வீட்டிற்கு மங்களூர் ஓடுகள் கொண்டு கூரை அமைக்கையில் களிமண் ஓடுகளின் அச்சில் வார்க்கப்பட்ட கண்ணாடி ஓடுகளை தேவைப்பட்ட இடங்களில் வேய்ந்தால் அறைக்குள் வெளிச்சம் நன்கு வரும், தவிர மழைக்காலங்களில் ஒழுகாமல் இருக்கும்,
இது india mart ல் மகாராஷ்ட்ர மாநிலம் மற்றும் பெங்களூர் வியாபாரகளிடம் கிடைக்கிறது, ஒரு ஓடு 450₹ ,550₹ ,முதல் ₹700வருகிறது,
சென்னையில் இருப்பவர்கள் உள்ளூர் கூரை ஓடுகள் கடையில் தேடி அலைந்து, இந்தப் படம் காண்பித்து ஆர்டர் செய்து வாங்கினால் நிச்சயம் விலை குறையும்,
இந்த ஓடு வருவதற்கு முன்பாக
6 mm கண்ணாடியை ஓட்டின் நடுவே பொருத்தி சிமெண்ட் கொண்டு நாலாபுறமும் பூசுவோம், அது காய்ந்து நகர்ந்து விடும், மழைக்கு ஒழுகும், அடிக்கடி குரங்கு வரும் இடங்களில் அந்த கண்ணாடியை உடைத்து விடும்.இந்த ஓட்டில் இரண்டு grooves 2 tounge உள்ளதால் நல்ல பிணைப்பு இருக்கும்.
புதிய வீடு கட்டுபவர்கள் ஸ்டீல் rafters கொண்டு மங்களூர் ஓடு அமைத்து செலவை மிச்சம் செய்யலாம்.மங்களூர் ஓட்டில் சூடு இறங்காமல் தடுப்பதற்கு அடியில் flower tiles வேயலாம், அது அறைக்குள் சூட்டை குறைக்கும்.
தொடர்புடைய மற்றுமொரு பதிவு
#கண்ணாடி_ஓடு,#மங்களூர்_ஓடு,#glass_mangalore_tiles