ஏவிஎம் நிறுவனத்தின் M.S.குகன் அவர்களின் மகள் பகிர்ந்த சேதுபதி ips திரைப்படத்தின் working stills இவை, படத்தின் துவக்கத்தில் வரும் நாயகனின் சாகச துளிகளின் படங்கள்.
கேப்டனுக்கு எத்தனை நல்லுள்ளம்?, தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும்,அவர்கள் நிறுவனம் தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும், படங்கள் வசூல் செய்து தர வேண்டும் என நினைத்த நல்ல மனம் கொண்ட நடிகர்,
தன் படப்பிடிப்புகளில் ஏசி கேரவனே ஏறாதவர், தான் உண்ட அதே தரமான உணவை படப்பிடிப்பின் கடைசி டெக்னீஷியனுக்கும் கூட ஏற்பாடு செய்து தந்தவர்,
படப்பிடிப்பில் எக்காரணத்தை கொண்டும் அது சரியில்லை இது சரியில்லை என நொட்டை நொள்ளை சொல்லி நிறுத்தாதவர், safety harness கூட இன்றி அந்த ராட்சத கடிகாரத்தின் இரும்பு எண்களில் கால் வைத்து ஏறுவதை பாருங்கள்,
இந்த அற்பணிப்பு ,இந்த மன உறுதி உள்ளவரை போய் நீரழிவு தாக்கி அவர் விரல்களை தின்றது காலத்தின் கொடுமை தான், எத்தனையோ லட்சம் பேருக்கு உணவளித்தவர் கால்வயிறு சாப்பிட்டு பத்தியம் இருப்பது எல்லாம் விதியின் கொடுமை இல்லாமல் என்ன?,
அந்தரத்தில் பறந்து உதைக்கும் அந்த கட்டுறுதியான கால்கள் , leg fight,leg kick ற்கென்றே பெயர் போன ஒரே நடிகர், Stunt இயக்குனர்களின் டார்லிங் நடிகர், உடல் நலம் தேறி பழைய படி வலம் வர வேண்டும்.