"வெள்ளையாயிருப்பவன் பொய் சொல்ல மாட்டான்"
சமீபத்தில் என் சங்கி உறவினரிடம் பேசுகையில் கேட்டது இது ,அப்படியே எழுதியுள்ளேன், நான் சங்கி அல்ல என்பது அவர்களுக்கு நன்குதெரியும், அதை அவர்களும் காட்டிக் கொள்ள மாட்டார்கள், நானும் அதற்கு ஊறு விளைவிக்கும் படி தர்க்கம் செய்ய மாட்டேன்.
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் 1876 ஆம் ஆண்டு முதல் இந்திய ரூபாய் நோட்டுகளை வடிவமைத்து அச்சடித்து வந்த De La Rue India நிறுவனம் இணைந்து சதிசெய்து
நம் உழைத்து தேய்ந்த ரூபாய் அச்சடிக்கும் எந்திரங்களை சர்வதேச சந்தையில் scrap ல் எடைக்கு சல்லிசாக buy back mela வில் விற்றுவிட்டனராம், அந்த எந்திரங்களை அல்வா போல பாகிஸ்தான் அரசும் ஏலத்தில் வாங்கி விட்டதாம், ஏற்கனவே அவர்களிடம் இதே ரக மசியும், இதே ரக தாள்களும் டன் கணக்கில் கையிருப்பு உள்ளதாம், இந்த அச்சு எந்திரத்துடன் die ,etching உள்ளிட்ட உபகரணங்கள் அவர்களுக்கு scrap ல் கிடைத்த தகவல் 56" பராக்கிரமருக்கு எட்டியவுடன் வீட்டு வரவேற்பறையில் கண நேரத்தில் பிறந்தது தான் இந்த நோட்டு நிரோதனம் அதுதான் demonization யோசனையாம்,
இது national level issue, இறையான்மைக்கு இழுக்கு என்பதால் பாற்கடலை கடையும் போது விஷத்தை எப்படி சிவன் குடித்து நீலகண்டர் ஆனாரோ அப்படி நாட்டு மக்களுக்கு நோட்டு நிரோதனம் ஓரிரவில் அறிவித்து அந்த பழியை மொத்தமும் தன் தலையில் ஏற்றிக்கொண்டாராம் நம் பராக்கிரமர ஜி, பாகிஸ்தானியருக்கு நஷ்டம் விளைய வேண்டும், எனக்கு ஒரு கண் போனால் அவனுக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்றே இப்படி ரூபாய் தாள்களை குழப்பத்துடன் வடிவமைத்து அவர்களை சுற்றலில் விட்டாராம் ஜி.பாருங்கள் நூறு ரூபாயை விட இருநூறு அளவில் சிறியதாக இருப்பதை என்று பர்ஸில் இருந்து எடுத்து உதாரணம் காட்டினார்.
சந்திரமுகி படத்தில் ரஜினியை எல்லோரும் வீட்டை விட்டு அடித்து துரத்துகையில் ஒரு கேரள தாந்த்ரீக மந்திரவாதி ,அவரையா துரத்தறீங்க? அவர் யார் தெரியுமா? என மனோதத்துவ மேதை bradleyன் ஒரே சிஷ்யர் அது இது என டாக்டர்.சரவணன் பராக்கிரமங்களை எடுத்துரைப்பாரே? அதே போல கண்கள் விரிய இந்த அரிய சாதனைகள சொன்னவர், ஆனால் பாருங்க இந்த தமிழ்நாட்டு ஜனங்களுக்கு , திராவிடம், Go back modi இது தவிர எதுவும் தெரியாது என்று வருத்தப்பட்டார்.
இந்த வாட்ஸாப் பல்கலைக்கழகம் மூலம் சங்கிகள் pan india அளவில் profile lock செய்து கொண்டு இயங்குகின்றனர் , மாற்றுமதத்தினர் துவேஷம் தனி wing, இது போல கடந்த காலத்தில் வாங்கிய பல்புகளை , உடைத்த furniture களை அரும்பெரும் சாதனைகளாக மாற்றித் திரிப்பது தனி wing,இதை யார் எழுதி எப்படி சுற்றலில் விடுகின்றனர் என தெரியவில்லை, Republic TV கிறுக்கர்களுக்கு இது போல இல்லாதது பொல்லாததை ஊதிப்பெருக்குவதே வேலை.
நல்ல வேளை இந்த கருமத்தை எல்லாம் நம்பி மூளையில் ஏற்றிக் கொள்ளும் அளவுக்கு என் மூளை இல்லை.
140 நாடுகளில் பணத்தாள் வடிவமைத்து அச்சிட்டு வழங்கும் இருநூறு ஆண்டுகள் (since 1876) பாரம்பர்யம் மிகுந்த De La Rue India நிறுவனத்தார் இந்த குற்றச்சாட்டுக்கான மறுப்பை இணைப்பில் காண்க.
https://www.delarue.com/india/india-in-focus/statement
https://www.delarue.com/currency/domain-expertise/dlr-design-services
#நோட்டு_நிரோதனம்,#டீமோனிசேஷன்,#பணமதிப்பிழத்தல்,#demonization