கிழக்கே போகும் ரயிலின் தெலுங்கு வடிவமான தூர்ப்பு வெள்ள ரய்லு திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது, இயக்கம் Bapu அவர்கள்,ஒளிப்பதிவு Ishan Arya
சுதாகர் நடித்த நாவிதர் வீட்டு புரட்சிக்கவிஞன் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன் நடித்தார், ராதிகா கதாபாத்திரத்தில் ஜோதி(அறிமுகம்), இருவரும் தத்தம் கதாபாத்திரத்தில் ஒன்றி செய்திருந்தனர், நிறைய தமிழ் திரைப்படங்களை மொழிமாற்றி மீண்டும் எடுக்கிறேன் என்று பல்லிக்க வைத்து விடுவார்கள், இதில் நன்றாக மூல வடிவத்தை சிதைக்காமல் தெலுங்கிற்கு ஏற்ப அழகாக படமாக்கியிருந்தார் இயக்குனர் பாப்பு,இவரை ஆந்திர ரசிகர்கள் மரியாதையுடன் பாப்புகாரு என்று நினைவுகூறுகின்றனர். நடிகர் மோகனை நாம் கிராமத்து வேடங்களில் அதிகம் பார்த்திருக்க மாட்டோம், இதில் நன்றாக பொருந்தியிருந்தார்., நடிகை ஜோதிக்கு அதன் பின்பு ஏறுமுகம் ரயில் பயணங்களில் புதுக்கவிதை என பல வெற்றிப்படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்தவர் 2007 ஆம் ஆண்டு தன் 44 வயதில் புற்றுநோயுடன் போராடி மரித்துவிட்டார்.
குறிப்பாக பஞ்சாயத்து தீர்ப்பின் படி மொட்டை அடித்து கைகளை பின்னால் கட்டி கழுதை மீது அமர வைத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்து வரும் காட்சியை நன்றாக செய்திருந்தார் மோகன், தமிழில் சுதாகர் போலவே தெலுங்கில் மோகனும் நிஜமாகவே மொட்டை அடித்திருக்கிறார்,அந்த நிரூபித்தே ஆக வேண்டிய கிராமத்து இளம் புரட்சிக்கவிஞன் கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தியிருந்தார்.
நாங்கள் சிறார்கள் பள்ளியில்,உனக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தனும் என சாதாரணமாக பேசிக் கொள்வோம்,அதற்கு அடித்தளமே இந்த இந்த கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் இந்தக் காட்சி தான் , காலங்காலமாக பல கிராமத்தாரால் வழங்கப்பட்ட குரூரமான தண்டனையை தோலுரித்துக் காட்டிய படம் இது .
இதில் தெலுங்குக்கு வேண்டி கூடுதல் கவர்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது, இசை எஸ்பிபி அவர்கள், பாடல்களை எஸ்பிபியும் சுசிலாம்மாவும், S.P.சைலஜாவும் பாடியிருந்தனர், பாடல்களை கவிஞர் ஆருத்ரா, ஜலதி எழுதியிருந்தனர்.
தமிழில் கிழக்கே போகும் ரயில் பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள ஐவர்மலையில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது, இயக்குனர் மீண்டும் இப்படத்தை இந்தியில் Saveray Wali Gaadi என்று சன்னி தியோல் ,பூனம் தில்லான் , தர்மேந்திராவை (பட்டாளத்தான் ) வைத்து எடுக்கையிலும் ஐவர் மலையில் தான் படமாக்கினாராம்.,
பழனி ,கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐவர்மலை.
தெலுங்கில் இப்படம் ராஜமுந்திரியில் தமிழகத்தை ஒத்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.
தமிழில் ஒரு வருடம் ஒடிய படம் தெலுங்கில் நூறுநாட்கள் ஓடியது, இந்தியில் படம் தோல்வி.
பாடல் மெட்டுகள் தமிழில் இருந்து முற்றிலும் வேறான மெட்டில் அமைந்தவை, இசைஞானியின் signature மெட்டுகளில் சிறிய portion ஐ எடுத்து கோவில் மணி ஓசை பாடலிற்கு மாற்றான பாடலில் முயன்று பார்த்திருந்தார் எஸ்பிபி,எஸ்பிபி இசையமைத்த படங்களை பார்க்க விழைவோரும் இப்படத்தை கண்டிப்பாக பாருங்கள்.
#தூர்ப்பு_வெள்ள_ரய்லு,#மோகன்,
#ஜோதி