இது ஸ்விட்சர்லாந்தின் அல்பைன் மலைச்சாரலில் மேயும் பசுக்கள் கழுத்தில் அணிந்திருக்கும் கனம் மிகுந்த காண்டா மணிகள், பசுக்கள் மேய்வதை வீடு திரும்புவதை உரிமையாளர்கள் தொலைவில் மலையடிவாரத்தில் இருந்தே கண்காணிக்கும் படி ஒவ்வொரு பசுக்களின் கழுத்திலும் பொருத்தப்பட்டிருக்கிறது, மாடுகள் இந்த கழுத்து கனத்துடன் உயரமான சிகரம் ஏறுவது கடினம் என்பதால் எல்லை தாண்டாது.
ஒவ்வொரு மணியும் ஐந்து கிலோ எடை கொண்டவை, மாட்டுத்தோலால் செய்த கழுத்துப் பட்டை சேனத்தால் கழுத்தில் இறுக்கமாக அணிவிக்கப்பட்டிருக்கும்.இதனால் மாடுகளின் கழுத்தில் தடம் இருக்கும், மணி உரசி தோல் தேய்ந்து காப்பு காய்த்து விடும்.
ஒவ்வொரு கழுத்து மணியின் அளவு மற்றும் அதன் மேல் உள்ள timbre அதை அணிந்திருக்கும் மாடு பற்றிய தகவலை கொண்டுள்ளது.
ஆணோ பெண்ணோ மாடுகளை வழி நடத்தும் ஆதிக்கம் செலுத்தும் ஆல்ஃபா மாடுகள் அணியும் கழுத்து மணி இன்னும் எடை கொண்டதாக இருக்கும், ஆழமான மற்றும் அதிக டெஸிபல் சத்தமான இதன் ஓசைகள் மேய்ச்சலின் போது மற்ற மாடுகள் பின்பற்றுவதற்கு கட்டளை போல கலங்கரை விளக்கம் போல விளங்குகிறது.
இளம் கன்றுகளுக்கு சிறிய கழுத்து மணிகளை அணிவிக்கின்றனர், அதிக சப்தமானது வழிதவறிச் சென்ற மாடுகளை உரிமையாளர்கள் கண்டறிவதை எளிதாக்குகிறது.
மாடுகளின் கழுத்து மணியின் அளவும் ஒரு குறிப்பிட்ட மாட்டின் மீதான உரிமையாளரின் பெருமையை பிற உரிமையாளருக்கு உணர்த்தும்.
இம்மாடுகள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க தேதிகள் அல்லது உரிமையாளரின் குடும்ப நிகழ்ச்சிகளின் சித்தரிப்புகளுடன், அலங்கரிக்கப்பட்ட தடிமனான தோல் பட்டை சேனத்தில் இணைக்கப்பட்ட ஒரு பெரிய மணியை ஒரு மணியின் அளவு மற்றும் டிம்ப்ரே அதை அணிந்திருக்கும் விலங்கு பற்றிய தகவலை தெரிவிக்கிறது. ஆதிக்கம் செலுத்தும் ஆல்பா விலங்குகள்—குழுவில் உயர்ந்த தரவரிசையில் இருக்கும் ஆண் அல்லது பெண்—மிகப்பெரிய மணிகளை அணிகின்றன. ஆழமான மற்றும் சத்தமான டோன்கள் மந்தையிலுள்ள மற்றவர்கள் பின்பற்றுவதற்கு கேட்கக்கூடிய கலங்கரை விளக்கமாகும். இளம் வயதினர் மிகவும் சிறிய மணிகளை அணிவார்கள், அதிக சுருதியானது வழிதவறிச் சென்றவர்களைக் கண்டறிவதை எளிதாக்குகிறது. மணியின் அளவும் ஒரு குறிப்பிட்ட விலங்கின் மீதான விவசாயியின் பெருமையை உணர்த்தும். ஒரு விருப்பமான மாடு பெரும்பாலும் குறிப்பிடத்தக்க தேதிகள் அல்லது விவசாயியின் குடும்ப நிகழ்வுகளின் சித்தரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட தடிமனான பட்டையில் இணைக்கப்பட்ட ஒரு பெரிய மணியை அணிந்திருக்கும்.
இந்த மணிகள் ஒவ்வொன்றும் எழுப்பும் பல நூறு டெஸிபல் சப்தம் ஒரு ஜாக் ஹாம்மர் சுத்தியல் எழுப்பும் அதிர்வலைக்கு ஈடானது என்கின்றனர், இது ஐரோப்பிய பாரம்பரியம் என்பதால் vegan மிருக ஆர்வலர்கள் எத்தனை எதிர்ப்புக் குரல் எழுப்பியும் இம்மணிகள் அணிவிப்பதை தடை செய்ய முடியவில்லை.
இந்த அழகிய மணிகளை தலைமுறை தலைமுறையாக கருமார்கள் கைகளால் பட்டறையில் செய்கின்றனர், ஸ்விட்ஸர்லாந்து சுற்றுலா செல்பவர்கள் இந்த மணிகளை sovineir கடைகளிலும் வாங்குகின்றனர், சீன வாஸ்துவான feng shui ல் இந்த swiss cow bell ஐ நிலைக்கதவில் மாட்ட மிகுந்த அதிர்ஷ்டம் தேடி வரும் என நம்பப்படுகிறது.
இங்கே இந்த கழுத்து மணி செய்வது பற்றிய விரிவான பதிவு
https://www.saveur.com/switzerland-dairy-cow-bells/