ஜெர்மனி தயாரிப்பான Lamy பேனாக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை, 90 வருடப் பாரம்பர்யம் கொண்டவை, இங்கு நான் பேசப்போவது அந்த Lamy நிறுவனத்தின் Ink bottle பற்றி, எந்த நிற மையானாலும் இது இந்திய விலைக்கு 800₹ வருகிறது,
பார்க்கர் பேனா இங்க் 80₹ மட்டுமே,அதை விட பத்து மடங்கு விலை அதிகமாக இது 800₹ ரூபாய்க்கு விற்க என்ன காரணம் என்றால் மையின் தரம் மற்றும் அதன் patended Product Design bottle என்பேன்.
இங்கே வட்டமான தட்டையான இங்க் குடுவையின் படம் பாருங்கள், அதன் மேலே மூடி சரி, அதன் கீழே லிங்கம் போன்ற அமைப்பு பாருங்கள்,அது nib resting point pit , அந்த குழிக்குள் பேனாவின் நிப்பை நேராக வைத்து இங்க் refill syringes லீவரை எளிதாக இழுக்க ஒரே இழுப்பில் இங்க் refill cartridge ற்குள் ஏறும்,கடைசி துளி மை வரை உபயோகிக்க முடியும்.
தவிர bottle அமரும் அடிப்பகுதியின் உள்ளே இருக்கும் paper holder பாருங்கள்,(toilet paper roll concept ), இது மை நிரப்பிய பின்னர் கையில் ஒட்டாத படிக்கு காகிதத்தை வேண்டிய அளவு கிழித்து nib ஐ துடைத்துக் கொள்ள முடியும், எத்தனை functional ஆன வடிவமைப்பு இது.
இதன் அட்டை பெட்டியைக் கூட நமக்கு தூக்கிப் போட மனம் வராது,அந்த அட்டைப்பெட்டியின் rule of thirdல் மட்டும் அமைந்த fonts பாருங்கள், அத்தனை எளிமை, minimalism என்றால் எதையும் over design செய்யாமல் இருத்தல் எனலாம், அதுவே பெரிய கலை.
minimalism என்றால் இன்று நமக்கு ஐபோன், டெஸ்லா கார், ப்ளாட்டினம் நகைகள் நினைவுக்கு வரும், Lamy 90 வருடங்களாக வடிவமைப்பில் மினிமலிசத்தில் விற்பன்னர்கள்.
PS: மினிமலிசம் என்பது ஒரு Art movement அமெரிக்காவில் 1960 களில் தோன்றிய பாணி, அதை இன்று சிக்கன வாழ்வுமுறையுடன் இணைத்து பலர் கட்டுரைகள் எழுதுகின்றனர், சிக்கனத்துக்கு Frugal என்பதே சரியான சொல்.