வீட்டின் முன் பூதாகரமான நுழைவு ரேம்ப் Access Ramp அமைப்பது சரியான முறையா? நிச்சயம் இல்லை.
மழைவெள்ளத்தில் தன் வீட்டைக் காக்க வேண்டி வீட்டை ஐந்ந்து அடிகள் சாலையில் இருந்து உயர்த்திக் கட்டுவது தவறில்லை,ஆனால் இவர் வீட்டு ramp வீட்டின் நுழைவுக் கதவின் உள்ளிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்,
இந்த ramp ன் துவக்கம் (0 level) இவர் வீட்டின் எல்லையில் இருந்து தான் துவங்க வேண்டும்.இப்படி சாலையில் பத்து அடி ஆக்கிரமித்தபடி அல்ல, வீட்டின் முகப்பில் சாக்கடை ஓடுமானால் அதற்கு மேல் ramp கொண்டு மூட அதிகபட்சம் சாலையில் அதிகபட்சம் மூன்றடி அடி வேண்டுமானால் வளர்ந்து வரலாம்,
வீடு கட்டும்போது வீட்டின் தரை மட்டத்தை நான்கடி உயர்த்தி கொள்ளலாம், ஆனால் வாகன நிறுத்தும் இடத்தை சாலை மட்டத்திலிருந்து ஒன்றரை அடி முதல் இரண்டடி உயர்த்துவதே சரியாக இருக்கும் ,கார் ,பைக் உள்ளே போக வெளியே வர இந்த உயரம் பொருத்தமாக இருக்கும். வெளியே தார் சாலை புதிதாக கட்டுகையில் மட்டம் உயர்த்தப்படுகையில் கார் பார்க்கிங்கில் நீங்கள் வேய்ந்த பேவர் ப்ளாக் கற்களை பிடுங்கி மண் அடித்து அதே பேவர்களை உபயோகித்து மீண்டும் உயர்த்தலாம்,
வீட்டை ஆர்கிடெக்ட் , பொறியாளரை வைத்து கட்டினால் இது போல நுழைவு வாயில் Ramp ஐ ஊர் சாபம் வாங்காமல் ease slope Ratio விற்கு வடிவமைத்து கட்டித் தருவர்,
consultation fees பணம் மிச்சம் செய்ய கொத்தனார் மேஸ்திரியை நம்பிக் கட்டினால் இப்படித்தான், அவருக்கு 1:10 slope,1:12 slope,1:16 slope, 1: 8 slope எதற்கும் வித்தியாசம் தெரியாது,
எல்லாவற்றிற்கும் இப்படி bun போல மொழுகி வைத்து விடுவார். தலைமுறைக்கும் ஊர் சாபம் கிடைக்கும்.
இது போல சட்டத்தை மதிக்காமல் சாலையை ஆக்கிரமிக்கும் ஆசாமிகளை முனிசிபாலிட்டி கடுமையாக தண்டத் தொகை தீட்டி தண்டிக்க வேண்டும்,தவறும் பட்சத்தில் குழாய் இணைப்பு,மின் இணைப்பை துண்டிக்கலாம்.
30 அடி அகல சாலையில் இவர் பங்களா வீட்டின் ramp பத்தடியை பிடித்துக் கொண்டால் மீதம் இருபது அடி மட்டும் இருக்கும், பிற வீட்டாருக்கும் ,தீயணைப்பு வண்டி போவதற்கும் ,மழை வெள்ளம் வடியவும் இதர வாகன போக்குவரத்திற்கும் எத்தனை இடைஞ்சலாக அது இருக்கும்.
PS: நிறைய நண்பர்கள் தங்கள் வீட்டின் அருகிலும் இப்படி ராட்சத நுழைவு Ramp உள்ளதாக சொல்கின்றனர், அவர்களை நினைத்தால் பாவமாக உள்ளது, கவுன்சிலர்கள் தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்படாமல் பதவியில் இருக்கையிலேயே இப்படி உள்ளது, இது போல அத்துமீறல்களை நீங்கள் உயிருக்கு பயந்து புகாரளிக்காமல் இருக்கலாம் அல்லது அஞ்சாது இணையத்தில் ஐஜிக்கு போட்டோக்களுடன் ப்ரெசன்டேஷன் செய்து புகாரளிக்கலாம்,தீர்வு கிடைக்குமா? தெரியவில்லை,ஓட்டு கேட்டு வருகையில் அந்த ramp களை இடித்தால் ஓட்டு போடுகிறேன் என சொல்லுங்கள்.
நான் வடிவமைக்கும் கட்டிடத்தில் Ramp அமைக்கையில் முனிசிபாலிட்டி சாக்கடைக்கு மேல் Ramp வருகையில் மூடி கூட maintainance ற்கு எங்கு வர வேண்டும், எந்த அளவு எத்தனை எண்ணிக்கை வரவேண்டும் என காட்டியிருப்பேன்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#சாலை_ஆக்கிரமிப்பு,#எங்க_பாட்டன்_சொத்து,#Ramp,#ஊர்சாபம்