யாரும் தவற விடக்கூடாத பேட்டிகள் இவை,நடிகை குட்டி பத்மினி நல்ல நடிகை , சமூகத்தில் போராடி இந்த நிலையில் சாதித்தவர்.
1959 ஆம் ஆண்டு தன் மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி , 1965 ஆம் ஆண்டு குழந்தையும் தெய்வமும் படத்திற்காக தேசிய விருது வாங்கியவர், தொலைக்காட்சி நாடக தொழில் நுட்பத்தை சிங்கப்பூரில் தங்கி பயின்று சென்னை தொலைக்காட்சி விளம்பரதாரர் நிகழ்ச்சியில் தரமான நாடகங்களை தயாரித்து இயக்கியவர், பல சாதனைகளை சாதித்ததில் முதன்மையானவர்.
தன் வாழ்வின் முக்கியமான மூன்று தருணங்களில் தனக்கு கிடைக்க வேண்டியதை போராடிப் பெற்றவர்.
1.குழந்தையும் தெய்வமும் படத்தில் விருது வாங்க வரவழைக்கப்பட்டு , கடைசியில் நிராகரிக்கப்பட்ட ,தனக்கான தேசிய விருதை பிரதமர் இந்திராவின் சேலைத் தலைப்பை பற்றி இழுத்து முறையிட்டுப் பெற்றவர்.
2.சிங்கப்பூரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொழிற்நுட்பத்தின் மேற்கல்வி தனக்கு அடிப்படை கல்வித்தகுதி இல்லை என்ற காரணத்தால் மறுக்கப்படுகையில் சிங்கப்பூர் பிரதமர் லீ வான் க்யூ அவர்களை இவரின் கலைநிகழ்ச்சியின் போது பொது மேடையிலேயே வைத்து முறையிட்டு தனக்கான விசா, கல்வி அனுமதி மற்றும் உதவித்தொகையைப் பெற்றவர்.
3.சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் அரதப்பழசான ரசனை கொண்ட இயக்குனர் இவர் நிலையத்தில் விளம்பரதாரர் தயாரிப்பாளர் ஆக அடிப்படை கல்வித்தகுதி இல்லை ,இவரது விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்ற காரணத்தால் தொடர்ந்து இவரை நிராகரிக்க தனியாக புது டில்லி சென்று அப்போதைய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஜித்குமார் பாஞ்சாவை சந்தித்து தன் நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் உரிமை வாங்கியவர்.
இன்று தன் துறை சார்ந்து நூறு பேருக்கு மேல் வேலை தருபவர், அவர் பற்றி ஒவ்வொருவரும் அறியவேண்டும், தன்னம்பிக்கை தரும் பேட்டிகள் இவை
பாகம்1 https://m.youtube.com/watch?v=1em7kYxZ4No
பாகம்2 https://youtu.be/at3fIlgidWY
பாகம்3 https://youtu.be/-K-bhFYQ