ஆவணப்பட இயக்குனர் K. ஹரிஹரன்,இவரது பம்பாய் வீட்டில் தான் சத்யஜித்ரேவின் சாருலதா படப்பிடிப்பு நடந்தது,இவர் தந்தை ஈஸ்ட்மென் கோடாக் ஃபிலிம் நிறுவனத்தில் உயர் அதிகாரி, இவர் பால்யத்தில் சந்திக்காத சினிமா இயக்குனர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்களே இல்லை, தன் சினிமாபடிப்பை புனே திரைப்படக் கல்லூரியில் முடித்தவர்.
1982 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் பற்றி ஆவணப்படம் எடுக்க பம்பாயில் இருந்து திருநெல்வேலி வந்து அவர் பற்றி தகவல்கள் திரட்டுகிறார்.
பட்டவர்த்தனமாக அதில் பாரதியார் பற்றிய பல உண்மைகளைச் சொல்ல வேண்டும், அது சமூகத்தில் நிலவும் துதிபாடி சூழலுக்கு ஒவ்வாது என்று அந்த ஆவணப்படத்தை நண்பர் அருண்மொழியின் அறிவுரைப்படி கைவிடுகிறார்.
திருநெல்வேலியில் இருக்கும் சிமெண்ட் தொழிற்சாலைகள் வெளிவிடும் நச்சுப் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை , மக்களுக்கும் ஆலைத் தொழிலாளிகளுக்கும் ஏற்படும் நிரந்தர சுவாசக் கோளாறு பிரச்சனைகளை, ஆலைத் தொழிலாளர் நேர்கொள்ளும் சம்பள பட்டுவாடா இன்னல்களை பற்றி ஒரு உண்மைக்கதை திரைப்படம் எடுக்கலாம் என நண்பர்கள் முடிவு செய்கின்றனர்.
படத்தின் தயாரிப்பாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் வழக்கறிஞருமான பாலை.N.சண்முகம்,அன்று தன் தாழையூத்து என்ற சிற்றூரில் சிமெண்ட் ஆலைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டவர்,
எனவே அந்த உண்மைக்கதையை k.ராஜேஷ்வர் திரைக்கதை எழுத L.வைத்தியநாதன் பாரதியார் எழுதிய பத்து பாடல்களுக்கு இசையமைக்க ஏழாவது மனிதன் திரைப்படம் உருவானது.
ஏழாவது மனிதன் என்ற பெயர்க்காரணம் சுவாரஸ்யமானது,தாழையூத்து என்ற சிமெண்ட் ஆலைகள் உள்ள ஊருக்கு சென்னையில் இருந்து வேலைக்கு சேர வருகிறார் ரகுவரன், இவர் கிராமங்களை நேசிப்பவர் , கம்யூனிச சிந்தனைகளில் நம்பிக்கை உள்ளவர், அவருக்கு ஆலையிலும் ஆலைக்கு வெளியேயும் புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர்.
ஆலையில் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராகத் திரண்டு அமைதிப் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் ஆறு பேர், அதில் புதிதாக வந்த இவர் ஏழாவதாக கடைசியாக இணைகிறாராம், அதனால் தான் ஏழாவது மனிதன்.( ஆனால் படத்தின் பெயர்க்காரணத்தை அழுத்தமாக எங்குமே justify செய்யவேயில்லை என்பது குறை)
படம் மிகவும் சுமாரான உருவாக்கம், திரைமொழி நடிப்புக்கான இலக்கணம் எதுவுமின்றி குருவித்தலையில் பனங்காய் வைத்தது போல இருந்தது,
LP ரெகார்டில் அருமையாக பாடி பதிவு செய்யப்பட்ட பத்துபாடல்கள் இருந்தாலும் படத்தில் அவை படமாக்கியதில் தொய்வாக,சோபையின்றி இருந்தது
இப்படத்தில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரனான ராஜ்குமார் பாரதி அவரது தாத்தா இயற்றிய மூன்று பாடல்கள் பாடியுள்ளது சிறப்பு,
படத்தின் நடிகர்களில் புதுமுகம் ரகுவரன் மற்றும் பாலாசிங்கிடம் நடிப்பில் பெரிய பொறுப்புணர்வு இருந்தது,16 வயதினிலே படத்தின் கோழி டாக்டரான சத்யஜித்தும் நன்கு துடிப்பாக நடித்திருந்தார், படத்தில் ரத்னா என்ற நடிகை நாயகியாக நடித்திருந்தார், கோமல் சுவாமிநாதன் இந்த ஏழு போராளிகளில் ஒருவராக தோன்றினார் , அவர்கள் வந்த காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டு இருந்தது,படத்தை நன்றாக கட் செய்திருந்து படத்தில் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை சொல்லி,படத்தின் ஒலிப்பதிவில் உள்ள குறைகளை களைந்திருந்தால் படம் வெகுஜனத்தின் கவனத்திற்கும் சென்றிருக்கும்.
படத்தை சமயோஜிதமாக சப்டைட்டில் உருவாக்கி இந்திய மற்றும் உலகப்பட விழாக்களில் திரையிட்டு பல விருதுகள் பெற்று சாதித்தனர் குழுவினர்,அதை பாராட்டியே தீர வேண்டும்,
1983 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசியவிருது இப்படத்துக்கு கிடைத்தது, இந்திய பனோரமாவில் அகில உலக திரைப்படத்திருவிழாவில் இப்படம் திரை யிடப்பட்டது,
பின்னர் ரஷ்ய நாட்டில் திரையிடப்பட்ட இப்படம் முதன் முறையாக அகில உலக விருதைப் பெற்ற சாதனையைப் பெற்றது, இப்படம் முறையே Afro–Asian Solidarity Award, மற்றும் Golden St. George விருதையும் பெற்றது.
படத்தின் மோசமான பிரதி யூட்யூபில் உள்ளது,Lip sink , சவுண்ட் பல இடங்களில் இல்லை.
இயக்குனர் k.ஹரிஹரன் (இவர் மலையாள இயக்குனர் அல்ல) தன் அசோசியேட் இயக்குனர் மற்றும் ஆபத்பாந்தவ நண்பரான ஆவணப்பட இயக்குனர் அருண்மொழி பற்றிய புகழாரம் இங்கே , ஏழாவது மனிதன் படத்தின் வேலைகள் அனைத்தையும் அருண்மொழியே செய்துவிட்டு, தன்னை திரைப்பட விழாக்களில் முன்னிறுத்தி அகில உலக அரங்கில் விருதுகள் பெற வைத்த அரிய பாங்கை இந்த பேட்டியில் உரைக்கிறார், A Rare Gesture in Indian cinema
https://www.thehindu.com/entertainment/movies/arun-mozhi-the-thotakaran-of-tamil-cinema/article29952353.ece/amp/
https://www.thehindu.com/features/metroplus/Lessons-from-cinema/article11638275.ece
#ஏழாவதுமனிதன்,#ஹரிஹரன், #ரகுவரன்,#பாலாசிங்,#அருண்மொழி