ப்ளட் ஸ்டோன் (blood stone ) ( 1988)படம் பார்க்கையில் , ஒரு பிரம்மாண்டமான அருவி chasing காட்சி மறக்கமுடியாதது , ஒகேனக்கலில் இரு மலைக்குன்றுகளை இணைத்து தொங்கி ஊசலாடும் கயிற்றுப்பாலத்தில் ரஜினி நடுவில் நின்று இருக்க,
இடது புறம் துரத்தி வரும் எதிரிகள் இவருக்கு வேண்டி காத்து நிற்பார்கள், வலது புறம் பாலத்தை சில எதிரிகள் கொளுத்துவார்கள்,செய்வதறியாத ரஜினி படாரென 90 அடி உயரத்தில் கீழே உள்ள அருவியில் குதித்து விடுவார்,பாலமும் கழண்டு தொங்கி விழும், அக்காட்சி என் மனதில் freeze ஆகியிருந்தது,
சமீபத்தில் துலக்கானம் புகழ் மகாநதி சங்கரின் பேட்டி பார்க்கையில் ரஜினிக்கு அந்த டூப் போட்ட காட்சியை அழகாக விளக்கினார், ஸ்டண்ட் மாஸ்டர் தாஸ் இவரின் அசகாய சூர பராக்கிரமங்களை நன்கு அறிந்தவர் இந்த வாய்ப்பைத் தந்தாராம்,
இந்த ஆபத்து மிகுந்த ஸ்டண்ட் செய்கையில் இவருக்கு வயது 21 ஆம், இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் 123 என முடிக்கையில் தான் உடனே mark வைத்து குதித்ததை விவரித்தார்,
அப்போது ஒரு படம் நடித்தால் நாள் ஒன்றுக்கு 600 சம்பளம்,300 ரூபாய் பேட்டாவாம், இந்த ஆபத்தான ஸ்டண்ட் தான் இவர் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினர் அட்டை வாங்கியதும் செய்த முதல் ஸ்டண்டாம்.
அந்த அருவிக்கு சற்று தள்ளி தான் பல வருடங்களுக்கு முன்பு அடிமைப்பெண் படப்பிடிப்பு நடந்ததாம், அப்போது எம்ஜியாருக்கு வேண்டி சில ஊர்காரர்கள் டூப் செய்தனராம்,
அந்த அருவியில் விழுந்து யாரேனும் தற்கொலை செய்து கொண்டால் உடம்பு சுழலில் இருந்து வெளியே வரவே மூன்று நாள் ஆகுமாம், இவர் அந்தக் காட்சியை முடித்து வெளியே வந்ததும் பாறைத்திட்டில் அணைத்து வைக்கப்பட்ட ஒரு பரிசலில் ஒரு ஸ்ட்ரெச்சரும் டாக்டரும் இவருக்கு ஏதேனும் நேர்ந்தால் முதலுதவிக்கு வேண்டி தயாராக காத்திருந்தனராம்.
படத்தின் Title credits ல் இத்தனை பங்களித்த இவர் பெயர் இல்லை என்பது துயரம்,இவரது எஜமான் ஸ்டண்ட் மாஸ்டர் தாஸ் பெயர் மட்டுமே இருந்தது.
இன்று இது போன்ற ஆபத்தான காட்சிகளை எல்லாம் கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் கொண்டு எடுத்து விடுகின்றனர்,ஸ்டண்ட் மேன்கள் உயிர்பலிகளை அது பெருமளவில் தடுத்துள்ளது.
இது போல கரகர என குரல் சிலருக்கு அமைந்து விடும், எங்கள் பள்ளி வகுப்பில் ஒரு மாணவன் குரல் கரடு முரடாக இருக்கும், அவன் பெயரே யாருக்கும் தெரியாது, ஆசிரியர் முதல் சக மாணவர் வரை அவன் பெயர் " குரலு" தான்.
இத்தனை கரடுமுரடான குரலும் தோற்றமும் கொண்ட இம்மனிதர் சுத்த சைவமாக மாறி பத்து வருடமாகிறதாம், அகத்தியரின் சன்மார்க்க சங்க நெறி இயக்கத்தின் உறுப்பினராம்,வாரத்துக்கு இரு தினம் இவர் டாடா ஏஸ் வண்டியில் உணவு டேஸாக்கள் ஏற்றிச் சென்று பொது மருத்துவமனைகளில் அன்னதானம் வழங்குகிறார்.
அந்த பேட்டி இங்கே:
https://youtu.be/OziYXDatoZY
#மகாநதிசங்கர்,#துலுக்கானம்,#ப்ளட்ஸ்டோன்,#டூப்,#bodydouble,#ரஜினிகாந்த்