிறார். அடுத்த வாரம் கிருஸ்துமஸ் என்றிருக்க , இந்த முறை நிச்சயம் மகன்களும் மகள்களும் வருவர் என ஆசையுடன் வீட்டை ஒழுங்குபடுத்தி, தோட்டத்தை பராமரித்து, பேரன் ஜாக் நீந்த பிளாஸ்டிக் நீச்சல் தொட்டியில் காற்றடித்து, தண்ணீர் நிரப்புகிறார்.
சூப்பர் மார்க்கெட் சென்றவர் விலையுயர்ந்த பிரிட்டிஷ் ஒயின்களையும், புதிய வான்கோழி இறைச்சியையும், பார்த்து பார்த்து வாங்குகிறார். புதிய விலையுயர்ந்த கிரில்லையும் (இறைச்சி சுடும் கரி அடுப்பு எந்திரம்) வாங்குகிறார். தன் குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்து குட்டி போட்ட பூனை போல அங்குமிங்கும் நடக்கிறார்.
சொல்லி வைத்தாற்போல அனைவரிடமிருந்தும் இந்தமுறை வரஇயல வில்லை என்ற வாய்ஸ் மெயில் செய்தி வர. தன் அறுபது வயதிலும் குழந்தை போல மிகவும் ஏங்கியும் ஏமாந்தும் போகிறார்.தன் குழந்தைகளை நன்கு வளர்க்க வேண்டும் என்று மிகவும் எதிர்பார்த்து திட்டமிட்டு வளர்த்ததால் தன் பிள்ளைகளை தன் மனைவியின் கவனிப்பிலேயே விட்டு வெளியூரில் வேலை செய்து வந்தவர். தன் மனைவி இறந்த பின் தன் பிள்ளைகள் தன்னிடம் எதுவுமே சொல்வதில்லை என மிகவும் வருந்துகிறார்.
துவண்டு போகாமல் தனக்கு ஆஸ்துமா வியாதி இருந்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அவர்கள் ஊருக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கிறார்.தன் மருத்துவரை சென்று பார்த்து இந்த திட்டத்தை சொன்னவரை ,இவரின் மருத்துவர் எந்நிலையிலும் விமானப்பயணம் செய்யக்கூடாது என எச்சரிக்கிறார்.
நியூயார்க் நகரம்-மகன் டேவிட்டை தேடி:-
பெற்ற நெஞ்சு பரிதவிக்க எதையும் கேளாமல் முதலில் தன் மகன் டேவிட்டை பார்க்க நியூயார்க்குக்கு ரயில் ஏறுகிறார்.நியூயார்க்கில் தன் மகனின் அபார்ட்மெண்ட் வாசலிலேயே அழைப்பு மணி அழுத்திவிட்டு காத்திருக்க ,அவன் வரவேயில்லை,நீண்ட நேரம் வெளியே பனியில் அமர்ந்தவர் ஒரு விலைமாது வந்து சர்வீஸ் வேண்டுமா?என கேட்க.இவர் வேண்டாம் என்று சொல்ல, என் காலை பார்க்கிறாயா?என அவள் கேட்க,இவர் பதிலுக்கு நீ என் காலை பார்க்கிறாயா? என கேட்டு கலாய்க்கிறார்.
(யாரும் தவறவிடக்கூடாத காட்சி அது. ராபர்ட் எத்தனையோ நடிகர்கள் நம் மனதில் பிடித்த இடத்தை பூ என ஊதி துண்டு போட்டு அமர்கிறார்.) பின்னர் அருகில் உள்ள பார் சென்று மது அருந்தியவர்.மகனின் அபார்ட்மெண்ட் அருகே இருக்கும் ஆர்ட் காலரியில் மகன் வரைந்த ஓவியத்தை காண்கிறார்.பெருமிதம் கொள்கிறார். சிறு வயதில் டேவிட்டிடம் நீ என்னவாக விரும்புகிறாய்? என கேட்க அவன் பெயிண்டராக விரும்புகிறேன் என சொல்ல.“இவர்,அட மண்டு.பெயிண்டர் சுவற்றை வண்ணம் அடிப்பான்,அதில் நாய் மூத்திரம் அடிக்கும்,நீ என்னவாகப்போகிறாய்? என்றதும்,அவன் துள்ளி “ஆர்டிஸ்ட்”என்று துள்ள, இவர் கண்ணில் நீர் கோர்க்கிறது.
பொது தொலைபேசியிலிருந்து அயராமல் அரைமணிக்கொருமுறை அவனின் வீட்டு எண்னை அழைத்தவர்.மணி அடித்துக்கொண்டே இருக்க வாடிப்போகிறார். மீண்டும் டேவிட்டின் அபார்மெண்ட் வந்தவர்.அவனின் அபார்ட்மெண்டின் பொது கதவு இப்போது வேறு ஒரு குடித்தனக்கார பெண்மணியால் திறக்கப்பட,இவரும் நுழைந்து படிஏறி அவனின் வீட்டு கதவை தட்ட, அது திறக்கப்படாமல் போக , இவர் டேவிட் என எழுதப்பட்ட கடித உறையின் மேல் உனக்கு இன்ப அதிர்ச்சி தரவந்தேன்,ஏமாந்து போனேன்.என எழுதி,கதவின் அடி இடுக்கில் தள்ளிவிட்டு அகல்கிறார்.
நியூயார்க் நகரிலிருந்து-மகள் ஏமியை தேடி:-
அங்கிருந்து பேருந்து பிடித்து தன் மகள் ஏமியின் (கேட் பெக்கின்ஸேல்) புதிதாய் கட்டிய வீடு போய் சேர்ந்தவர்,தன் பேரன் ஜாக் ஆரோக்கியமாய் இருப்பதைப்பார்த்து ஆச்சர்யமடைகிறார்.மகள் அவனுக்கு உடம்பு சரியில்லாததால் கிருஸ்துமஸ் கொண்டாட வரவில்லை என பொய் சொன்னது இவருக்கு உறுத்தியது. மகள் இவரின் இன்ப அதிர்ச்சியான வருகையை விரும்பவில்லை. அவசரமாய் கணவனுக்கு அழைத்தவள் எதற்கோ கெஞ்சுகிறாள். பேரன் ஜாக் தன் கோல்ஃப் மைதானத்தை இவருக்கு காட்ட இவர் அவனிடம் கோல்ஃப் ஆடி தோற்கிறார்.இரவு தாமதமாய் வந்த அவளின் கணவன் சாப்பாட்டு மேசையில் கடனுக்கு உடன் அமர்ந்திருக்க,பேரன் ஜாக்குக்கும் மாப்பிள்ளைக்கும் வாய்ச்சண்டை வருகிறது.
இவர் ஓரிரு நாள் தங்க பிரியப்படுவதை ஜாடையாக சொல்லியும் மகள் மறுநாளே பள்ளி திறக்கவிருப்பதால் சாத்தியமில்லை,தனக்கு இரவே வெளியூர் போகவேண்டும் என சொல்லி வருத்தம் தெரிவிக்க,இவர் மறு நாள் காலையே ஏமியுடன் காரில் புறப்படுகிறாள்.வழியில் பேரன் ஜாக் படிப்பில் முதலாவதாக வருகிறான் என ஏமி முன்னர் சொன்னது பொய் என அறிகிறார்.அவளின் விளம்பர நிறுவன அலுவலகம் போனவர்,மகளின் நாற்காலியில் முதலாளியாக அமர்ந்து பெருமை கொள்கிறார்.அந்த அலுவலத்தில் இவள் பார்ட்னர் என அறிகிறார்.இவரிடம் விளம்பர ஆலோசனை கேட்கப்பட மகிழ்கிறார்.
பின்னர் மகளுடன் பேருந்து நிலையம் செல்கிறார்.அங்கே காஃபி ஷாப்பில் அமர்ந்து பேசுகையிலேயே ஏமியின் சக ஊழியன் இவர்களைப்பார்த்துவிட்டு அருகே வந்து இவளிடம் தோழமையுடன் நெருங்கி அமர்கிறான். இந்த பயணமும் இவருக்கு ஏமாற்றமாகவே இருந்தது.கோட் உள்பாக்கெட்டிலிருந்து “ஏமி” என்னும் பெயர் எழுதிய உறையை இவளிடம் தந்து பின்னர் பிரி என்று கூறி விடைபெறுகிறார். எக்காரணம் கொண்டும் தான் ராபர்டை பார்க்கப்போவதை அவனிடம் தெரிவிக்காதே! என சத்தியம் வாங்குகிறார்.ஏமி அதை மீறி அவனுக்கு தொலைபேசுகிறாள்.
டென்வர் நகரம்-மகன் ராபர்டை தேடி:-
மிகுந்த களைப்புடன் பேருந்திலிருந்து இறங்கியவர், தன் மகன் ராபர்ட் (ஸாம் ராக்வெல்) “கண்டக்டராய்” இருக்கும் இசைப்பதிவு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்து என் மகன் ராபர்ட் -கண்டக்டர், என சொல்ல அவர்கள் ஓ பெர்குஷனிஸ்டா? (தோல் வாத்தியக்காரன்) என உள்ளே அனுப்புகின்றனர். இவரின் சூட்கேஸ் சக்கரம் தரையில் உராய்ந்து அந்த ஆடிட்டொரியம் பால்கனியில் பெரிய சப்தம் உருவாக்க எல்லோரும் கவனம் சிதறி,திரும்ப,மகன் ராபர்ட் தான் அடிக்கவேண்டிய ”பீட்” டை வாசிக்க மறந்து விடுகிறான்.அனுமதி பெற்று அப்பாவை வெளியே கூட்டி வந்தவன்.அவரின் வருகையை ரசிக்கவில்லை.ஃப்ரான்க் அவனிடம் நீ கண்டக்டர் என சொன்னாயே ? என கேட்க,அவன் கோபமாகி,நீங்கள் நினைப்பது போல தோல்வாத்தியம் கேவலமானதில்லை.
இதற்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது என சப்பைகட்டு கட்டி,இன்று கூட இத்தாலிக்கு எனக்கு கச்சேரியில் வாசிக்க போகவேண்டும்.என்றவன் சிகரெட்டை பற்ற வைக்க எத்தனிக்க, அது இவருக்கு வியப்பளித்து,நீ புகைப்பாயா? என கேட்க.ஆமாம் எப்போதாவது.அது தீங்கில்லையா?இவர்.நீ ஃபேக்டரியில் வேலை பார்க்கும்போது. புகைக்கவில்லையா?
அது கடினமான பணி.இவர்.,மகன், இதுவும் தான். உங்களுக்கு ஒன்றும் புரியாது,இங்கு நாங்கள் படும் கஷ்டம். இவர் ஒன்றும் கெட்டுப் போகலை,என்னோடு வீட்டுக்குவந்துவிடு.மேலும் படி. நினைத்தபடி கண்டக்டர் ஆகு,என் உயிர் உள்ள வரை தாங்குவேன் என இவர் சொல்ல வெறுப்பில் அவன் சிகரெட் பாக்கெட்டையே தூக்கி எறிந்தவன்.தலைக்கு மேல போயாச்சு. ஒன்னும் செயவதற்கில்லை,என்று சொல்லி, சிகரெட்டை உங்கள் கட்டாயத்துக்காக விடுகிறேன். போதுமா?என்கிறான். இவர் அவனிடம் எதாவது பெண்ணை பார்த்துள்ளாயா? என்றதற்கு,ஆம்,என் ட்ரூப்பிலேயே ஏராளமாக பெண்கள் உள்ளனர்.என்கிறான்.
ஒழுக்கமான இவருக்கு தன் மகன் பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வது வியப்பை அளிக்கிறது.அவனுடனும் தன் செல்ஃப் ரீவைண்டிங் காமிராவில் புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெறும் முன் அவனுக்கும் ராபர்ட் என அவன் பெயரெழுதிய உறையை தருகிறார்.அவனிடமும் எக்காரணம் கொண்டும் தான் மகள் ரோஸியை பார்க்கப்போவதை அவளிடம் தெரிவிக்காதே! என சத்தியம் வாங்குகிறார். ராபர்ட் அதை மீறி அவளுக்கு தொலைபேசுகிறான்.
ஃப்ரான்க் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் பயணிக்கையில்.அவரின் மூன்று பிள்ளைகளும் பேசும் குரல் ”டேவிட்டுக்கு மெக்ஸிக்கோவில் என்ன ஆனது என்று அப்பாவுக்கு சொல்லாதே” என வாய்ஸ் ஓவரில் டெலிபோன் கம்பிகள் மூலம் கடப்பது போல இவருக்கு பிரமை தட்டுகிறது.
லாஸ்வேகாஸ் நகரம்-மகள் தேடி:-
இப்போது பேருந்து நிலையம் வந்தவர்,11-00 மணிக்கு லாஸ்வேகாஸ் செல்லும் பஸ்ஸுக்கு பயணச்சீட்டு எடுத்தும்,தன் கைக்கடிகாரம் காட்டிய நியூயார்க் நகர மணியை பார்த்து இன்னும் நேரமிருக்கு என பேருந்தை கோட்டை விடுகிறார்.அகால வேளையில் ஒரு டைம்கீப்பர் வந்து இவரை பரிசோதித்து. மறுநாள் தான் பேருந்து.நீங்கள் ஒரு ட்ரக் லாரி பிடித்து ஊருக்கு வெளியே சென்று அங்கே வரும் லாஸ்வேகாஸ் போகும் ரயிலை பிடியுங்கள்.அதுவே ஒரு நாளை சேமிக்கும் வழி,என சொல்கிறார்.
அவ்வாறே கணவனை இழந்த ஒரு நடுத்தர வயதுள்ள மன உறுதி கொண்ட பெண்மணி ஓட்டும் ட்ரக்கில் லிஃப்ட் கேட்டு ஏறியவர்.அந்த ரயில்நிலையம் வருகிறார்.அவருடனும் புகைப்படம் எடுக்கிறார். உள்ளே ரயில் நிலையம் வந்தவர். அங்கே குளிரில் ”ஓ” என்று ஓலமிட்டுக்கொண்டிருந்த போதைக்கு அடிமையான ஒருவனை நெருங்கி மகனே !!!பசிக்கிறதா?அவன் அருகே வராதே!என்னை தொடாதே!என்று சொல்ல. நான் பணம் தந்தால் எதாவது சாப்பிடுவாய் தானே? என இறக்கம் காட்ட அவன் இவர் பர்ஸில் இருந்து எடுத்து நீட்டிய பணத்தை வெடுக்கென்று பிடுங்கிகொள்ள,இவர்,அவனிடம் நன்றி சொல்லமாட்டேன் என்கிறாயே?என்ன பிள்ளையப்பா நீ.. எனக்கேட்க. அவன் இவரின் பர்ஸை பிடுங்க,
இவர் அவனை கீழே தள்ள,அப்போது இவரின் கோட் பாக்கெட்டில் இருந்து இவரின் மருந்து டப்பா,கீழே விழ, அதை எடுத்தவன்.இவர் அதை கொடுத்துவிடு என அலறும் முன்னர்.அதை கீழே போட்டு மிதித்து நொறுக்குகிறான். மாத்திரைகள் பொடிப் பொடியாகின்றன.பின்னர் அங்கேயிருந்து ஓடிவிடுகிறான். இவர் மிகுந்த சிரமப்பட்டு அதை பொறுக்கி தன் கோட் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்கிறார்.பின்னர் ரயில் பிடிக்கிறார்.
காலையில் ரயில் இறங்கி தன் மகள் ரோஸியை (ட்ரூ பார்ரிமோர்) பார்த்து பெருமிதம் கொள்கிறார்.அவள் இவரை அன்போடு ஆரத்தழுவி, தன் பெரிய லிமோசினில் தன் பெரிய ஆடம்பர அபார்ட்மெண்டுக்கு அழைத்து போகிறாள். தான் பெரிய டான்சர் என்றவள்.போன வாரம் தான் பெரிய கச்சேரி செய்தேன் என சொல்லி இவரை வியக்க வைக்கிறாள்.கடல் போன்ற ஆடம்பர அபார்ட்மெண்டுக்குள் நுழைந்தவரை இவரின் அறை என்று பெரிய அறையில் தங்கவைக்கிறாள்.காரில் வருகையில் மகளிடம் தனக்கு தூங்க சோஃபா போதும் என்றவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
அந்த பெரிய எல்சிடி டிவியை போட்டோ எடுக்கிறார்.மகள் ரோஸி இவளை 800 அடி உயரத்தில் இருக்கும் ரிவால்விங் ரெஸ்டாரண்டுக்கு உணவு உண்ண அழைத்து போகிறேன் என சொல்கிறாள்.இவர் இங்கு நான்கு நாட்கள் தங்க விரும்புவதாய் சொல்ல,அவள் மகிழ்கிறாள். தன் மகளை போட்டொ எடுக்கப் போனவர். அறைக்கதவை யாரோ தட்ட, வெளியே இவளின் பக்கத்து வீட்டுக்காரி என ஜில்லி என்பவள் 10மாத கைக்குழந்தையுடன் வந்து சிறிது குழந்தையை கவனித்துக்கொள்ள முடியுமா?எனக்கு அவசரமாக வெளியே செல்ல வேண்டிய வேலை இருக்கிறது என்றவள்,திரும்ப 2 மணி நேரமாகும் என சொல்ல,குழ்ந்தையை வாங்கிகொண்ட ரோஸி வீட்டிலேயே உணவு தயாரிக்கிறாள்,சாப்பிடுகையில் ரிவால்விங் ரெஸ்டாரண்டுக்கு கூட்டி செல்லமுடியவில்லை என வருந்துகிறாள்.
பின்னர் ஜில்லி டெலிபோனில் அழைத்து. குழந்தையை குளிப்பாட்ட முடியுமா?என கேட்க மகள் ரோஸி குழந்தையை குளிப்பாட்டுகிறாள். அப்போது டெலிபோன் மணி அடிக்க யாரும் எடுக்காததால் வாய்ஸ் மெயிலில் சீக்கிரம் வீட்டை திரும்ப கொடுக்கவும். என ஓர் ஆண்குரல் சொல்ல, திகைத்த இவர், படுக்கை அறையில் இவர் மகள் ரோஸி,ஜில்லி,அந்த குழந்தை படத்தில் இருப்பதை பார்க்கிறார்.ஒன்றுமே புரியவில்லை.தன் தூள் தூளான மாத்திரையைகோட் பாக்கெட்டிலிருந்து எடுத்து விழுங்குகிறார்.மகள் குழந்தையை இவரிடம் தர அதை விளையாட்டு காட்டுகிறார்.குழந்தை சொந்த தாத்தா போலவே இவரிடம் ஒட்டிக்கொண்டது.
தன் மருத்துவருக்கு போன் செய்தவர்.அவர் வீட்டில் தானே இருக்கே? என கேட்க.ஆம் என்று சொல்லி போனை வைக்கிறார்.இனியும் மகளுக்கு தர்மசங்கடம் கொடுக்க விரும்பாதவர்.மறு நாளே கிளம்புகிறார்.தன் மருந்துகள் தீர்ந்து விட்டது என்று சொன்னவர் . இம்முறை தைரியமாக விமானம் ஏறுகிறார்.பறக்கும் விமானத்தில் விமானம் இறங்க 40நிமிடமாகும் என்கிற நிலையில் இவர் நாவரண்டு போக நீர் கேட்டவர், கழிவறைக்குள் செல்ல, இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, நெஞ்சுவலி எடுக்கிறது,முதலுதவி செய்யப்பட்டு ஸ்ட்ரெட்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றப்படுகிறார். இவரைப் போலவே இவரது ஸ்ட்ரோல்லர் பேக்கேஜும் விமானத்தின் கன்வேயர் பெல்டில் அநாதையாக சுற்றுகிறது. அது காண்போர் மனதை உருக்கிவிடும் (அஃறினை பொருட்கள் கூட நடிக்கும் என எனக்கு அன்றே தெரிந்தது)
1.ஃப்ரான்க் உயிர் பிழைத்தாரா?2.மகன் டேவிட்டை சந்தித்தாரா?
3.மகன் டேவிட்டுக்கு மெக்ஸிக்கோவில் என்னதான் ஆனது?
4.இவர் மகள் ஏமி ஏன் இவர் வருகையை விரும்பவில்லை
5.இவர் மகள் ரோஸி குளிப்பாட்டியது யார் குழந்தை?
போன்றவற்றை டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
முழுக்கதையும் படிக்க விழைவோர்,இக்காணொளியை தாண்டி வந்து படிக்கவும்.
=============0000==============
=============0000==============
ஸ்ட்ரெட்சரில் ஏற்றும்முன் ஃப்ரான்கிற்கு மீண்டும் ஒரு கனவு,இப்போது ஃப்ரான்க் அவரது வீட்டு தோட்டத்தில் இரவு விருந்தின் போது டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க,எதிரே சிறு வயது ஏமி,ராபர்ட்,ரோஸி அமர்ந்திருக்க, தங்கள் தற்போதைய வாழ்க்கையை பற்றி காரசாரமாக விவாதிக்கின்றனர். இக்காட்சி அழகிய கவிதை.நல்ல காட்சியாக்கம்.
ஸ்ட்ரெட்சரில் ஏற்றும்முன் ஃப்ரான்கிற்கு மீண்டும் ஒரு கனவு,இப்போது ஃப்ரான்க் அவரது வீட்டு தோட்டத்தில் இரவு விருந்தின் போது டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க,எதிரே சிறு வயது ஏமி,ராபர்ட்,ரோஸி அமர்ந்திருக்க, தங்கள் தற்போதைய வாழ்க்கையை பற்றி காரசாரமாக விவாதிக்கின்றனர். இக்காட்சி அழகிய கவிதை.நல்ல காட்சியாக்கம்.
ஏமியின் கணவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்கிறான்.அதனால் தான் இவரின் பேரன் ஜாக் அவரை மதிக்காமல் நடக்கிறான்.மகள் ஏமி தன் அலுவலக பார்ட்னருடனே ரிலேஷன்ஷிப்பை தொடர்கிறாள்,அன்று ஃப்ரான்கை பேருந்து நிலையத்துக்கு வழியனுப்ப சென்றவள், சந்தித்தது அவனைத்தான் என்றும். மகள் ரோஸி லெஸ்பியன் என்றும் அன்று குழந்தையை கொண்டு வந்து தந்த பெண் ஜில்லி அவளின் வாழ்க்கை துணை என்றும் ரோஸி செயற்கையாக கருத்தரித்து குழந்தை பெற்றாள்,இந்த விஷயம் அம்மாவுக்கும் தெரியும் என்று சொல்ல ரோஸி விம்மி அழுகிறாள். இவர் பரிதவித்துப்போகிறார். இவர் டேவிட் எங்கே? எனக்கேட்க, ராபர்ட் சிரிக்கிறான். மழை பெய்ய ஆரம்பிக்கிறது.குழந்தைகள் வீட்டுக்குள் ஓட இவர் மட்டும் மழையில் நனைந்தபடி அழுகிறார். தேற்ற,பதில் சொல்ல ஆளில்லாமல்.
இப்போது மருத்துவமனையில் ஃப்ரான்க் கண்விழிக்க,மகன் ராபர்ட்,மகள் ஏமி,ரோஸி மூவரும் அழுதபடி சூழ்ந்திருக்க,தனக்கு என்ன ஆனது என கேட்க,மூவரும் பயப்படும்படி ஒன்றுமில்லை என சொல்லி மழுப்பவும்,இவர் கோபத்தில் எனக்கு ஹார்ட் அட்டாக் தானே வந்தது?எனக்கேட்க?மூவரும் மவுனம் சாதிக்கின்றனர்.
இவர் நீங்கள் உங்கள் அம்மாவிடம் எல்லா சுகதுக்கங்களையும் பகிர்ந்தீர்கள்,அவளும் உயிருடன் இருந்தவரை என்னிடம் நல்லவற்றையே பார்த்து பார்த்து சொன்னாள். ஆனால் நல்லது மட்டுமேவா வாழ்க்கை, கெட்டதையும் கேட்க தயாராக இருக்கிறேன்.,ஆனாலும் ஒருவரும் உண்மையை சொல்ல மாட்டேன் என்கிறீர்களே?என குறைப்படுகிறார்.
இப்போது கேட்கிறேன் டேவிட் எங்கே?அவனுக்கு ஆபத்து என நான் கனவில் கண்டேன், உண்மை தானே?அவன் எங்கே?என கேட்டும்,மூவரும் மழுப்புகின்றனர். இறுதியாக டேவிட் மெக்ஸிக்கோ சென்றிருக்கும் போது அங்கே கோகெய்ன் உட்கொண்டவன் ஓவர்டோஸ் ஆகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டான் என்கின்றனர். இவரால் நம்பவே முடியவில்லை.இதை ஏற்க மறுக்கிறார். ஆனால் உண்மை அது தானே?
சில நாட்களில் ஃப்ரான்க் மீண்டும் நியூயார்க் செல்கிறார். அங்கு மகன் டேவிட்டின் அபார்ட்மெண்ட் அருகே உள்ள ஆர்ட்கேலரி சென்றவர் அங்கே மகனின் பெயிண்டிங் இல்லாததைக்கண்டு ஏமாற்றமடைகிறார்.அங்கே இருந்த பணிப்பெண்ணிடம் டேவிட் வரைந்த படம் ஏதேனும் இருக்கிறதா? எனக்கேட்க.அவள் இவரின் விலாசம் வாங்குகிறாள்,அப்போது இவரின் பெயரை வைத்து டேவிட்டின் தந்தை எனக்கண்டவள்,இவர் வெளியேறி சாலையில் கலப்பதை கண்டு ஓடி வருகிறாள்.
டேவிட் மிகவும் நல்ல மனிதன் என்கிறாள். அவரின் இழப்புக்கு வருந்துகிறாள்.ஆர்ட் காலரி ஸ்டோர் ரூமுக்கு அழைத்துப்போனவள் அங்கு டேவிட் வரைந்த இன்னொரு ஓவியத்தின் உறையை பிரித்து இவரிடம் காட்ட இவருக்கு நெக்குருகி கண்ணில் நீர் கோர்க்கிறது,.ஆம் அவன் வரைந்திருந்தது டெலிபோன் கேபிள்களை கொண்டு செல்லும் கம்பங்கள் தான்.அதை வாங்கி வீடு வருகிறார்.
தன் மனைவியின் கல்லறைக்கு சென்று மனைவியிடம் மனம் விட்டு பேசுகிறார் .இப்போது அவளிடம் இவர் சொல்லுகிறார்.”யாவரும் நலம்” என்று.அதில் டேவிட் மட்டும் இங்கே இல்லை அவன் இந்த கிருஸ்துமஸ் பண்டிகையை உன்னுடன் கொண்டாடுவான் என்றும் சொல்கிறார்.தன்னையும் தேற்றிக்கொள்கிறார்.
இப்போது தனக்கு டேவிட்டின் வீட்டுக்கு வந்த எல்லா தபால்களும்,ரீடைரக்ட் செய்யப்பட்டு இவர் வீட்டுக்கு வர,அதனூடே இவர் அவன் வீட்டில் விட்டு வந்த கடிதமும் இருக்க,அதை பிரிக்கிறார்.அதனுள் இவர் சிறுவயதில் அவனை எடுத்த போட்டோவும்,கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டையும் இருக்க.இவர் அந்த படத்தை அலமாரியில் வைக்கிறார்.
இதோ கிருஸ்துமஸ்ஸும் வந்தே விட்டது,இந்த முறை நிச்சயம் மகன்களும் மகள்களும் வருவர் என ஆசையுடன் வீட்டை ஒழுங்குபடுத்தி, தோட்டத்தை பராமரித்து, பேரன் நீந்த பிளாஸ்டிக் நீச்சல் தொட்டியில் காற்றடித்து, தண்ணீர் நிரப்புகிறார். சூப்பர் மார்க்கெட் சென்றவர் விலையுயர்ந்த பிரிட்டிஷ் ஒயின்களையும், புதிய வான்கோழி இறைச்சியை யும், தேர்ந்தெடுத்து வாங்குகிறார். இப்போது சொன்னபடி ராபர்ட் வருகிறான். ஏமி மகன் ஜாக்குடன் வருகிறாள், ஏமி தற்போது தன் பிஸினெஸ் பார்ட்னருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சொல்லுகிறாள்.
ரோஸி தன் வாழ்க்கைதுணை ஜூலியுடனும் குழந்தையுடனும் வருகிறாள். மக்கள் மூவரும் சேர்ந்து ஃப்ரான்க் புதிதாய் வாங்கி வந்த கிருஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கின்றனர். அப்போது ஃப்ரான்க் வான்கோழியை சமைத்து வெளியே எடுக்கிறார். ஏமி வான்கோழி இன்னும் 40 நிமிடங்கள் வேக வேண்டும்,அம்மா அப்படித்தான் செய்வாள் என சொல்ல, ஃப்ரான்க் இல்லையம்மா, இதுவே போதும்,40 வருடங்களாக உன் அம்மா அதிகமாய் வேக வைத்த வான்கோழியை தான் சாப்பிட்டு வந்தேன்.ஒரு முறை கூட கோழி அதிகம் வெந்துவிட்டது என்று சொல்ல எனக்கு மனம் வந்ததில்லை. என்கிறார். அனைவரும் வியப்புடன் இப்படிப்பட்ட அப்பாவிடமா அம்மாவும் நாமும் பல விஷயங்களை மறைத்தோம் என திகைக்கின்றனர்!!!.
”இப்போது இந்த குடும்பத்தில் யாவரும் நலம்.”படத்தின் பெயர் போடுகையில் ஃப்ரான்க் தன் மேனுவல் காமிராவில் எடுத்த மாக்ஸி சைஸ் படங்கள் பக்கவாட்டில் ஓடுகின்றன. நம் அப்பாவை எங்கேயிருந்தாலும் தேடி பிடித்து அன்பு செய்ய மனம் துடிக்கிறது!!!!அது தான் படத்தின் வெற்றி,”வெல்டன் அண்ட் தாங்க்யூ ராபர்ட்.”
படத்தின் அற்புதமான இசை டாரியோ மரியனெல்லி,நெஞ்சையள்ளும் ஒளிப்பதிவு ஹென்றி ப்ரஹாம். படத்தின் துவக்கத்தில் வரும் (I Want to) Come Home என்னும் பாடலை கேட்கத் தவறாதீர்கள்.
=============0000==============