17 ஒடுக்கப்பட்ட மக்களின் சிதைகள்,அதுவும் உடல்களை வாங்க மறுத்த வீட்டாரை துச்சமாக எண்ணி அரசே வைத்த அவசர கொள்ளி இது, இவர்கள் உயிரை எத்தனை துச்சமாக எண்ணியிருந்தால் அந்த ஜவுளிக்கடைக்காரன் சிவசுப்ரமணியம் தன் வீட்டு கருங்கல் சுற்றுச்சுவரை ( 6 மீட்டர் - 4 ஆள் உயரம் ) 20 அடி உயரத்தில் மலினமான தரத்தில், plinth (belt) beam, @7' level tie beam , intermediate pillar posts, retaining stiffener wall என எதுவுமே இன்றி அமைத்திருப்பான்?
அரசு அதிகாரிகளும் கைக்கூலி வாங்கிக்கொண்டு அந்த நாசகார சுவரை எழுப்ப உதவியுள்ளது?அந்த ஈனப்பிறவி முதலாளி, அந்த அதிகாரிகள்,என எல்லோரும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும், இவ்வழக்கை குன்ஹா போல லஞ்சம் வாங்காத நல்ல நீதிபதி விசாரிக்க வேண்டும்.
படத்தில் ,தன் கைகளில் பலியான குழந்தைகள் புகைப்படங்களுடன் திரு.செல்வராஜ், இவர் டீகடையில் வேலை செய்கிறார்,மனைவியை இழந்தவர், இந்த புத்திர சோகத்திலும் தன் குழந்தைகள் ராமநாதன்(11 ஆம் வகுப்பு) மற்றும் ஸ்வேதாவின் ( கல்லூரி 2ஆம் ஆண்டு) கண்களை தானம் செய்த தயாள குணத்தைப் பாருங்கள், அது தான் ஏழைகள் குணம், இறைவன் இருப்பிடம்.
#தீண்டாமைசுவர்,#மேட்டுப்பாளையம், #செல்வராஜ்,#20அடிஉயரசுவர்