2015 டிசம்பர் செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை தண்டோரா போடாமல் நடுநிசியில் திறந்து விட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய திகில் இன்னும் மறக்கவில்லை,
எந்த வருடமும் மழைநாளில் எங்கள் பம்மல் அருகே வெறும் இரண்டு கிலோ மீட்டரில் உள்ள அடையாறு பெருக்கெடுத்து ஓடும், பம்மல் அருகே உள்ள மூங்கில் ஏரி நிரம்பி வழிந்து உடையும், தெருக்களில் வெள்ளம் ஆறாக ஓடும், இப்போது தெருக்களில் மழைநீர் உடனுக்குடன் வடிந்து விடுவதைப் பார்க்கையில் இந்த அரசின் மீது நன்மதிப்பு ஏற்படுகிறது
இந்த பெருமழைநாள் இரவிலும் நிம்மதியாக தூக்கம் வருகிறது.
நான் வீட்டின் வெளியே அமைத்த flood gate பொருத்தும் அவசியம் கூட இம்முறை ஏற்படவில்லை,மழைநீர் உடனுக்குடன் வடிந்து விடுகிறது.
#பம்மல்,#மழைநீர்_வடிகால்,#மழைநீர்_வெளியேற்றம்