நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஃபிராங்க் லாய்ட் ரைட்டின் வாழ்க்கை வரலாறு | Loving Frank


அமெரிக்க கட்டடக்கலையின் பிதாமகர் ஃபிராங்க் லாய்ட் ரைட்டின் வாழ்க்கை வரலாறு ஒரு மிகச்சிறந்த நாவலைப் போன்றது. உலகமே வியந்து பார்த்த ஒரு மேதையின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரங்கேறிய துயரங்கள் கற்பனை செய்ய முடியாதவை. 

குறிப்பாக 1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த அந்த கொடூர சம்பவம் அவரது வாழ்வின் கறுப்புப் பக்கமாகும். 

விஸ்கான்சினில் அவர் தனது காதலி மாமா செனி (Mamah Cheney)-க்காக உருவாக்கிய 'தாலிசின்' (Taliesin) இல்லத்தில், ஜூலியன் கார்ல்டன் என்ற ஒரு சமையல் பணியாளர் எதிர்பாராத விதமாக வெறியாட்டத்தில் ஈடுபட்டார். 

மதிய உணவின் போது வீட்டைப் பூட்டிவிட்டு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல், தப்பிக்க முயன்றவர்களை கோடரியால் கொடூரமாகத் தாக்கிக் கொன்றார். இதில் ரைட்டின் காதலி மாமா செனி மற்றும் அவரது இரு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். 

இச்சம்பவம் நடந்தபோது ரைட் சிகாகோவில் ஒரு பணியில் இருந்ததால் உயிர் தப்பினார், ஆனால் அந்த இழப்பு அவரை மனரீதியாக நிலைகுலையச் செய்தது.

இந்தத் துயரம் நிகழ்ந்த பிறகும் ரைட் முடங்கிவிடவில்லை. எரிந்த அதே இடத்திலேயே தாலிசினை மீண்டும் கட்டி எழுப்பினார். 

ஆனால் 1925-ல் மீண்டும் ஒருமுறை மின் கசிவு காரணமாக அந்த வீடு தீக்கிரையானது. தொழில் ரீதியாக அவர் உச்சத்தில் இருந்தபோதும், இத்தகைய தொடர் இழப்புகளும், நிதி நெருக்கடிகளும், சமூகப் புறக்கணிப்புகளும் அவரைத் துரத்திக்கொண்டே இருந்தன.

 அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தத் தனிப்பட்ட வீழ்ச்சிகளும், அதிலிருந்து அவர் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்து உலகப் புகழ்பெற்ற கட்டிடங்களை உருவாக்கிய விதமும் ஒரு காவியத் தன்மையைக் கொண்டது.

ஃபிராங்க் லாய்ட் ரைட்டின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு முழு நீளத் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. 

ஆனால், அவரது வாழ்க்கையில் நடந்த இந்த துயர சம்பவங்கள் மற்றும் அவரது காதலை அடிப்படையாகக் கொண்டு 2011-ல் நான்சி ஹொரான் எழுதிய 'லவ்விங் பிராங்க்' (Loving Frank) என்ற நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

'லவ்விங் பிராங்க்' (Loving Frank) என்பது 2007 ஆம் ஆண்டு நான்சி ஹொரான் என்பவரால் எழுதப்பட்ட ஒரு புகழ்பெற்ற அமெரிக்க வரலாற்றுப் புதினம். இது கட்டிடக்கலைஞர் ஃபிராங்க் லாய்ட் ரைட் மற்றும் மாமா போர்த்விக் ஆகியோருக்கு இடையே நிலவிய சர்ச்சைக்குரிய காதல் உறவைப் பற்றி விவரிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க சமூகத்தில் நிலவிய கட்டுப்பாடுகளையும், இந்தத் தம்பதியினர் சந்தித்த பொது அவமானங்களையும் மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இது நான்சி ஹொரானின் முதல் நாவலாகும். விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தாலும், இது மாமா போர்த்விக்கின் கோணத்தில் சொல்லப்படும் ஒரு கற்பனை கலந்த வாழ்க்கை வரலாற்றுப் பதிவாகும்.
இந்த நாவல் 1907 முதல் 1914 வரையிலான காலப்பகுதியைச் சித்தரிக்கிறது. ரைட் மற்றும் போர்த்விக் ஆகிய இருவருமே ஏற்கனவே மணம் முடித்தவர்கள் என்பதால், அவர்களது காதல் உறவு அக்கால சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாவலில் இவர்களது கலை சார்ந்த தேடல்கள் மற்றும் அமெரிக்கா முதல் ஐரோப்பா வரையிலான பயணங்கள் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கும் சமூகத்தின் விதிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை இந்தப் புத்தகம் கண்முன் நிறுத்துகிறது.
குறிப்பாக, அக்கால அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் பெண்களின் மீதான சமூகக் பார்வையை இந்தப் படைப்பு ஆழமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. மாமா போர்த்விக் தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் துறந்து ரைட்டுடன் இணைந்தபோது ஏற்பட்ட சவால்கள், அவர்களுக்குக் கிடைத்த சமூகப் புறக்கணிப்பு ஆகியவற்றை இது உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கிறது. இறுதியாக, தாலிசின் இல்லத்தில் நடந்த கொடூரத் துயரத்துடன் இந்த நாவல் முடிவடைந்து, வாசகர்களுக்கு ஒரு கனத்த அனுபவத்தைத் தருகிறது.

இது திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்தன. 1998-ல் கென் பர்ன்ஸ் இயக்கத்தில் வெளியான 'Frank Lloyd Wright' என்ற ஆவணப்படம், அவரது கட்டிடக்கலை மற்றும் தனிப்பட்ட வாழ்வின் இருண்ட பக்கங்களை மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தியுள்ளது.

 மேலும், "The Flame in the Flint" போன்ற சில நாடகங்கள் மற்றும் குறும்படங்கள் இந்த துயரத்தை விவரித்துள்ளன. தற்போதைய நிலையில், அவரது பிரம்மாண்டமான வாழ்வைச் சித்தரிக்கும் ஒரு பெரிய ஹாலிவுட் திரைப்படம் உருவாக்கப்பட வேண்டும் என்பது கட்டிடக்கலை ஆர்வலர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஃபிராங்க் லாய்ட் ரைட்டின் இல்லத்தில் இந்த கொடூரத்தை நிகழ்த்திய ஜூலியன் கார்ல்டன் மீதான வழக்கு மற்றும் அவருக்குக் கிடைத்த தண்டனை ஒரு விசித்திரமான முடிவை எட்டியது. 

ஆகஸ்ட் 15, 1914 அன்று அந்த ரத்த வெறியாட்டத்தை முடித்த பிறகு, கார்ல்டன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடவில்லை. மாறாக, எரியும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருந்த தீயணைப்பு உலைக்குள் (furnace) சென்று ஒளிந்து கொண்டார். 

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த கும்பல் அவரைத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் கண்டுபிடித்தது. அவர் பிடிபடுவதற்கு முன்னதாகவே 'மியூரியாடிக் அமிலம்' (Muriatic acid) எனப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் குடித்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். 

இதனால் அவரது தொண்டை மற்றும் உணவுக்குழாய் மிக மோசமாக வெந்து போயிருந்தது.
அவரைப் பிடித்த மக்கள் கும்பல் அந்த இடத்திலேயே அடித்துக் கொல்ல முயன்றபோதும், காவல்துறையினர் அவரை மீட்டு டாட்ஜ்வில் சிறையில் அடைத்தனர். அந்த அமிலம் அவரது உடலை உள்ளுக்குள்ளேயே சிதைத்ததால், அவரால் எதையும் உட்கொள்ளவோ அல்லது பேசவோ முடியாத நிலை ஏற்பட்டது.

 காவல்துறையினர் எவ்வளவோ முயற்சி செய்தும், அவர் ஏன் இத்தனை பேரைக் கொன்றார் என்பதற்கான காரணத்தை அவரால் வாய் திறந்து சொல்ல முடியவில்லை. ரைட்டின் காதலி மாமா செனி தன்னை வேலையை விட்டு நீக்கத் திட்டமிட்டது அல்லது அங்குள்ள மற்ற பணியாளர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் ஆத்திரமடைந்திருக்கலாம் என்ற ஊகங்கள் மட்டுமே எஞ்சின.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, கார்ல்டனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சுமார் ஏழு வாரங்கள் எதையும் உண்ண முடியாமல் பட்டினியால் வாடிய அவர், 1914 அக்டோபர் மாதம் சிறையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 சட்டப்பூர்வமான தூக்குத் தண்டனையோ அல்லது சிறைத் தண்டனையோ அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே, அவர் குடித்த அமிலமும் அதனால் ஏற்பட்ட பட்டினியும் அவருக்கு இயற்கை வழங்கிய கொடூரத் தண்டனையாக அமைந்தது.

 இதனால் ஒரு மாபெரும் கலைஞனின் வாழ்க்கையைச் சிதைத்த அந்தப் படுகொலையின் உண்மையான நோக்கம் என்ன என்பது அவருடனேயே மண்ணோடு மண்ணாகிப் போனது.

இதன் பெயரும் கொலை | எழுத்தாளர் சுஜாதா

இதன் பெயரும் கொலை 1997-98 ஆம் ஆண்டு வாக்கில் குமுதம் இதழில் தொடராக வந்த  சைக்கோபாத் கொலைகாரன் பற்றிய துப்பறியும் நாவல்.  இதில் வாத்தியார் கூடுதல்  சோமாறி போன்ற கலைச் சொற்களை வசந்த் வாயால் அறிமுகம் செய்திருந்தார்.

இது கணேஷ் வஸந்த் இணைந்து துப்பறிந்த  25ஆம்  நாவல். இதில் ஒரு முக்கியமான விஷயம் கணேஷுக்கு [40+] மிகவும் வயதாகிக்கொண்டே போவதை உணர்ந்த வாத்தியார் இன்ஸ்பெக்டர் இன்பா[இன்பானந்தி] என்னும் அழகிய ஐபிஎஸ் ஆஃபிஸருக்கும் கணேஷுக்கும் காதல் மலர்ந்து திருமணப் பேச்சில் முடிவது வரை சுவையாக எழுதியிருந்தார்,

வசந்த் அநியாயத்துக்கு அந்த ஐபிஎஸ் அதிகாரி இன்பாவிடம் வம்பிழுப்பார்,அக்கிரமத்துக்கு வர்ணிப்பார்.அவரே தன் எஜமானன் கணேஷின் காதலுக்கு ரூட்டும் போட்டு கொடுப்பார்.அதன் பின்னர் திருமணம் ஆனதா?என்பதை அடுத்த நாவலை வாசித்த வாத்தியாரின்  டைஹார்ட் ரசிகர்கள் தெளிவு படுத்தவும்.இக்கதையை வாசிக்கையில்  சைலன்ஸ் ஆஃப் த லாம்ப் [1991] என்னும் படம் நினைவுக்கு வந்தது,வாத்தியார் அப்படத்தைக் கூட நாவலில் அடுத்தடுத்து நிகழும் கோல்ட் பளட் கொலைகளுக்கு உந்துதலாகக் கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

கதைச் சுருக்கம் 

வாழ்க்கைப் படகு உள்ளிட்ட தனியார் டீவி சீரியல் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருக்கும் நடிகை ப்ரேரணா தன் கணவன் தூக்கில் தொங்க முயற்சிப்பதாக சொல்லி வழக்கம் போல கணேஷை  அழைக்கிறாள், அவர்கள் ஆஜராகி கணவனுக்கு முதலுதவிக்கு கொண்டு செல்கையில் இறந்து போகிறான்.

கொடிய சந்தேக நோயாளியான  கணவனின் மறைவு அவளுக்கு துக்கத்துக்கு மாறாக நிம்மதியையே தருகிறது. இந்நிலையில் ப்ரேர்னா செல்லும் இடங்களில் எல்லாம் சந்தேகமாக மரணங்கள் நிகழ்கின்றன, 

 

 அவளை தேற்றி தங்க இடம் தந்து  உதவும் கணேஷ்-வசந்த்துக்கும், நடக்கும் கொலைகளுக்கு ப்ரேரணாவை வாரண்டுடன் கைது செய்ய வரும் இன்ஸ்பெக்டர் இன்பாவுக்கும் அந்த சைக்கோ பாத் செல்போன், டெலிபோன், பேஜர் ஈமெயில் என எல்லா வழிகளிலும் நூதனமாக அனுப்பும் கொலை மிரட்டல்கள் எல்லாம் நம்மை 90களின் பிற்பாதிக்கே இட்டுச் செல்கின்றன.

 

கணேஷ்வசந்த் மற்றும் இன்பாவை திசைதிருப்ப அந்த சைக்கோ மயக்க மருந்தும் செக்ஸ் லேகியமும் கலந்த சாக்லேட்டை பிரயோகிக்கிறான்,அதை உண்ட வசந்தின் காரியதரிசியும்,இன்பாவும் ஆடை அவிழ்ப்பு செய்து வசந்த் மற்றும் கணேஷிடம் அத்துமீறும் கொடுமையும் நடக்கிறது.

நகரில் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் குடும்பப் பெண்கள் மூன்று பேர் ரேண்டமாக  அடுத்தடுத்து கழுத்தறுத்து கொல்லப்படுகின்றனர், நகரில் சட்டம் ஒழுங்கு கெடுகின்றது,போலீசுக்கு தூக்கம் கெடுகின்றது. அந்த கம்ப்யூட்டர் சவ்வியான சைக்கோபாத் கொலையாளி   இன்பாவின் மனவளர்ச்சி குன்றிய தங்கையை   பிணைக் கைதியாக கடத்திக்கொண்டு சென்று விடுகிறான்,

கடைசியில் பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி நிருபர்கள் சூழ அந்த சைக்கோபாத் கொலையாளி செல்லப்பா மிகுந்த கூல் ஆட்டிட்யூடுடன் கைது செய்யப்படுகிறான்.

வீரதீர சாகசங்களுக்குப் பின்னர் கணேஷ் இன்பாவின் திருமணப்பேச்சுடன் முடிகிறது நாவல்

கடலுக்கு அப்பால் நாவல் - ப.சிங்காரம்


ப.சிங்காரம் எழுதிய கடலுக்கு அப்பால்  தமிழ் புனைவிலக்கியத்தில் மிகவும் முக்கியமானது, இலக்கிய ஆர்வலர்கள் யாரும் தவறவிடக்கூடாத படைப்பு, ஏன் எனில் இது பேசும் வெளி மிகப்பெரியது, இதன் மொழி வீச்சு மிகவும் அரியது, எழுத்தாளர் ப.சிங்காரம் எந்த சமரசமுமின்றி நன் நாவலில் ஒரு பர்மியன் பேசினால் பர்மீஸிலேயே எழுதுகிறார், மலேயென், பேசினால், மலேயாவிலேயே, ஜப்பானியன் என்றால் ஜப்பானிஸிலேயே எழுதுகிறார், இது நாவல் எழுதப்பட்ட காலகட்டத்துக்கு மிகவும் புதுமையான முயற்சியாகும், மேலும் இது ஒருங்கே நம்பிக்கை, பண்பாடு, காதல்,போர், வீரம், தீரம், பக்தி, அறம்,அந்நிய கலாச்சாரம்,சாகசம்,தாய்மை,இழப்பு, வஞ்சம், ஏமாற்றம், நட்பு, தேற்றுதல் என விரிவாக அலசுகிறது,

எழுத்தாளர் ப.சிங்காரம் 1920ல் பிறந்தார். 1938 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருக்கும் மேடான் நகரில் ஒரு மார்க்கா என்றழைக்கப்படும் வட்டிக்கடையில் வேலை செய்யச் சென்றிருக்கிறார். உலகப்போர் நடந்த 1939 முதல் 1945 ஆண்டுகளை, ஜப்பானியர்களும், இந்திய தேசிய ராணுவமும் தாக்கம் செலுத்திய வரலாற்றுத் தருணங்களை, நேரடியாக ரத்தமும் சதையுமாக கண்ணுற்றார். இவர் யுத்த சூழலில் தன் மனைவியையும் அவரது பிரசவத்தில் குழந்தையுடன் பறிகொடுத்தவர்,அந்த வடுவிலிருந்து மீண்டு இத்தகைய படைப்பை தந்துள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. 

இவர்  1946ம் வருடம்  ப்ரிட்டிஷ்-இந்தியாவுக்கு திரும்பினார். மதுரை தினத்தந்தியில் செய்திப்பிரிவில் பணிக்கு சேர்ந்தார். 1950ஆம் ஆண்டு   ‘கடலுக்கு அப்பால்’ நாவலை தன் இந்தோனேஷிய,மலேய,பர்மா நாட்டின் பணிக்கால நினைவடுக்குகளில் இருந்து எழுதினார். மறுமணமே செய்து கொள்ளாமல் தன்   வாழ்நாட்களை  [சுமார் 51 ஆண்டுகள்] YMCA விடுதியில் தனியே கழித்தார்.தன் வாழ்நாள் சேமிப்பையும் தனக்கு வந்த ஷேமநல நிதி சுமார் 7 லட்சம் ரூபாயையும் பொதுவுக்கு எழுதி வைத்து விட்டு தன் 77ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்,சமகால இலக்கியவாதிகள் எவருடனுமே தொடர்பின்றியே வாழ்ந்திருக்கிறார்,

 இவர் தன் வாழ்நாளில் மற்றொரு படைப்பாக புயலிலே என்னும் தோணி என்னும் நாவலும் எழுதியுள்ளார்,அது 1962 ஆம் ஆண்டு பெரும் தடைகளுக்கு இடையே வெளிவந்தது.இந்த இரண்டு நாவல்களுமே இதன் புதுமைக்காக அன்றைய இன்றைய இலக்கியவாதிகளால் வெகுவாக சிலாகிக்கப்படுபவை.  இவரது வாழ்க்கையே ஒரு சுவையான பல திருப்பங்கள் நிறைந்த ஒரு நாவல் போன்றது என்றால் மிகையில்லை, இவரது கடைசிக் காலத்தில் சி.மோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுடன் இவருக்கு பரிச்சயம் ஏற்பட்டதை படித்தேன். இவரும் பாரதியை போன்றே வாழும் காலத்தில் புகழ் கிடைக்காத கலைஞனே.

நாவலில் மற்றொரு சிறப்பம்சமாக பகடிக்காகவோ திணிப்பாகவோ எந்த சாதியையும் இவர் கிண்டல் செய்யவில்லை, எந்த இடத்திலும் வர்ணணைக்கு  வேண்டிக்கூட ஆபாசம் விரசமொழி எங்கும் இல்லை  ,தவிர இது வரை தமிழில் யாரும் கையாளாத ஒரு கதைக்களம் நம்முள் ஒரு மனச்சித்திரமாக     விரிகிறது. பாசாங்கில்லாத சமரசமற்ற எழுத்து நடை நம்மை விறுவிறுப்பைக்கூட்டி படிக்க வைக்கிறது.

செட்டி நாடு என்றழைக்கப்படும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், கோனாப்பட்டு,ஆத்தங்குடி,கானாடுகாத்தான்,சிறுவயல் என ஒன்றிறண்டு ஊருக்காவது போய் வந்து கொண்டிருக்கிறேன். அனைத்துமே டெம்ப்ளேட் போன்ற அமைப்பைக் கொண்ட 200 வருடங்களுக்குள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட மிக அழகிய கிராமங்கள். ஊருக்குள் அம்மன் கோவில், தேர் முட்டி, ஒரு சிவன் கோவில்,குடிக்க ஒரு ஊருணி, குளிக்க ஒரு ஊருணி, ஒரு நகரத்தார் கைங்கர்ய தர்ம ஸ்தாபன பள்ளிக்கூடம், கடைவீதி, மழை பெய்தால் நேராக ஊருணிக்குள் போய் விழும்படியான சேகரிப்பு முறை, அத்தனையும் நகரத்தார் என்றழைக்கப்படும் செட்டியார் சமூகம் ஊருக்கு அளித்த கொடை அவை,

 முக்கியமாக ஓங்கு தாங்காக அமைந்த அரண்மனை போன்ற நகரத்தார் வீடுகளை குறிப்பிட்டே ஆகவேண்டும்.ஒரே நாளில் சேர்த்த பொருளல்ல அவை,1818 ம் ஆண்டு ஆரம்பத்தில் வட்டிக்கடைத் தொழில் துவங்கிய நகரத்தார்கள்,தலைமுறை தலைமுறையாக இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோநேசியா, ஜாவா, சுமத்ரா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்ற செட்டியார் சமூகம் மார்க்கா என்னும் லேவா தேவித் தொழிலை விஸ்தரித்து.அங்கே கார்பொரேட்டு வங்கிகளுக்கு சமமாக வட்டிக்கடைத் தொழிலை வாழையடி வாழையாக நீதி நேர்மையுடன் நடத்தி வந்தனர். அதை நாவலில் நாம் கதையோட்டத்தில் விரிவாக அறிகிறோம்,

இப்போது எப்படி வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறோமோ அதே போல ராமநாதபுர மாவட்டத்தின் இளைஞர்கள் 5 முதல் 7 வருட ஒப்பந்தத்தில் வட்டிக்கணக்கு பற்று வரவு எழுதவும் வசூலிக்கவுமென்றே அந்த மார்க்காக்களுக்கு சென்றுள்ளனர் என அறிகையில் வியப்பு மேலிடுகிறது, அங்கே  பர்மியர்களுக்கும், இந்தோநேசியர்களுக்கும், சீனர்களுக்கும், மலேயர்களுக்கும் அவர்கள் வியாபாரம் செய்ய வட்டிக்கு பணம் தந்து வாங்கி அதை லட்சமாக பெருக்கி, தங்கள் வீட்டை,ஊரை இப்படி மாற்றினர் என்றால் மிகையில்லை,

மேலே சொன்னது போலவே நாவலில் மிக முக்கிய பாத்திரமான வானாயினா என்னும் வயிரமுத்துப்பிள்ளை, தன் செவப்பட்டி கிராமத்தில் இருந்து பெட்டியடிப்பையனாக பர்மாவிற்கு ஒப்பந்தத்தில் சென்று அடுத்தாளாகி, மேலாளாக[ஏஜென்ட்] உயர்ந்தவர், இப்போது சொந்தமாக மார்க்கா வைத்திருப்பவர்.,இந்த நிலைக்கு வர அவர் பட்ட பாடும்,தன் மார்க்கா தொழிலை கட்டிக்காக்க அவர் கடைபிடிக்கும் விதிகளும் அபாரமானவை.இன்று நாம் காணும் கேட்கும் தண்டல்,கந்து வட்டி,மீட்டர் வட்டி போன்றதல்ல செட்டிமாரின் மார்க்கா என்னும் வட்டிக்கடை வியாபாரம்,அதற்கு முக்கியத் தேவையே பணிவு,தெளிவு,எந்த சூழ்நிலையிலும் கோபப்படாமல்,கடன் வாங்கியவன் அடித்தாலும் வாங்கிக்கொண்டு,விடாப்பிடியாக வட்டியையும் அசலையும் வசூல் செய்யும் திறமை கொண்டவர்,தன் வேலையாட்களையும் அவ்வண்ணமே இருக்க எதிர்பார்ப்பவர்.

தன் நண்பனின் மகனான செல்லையா,ஆங்கிலம் படித்திருக்க இவரை மிகவும் கவர்கிறான்,நண்பனிடம் வலியப்போய் செல்லையாவை தன்னுடன் வேலை செய்ய அழைத்துப்போகிறார், பின்னர் தன் மனைவியையும் மகள் மரகத்தையும் தன்னுடன் அழைத்தவர்,தன் மகள் மரகதத்தை செல்லையாவுக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்,அதன் மூலம் தன் மார்க்காவை பினாங்கிலேயே பெரிய மார்க்காவாக விஸ்தரிக்க நினைக்கிறார். இவரது வாழ்வில் பேரிடியாக  இரண்டாம் உலகப்போர்  மூள, தன் ஒரே மகனை ஜப்பானியரின் விமான குண்டு வீச்சுக்கு பலி கொடுக்கிறார்,

செல்லையாவை அடுத்தாளாக கூட்டி வந்து குறுகிய காலத்தில் மேலாளாக்கி அழகு பார்த்தவர் வனாயினா, தன் அழகு மகள்  மரகததை  அவனுக்கு திருமணம் செய்து தந்து, மார்க்காவையும் அவனிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தவர் எண்ணத்தில் மண் விழுந்தது போல செல்லையா நேதாஜியின் சேனைக்கு போய் சேர்ந்து விடுகிறான். அவன் சேனைக்கு சென்றது அவருக்கு அறவே பிடிக்கவில்லை.போர் தர்மம் தன் தொழிலுக்கு உகந்ததல்ல என்பதை உறுதியாக நம்புகிறார். தன் 20 வயது மகனை ஜப்பானின் குண்டு வீச்சுக்கு பினாங்கு வீதியில் பலி கொடுத்ததையும் அவர் மறக்க வில்லை,மகனின் சடலத்தை தேடி எடுத்து தன் தோளில் தூக்கி வந்த செல்லையாவின் மேல் அதீத அக்கரையும்,நன்றியுணர்வும் இருந்தாலும் என் பேச்சை மீறி சேனைக்கு சென்றுவிட்டானே? என்னும் தன் அகங்காரம் செல்லையா மரகதத்தின் காதலை பிரிக்க நினைக்கிறது,போரினால் சுமார் 4 வருடங்களாக நின்று போன நாகப்பட்டினம்-பினாங்கு கப்பல் போக்குவரத்தை ப்ரிட்டிஷார் மீண்டும் எப்போது துவக்குவார்,அப்போது மனைவியையும்,மகள் மரகதத்தையும் ஊருக்கு அனுப்பி ,தன்னிடம் மேலாளாக இருக்கு நாகலிங்கத்துக்கு மகளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்,

வனாயினா மனைவிக்கும் பினாங்கில் இருக்க இருப்பு கொள்ளவில்லை, ஆனால் கப்பல் விடுவதற்கு முன் கடலில் மிதக்கும் நீர்கண்ணி வெடி குண்டுகளை ப்ரிட்டிஷார் தேடி அகற்றுவதை கேட்டதும் நிம்மதியுறுகிறாள், செல்லையாவை தன் மகன் போலவே நினைக்கிறாள்,அவனை மருமகனாக வரித்துக்கொள்ள இவர்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறாள்,தண்ணீர்மலையான் அருளால் செல்லையாவின் மேலே கணவர் கொண்டிருக்கும் கோபம் விரைவில் தீரும் என நம்புகிறாள்,

செல்லையா இரண்டாம் உலகப் போரில் நேதாஜியின் சேனையில் ஒரு ஆகச்சிறந்த வீரனாக இருந்தவன்,  போரில் அணுகுண்டு வீசப்பட்டு,ஜப்பான் தோல்வியை ஒப்புக்கொண்ட நிலையில் ,நேதாஜியும் விமான விபத்தில் உயிரிழக்க,அவரின் சேனையில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள், அதில் ஏனையோர் மார்க்காவில் வேலைபார்த்தோர், மீண்டும் தங்கள் பழைய தொழிலுக்கே திரும்ப முடிவு செய்கின்றனர், அதில் செல்லையாவும் அடக்கம், 24 வயதிலேயே வீரமும்,புத்தி சாதுர்யமும்,பன்மொழி பேசும் திறமையும்,நல்ல அழகும், உடற்கட்டும் பொருந்திய செல்லைய்யாவிற்கு  போர் முடிவுற்ற சூழலில்  வேலை இல்லை. எனவே மீண்டும் பழைய மேலாள் வேலைக்கு திரும்ப முடிவு செய்து தன் முதலாளி வனாயினாவிடமே வருகிறான்.ஆனால் முதலாளியின் மனதை செல்லையாவால் மாற்ற முடியவில்லை.கரைக்க முடியாத கற்பாறையாக இருக்கிறார் வனாயினா.

சில இடங்களில் நாம் நாயகன் செல்லையாவுக்காகவும் மரகதத்துக்காகவும் அப்படி வருந்துகிறோம்,ஆனால் அந்த வருத்தத்தையும் வானாயினா மீதான கோபத்தையும் கடைசி அத்தியாயத்தில் மரகதத்தின் அப்பா வானாயினாவுக்கு சாதகமாக திருப்பிவிடுகிறார் ப.சிங்காரம்.

அந்த இடம் அபாரமானது,நண்பன் மாணிக்கம் போல நகமும் சதையும் போன்ற நண்பன் கிடைக்க ஒருவர் கொடுத்து வைக்க வேண்டும்,காதல் தோல்வியால் மனம் துவளும் செல்லையாவுக்கு மட்டுமல்ல நமக்கும் மருந்து போன்றன அவனது வார்த்தைகள்.அவன் சங்க கால தமிழ் இலக்கியத்தை மாந்தர்களை பகடி செய்யும் இடம் அனைத்துமே ரசமானவை.

எழுத்தாளர் ப.சிங்காரம் 12 வருடம் கழித்து தான் எழுதப்போகும் புயலிலே ஒரு தோணி நாவலுக்கு கடலுக்கு அப்பால் நாவலிலேயே அச்சாரம் வைத்து உள்ளார் ,என்பதை எண்ணி வியந்தேன்,அப்போதே ப்ரிக்வெய்ல்,சீக்வெய்ல் பற்றி எல்லாம் சிந்தித்திருக்கிறார் பாருங்கள். செல்லையாவிற்கு பாண்டியன் என்னும் வீரனும் மலேயாவுக்கு வரப்போவதாக   ஒருவர் வழி மறித்துச் சொல்ல, செல்லையா மனதுக்குள் இப்படி சிலாகிப்பதாக வருகிறது. பாண்டியன்,!!! மாவீரன். தமிழறிஞன். அவனும் மாணிக்கமும் கிண்டலும் தர்க்கமுமாய் தமிழ் ஆராய்ச்சி நடத்துவதை நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே. இந்தோனேசியாவுக்குத் திரும்பியிருக்கிறானே. மீண்டும் அவனைப் பார்க்க முடியுமா? அங்கு வாளா இருப்பானா? மாட்டான். புரட்சிப் படையில் சேர்வது திண்ணம். அவன் ரத்தத்திலேயே புரட்சி கலந்து போயிருக்கிறது. 

எல்லாம் கைமீறிப்போய்விட்ட  பொழுது   ஒரே ஒருக்க ,.. உன் முகத்தை இரண்டு கைகளால் தொடணும் மரகதம்!!! செல்லையாவின் குரல் , தாயிடம் ஒரே ஒரு மிட்டாய் கேட்கும் சிறுவனின் கெஞ்சல் போல குழைந்தது  என்று எழுதுகிறார் ப.சிங்காரம்,எத்தனை எளிய ஆனால் சக்திவாய்ந்த எழுத்து நடை பாருங்கள்.
அதே மரகதம் நான் ஒண்ணு சொல்றேன். கேப்பிகளா ?!!!   சொல்லு   ... நீங்க கல்யாணம் செஞ்சு பொட்டச்சி பிறந்தா?!!! மரகதம்னு பேரு வைங்க!!! என யதார்த்தமாக முடிக்கிறாள், யாரும் யாரையும் காயப்படுத்தாமல் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

காதலில் தோல்வியுற்றதால் உலகமே இருண்டுவிட்டது, வாழ்க்கையே தன்னை கைவிட்டுவிட்டது என தளர்ந்து இருந்த செல்லையா ,  நண்பன் மாணிக்கம் மூலம்  தன்னையே அறிந்து கொள்வதை  ப.சிங்காரம் மிகச்சிறப்பாக நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார்.

நாவலில் ப.சிங்காரம் குறிப்பிடும் பல இடங்கள் இன்று இல்லை,அவ்வளவு ஏன்?1960லேயே வழக்கொழிந்துவிட்டதாக ப.சிங்காரம் குறிப்பிடுகிறார். காலஓட்டத்தில் இன்னும் காணாமல் போகாமல் இருப்பது நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே ஒட்டி உறவாடும் தண்ணீர்மலையான் சுவாமி திருக்கோவில் மட்டும் தான்.அதைப் பற்றி படிக்க சுட்டி. அவசியம் படிக்கவும்.
புயலிலே ஒரு தோணியும் கடலுக்கு அப்பால் நாவலுக்கு ஈடான ஒரு ஆக்கம்,அதை இரண்டாம் முறையாக வாசிக்கிறேன்,அத்தனை சுவாரஸ்யம் நிறைந்தது,நேதாஜி சுபாஷ் சந்திர போஸை வரலாற்று பாடங்களில் மட்டுமே படித்திருக்கிறோம்,அவரை இதில் ரத்தமும் சதையுமாக கண்ணுறுகிறோம், மிக அருமையான நாவல்,விரைவில் அதற்கும் எழுதுவேன். 

கடலுக்கு அப்பால்+புயலிலே ஒரு தோணி ஹார்ட் பவுன்ட் புத்தகம் நற்றினை பதிப்பகத்தாரின் மிக் தரமான வெளியீடாக அகநாழிகை புத்தகக் கடையில் கிடைக்கிறது .விலை ரூ:-350

நாவல் பற்றி சி.மோகன் எழுதிய குறிப்பு:-
கடவுளின் சிரிப்பில் உருவான நாவல்கள்
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)