கொல்கத்தாவையும் ஹவ்ராவையும் இணைக்கும் ஹவ்ரா எஃகு (tata tiscon steel)பாலத்தை பாதுகாப்பது கடும் செலவு பிடிக்கும் செயல், இயற்கை சீற்றத்தில் இருந்து இந்த பாலத்தை ஆண்டு முழுவதும் பாதுகாக்க வேண்டும், பறவைகள் எச்சத்தில் இருந்து இந்த பாலத்தை ஆண்டு முழுவதும் பாதுகாக்க வேண்டும்,வாகனங்கள் இந்த பாலத்தின் மீது அதிகவேகத்தில் செல்லாமல் பாதுகாக்க வேண்டும், மனிதர்களின் சிறுநீர், மலம்,குட்கா மாவா கொல்கத்தா பான் பீடா எச்சத்தில் இருந்து இந்த பாலத்தின் உறுப்புகளை அரித்து துருபிடிக்காமல் காப்பாற்றுவது பிரம்மப் பிரயத்தனம் போன்றது.
இப்போது இந்த பாலத்தின் ஒவ்வொரு உறுப்பிலும் ஒரு CCTC கேமரா என 200 கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு அறை வழியே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் விதி மீறல்கள் செய்பவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டிக்கப்படுகிறார்களாம்,
வருடா வருடம் பாலம் முழுதும் மராமத்து செய்யப்பட்டு அலுமினிய பெயிண்ட் அடிக்கப்படுகிறது, பறவையின் எச்சம் விழுந்தவுடன் அதற்க்கான சிறப்பு துப்புறவு பணியாளர்கள் மூலம் எச்சம் விழுந்து காய்ந்து போவதற்க்குள் துடைக்கப்படுகிறது,
கணிசமான பாதசாரி பீடாவாயர்கள் புகையிலை பாக்கும், சுண்ணாம்பும் கலந்து மெல்லும் கலவையைத் (குட்கா மற்றும் பான்) துப்புவதால் பாலம் அவ்வப்பொழுது கணிசமாக சேதமடைந்துள்ளது.
2011 இல் போர்ட் டிரஸ்ட் அதிகாரிகளின் தொழில்நுட்ப ஆய்வு, தூண்களை பாதுகாக்கும் எஃகு ஹூட்களின் thickness 2007 ஆம் ஆண்டின் சோதனைப்படி 6மில்லிமீட்டரில் இருந்து மூன்று மில்லிமீட்டருக்கும் குறைவாக அரித்துப் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
பாலத்தின் முக்கியமான குறுக்கு கர்டர்கள் மற்றும் ஹேங்கர்களின் சந்திப்பில் நீர் கசிவதைத் தடுக்க ஹேங்கர்களுக்கு அடிவாரத்தில் அந்த ஹூட்கள் இன்றியமையாதவை,
மேலும் இந்த ஹூட்களுக்கு சேதம் ஏற்படுவது பாலத்தின் பாதுகாப்பை குலைக்கும். எஃகு தூண்களின் அடிப்பகுதியை fiberglass casing (கண்ணாடியிழை உறை) செய்து மூடுவதற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ₹20 லட்சம் ரூபாய் செலவழித்து,எஃக்கு அடித்தளத்தில் உறுப்புகளின் non exposed surfaces ஐ அதன் பழமை மாறாமல் , போர்த்தியதை இணைப்பு படத்தில் பாருங்கள்.
26,500 டன் மொத்த எடை கொண்ட கட்டமைப்பு இந்த ஹவ்ரா புதிய பாலம், 1943 ஆம் ஆண்டு கொல்கத்தா ஹவ்ரா இரு நகரங்களை இணைக்கும் ஒரு பழைய platoon பாலத்திற்கு மாற்றாக அதன் தடத்தின் மீது அமைக்கப்பட்டது.
கட்டப்பட்ட காலத்தில் இது உலகின் நான்காவது நீளமான கேண்டிலீவர் தொங்கு பாலமாக இருந்தது.
இந்த ஹவ்ரா பாலம் 2,150 அடி நீளம், அதன் அடித்தளத்திலிருந்து 280 அடி வரை உயரம்,கேட்வே டு கொல்கத்தா என்ற அடைமொழியுடன் உலகின் ஆறாவது நீளமான எஃகு பாலமாக இன்றும் புழக்கத்தில் உள்ளது ஹவ்ரா பாலம்.26,000 லிட்டர் ஈயம் இல்லாத பெயிண்ட் கொண்டு மூன்று முறை பெயிண்ட் செய்தால் 5 வருடங்களுக்கு நீடித்து உழைக்கிறது.
வாகன மாசு மற்றும் வானிலை மாற்றங்கள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளாலும் இந்த பாலம் அரிப்புக்குள்ளாகிறது, அலுமினிய வர்ண பூச்சு வேலையின் முதல் பகுதியாக துரு மற்றும் பழைய வண்ணப்பூச்சுகளை அகற்றுகின்றனர்.
பின்னர் முழுக்க சிறப்பு ப்ரைமர் பூச்சு பூசுகின்றனர், இது அரிப்பு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. அதைத் தொடர்ந்து இறுதி ரப்பர் அடிப்படையிலான வண்ணப்பூச்சு பயன்படுத்தப்படும்.அதன் பிறகு மூன்றாவதாக கூடுதல் பாதுகாப்பிற்கு அலுமினிய வண்ணப்பூச்சு பூசப்படுகிறது,
மாவா, பீடா, பான்மசாலா, பான்பராக் ,பீடா, தம்பாக்,கைனி, குட்கா இவை மனிதர்களுக்கு மட்டும் கேடல்ல, நம் சுற்றுச்சூழலுக்கே கேடு, என் முன்னால் யார் துப்பினாலும் துப்பாதீர்கள் என்று சொல்கிறேன் , காரணம் , அந்த மடையர்களுக்கு அது தவறு என புரிய வேண்டும், அரசு பொது இடங்களில் எப்படி புகைப்பதை தடை செய்ததோ அதே போல துப்புவதை தடைசெய்து , அந்த சமூக விரோதிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
#ஹவ்ரா_பாலம்,#கொல்கத்தா,#பான்,#துப்புதல்,#பீடாவாய்ர்கள்,#மாவாவாயர்கள்,#குட்கா