வாழ்விலோர் திருநாள் -ஹரிதாஸ்
எம்கே தியாகராஜ பாகவதர் வெள்ளைக் குதிரையில் வீதிக்கு வந்து பெண்களை சைட் அடிக்கும் பாடல்,பாடலில் பண்டரி பாய் க்ளு என்று எதிர்பாட்டு பாடி சுழித்து விட்டு கால்கள் தெரிய ஓடுவதைப் பாருங்கள்,பண்டரிபாயை பாகவதர் பாடலின் இறுதியில் குதிரையில் துரத்திக் கொண்டு போவதைப் பாருங்கள்,அவரை நோக்கி தன் மோதிரத்தை கழற்றி எறிவதைப் பாருங்கள்.
“வாழ்விலோர் திருநாள் – இன்றே
மான்விழி மடவார் கும்பல் வீதிகளெங்கும்
கண்ஜாடை செய்யும் பெண் இவள் பார்வை
காமன் மலர்க்கணை தானோ
விரைவொடு செலும் என் மனமிவளோடு
தெருவென நினையாதேனோ
முகிலோ மயிலின் தோகையிதாமோ“
பாடல் வரிகள்: பாபநாசம் சிவன்
இசை:ஜி.ராமநாதன்
PS:செம சைட் ,செம விசில்,செம கண்ணடிப்பு, பன்னீரில் குளித்து 100 பவுன் தங்கத்தட்டில் சாப்பிட்டவர்,இது சொந்த குதிரையாம்,இது போல பளபளவென்ற வெள்ளைக் குதிரையை வைத்து ஸ்ரீரங்கம் கோயிலில் விடியலில் திருப்பள்ளி எழுச்சி பாடி சுவாமியை எழுப்புவார்கள் பார்த்திருக்கிறேன்.
இசைமேதை ஜி.ராமநாதன் இசைஞானிக்கு என்றும் ஆதர்சம், அதன் காரணம் இது கேட்டால் புரியும்.
#வில்_எனும்_புருவம்_வாளே,#வாழ்விலோர்_திருநாள்,#எம்கேடி,#தியாகராஜ_பாகவதர்,#ஜி_ராமநாதன்,#பாபநாசம்_சிவன்