புதுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

துளை தகடு போர்த்து எல்லை சுவர்கள் | perforated screen compound wall

1000 சதுர அடி கொண்ட சிறிய வீட்டு மனைகளில் 1'6" மட்டுமே இடைவெளி விட்டு கட்ட சாத்தியமிருக்கும், அவ்வாறு குறைந்த set back களில் காம்பவுண்டு சுவர் அமைப்பது மிகுந்த சவாலானது, அதற்கு படத்தில் உள்ள perforated sheet cladded  காம்பவுண்டு சுவர் மிகவும் பொருத்தமானது, இதன் மொத்த கணம் இரண்டு அங்குலம் மட்டும் வரும் , powder coated 2" x2" tube section vertical post  10' c/c இடைவெளியில் 9"x9"x9" காங்ரீட் ப்ளாக் அடிக்கல் நாட்டி அதன் மீது vertical post அடியில் உள்ள Rosette plate ஐ 4 எண்ணிக்கையில் bolt செய்து விடவேண்டும்.உறுதியாக ஆடாமல் நிற்கிறது.

அதன் மேலும் கீழும் powder coated1"x1" tube section horizontal transoms , அதில் வார்க்கப்பட்டு வெல்ட் செய்யப்பட்ட 2 மிமீ powder coated perforated sheets (மெல்லிய துளைகள் கொண்ட ஷீட்) இத்தனை தான் தேவை, எளிமையான வடிவமைப்பு, கீழே மண் அரிக்காமல் இருக்க 6 " உயரம் கொண்ட இடைவெளி போதும், யாரும் அந்த இடை வெளியில் புகுந்து வர முடியாது.

இந்த perforated sheet cladded  காம்பவுண்டு சுவரை நான் தம்ம சேதுவில் கண்டேன், இது பெண்கள் தங்கியிருக்கும் வளாகத்தின் வெளியே வேயப்பட்ட சுவர், மிகுந்த functional ஆகவும் செலவு குறைவாகவும் காம்பவுண்டு சுவர் அமைத்துள்ளனர், வெயில் மழை என இருபது வருடங்கள் நின்று தாக்குப் பிடிக்கிறது.வருடா வருடம் சிறிய மராமத்துகள் செய்தால் போதும்.

நாமும் இப்படி எளிமையாக அமைக்கலாம்,அந்தப் பக்கம் நின்று பார்த்தால் நிழலாடுவது மட்டும் தெரியும், இந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அதே தான்.தடுப்பும் பார்க்க contemporary look தருகிறது.

Ps: இதை முழுக்க powder coated ஃபினிஷில் செய்தால் 385 ரூபாய் சதுர அடிக்கு வருகிறது,இதை பெயிண்ட் ஃபினிஷ்ஷில் செய்தால் 185 ரூபாய் சதுர அடிக்கு செய்ய முடியும்.

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD | Dial for Design | 9940255873
வீடு கட்டும் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே 
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#காம்பவுண்டு_சுவர்,#எளிய_தடுப்பு,#screen_wall,#effective_design

விருமாண்டி |2004 |இசைஞானி | புதுமையான டைட்டில்ஸ் | broadcasting signal test card | அபகலிப்டோ | ஒப்பீடு

நம்மில் இந்த 2K கிட்ஸ் தவிர அநேகம் பேருக்கு இந்த broadcasting signal test card பசுமையாக நினைவிருக்கும் , இந்தியாவில் இருக்கும்  டிவி ஸ்டேஷன்களில் காட்டிய ஒளிபரப்பு PAL (Phase Alternating Line ) வகையைச் சேர்ந்தது, அமெரிக்காவில்  டிவி ஸ்டேஷனில் காட்டிய ஒளிபரப்பு NTSC  (National Television System Committee ) வகையைச் சேர்ந்தது,இது பெரிய topic, விருப்பமுள்ளவர்கள் தேடிப் படியுங்கள்.

முன்பு DD தூர்தர்ஷன் காலத்தில்  ஒற்றைச் சேனல் இருக்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு மிகுந்த மரியாதை இருந்தது, அதில்  தொலைக்காட்சி நிலையத்தில் தயாரான அரங்க நாடகம் ஒளிபரப்பினாலும் அப்படி பார்ப்போம் , அப்போது மக்கள் ஒளிபரப்பு துவங்கும் முன்னர் வரும் இந்த test card ஐயே பார்த்தபடி , கொய்ங் என்ற சப்தத்தை கேட்டபடி ஒளிபரப்பு துவங்குவதற்கு தேவுடு காத்திருப்பார்கள், 

அப்போது இந்தியாவில் அநேகம் பேர் வீடுகளில் கருப்பு வெள்ளை டிவி தான் இருந்தது ஆதலால் இந்த PAL test card ஐ நாம் monochrome அதாவது விதவிதமான பழுப்பு நிறங்களில் தான் பார்த்திருப்போம்.

நம் சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்கு என்று இந்த Philips PM5544 test card ல் இருந்து
பிரத்யேகமாக சற்று மாற்றி வடிவமைக்கப்பட்ட ஒரு test card வழக்கத்தில் வைத்திருந்தனர், இது அழகன் திரைபடத்தில் சங்கீத ஸ்வரங்கள் பாடலில் வரும்,இந்த test card ல் இருக்கும் colour palette ஐ மனதில் பதித்து ஆடை உடுத்தினால் photorealistic ஆக அந்த ஒளிப்பதிவு இருக்கும். 

பொதுவாக Handicam, Camcorder ல் பதியும் ஒளிப்பதிவுகள்  NTSC வகையைச் சேர்ந்தது,இதை விருமாண்டி திரைப்படத்தின் title ல் காணலாம், இந்த வித விதமான நிறங்கள் கொண்ட test card ன் pixelsமீது தான் கலைஞர்களின் பெயர்கள் சுழன்று தோன்றி மறையும், 

இந்த கொய்ங் என்ற ஓசையை கச்சிதமாகத் தொடர்ந்து இசைஞானி ஆ என்று கோரஸ் ஒலிக்க வைத்து மெல்ல தடதடக்கத் துவங்கி வீர்யம் கொள்ளும்  ஒரு அபாரமான பின்னணி இசையை இந்த survival திரைப்படத்தில் முத்தாய்ப்பாக சேர்த்திருப்பார்.

பின்னாளில் Apocalypto என்ற survival திரைப்படத்தில் அதே போன்ற ஒரு original score  பின்னணி இசையை James Horner செய்திருந்தார், அதை தியேட்டரில் பார்த்ததும்  dejavu போல விருமாண்டி இசை நினைவுக்கு வர நான் மலைத்துப் போயிருக்கிறேன், நம் இசைஞானி புகுத்தாத பாணி, செய்யாத சாதனை பாக்கி இல்லை.

பெயர் ஓடி முடிந்தவுடன் நீதியரசர் கிருஷ்ணையர் மீது camcorder lens திறந்து focus ஆகும், அவர் மரண தண்டனை பற்றி பேசத் துவங்குவார், எத்தனை டீடெய்லான ஒரு ஆக்கம் அது என வியந்திருக்கிறேன், இன்றைய திரைப்பட மாணவர்கள் உதவி இயக்குனர்கள் இக்காட்சியைப் பாருங்கள் பல கதவுகள் திறக்கும்.

#test_card,#pal,#ntsc,#Finn_Hendil,#Philips_PM5544,#விருமாண்டி,#இசைஞானி,#ஜேம்ஸ்_ஹார்னர்,#கமல்ஹாசன்,
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)