நான் வாழ வைப்பேன் (1979) திரைப்படத்தில் பல்லாவரம் மலை ஜமீன் பங்களா வருகிறது, அப்போதைய 80,90 படங்களில் இந்த மலை உச்சி பங்களா இடம்பெறும், காரணம் சென்னைக்கு அருகில் எளிதாக சண்டைக்காட்சிகளை திகில் காட்சிகளை படமாக்க கிடைத்த செலவு குறைந்த ஷூட்டிங் ஸ்பாட், அன்றைய 90 களில் ஆனந்த் சினி சர்வீஸ் ஜெனரேட்டர் பொருத்திய வாகனம் இந்த மலைச்சாலையில் ஏறாத நாள் குறைவு, பல்லாவரம் மலையில் படப்பிடிப்பு நடந்தால் அது மலைக்கு தொட்டடுத்து ஜமீன்பல்லாவரம், மூவரசம்பட்டு, கீழ்கட்டளை, திரிசூலம் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு தெரிந்து விடும், யாருக்கும் சொல்லாமல் வகுப்பை மட்டம் போட்டு படப்பிடிப்பு பார்த்துவிட்டு மதிய உணவு இடைவேளைக்கு பின் ஒரு குழு பதுங்கியபடி வகுப்பிற்கு வருவர், மற்றொரு குழு உணவு இடைவேளைக்கு அடுத்து ஸ்தலம் விட்டு படப்பிடிப்பு பார்க்கப் போவார்கள்,இப்படித்தான் பல்லாவரம் மலை எங்கள் சினிமா ஆர்வத்தை வளர்த்தது,அப்படித் தான் நடிகர்கள் வந்து இறங்கும் வெளிநாட்டு கார்களை மிக அருகில் தொட்டுப் பார்த்தேன்.
இந்த மலை உச்சி ஆலமரம் அத்தனை பெரியது, அத்தனை பெரிய காற்றாலை போல காற்று தருவது,
இந்த ஜமீன் பங்களாவை பல நூறு படப்பிடிப்புகள் நடத்தி சிதைத்தும் விட்டனர், இன்று படத்தில் உள்ள தூண்களில் எதுவும் மிச்சமில்லை.
இப்போது இந்த மலை உச்சிக்கு ஏர்போர்ட் சார்பில் காவலிருக்கும் போலீஸார் யாரையும் அனுப்புவதில்லை,ரன்வே பாதுகாப்பிற்காக வேண்டி, இதே போலவே st.thomas mount church மலை மீதும் போலீசார் தொலைநோக்கியுடன் காவல் இருக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர்
M. விஸ்வநாத் ராய் ஈஸ்ட்மென் கலர் ஒளிப்பதிவில் விற்பன்னர்,பாரத விலாஸ், பாபு, எங்கிருந்தோ வந்தாள் என பல படைப்புகளை ஒளிப்பதிவு செய்தவர்,இதில் இந்த பங்களாவை முழுக்க worm eye view ல் இருந்தே படமாக்கியிருக்கிறார், இந்த ஜமீன் பங்களா மீது ஒரு பெரிய குவிமாடம் உண்டு, அது இந்த கோணத்தில் பதிவாகவில்லை.
பல்லாவரம் மலை பற்றி முன்பு எழுதியவை.
https://m.facebook.com/story.php?story_fbid=10159304432196340&id=750161339&mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=10159161259576340&id=750161339&mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=10159903958501340&id=750161339&mibextid=Nif5oz