நான் வாழவைப்பேன் (1979) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் பப்லு பாருங்கள்,இவருக்கு credit மாஸ்டர் பப்லு என்றே வந்தது,
இப்படம் வந்து 43 வருடங்களாகிறது, அப்போது 13 வயதில் இப்படத்தில் சிவாஜியின் தம்பியாக நடித்துள்ளார் பப்லு,இப்போது 56 வயது.
தமிழ் சினிமாவின் சூத்திரம் ஒன்று உண்டு, இதை இரு கோடு தத்துவம் என்பார்கள், அதாவது ஒரு கோட்டை அழிக்காமல் சிறிதாக்க அதன் அருகில் பெரிய கோட்டை வரைவதாகும், கதாநாயகனின் வயதைக் குறைக்க சமவயதோ அல்லது நாயகனை விட வயது குறைந்த நடிகையை நாயகனுக்கு அம்மாவாக நடிக்க வைக்க வேண்டும், மிகவும் இளைய வயதுள்ள குழந்தை நட்சத்திரத்தை தம்பியாக தங்கையாக தோன்ற வைக்க வேண்டும், இளைஞர்களை கதாநாயகனுக்கு நண்பர்களாக தோன்ற வைக்க வேண்டும், மிகவும் இளம் பெண்ணை (~13+) நாயகியாக தோன்ற வைக்க வேண்டும்,