மலையாள நகைச்சுவை நடிகர் மாமுக்கோயா




கஃபூர்காவாக மலையாள நடிகர் மாமுக்கோயாவை ஒருவர் மறக்கவே முடியாது,நகைச்சுவை குணச்சித்திரம் என எந்த வேடம் என்றாலும் கலக்கி எடுக்கும் மனிதர் , நாடோடிக்காற்று படத்தில் அந்த குஸ்ருதி பிடித்த எத்தன் வேடம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது, கொச்சி கடல்புறத்திலிருந்து கல்ஃபுக்குள் கள்ளிவளியாக இறக்கி  விடுகிறேன், ஒரு பர்லாங் நீந்த வேண்டியிருக்கும், அரபிக் குப்பாயம் உடுத்தினால் மதி என்று தைரியம் சொன்னவர்,

ஒருவேளை யாராவது கேட்டால் சமாளிக்க  அஸ்ஸலாமுஅலேக்கம், முஸலாம், என ஆபத்துக்கு இரண்டு அரபி வார்த்தைகள் கற்றுத் தந்து நம்பிக்கை ஊட்டி இரு படித்தவர்களையே ஏமாற்றி சென்னை பெசன்ட் நகர் கடல்புறத்தில் இறக்கி விடுவார்.  இந்த எத்தன் வேடம் எத்தனை புகழ்பெற்றது என்று எழுத்தில் விளக்கிவிட முடியாது, இந்த எத்தன் கதாபாத்திரமான "கஃபுர்கா தோஸ்த்" என்னும்  பெயரில் நிறைய உணவகங்கள் கேரளம் மற்றும் அமீரகத்தில் உண்டு.

இம்மனிதரின் கண்,வழுக்கைத் தலை,சிரித்த முகம்,தேசலான நாடி, மொச்சை பற்கள்,  உடல்மொழி, டயலாக் டெலிவரி என இவர் ஏற்ற எந்த கதாபாத்திரத்திலும்  அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கும்,

இவரின் வெள்ளந்தி மாப்ளகார முகம் பார்க்கையிலேயே சிரிப்பை வரவழைத்து விடும்,கவலை மறக்க வைக்கும், இவர் மலையாள சினிமாவில் பல அருமையான நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் செய்திருந்தும் மிகவும் அண்டர்ரேட்டட் நடிகர்.
மாமுக்கோயா ஜூலை 5, 1946 பிறந்தார்,  மலையாள சினிமாவில் நிரூபனமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர், பிரெஞ்சு திரைப்படமான Flammens of Paradise ல்  தோன்றியுள்ளார், மாமுக்கோயாபெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தோன்றியுள்ளார்,நம் சினிமாவில்  நெல்லைத் தமிழ் போல  மலையாள சினிமாவில் மாப்ளமார் சமூக பேச்சுவழக்கு பாணியைப் பின்பற்றி நடிப்பவர், 



இது வரை 450 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கிறார். மலையாள சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதைப் பெற்றுள்ளார்.

மாமுக்கோயா ஆரம்பகாலத்தில் நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு  மிகவும் நெருக்கமானவர், அவர் வசித்த கோழிக்கோட்டின் பெய்ப்பூரில் தான் இவரும் வசிக்கிறார்,இவர்  அன்யருடே பூமி (1979) மூலம் திரைத்துறையில் கால்பதித்தார். 

இயக்குனர் எஸ்.கொன்னனட்டின் சுருமையிட்ட கண்ணுகள் திரைப்படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது.  இப்படத்திற்குப் பிறகு இவரை இயக்குனர் சத்யன் அந்திக்காடிடம் திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான ஸ்ரீனிவாசன் அழைத்துப் போய் அறிமுகப்படுத்தினார். 

இவர் காந்திநகர் இரண்டாவது தெரு திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார், சத்யன் அந்திக்காடு இயக்கத்தில்  மோகன்லால் , ஸ்ரீனிவாசன் நடித்த  நாடோடிக்காற்று (1987) இல் இவர் ஏற்ற  கஃபூரிக்கா கதாபாத்திரம் மலையாள சினிமாவில் அவருக்கு ஒரு முக்கிய இடம்பெற்றுத் தந்தது, இவர்  நடிகர் ஜெயராமுடன் இணைந்து செய்த  நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் பார்வையாளர்கள் சிரித்தே சாவார்கள், அப்படி கண்கெட்டு திரைப்படத்தில் வரும் "கீழேறி அச்சு" என்ற ஊரில் ஏமாந்தவர்களிடம் ஜபர் காட்டும் கோழைரவுடி கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்று.

கஃபூர் என்ற இக்கதாபாத்திரம் இப்போது கேரளாவில் பெரிய trend ஆகிவிட்டது.  இக்கதாபாத்திரத்தின் அடிப்படையில் அனிமேஷன் தொடர்கள் 100 episodes YouTube ல்  வெளியாகியிருக்கிறது.

பெருமழக்காலம் (2004) திரைப்படத்தில் இவர் ஏற்ற தந்தை கதாபாத்திரம்  நகைச்சுவை அல்லாத பாத்திரங்களையும் இவரால் அனாயசமாக செய்ய முடியும் என்பதை நிரூபித்தது. 

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது  வென்ற பியாரி என்ற திரைப்படத்தில் இவர்  ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்தார்.  கோரப்பன் தி கிரேட் (2001) திரைப்படத்தில் இவர் கோரப்பனாக  நடித்தார், இது சந்தனக்கடத்தல் வீரப்பனின் spoof கதாபாத்திரம்,  பெருமழக்காலம் திரைப்படத்திற்காக 2004 ஆம் ஆண்டு  சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதைப் பெற்றார் மாமுக்கோயா.

கஃபூர்கா தோஸ்த் இங்கே பாருங்கள் இது கதாநாயகன் என்று தமிழில் வெளிவந்த புகழ்பெற்ற காமெடியின் ஒரிஜினல் வடிவம்.இந்த கஃபூர்கா கதாபாத்திரத்தை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கண்ணாயிரம் என்று தமிழில் செய்தார்.
https://youtu.be/ThyXVYecbkI

#மாமுக்கோயா,#கஃபூர்கா,#கீழேறி_இச்சு

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)