product design லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
product design லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாம் ஒவ்வொருவருமே அந்நாளின் ஃபாரெக்ஸ் பேபி தானே?

நாம் ஒவ்வொருவருமே அந்நாளின்  ஃபாரெக்ஸ் பேபி தானே? அப்போது போட்டோ ஸ்டுடியோக்களில் குழந்தைகளை ஃபாரெக்ஸ் பேபி போல படமெடுங்கள் என கொண்டு விட்டு படமெடுத்து சட்டமிட்டு வீட்டு சுவற்றில் மாட்டிருப்பார்கள்.

Refill pack (Air sealed) தமிழ்நாட்டில் அறிமுகமாகி 46 வருடங்களாகிறது,

1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்கியில் வெளியான ஃபாரெக்ஸ் விளம்பரம் இது, அது நாள் வரை டின்னில் வந்தது நவீன ரீஃபில் பேக்கில் 50 பைசா விலை குறைவாக அறிமுகமாகையில் மக்களின் தயக்கம் போக்க இந்த திட உணவு மாவை எப்படி வேறு கொள்கலனில் கொட்டி இறுக்க மூடி வைக்க வேண்டும் என்ற அதி முக்கிய குறிப்பு பாருங்கள்.

"ஃபாரெக்ஸ் இன்று
புத்தம் புதுவித ரிஃபில் பெட்டியினுள் வருகிறது.-- சாவதேச பேக்கிங் தொழில்நுட்பத்திலே அதி நூதனமான முறை இது.
சுகாதார பாதுகாப்பு அதிகம்"

இன்று வணிக சந்தையில் டின்கள் வழக்கொழிந்து கண்ணாடி பாட்டில்கள் வழக்கொழிந்து reusable plastic container வழக்கில் உள்ளன, காற்றுபுகாத refill pack வாங்குவதே இன்றும் சிக்கனமானது.

TVS iqube Glove box | டிவிஎஸ் ஐக்யூப் க்ளவ் பாக்ஸ் | product design

“our need will be the real creator” என்று plato சொன்னார், இந்த EV ல் water bottle வைக்கவோ,துணிப்பை, துடைக்கும் துணி, எதாவது token, reciept என எதையும் வைக்கவோ Glove Box தரவில்லை, இதுவரை accessories ஆக கூட அமேஸானில் இந்த மாடலுக்கு கிடைக்கவில்லை, ஷோரூமில் கூட glovebox ற்கு தீர்வில்லை,fb market placeல் வீட்டில் வயர் கூடை  பின்னித்தருவதாக விளம்பரம் பார்த்து message செய்தேன், அவர்கள் கையிருப்பு கூடை படங்கள் அனுப்ப ,எனக்கு பக்கவாட்டில் இது போல இரண்டு கைப்பிடி கூடுதலாக பின்னித்தர கேட்டேன், sketch அனுப்பினேன், 

வாங்குவேன் என்ற நம்பிக்கைக்காக முழுப்பணம் gpay அனுப்பினேன், கைப்பிடி வைத்த போட்டோ நேற்று அவர்கள் அனுப்ப, இன்று காலை பல்லாவரத்தில் அவர்கள் வீட்டில் போய் வாங்கி வந்து வாகனத்தின் பம்பர் உள்ளே பொருத்தினேன், இதில் water bottle சிறிய பைகள், rain coat என வைத்து கொள்ளலாம், கூடை திருடர்களுக்கு பயந்தால் நம் நாடு தன்னிறைவு பெறாது.இதற்கு 850₹ ஆனது, courier என்றால் கூடுதலாகலாம், மிகவும் தரமாக உள்ளது,வண்டியை கழுவுகையில் கூடையை கழுவினால் போதும், stretchable, water proof கூட, budget கூட.

பழைய lamby scooter களுக்கு பொருத்த மிக அழகிய  leather satchel glove box வரும், அது போலக்கூட நிறுவனத்தார் இன்று யோசிப்பதில்லை.

இங்கே அவர்களின் விளம்பரம்

கண்ணுக்கு புலப்படாத எஃகு புத்தக அலமாரிகள் | Invisible Bookshelf

வீட்டில் புத்தகம் வகைதொகையின்றி சேர்ந்துவிட்டதைப் பார்த்தேன்,கடந்த ஐந்து வருடங்களாக எனக்கு புத்தகம் வாங்குவதில்லை,இந்த புத்தக கண்காட்சிக்கு கூட போகவில்லை.

எப்போது மகளுக்கு புத்தகங்கள் வாங்கத் துவங்கினேனோ அப்போது நான் புத்தகங்கள் வாங்குவதை நிறுத்திக் கொண்டேன்.

பதிப்பித்த நண்பர்கள் பிரியமாக தரும்  புத்தகங்கள் மட்டுமே சமீபத்தில் என்னிடம் சேர்ந்தவை, எந்த புத்தகத்தையும்  யாருக்கும் தருவதில்லை, யாருக்காவது படிக்க தந்தாலும் அவர்கள் புத்தகத்தை திருப்பி தந்ததில்லை, 

இதுநாள் வரை கண்ணாடி அலமாரி பின்னால் இருந்தன புத்தகங்கள், இப்போது தலைமேல் மாட்டி இருந்த அலமாரி தட்டுகளில் புத்தக எடை கூடியதால் முன்னெச்சரிக்கையாக இப்படி சுவரில் steel powder coated invisible shelf அடித்து புத்தகங்களை அடுக்கிவிட்டேன்,  

வாரம் ஒரு முறை blower இட்டு தூசு அடிக்க வேண்டும், கரப்பான் பூச்சி மருந்து ஓரங்களில் அடிக்க வேண்டும், அந்து உருண்டை வைக்கவும் வேண்டும்.

கண் முன்னால் இருந்தால் வாசிக்காதவற்றை எடுத்து வாசிக்கலாம் என்பதும் ஒரு காரணம்.

இந்த steel powder coated invisible shelf 4  எண்ணிக்கை அமேஸானில் 849₹ வரும், கீழே தரையில் புத்தகங்களை வைத்துப் போற்றுபவர்கள், இப்படி சுவர்களில் அடித்து அளவு வாரியாக புத்தகங்களை அடுக்கி விடுங்கள், அறையில் point of attraction ஆக இருக்கும், இவை மிகவும் உறுதியானது, 30 கிலோ வரை கூட வளையாமல் தாங்குகிறது, எளிதாக do your self பாணியில் நாமே drill செய்து மாட்டி விட முடியும்.

இங்கு அடுக்கிவிட்டு பார்த்தால் மனைவி பக்தி புத்தகங்கள் 100 எண்ணிக்கைக்கு மேலே இன்னும் உள்ளது என்றார், விஷ்ணு சஹஸ்ரநாமமே 10 வெவ்வேறு அளவுகளில் இருந்தன, திருப்பாவை, திருவெம்பாவை ,
கட்கமாலா , ஸ்தோத்ரமாலா என அவற்றை மட்டும் தனியே அலமாரியில் அடுக்கி உள்ளேன், இனி கோயில் போனால் புத்தகம் வாங்கப்போவதில்லை, என்றேன், வாங்காம இருந்துட்டாலும் என்று உடனே குரல் கேட்டது.

பில்டர்ஸ் பென்சில் | கார்பென்டர் பென்சில் | தட்டை பென்சில் | ஃப்ளாட் பென்சில் அறிவோம்


படத்தில் உள்ளது பில்டர்ஸ் பென்சில் அல்லது கார்பென்டர் பென்சில்,இது தட்டையாக இருக்கும், இதன் பயன் எக்காரணம் கொண்டும்  லேத் பட்டறையில் அளவு வைத்து வரைந்து கீழே வைக்கையில் உருண்டு ஓடக்கூடாது என்ற முன் யோசனையால் தான்,அப்படி உருண்டு ஓடினால் அது சில சமயம் பட்டறைக்குள் சென்று சிக்கும், அல்லது காலடியில் விழும், குனிந்து எடுக்கையில் தலையில் மேஜை தட்டும் போன்ற முன் எச்சரிக்கைகளால் தான். 

 சர்வதேச அரங்கில் கட்டுமான தளத்தில் வைத்து செய்யப்படும் அனைத்து விதமான வேலைகளுக்கும் இந்த பில்டர்ஸ் பென்சில் அல்லது கார்பென்டர் பென்சில் தான் பயன்படுத்துகின்றனர்,இதற்கென்று பிரத்யேகமான ஷார்ப்னர் கூட இருக்கிறதைப் பாருங்கள், 1990 களின் பிற்பாதியில் கட்டுமான தளங்களில் கார்பென்டர்கள் இந்த வகை பென்சில்களை பயன்படுத்தியதைப் பார்த்துள்ளேன், இன்று இவ்வகை பென்சில்களை யாரும் உபயோகிப்பதை பார்த்ததில்லை.

Lamy பேனா மற்றும் Lamy இங்க் ஜெர்மனி மற்றும் இந்திய வடிவங்களின் லட்சணம்


இன்று lamy ink flipcart மூலம் கைக்கு கிடைத்தது, பேனா என்றால் லேமி என்பார்கள், அதனால் lamy பேனா மற்றும் இங்க் சற்று விலை அதிகம்,
30 ml 715₹ , lamy பேனா எழுதுவது அத்தனை லயமாக இருக்கும், மாவு போல எழுதும், thick ஆக எழுதும்.

இதன் மை கூட்டின் patent pending product design அபாரமானது,பேனா மை நிரப்ப வேண்டி இங்க் பாட்டிலை சாய்க்க வேண்டாதபடிக்கு இதில் ஸ்படிக லிங்கம் போன்ற ஒரு ink pit தந்துள்ளனர், அதில் சென்று nib அமரும், அழகாக ஒரே திருகில் cardrige முழுக்க நிரம்பும்.

துபாயில் இருந்து நான் கடைசியாக காலி செய்து வருகையில் எடை கூடி விட்டதால் நிறைய கழித்து கட்டி வந்ததில் இந்த மனம் கவர்ந்த மைபுட்டி கைவிட்டுப் போனது.

இந்தியாவில் கிடைக்கும் எதுவும் பேஸிக் வெர்ஷன் என்பார்கள், அதை சும்மா சொல்லவில்லை, உணர்ந்து சொன்னது,

இதில் உள்ள tissue holder ஐ இந்திய வாடிக்கையாளருக்கு வேண்டி கழித்துகட்டி தயாரித்தவர்களின் லட்சணம் பாருங்கள், இது ஒரு சோற்றுப் பதம்.

பேனா நிரப்பிய பின் nibல் வடியும் மையை துடைக்க இப்படி tissue holder  உடன் தயாரிக்க வேண்டியதை இப்படி cost cutting செய்துள்ளதைப் பாருங்கள, 

இணைப்பில் நான்காம் படத்தில் உள்ளது international version நான் துபாயில் உபயோகித்தது, இரண்டாம் படத்தில் உள்ளது indianised version.

இந்தியர்களுக்கு  compromise in quality என்பது பழகிப்போனதால் இது எல்லாவற்றிலும் நடக்கும்,இங்கே American tourister, Jansport backback, Rayban coolers, Jack daniels scotch  என எது வாங்கினாலும் அப்படி முன்னே பின்னே தான் இருக்கும்.

இங்கே ஜெர்மனியில் இருந்து Lamy ஐ பெருமையுடன் இறக்குமதி செய்து அரைகுறையாக சந்தைப்படுத்துபவர்கள் 

FCE Lifestyles Pvt. Ltd., 
N-40, Connaught Place, New Delhi-110001

Care: +919323068315
 E-mail: repairs@lamyshop.in

தனித்துவம் மிகுந்த லேமி Lamy பேனா மைக்கூடு மற்றும் பேனாக்கள்

ஜெர்மனி தயாரிப்பான Lamy பேனாக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை,  90 வருடப் பாரம்பர்யம் கொண்டவை, இங்கு நான் பேசப்போவது அந்த Lamy நிறுவனத்தின் Ink bottle பற்றி, எந்த நிற மையானாலும் இது இந்திய விலைக்கு 800₹ வருகிறது, 

பார்க்கர் பேனா இங்க் 80₹ மட்டுமே,அதை விட பத்து மடங்கு விலை அதிகமாக இது 800₹ ரூபாய்க்கு விற்க என்ன காரணம் என்றால் மையின் தரம் மற்றும்  அதன் patended  Product Design bottle என்பேன்.

இங்கே வட்டமான தட்டையான இங்க் குடுவையின்  படம் பாருங்கள், அதன் மேலே மூடி சரி, அதன் கீழே லிங்கம் போன்ற அமைப்பு பாருங்கள்,அது nib resting point pit , அந்த குழிக்குள் பேனாவின் நிப்பை நேராக வைத்து இங்க் refill syringes லீவரை எளிதாக இழுக்க ஒரே இழுப்பில் இங்க் refill cartridge ற்குள் ஏறும்,கடைசி துளி மை வரை உபயோகிக்க முடியும்.

தவிர bottle அமரும்  அடிப்பகுதியின் உள்ளே இருக்கும் paper holder பாருங்கள்,(toilet paper roll concept ), இது மை நிரப்பிய பின்னர் கையில் ஒட்டாத படிக்கு காகிதத்தை வேண்டிய அளவு கிழித்து nib ஐ துடைத்துக் கொள்ள முடியும், எத்தனை functional ஆன வடிவமைப்பு இது.

இதன் அட்டை பெட்டியைக் கூட நமக்கு தூக்கிப் போட மனம் வராது,அந்த அட்டைப்பெட்டியின் rule of thirdல் மட்டும் அமைந்த fonts பாருங்கள், அத்தனை எளிமை, minimalism என்றால் எதையும் over design செய்யாமல் இருத்தல் எனலாம், அதுவே பெரிய கலை.

minimalism என்றால் இன்று நமக்கு ஐபோன், டெஸ்லா கார், ப்ளாட்டினம் நகைகள் நினைவுக்கு வரும், Lamy 90 வருடங்களாக வடிவமைப்பில் மினிமலிசத்தில் விற்பன்னர்கள்.

PS: மினிமலிசம் என்பது ஒரு Art movement அமெரிக்காவில் 1960 களில் தோன்றிய பாணி, அதை இன்று சிக்கன வாழ்வுமுறையுடன்  இணைத்து பலர் கட்டுரைகள் எழுதுகின்றனர், சிக்கனத்துக்கு Frugal என்பதே சரியான சொல்.

#lamy,#fountain_pen,#lamy_ink,#lamy_ink_bottle,#product_design,#minimalism,#functional_design,#form_follows_function
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)