தூண்டில் மீன் (1977) படத்தின் இயக்குனர் ரா.சங்கரன் அவர்கள் ( மிஸ்டர். சந்திரமௌலி) இவரின் உதவி இயக்குனர் பாரதிராஜா அவர்கள்,ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு 1974, தேன் சிந்துதே வானம் 1975, தூண்டில் மீன் 1977 மூன்று படங்கள் இவருடன் பணியாற்றினார், இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா இவருடன் கடைசியாக பணிபுரிந்து விட்டு 16 வயதினிலே படம் இயக்கச் சென்றாராம், இதை இயக்குனர் ரா.சங்கரன் சாய் வித் சித்ரா பேட்டியில் பகிர்ந்தார்.
படத்தில் லட்சுமி மோகன் சர்மா தம்பதிகள் கணவன் மனைவியாக நடித்திருந்தனர், இவர்கள் 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து 1980 வரை இணைந்து வாழ்ந்தனர்,
மோகன் சர்மா புனே திரைப்படக்கல்லூரியில் நடிப்பு பயின்ற மாணவர், தேசிய திரைப்பட ஜூரி உறுப்பினர் மற்றும் இந்திய பனோரமா ஜூரி உறுப்பினராக இருந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 15 திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.நடிகர் , இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.
இப்படத்தின் இசை மெல்லிசை மாமணி வி.குமார் அவர்கள், இலங்கை வானொலி காலத்தில் இவரது இனிமையான பாடல்களை , படம் ஓடியது ஓடவில்லை என்ற குறுகிய எண்ணமின்றி அடுத்தடுத்து ஒலிபரப்பிக்கொண்டே இருப்பார்கள், mono காலத்தின் முக்கியமான இசையரசர் வி.குமார் அவர்கள்.
இதில் கவிஞர் வாலி எழுதிய இரண்டு பாடல்களும் அற்புதமானவை, இல்லற இன்பத்தின் மேன்மையை பிரதிபலிக்கும் வரிகள் கொண்டிருக்கும்.
1.வாழ்வில் சௌபாக்கியம் வந்தது பாடல் சுசீலாம்மா,எஸ்பிபி பாடியது
2.என்னோடு என்னன்னவோ ரகசியம் பாடல் K.ஸ்வர்ணா(v.குமார் மனைவி) , மற்றும் P.ஜெயச்சந்திரன் பாடியது,
ஆனால் L.P.உறையில் தவறாக P.சுசீலா என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடல் துவங்கும் காட்சி சுவாரஸ்யமானது, பிரிந்த கணவரை போட்டோவில் லட்சுமி பார்க்கையில் அங்கே படத்தில் உள்ள தம்பதிகள் உயிர் கொண்டு ஒரு ஆப்பிள் கடித்த படி போட்டோ ஃப்ரேமிற்குள் ஆடுகின்றனர், அப்படியே காட்சி விரிந்து பூங்காவிற்குள் சென்று ஆடுகின்றனர், படத்தின் ஒளிப்பதிவு n.k.விஸ்வநாதன் அவர்கள்.
இயக்குனர் பாரதிராஜா பற்றி இயக்குனர் ரா.சங்கரன் சாய் வித் சித்ரா பேட்டி
https://youtu.be/XrqqsJPGFfg
#தூண்டில்_மீன்,#மோகன்_சர்மா,#லட்சுமி,#ரா_சங்கரன்,#வி_குமார்,#nk_விஸ்வநாதன்