இன்று தன் 100 ஆம் வயதில் மறைந்த நீதியரசர் கிருஷ்ணய்யருக்கு அஞ்சலிகள்,100 வயதில் மறைவது என்பது கல்யாண சாவு,நீதியரசர் கிருஷ்ணய்யர் இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . மேலும் வழக்குரைஞர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல பொறுப்புகள் இவர் வகித்துள்ளார், அவர் தன் வாழ்நாள் முழுக்க மரணதண்டனை கூடாது என்று முழங்கி வந்திருக்கிறார்.
இந்திய சினிமாவில் அவரை தோன்ற வைத்து அவரின் மரண தண்டனை குறித்த முக்கியமான கருத்துக்களை பகிர வைத்த சாதனையையும் கமல்ஹாசன் தான் தக்க வைத்திருக்கிறார். விருமாண்டி படத்தில் இவருக்குத் தான் முதலில் நன்றி கூறுவார்கள்,அதன் பின்னர் டைட்டில் ஸ்க்ரோல்,அதன் பின்னர் கிருஷ்ணய்யர்[அப்போது 88 வயது] தோன்றி தன்னைப் பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டு மரணதண்டனை கூடாது என எடுத்துரைப்பார்.